WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
France: Brutal eviction of migrants from Calais
encampment
பிரான்ஸ்: கலே முகாமிலிருந்து குடியேறியவர்கள் காட்டுமிராண்டித்தனமான வெளியேற்றப்படுகிறார்கள்
By Antoine Lerougetel
26 September 2009
Use this version
to print | Send
feedback
செவ்வாய்கிழமை காைôJTM,
600 போலீஸ் அதிகாரிகள் "காட்டுப் பகுதி" என அழைக்கப்படும் பிரான்சின்
è«ôJக்கு அருகில் இருக்கும் தற்காலிக
முகாமின் மீது படையெடுத்தனர்; இது சுமார் 800 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர்களின்,
பெரும்பாலும் பிரிட்டனுக்கு குடியேற முயற்சித்த ஆப்கானியர்களின்
வசிப்பிடமாக இருந்தது. மனிதசங்கிலி அமைத்து, புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவதைத்
தடுக்க முயற்சித்த 150 பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு புலம்பெயர் உரிமைவாதிகளை போலீசார் பலாத்காரமாக
ஒதுக்கித் தள்ளினர். இதன்பின், அவர்கள்
வலுக்கட்டாயமாக புலம்பெயர்ந்தோரை அகற்றினர்; இதில் பாதி பேர் குழந்தைகள், இளவயதுக்காரர்கள்;
திகைப்பு, பீதி இவற்றில் பெரும் வருத்தத்திற்கு இடையே அவர்கள் காணப்பட்டனர்.
Channel Tunnel நுழைவாயில்
அருகே இராணுவ பிரிவுகளும்
முன்கூட்டியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
புலம்பெயர்ந்தோர் அதிக எதிர்ப்பு காட்டவில்லை; ஆனால் சிலர் முகாமிற்குள்
இருந்த மசூதியைக் காப்பாற்ற
முயன்றார்கள், அதற்குள் ஒரு கல்லறையும் இருந்தது.
ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் இருக்கும் துன்பங்கள், யுத்தம் மற்றும் போலிக் குற்ற
விசாரணை ஆகியவற்றிலிருந்து தப்பியோடி அகதிகளாக வர முயல்பவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழையாமல்
தடுப்பதே, பிரிட்டஷ் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த
மிருகத்தனமான நடவடிக்கையின் நோக்கமாகும்.
அரசாங்கம் மற்றும் சமூகத்தில் உள்ள மிக
பிற்போக்கான சக்திகளுக்கு,
உள்நாட்டிலும் வெளியிலும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் பெருகிய எண்ணிக்கையை சமாளிக்கத்
தயாராக இருக்க வேண்டும் என்று கூறுவதற்கும் அது ஓர்
அடையாளமாகும்.
Movement against
Racism and for Friendship between the Peoples
(MRAP)
எனப்படும் அமைப்பு இந்த தாக்குதலைக் கண்டித்தது.
"இது ஏற்கனவே பெரும் துயரத்திற்கு
உட்பட்டுள்ள ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகளை முற்றிலும் உதவியற்ற நிலைக்குத் தள்ளுவதுடன், நம் நாட்டில்
ஆபத்தான இனவெறி சூழலைத் தக்க வைக்கவும் தான் இது உதவுகிறது" என்று கண்டித்துள்ளது.
நவ-பாசிச தேசிய முன்னணி தலைவர் Jean Marie Le Pen,
"பிரான்ஸ் எல்லா இடத்திலும்
காட்டு பகுதியாக போய்விட்டது" என்று கூறினார்.
"காட்டு பகுதிக்கு" வெளியே அனைத்து புலம்பெயர்ந்தோரும், எதிர்ப்பாளர்களும்
அகற்றப்பட்டவுடன், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் புல்டோசர்கள், சங்கிலி அரவைக் கருவிகள், தீச்சுடர்கள்
ஆகிவற்றைப் பயன்படுத்தி தற்காலிக குடியிருப்புக்கள் அனைத்தையும் அழித்து "தூய்மைப்படுத்தும்" நடவடிக்கையைத்
தொடங்கினர்.
அறிவிக்கப்பட்டிருந்த தாக்குதல் வரும் என்பதை
அறிந்திருந்த புலம்பெயர்ந்தோர் பலரும் முகாமில் இருந்து ஓடி விட்டனர். ஆங்கிலத்திலும் பஷ்டோ மொழியிலும்
இருந்த பதாகைகளின் கீழ் கூடியிருந்தவர்கள்,
போலீசாரை எதிர்கொள்ள தயாராகி இருந்தனர்.
ஒரு பதாகையில், "எங்களுக்கு உறைவிடமும்,
பாதுகாப்பும் வேண்டும். புகலிடமும்,
சமாதானமும் வேண்டும். காட்டுப்பகுதிதான் எங்கள் வீடு" என்று
எழுதப்பட்டிருந்தது. மற்றொரு பதாைèJTM,
"பிரான்சில் எங்களுக்கு புகலிடம் கொடுக்கவும்" என்றும்,
"எங்களுக்கு புகலிடம் தேவை என்றும்,
காட்டுப்பகுதியில் நாங்கள் இருக்க விரும்பவில்லை" என்றும்
குறிப்பிடப்பட்டிருந்தது. குடியேறுபவர்களுக்கு ஆதரவாக இருந்த குழுக்கள்
"எல்லை தேவையில்லை; நாடு தேவையில்லை; இவர்களை
வெளிேயற்ற
கூடாது" என்று கோஷமிட்டனர்.
மொத்தம் 278 பேர் கைது செய்யப்பட்டனர்; இதில் ஆதரவு குழு உறுப்பினர்கள் 2
பேரும் உண்டு. கைது செய்யப்பட்ட 135 சிறுவர்கள் ஐந்து "சிறப்பு மையங்களுக்கு" அனுப்பப்பட்டுள்ளதாக
அதிகாரிகள் கூறினர். ஆதரவு குழுக்களோ,
இந்த மையங்கள் இளம் குற்றவாளிகளுக்காக இருப்பவை என்று தெரிவித்துள்ளனர்.
குடியேற்ற
பிரிவு மந்திரியும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினரும், 2007 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்
போது சார்க்கோசிக்கு ஆதரவாக சென்றவருமான எரிக் பெசோன்,
போலீஸ் நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். ஜனவரி மாதத்தில் இருந்து திருட்டுத்தனமாக குடியேறிய 180
பேர் தாங்களாகவே நாடு திரும்ப முடிவெடுத்துள்ளதாகவும், 170 பேர் புகலிடம் கோரும் நடவடிக்கைகளைத்
தொடங்கி விட்டதாகவும் அவர்களில்
50 பேருக்கு தற்காலிக வசிக்கும் உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்தார்.
"இத்திட்டங்களைத்
தொடர்ந்து ஏற்க மறுப்பவர்களைப்
பொறுத்த வரையில், நாங்கள் அவர்களின் தாயகத்திற்கு கட்டாயமாக திரும்ப அனுப்பும்
நடவடிக்கைையப் பரிசீலித்து
வருகிறோம்" என்று பெசோன் எச்சரித்தார். புகலிட கோரிக்கை பற்றி அவருடைய குறிப்பு குறிப்பிடத்தக்கவிîத்தில்
இழிவுற்று இருந்தது.
British Immigration
Advisory Serviceä
சேர்ந்த கீத் பெஸ்ட் செய்தியாளர்களிடம், "புகலிட மரபுகளின் கீழ் அவர்களுக்கு கடமை இருந்தும்
பிரெஞ்சுக்காரர்கள் மக்களை கலேயில் புகலிடம் நாட தங்கள் பங்கைச் செய்யவில்லை" என்றார்.
புலம்பெயர்ந்தோருக்கு தாங்கள் அனுமதி கொடுக்க வாய்ப்பு இல்லை என்று பிரிட்டன்
மறுத்துவிட்டது. பிரிட்டிஷ் உள்நாட்டு மந்திரி ஆலன் ஜோன்சன் உண்மையாக தஞ்சம் கோருபவர்கள் எந்த
ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் அவர்கள் நுழைந்தார்களோ அங்குதான் புகலிடம் நாட வேண்டும் என்றும்,
விசாரணைக்குத் தப்ப விரும்புபவர்கள் தாயகம் மீள வேண்டும் என்றும் கூறினார். "நாங்கள் நடைமுறையில் கொண்டு
வந்துள்ள நடவடிக்கைகள் சட்டவிரோதமாக
குடியேறுபவர்களைத் தடுப்பதற்கு
என்று மட்டும் இல்லாமல் மக்களை கடத்தி விற்பனை செய்வதைத்
தடுக்கும் நோக்கத்தையும் கொண்டது. பிரெஞ்சு அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் செயலாற்றுவதற்கு காரணம்,
எங்கள் பொது எல்லையை வலுப்படுத்துவதற்கு மட்டும் இல்லாமல், ஐரோப்பா முழுவதையும் வலுப்படுத்த வேண்டும்
என்ற நோக்கத்தையும் கொண்டது" என்றார்.
பிரெஞ்சு நடவடிக்கைக்கு தொடர்ந்து ஆதரவு உண்டு என்று உறுதியளித்த ஜோன்சன்,
இங்கிலாந்தில் எல்லை அதிகார அலுவலர்கள் "ஏற்கனவே இரவும் பகலும் பிரெஞ்சு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு,
கலே எல்லையை பாதுகாக்கின்றனர்" என்றார். பிரிட்டன் சமீபத்தில் பிரான்சிற்கு 15 மில்லியன் பவுண்டை இதற்காகக்
கொடுத்துள்ளது.
ஜோன்சனின் அவநம்பிக்கை நிறைந்த கருத்துக்கள் பிரிட்டிஷ் குடியேற்றப் பிரிவு மந்திரி
பில் வூலாசால் உறுதிப்படுத்தப்பட்டது; கலே வந்துள்ள புலம்பெயர்ந்தோர்கள் சட்டவிரோதமாக வந்தவர்கள்
என்று அவர் கூறினார். இல்லாவிடில் அவர்கள் பிரான்சிலோ அல்லது எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டிற்கு முதலில்
நுழைந்தனரோ அங்கு புகலிடம் கேட்டிருப்பர் என்றார். ஆனால்
கார்டியன் இதழ்,
"கலேயில் இருப்பவர்கள் பலருக்கு வழித்தட நாடாக இருக்கும் கிரேக்கம்,
கடந்த ஆண்டு புகலிடக் கோரிக்கைகளில் ஒரு சதவிகிதத்தைத்தான் ஏற்றது. இத்தாலி சர்வதேசக் கவலையை
பெருக்கும் வகையில் குடியேறுபவர்கள் கடலில் வந்து கொண்டிருந்த படகுகளை சோதனைக்கு உட்படுத்தி,
ஆயிரக்கணக்கானவர்களை அவர்களுடைய புகலிடக் கூற்றைச் சிறிதும் கவனிக்காமல்
லிபியாவிற்கு அனுப்பிவிட்டது.
ஐ.நா. சபையின் 1951ம் ஆண்டு,
புகலிடம் நாடுவோர் மரபுகளின் முக்கிய விதியை
இச்செயல்கள் மீறுவதாகும்--அதில் புகலிடம்
நாடுவோர் எவரும் அவர் குற்றவிசாரணைக்கு உட்படக்கூடிய நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படக்கூடாது என்று உள்ளது.
இரண்டாவது விதியின்ப®, ஒவ்வொரு
புகலிட கோரிக்கையும் முறையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும்,
சட்ட விரோதமாக ஒரு நாட்டில் நுழைந்துவிட்டதற்காக எவர் மீதும் குற்ற நடவடிக்கை கூடாது என்றும் உள்ளது.
இப்பகுதியில் இன்னும் தங்கியிருப்பவர்கள் படிப்படியாக வெளியேற்றப்படுவார்கள்
என்று பெசோன் உறுதியளித்தார். ஈராக், ஆப்கானிஸ்தான், எரிட்ரியா,
சோமாலியா மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்துள்ள புலம்பெயர்ந்தோர்கள்
Nord-Pas-de-Calais
கடற்கரைப் பகுதியில் இருக்கும் காலிக் கட்டிடங்களில் வசித்துக் கொண்டிருக்கின்றனர். பிரிட்டனுக்கு செல்லும்
டிரக்குகளில் சென்றுவிடலாம் என்று நம்புகின்றனர்.
பிரெஞ்சு செய்தி ஊடகமும்,
"இடதும்" மிகப் பெரிய குடியேற்ற நடவடிக்கைகளைத் தோற்றுவிக்கும் நிலைமை பற்றி அதிகம் கூறவில்லை.
கார்டியன் கருத்தின்படி
10 மில்லியன் புகலிடம் கோருவோர், மற்றும் 200 மில்லியன் புலம்பெயர்ந்தோர்கள் கடந்த ஆண்டில் மட்டும்
வந்துள்ளனர் என்று தெரிகிறது.
British Daily Telegraph,
செப்டம்பர்
22 பதிப்பில் வந்துள்ள பிலிப் ஜோன்ஸ்டன் கட்டுரை ஒன்று
இவர்கள் எதிர்கொள்ளும் நிலைமை பற்றி விளக்கியுள்ளது. "சகாராவின் சுட்டெரிக்கும் மணற்பரப்பைத் தாங்கிய
பின்னர், மத்தியதரைக் கடலை உயிரைப் பணயம் வைத்துக் கடந்த பின், அல்லது மத்திய ஆசியாவில் ஒரு லாரியின்
பின் பகுதியில் இடித்துக் கொண்டு பட்டினியுடன் பல நாட்களைக் கழித்த பின்னர், இவர்கள் 22 மைல் நீள ஆங்கில
கால்வாயைக் கடக்கும்
முயற்சியில் தோற்றுப் போகின்றனர்."
"ஐரோப்பா முழுவதும் சேரிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.... சுற்றுச் சூழல்
மாறுதல், மக்கள்தொகை வளர்ச்சி, நீர் பற்றாக்குறை, பஞ்சம், போர் ஆகியவை இன்னும் அதிகமான மக்களைத்
தங்கள் தாயகத்தில் இருந்து ஐரோப்பாவிற்கு கொண்டு வரும்....
"ஸ்பெயின் மற்றும் பிரான்சின் மத்தியதரை கடற்கரையோரப் பகுதிகளிலும்
ஏராளமாக பெருA வருகின்றன.
2008ம் ஆண்டில் 70,000 நபர்கள்
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து கடந்து வர
முயற்சித்தனர். சில நேரம் கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்குகின்றன;
ஆபிரிக்காவில் இருந்து கடல் மூலம் கடந்து வந்து விட வேண்டும், பல நேரமும்
இயற்கைக்கு ஈடு கொடுக்க முடியாத சிறிய படகுகளில் வந்து விட முடியும் என்று புறப்பட்டு, தோற்ற முயற்சிகளின்
விளைவுதான் இவை."
காபூலுக்கு வடக்கேயிருந்து வந்த ஓர்
இளம் விவசாயி அஹ்மத் டோயெப்பின் நிலை பற்றி கார்டியன்
கூறியுள்ளது. அவர் பல முறை இரவு
நேரத்தில் லாரிகளை நிறுத்தி பிரிட்டனுக்கு வருவதற்காக அவற்றுடன் நெடுஞ்சாலையில் இருந்து கூடவே ஓடிவந்ததாக
கூறினார். "சில நேரங்களில் அவருக்கு வெற்றி கிடைத்தது; ஆனால் பிரெஞ்சு போலீசார் எல்லையில்
நிறுத்திவிட்டனர். சோதனைக்கு முந்தைய இரவு அவர் போலீஸ் வரவிருக்கிறது என்ற வதந்தியைக் கேட்டார்.
மக்கள் ஓடிக்கொண்டிருப்பதை மறைந்து நின்று கவனித்தார். "என்னுடைய நண்பர்களில் சிலரும் கைப்பற்றப்பட்டனர்.
ஒருவருக்கு 14 வயதுதான். அவர்கள் இப்பொழுது எங்கு உள்ளார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது.
அவர்களைப் பற்றிக் கவலைப் படுகிறேன்.' அவர் பிரிட்டனுக்கு செல்லும் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை.
பிரான்சில் புகலிடம் நாட முற்பட்டால் தாம்
மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பப்பட்டு
விடு«வாமோ
என்று அவர் பயப்படுகிறார்."
சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு உதவினால்--மனிதகுல
ஒற்றுமைக்கு எதிரான குற்றமாக கருதப்பட்டு--75000 யூரோக்கள்
அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறைவாசம் என்ற ஆபத்தை
உதவும் ஆர்வலர்களும்,
தன்னார்வத் தொண்டர்களும் கூட எதிர்கொண்டுள்ளனர்.
கலாயில் நடந்தது போன்ற நிகழ்வுகள் பிரச்சினையை வேறு இடதித்திற்குத்
தான் மாற்றும் என்று அவர்கள்
சுட்டிக் காட்டுகிறார்கள். சோதனையைத் தவிர்த்த பலரும் இப்பொழுது
பாலங்களின் கீழும் கைவிடப்பட்ட கட்டிடங்களிலும் உறங்குகின்றனர்.
Salam ஆதரவு குழுவின்
தலைவரான Jean-Claude Lenoir,
முகாமில் தாங்கள் வந்தது பற்றி விளக்கினார். "குடியேறியவர்களுடன் எங்கள் ஒற்றுமை உணர்வை அடையாளமாகக்
காட்ட விரும்பினோம். ஆப்கானிஸ்தானில் ஒரு போரை நடத்தி கொண்டு, இங்கு வரும் ஆப்கானியர்களை இழிவுடன்
நடத்தக்கூடாது."
பிரான்சில் இடது கட்சிகள் என்று அழைக்கப்படுபவை சோதனை பற்றி
தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
Jean-Luc Melenchon உடைய இடது கட்சி மற்றும்
கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை "இது ஒரு கொடூரமான, இழிந்த நிகழ்வு", "போலீஸ்-செய்தி ஊடகம் இணைந்து
செய்யும் செயல்" என்று கூறியதாக
Courier Picard
மேற்கோளிட்டுள்ளது. சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் மார்ட்டின் ஆப்ரி, "இது முற்றிலும்
மனிதாபிமானமற்ற செயல்" என்று அறிவித்தார். பசுமைவாதிகள் "இந்த செய்தி ஊடகம் பரபரப்பு காட்டியுள்ள
செயல் ஒரு அரசியல் செயற்பாடுதான்", 2010 வட்டார தேர்தல்களை மனத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது
என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இக்கட்சிகள் அனைத்தும் ஜோஸ்பனுடைய பன்முக இடது அரசாங்கத்தில் இருந்தவை;
அது 2002ல் அமெரிக்கா தலைமையில் நடந்த ஆப்கானிய போரில் சேர்ந்தது. இன்றும் அவை காலனித்துவ முறை ,
இராணுவ தலையீடு, நேட்டோ படைகளுடன் சேர்ந்து பிரான்ஸ் செய்யும்
செயல்களுக்கு தொடர்ந்து
ஆதரவை ÜOக்கின்றன. இதுதான்
நாட்டில் சிதைவுற்ற நிலைமைக்கு காரணம், பல மில்லியன் மக்களை நாட்டை விட்டு
ெவளியேறுமாறு செய்துள்ளது. பலரும் வழியில்
இறந்து போகின்றனர்; சிலர் கலேயில் வந்து சேர்கின்றனர், இது தொடரும்.
பன்முக இடது அரசாங்கம் குடியேற்ற விரோத சட்டங்களைச்
செயல்படுத்தியது; அது இந்த குடியேறியவர்களைச்
சட்ட விரோதம் என்று ஆக்கியது. சோசலிஸ்ட் கட்சியின் தற்பொழுதைய குடியேறுபவர்கள் பற்றிய கொள்கை,
சார்க்கோசி அரசாங்கத்தின் கொள்கையில் இருந்து அதிகம் மாறுபட்டது அல்ல.
பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைந்து இங்கிலாந்திற்கு செல்வதை கடினமாகவும், ஆபத்துக்கள்
நிறைந்ததாகவும் ஆக்க ஜோஸ்பன் செயல்பட்டார்; இது இங்கிலாந்தில் வசிப்பதற்காக வந்திருந்த குடியேறுபவர்கள்
எண்ணிக்கையை
Sangatte Red Cross Centreல் அதிகப்படுத்தியது; அது
2002ம் ஆண்டு பிளேயர் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் மூடப்பட்டது. பிரிட்டன் புகலிட விவகாரத்தில்
மிகவும் "மிருதுவாக" இருப்பதாக ஜோஸ்பன் குறைகூறினார்;
PCF உடைய
நாளேடு
l'Humanite
சார்க்கோசியின் முடிவான "இங்கிலாந்தில் பிரச்சினைகளைத்
தீர்க்க வகை செய்யாமல் Sangatte Centreஐ
மூடிவிட்டது பற்றி" குைற
கூறியுள்ளது.
செப்டம்பர் 2001ல் ஜோஸ்பனுடைய உள்துறை மந்திரி டானியல் வையோன்ட், பிரிட்டிஷ்
உள்துறை மந்திரி டேவிட் ப்ளங்கட்டுடன் ஒரு கூட்டு அறிக்கை வெளியிட்டார். அதில், "பொது ஐரோப்பிய ஒன்றிய
வழிவகைகளின் மூலம் புகலிடம் கோருவோரை நடத்துவ தும்
செயல்படுத்தவேண்டும் என்றும், இது தஞ்சம் நாடி வருபவர்களைத்
தடைக்கு உட்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக
இருக்க வேண்டும்" என்றும் கூறப்பட்டிருந்தது.
கலேயில் இருந்த குடியேறியவர்களையும்,
அவர்களுடைய குழந்தைகளையும் இரக்கமற்ற முறையில் நடத்தியது,
ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும்
ஒரு தீவிர எச்சரிக்ைகயாகும்;
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் சார்பில் ஐரோப்பிய நாடுகள் சுமத்தும் சமூக அழிவிலிருந்து
தங்களையும் தங்கள் குடும்பங்களையும், காத்து கொள்ளவேண்டும் என்று
போராட முற்படுபவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாரிக்கும் வன்முறை கொண்ட அடக்குமுறை
ஓர் தீவிர எச்சரிக்ைகயாè
உள்ளது. |