World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP to hold election meeting in Galle

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி காலியில் நடத்தும் தேர்தல் கூட்டம்

29 September 2009

Back to screen version

அக்டோபர் 10 நடக்கவுள்ள தென் மாகாண சபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின் பாகமாக இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் அக்டோபர் 4, ஞாயிற்றுக் கிழமை மாகாண தலைநகரான காலியில் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளன. சோ.ச.கட்சி காலி மாவட்டத்தில் 26 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்தத் தேர்தல், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு "பொருளாதார யுத்தத்தை" முன்னெடுப்பதில் தனது கைகளை பலப்படுத்திக்கொள்வதன் பேரில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அழைப்பு விடுத்த ஒரு தொடர்ச்சியான மாகாண சபை தேர்தல்களில் ஒன்றாகும். புலிகளுக்கு எதிராக தசாப்த காலங்களாக முன்னெடுத்த யுத்தத்தாலும் மற்றும் ஆழமடைந்து வரும் பூகோள பொருளாதார பின்னடைவாலும் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலைமையின் கீழ், அரசாங்கம் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கின்றது.

தொழிலாளர்கள் பெருந்தோட்டங்களிலும் சரி, துறைமுகங்களிலும் சரி அல்லது மின்சார சபையிலும் சரி, முதலாளிகளுக்கும், அரசாங்கத்துக்கும் மற்றும் குறிப்பாக தொழிற்சங்கங்களுக்கும் எதிராக தமது சொந்த சுயாதீன போராட்டதை முன்னெடுக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, அத்தகைய போராட்டம் ஒரு மாற்றீட்டு அரசியல் முன்நோக்கை கோருகிறது.

எமது கூட்டத்துக்கு வருகை தருமாறு தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமத்தவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுக்கும் சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. சகல பிரதான கட்சிகளதும் இனவாத அரசியலை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் மற்றும் அனைத்துலக சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக இலங்கையில் தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான போராட்டத்தைச் சூழ அணிதிரள வேண்டியதன் அவசியத்தையும் நாம் கூட்டத்தில் விளக்குவோம்.

இடம்: காலி நகர மண்டபம்

நேரம்: அக்டோபர் 4, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி

பிரதான உரை: சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved