WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
Once again, on the ex-left and Iran
மீண்டும் ஒரு முறை முன்னாள் இடதுகளும் ஈரானும்
By Joe Kishore
29 September 2009
Use this version
to print | Send
feedback
ஐரோப்பிய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு ஒபாமா நிர்வாகம் ஈரான் மீது
அழுத்தத்தை அதிகரிப்பதற்கான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. ஈராக் படையெடுப்பிற்கு முன் புஷ் நிர்வாகம் நடத்திய
செயல்களை நினைவுபடுத்தும் இப்பிரச்சாரம் ஓரளவிற்கு ஈரானில் உள்ள "பச்சை" எதிர்ப்பு இயக்கத்திற்கு
முன்கூட்டித் திட்டமிடப்பட்டு ஊக்கம் தரும் விதத்தில் உள்ளது.
உண்மையில் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் திடீரெனப் பெருகியுள்ளது முன்னமே
நன்கு தயாரிக்கப்பட்டுள்ள கொள்கை மாற்றத்தைத்தான் வலுவாக தெரிவிக்கிறது; அதில் "திருடப்பட்ட தேர்தல்",
எதிர்த்தரப்பு வேட்பாளர் மிர் ஹொசைன் மெளசவியின் தலைமையில் நடந்த இயக்கத்திற்கு ஆதரவு என்பது மையக்
கூறுபாடாக இருந்தது. இதன் நோக்கம் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு சர்வதேச ஆதரவை
வலுப்படுத்தும்பொருட்டு தற்போதைய ஈரானிய ஆட்சியை உறுதி குலைத்து, நெறியற்றதாகச் செய்வதும், அது
உள்ளிருந்தோ அல்லது வெளி இராணுவ சக்தி உதவியின் மூலமோ ஆட்சி மாற்றத்திற்கு இட்டுச்செல்வதுமாகும்.
ஞாயிறன்று பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ், "ஈரானில் இருக்கும் பிளவுகளைச்
சுட்டிக்காட்டி இதற்கு முன்பும், புரட்சிக்குப்பின் 30 ஆண்டுகளிலோ இது போல் காணப்படவில்லை" என்றார். இப்பிளவுகளும்
ஈரானின் அணுவாயுதத் திட்டம் பற்றிய புதிய குற்றச்சாட்டுக்களும் "பெரும் சக்திகளுக்கு திருப்தி தரும் விதத்தில் தன்
கொள்கையை மாற்ற ஈரானை" கட்டாயப்படுத்தும் என்றார். இல்லாவிடில் கடுமையான பொருளாதாரத் தடைகள்
வரும் என்று அச்சுறுத்திய அவர், இராணுவ நடவடிக்கை வரக்கூடும் என்ற விருப்பத்தையும் வலியுறுத்தினார்.
ஈரானுக்கு எதிரான சமீபத்திய ஒருங்கிணைந்த ஆத்திரமூட்டும் செயல் இன்னும் அதிக
அளவில் ஈரானிய "பச்சை" இயக்கத்தின் சமூக, அரசியல் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளதுடன், அதன் சர்வதேச
ஆதரவாளர்களையும் காட்டியுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஈரானியத் தேர்தலை அடுத்து மத்தியதர வர்க்க
முன்னாள் இடது மற்றும் "சோசலிஸ்ட்" அமைப்புக்கள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு பெற்ற எதிர்க் கட்சி
வேட்பாளார் மீர் ஹொசைன் மெளசவியின் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்க முற்பட்டன.
தெஹ்ரானில் Nation
ஏட்டின் நிருபர் ரோபர் ட்ரேபுஸ், லிப்ஸ்டிக் அணிந்து உயர்ந்த குதிகால்கள் கொண்ட காலணி அணிந்த
எதிர்ப்பாளர்களைப் பற்றி பரபரப்புடன் எழுதிய
Nation ஏட்டில் இருந்து, முன்னாள் ட்ரொட்ஸ்கிச
LCR
அமைப்பில் இருந்து சமீபத்தில் உருவாக்கப்பட்ட பிரான்சின்
Nouveau Partie Anti Capitaliste (NPA)
வரை, மற்றும் வெற்றுத்தன, பயனற்ற ஆனால் குட்டி முதலாளித்துவ கல்வியாளர்களின் செல்லப்பிள்ளையான
Slavoj Zizk
வரை அனைத்தும் ஜனநாயகம், சுதந்திரத்திற்கான பெரும் போராட்டம் என்று அவை கூறியவற்றில் இணைந்து கூவின.
மெளசவியின் பெயர் "கோமேனி புரட்சியை நீடிக்க வைத்த மக்களின் கனவு உண்மையில் மீட்கப்பட்டதை எடுத்துக்
காட்டுகிறது" என்று கூறும் அளவிற்கு Zizek
சென்றார்.
தொடர்ச்சியான பல கட்டுரைகளில் உலக சோசலிச வலைத் தளம் "பச்சைப்
புரட்சி" அரசியலின் வலதுசாரித் தன்மை பற்றி வலியுறுத்தியிருந்தது. எங்கள் எதிர்ப்பை மஹ்முத் அஹ்மதிநெஜாட்
அரசாங்கத்திற்கும் தெளிவாக்கியபின், நாங்கள், மெளசவி ஆளும் நடைமுறையில் ஒரு பிரிவு, இன்னும் தீவிரமாக
தொழிலாள வர்க்கத்தை தாக்குதல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு மிகவும்
ஒத்திருக்கும் தன்மையை பிரதிபலித்தது என்று விளக்கியிருந்தோம்.
(See, for example, "For a socialist, not a
color' revolution in Iran).
தேர்தல் முடிவிற்குப் பின்னர் நடந்த போக்குகள் இந்தப் பகுப்பாய்வை முற்றிலும்
உறுதிப்படுத்தின. ஜனாதிபதி ஒபாமா, பிரதம மந்திரி பிரெளன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி
ஆகியோர் ஒரு புதிய இறுதி எச்சிரிக்கையையும் அச்சுறுத்தல்களையும் ஈரானுக்கு எதிராக போன வாரம்
வெளியிடுவதற்கு முன், எதிர்க்கட்சி இயக்கம் தெஹ்ரானில் ஒரு வெளிப்படையான ஏகாதிபத்திய சார்பில்
ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, "காசாவுக்கும், லெபனானுக்கும் இல்லை, என்னுடைய உயிரை ஈரானுக்கு
அளிப்பேன்", "சீனாவிற்கு இறப்பு! ரஷ்யாவிற்கு இறப்பு!" என்ற கோஷங்களைக் கொடுத்து அமெரிக்காவிற்கும்
இஸ்ரேலுக்கும் ஆதரவை அடையாளம் காட்டியது.
இவ்விதத்தில் அமெரிக்க ஆதரவு ஈரானிய தேசியவாதம் (கம்யூனிச எதிர்ப்பும்கூட)
1979ல் அகற்றப்பட்ட ஷாவின் சர்வாதிகார சிந்தனைப் போக்கின் சார்புடன் பலவற்றைப் பொதுவாகக்
கொண்டுள்ளது. ஈரானில் உள்ள எதிர்க்கட்சி இப்பொழுது ஈரானில் இருப்பதாகக் கூறப்படும் அணுவாயுதத் திட்டத்திற்கு
அமெரிக்க ஆதரவு தாக்குதல்களை வரவேற்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸில் ஞாயிறன்று வெளிவந்த கட்டுரை ஒன்று, ("Disclosure
of Nuclear Plant Adds to Iran Rift"
குறிப்பிடுவதாவது: "ஈரானின் புதிய யுரேனிய செறிவூட்டல் திட்ட ஆலை பற்றிய ஜனாதிபதி ஒபாமாவின் அறிவிப்பு
வந்துள்ள நேரம், எதிர்க்கட்சித் தலைவர் மீர் ஹொசைன் மெளசவியின் ஆதரவாளர்கள் பூசலுக்குட்பட்ட
அஹ்மதினெஜாட்டின் மறு தேர்தலுக்கு எதிரான எதிர்ப்புக்களுக்கு புதிய உத்வேகம் கொடுக்கும் தருணத்தில்
வந்துள்ளது."
மெளசவி பெயரளவிற்கு மேற்கத்தைய பொருளாதாரத் தடைகளை எதிர்த்தாலும்
பச்சை இயக்கம் அமெரிக்க நடவடிக்கைகளுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டுள்ளது. இயக்கத்தின் செய்தித்
தொடர்பாளரான திரைப்படத் தயாரிப்பாளர் Mohsen
Makhmalbaf இடமிருந்து வந்த அறிக்கை ஒன்றை டைம்ஸ்
மேற்கோளிட்டுள்ளது: "ஈரானில் பச்சை இயக்கம் இன்னும் கூடுதலான முறையில் உலகின் கவலைகளை அறிகிறது,
உண்மையில் அதே போன்ற கவலைகளை இதுவும் கொண்டுள்ளது."
இதற்கிடையில் ஒபாமாவின் தாராளவாத மற்றும் "இடது" ஆதரவாளர்கள் ஏற்கனவே
தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சமீபத்திய அமெரிக்க சூழ்ச்சிக்கையாளலை மேற்கொண்டுள்ளனர்; இது மீண்டும்
Nation
உடைய ரோபர்ட் ட்ரேபுஸ் தலைமையில் நடக்கிறது.
வெள்ளியன்று ட்ரேபுஸ், நேஷனின் வலைத் தளத்தில் ("Iran
Bombshell: US Reveals Secrect Facility)
மிக முக்கியமாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்: இது அதிகமாக ஒபாமா நிர்வாகம் கொடுத்திருந்த பின்னணித்
தகவலை விமர்சனமின்றி அப்படியே கூறியிருந்தது.
ட்ரேபுஸ் இன் கருத்தின்படியே, அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றை முற்றிலும் ஏற்றுள்ள
விதத்தில் கூறுவதாவது: "முன்பு அறிவிக்கப்படாத நிலையத்தின் கண்டுபிடிப்பு,
IAEA மற்றும்
உலக சமூகத்தில் இருந்து அதை மறைக்கும் ஈரானின் வெளிப்படையான முயற்சிகளுடன் சேர்ந்து, ஈரான்
இரகசியமாக ஒரு இராணுவத் தாக்கும் திறனைத்தான் பெற முற்பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டுகளுக்கு வலு
கொடுக்கிறது."
திங்களன்று ட்ரேபுஸ் இதைத்தொடர்ந்து இன்னும் வெளிப்படையான வலதுசாரிக்
கட்டுரையை வெளியிட்டார் ("Can the US-Iran
Talks Succeed?"): இதில் அவர், ஈரானில் அமெரிக்கா
ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவதில் வெற்றியடையும் என்ற தன் நம்பிக்கையையும் தெரிவித்திருந்தார்.
"ஒபாமா ஒரு அதிரவைக்கக்கூடிய, முக்கிய அமெரிக்கக் கொள்கையின் திருப்பத்தை"
செய்ய உள்ளார் என்று அறிவித்த விதத்தில் ட்ரேபுஸ் கட்டுரையை தொடக்குகிறார்: இது இந்த வாரம் ஜெனீவாவில்
ஈரானுடன் பேச்சுக்கான தயாரிப்பாக இருக்கும்; அதே நேரத்தில், "புஷ் நிர்வாகத்தின் பரபரப்பான
அலங்காரச் சொற்கள் தவிர்க்கப்படும்." இவ்வித வகைப்படுத்துதல் அபத்தமானது ஆகும்; அதுவும் இப்பேச்சுக்கள்
இறுதி எச்சரிக்கைகளை தொடர்ந்து வந்துள்ளன என்ற விதத்தில்; கடுமையான பொருளாதாரத் தடைகள் பற்றிய
அச்சுறுத்தல்கள், வருங்காலத்தில் இராணுவத் தாக்குதல்கள் வரக்கூடும் என்ற குறிப்புக்கள் காட்டப்பட்ட நிலையில்.
உண்மையில் ஒபாமாவின் ஈரான் கொள்கை முற்றிலும் அவருக்கு முன் பதவியில் இருந்தவருடன் இயைந்துதான் உள்ளது.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் திங்களன்று வெளியிட்ட
("There Are Only Two Choices Left on Iran")
Eliot Cohen
கட்டுரையில் இருந்து ட்ரேபுஸ் மேற்கோளிடுகிறார். ஒரு வலதுசாரி புது கன்சர்வேடிவ் ஆன கோஹன், ஈரான்மீது
இராணுவத் தாக்குதலுக்கான வாய்ப்பு பற்றி விவாதித்து, அதற்கு அடுத்த விருப்புரிமை "கடந்தகாலக்
கொள்களையுடன் முறித்துக் கொண்டு இஸ்லாமிய குடியரசை அகற்ற தீவிரமாக முற்பட வேண்டும் என்கிறார்: இது
படையெடுப்பின் மூலமாக இல்லாமல், இந்த நிர்வாகம் அதைப்பற்றி நினைக்கவும் இல்லை, செயல்படுத்தவும்
செய்யாது, ஆனால் அமெரிக்க சக்கியின் மற்ற கருவிகள் மூலம், கடினம் என்பதை விட, மிருதுவான முறையில்"
என்று முடித்துள்ளார்.
கோஹனின் அலங்காரச் சொற்கள் பற்றி சில குறைகளைக் கூறியபின்னர், ட்ரேபுஸ்
தான் முற்றிலும் அடிப்படை முன்கருத்தை ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்: "ஜனாதிபதி ஒபாமாவின் கொள்கையான ஈரானுடன்
பேச்சு வார்த்தைக்குத் தயார் என்னும் கொள்கை பச்சை அலை எதிர்ப்பு இயக்கத்தை ஈரானில் தூண்டிவிட உதவிற்று
என்ற உண்மையை கோஹன் வசதியுடன் மறந்துவிட்டார்" என்று அவர் எழுதியுள்ளார். "ஆட்சிமாற்றம் ஈரானில்
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் வராவிட்டால் (இன்னும் சற்றுத் தள்ளிப்போனால்), இது எதிர்க்கட்சி இயக்கமாக
இருக்கும் --ஜூன் 12 வரை எந்த சீர்திருத்தவாதிகள், நடைமுறை வாதிகளை புதிய கன்சர்வேடிவ்கள் இழிவுபடுத்திப்
பேசினரோ, அவர்களால் நடத்தப்படும்-- அதன் கை ஒங்கினால்."
வேறுவிதமாக கூறினால், ட்ரேபுஸ்ஸின் கருத்துப்படி ஒபாமா, கோஹன் கோரும்
அதே இலக்கைத்தான் நயமாக நாடுகிறார்.
இவர்களுடைய நோக்கங்கள் என்ன? ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீது
படையெடுப்பு, ஆக்கிரமிப்பை நடத்தியபின் --ஈரானின் அண்டை நாடுகள்-- அமெரிக்காவின் ஆளும் வர்க்கம் மத்திய
கிழக்கு, மத்திய ஆசியா மீது தன்னுடைய கட்டுப்பாட்டை முழுவதும் அடைவதற்காக ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கு
கோஷ்டி அமைத்து கூவுகிறது. இது இறுதியில் பெரிய சக்திகளுக்கு இடையே மோதல் என்ற ஆபத்தைக் காட்டும்;
அதில் "சீனாவிற்கு இறப்பு!, ரஷ்யாவிற்கு இறப்பு! என்ற கோஷங்கள் அலங்கார முக்கியத்துவத்தை விட கூடுதல்
சிறப்பைப் பெற்றுவிடும்.
ட்ரேபுஸ்ஸும் மற்ற "இடதுகளும்" இந்த ஏகாதிபத்திய செயற்பட்டியலுடன் முழுதும்
உடன்பட்டவர்கள்தான். அமெரிக்க அரசாங்கத்தின் நிதி பெறும் முகவர்களாக அவர்கள் இருந்தால்கூட வேறுவிதமாக
அவர்களால் எழுதவும் முடியாது, நடந்து கொள்ளவும் முடியாது. ஆனால் இத்தகைய நேரடித் தொடர்பு
மேம்போக்கானதுதான். அவர்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு அதன் இயல்பான சமூக, அரசியல் கண்ணோட்டத்தில்
விரிவாக்கம் போல் பணிகளை செய்கின்றனர் --அதுவோ அமெரிக்காவிலும் சரி, ஈரானிலும் சரி, தொழிலாள
வர்க்கத்தின் நலன்களுக்கு முற்றிலும் விரோதமானதாகும். |