WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஜேர்மனி
Historic defeat for Social Democrats in German
federal election
ஜேர்மனிய கூட்டாட்சித் தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு வரலாற்று ரீதியான
தோல்வி
By Stefan Steinberg
28 September 2009
Use this
version to print | Send
feedback
ஞாயிறன்று நடைபெற்ற ஜேர்மனியக் கூட்டாட்சித் தேர்தல் சமூக ஜனநாயகக்
கட்சிக்கு (SPD)
ஒரு வரலாற்றளவு தோல்வியைக் கொடுத்து, ஜேர்மனியின் வெளியேறும் கூட்டாட்சி அரசாங்கத்துடன் தொடர்புடைய
அனைத்து கட்சிகளுக்குமான ஆதரவில் தீவிர சரிவையும் ஏற்படுத்தியுள்ளது.
SPD 23.0 சதவிகித
வாக்குகளைத்தான் பெற்றது; இது கடந்த 2005 கூட்டாட்சித் தேர்தலில் பெற்றதை விட 11 சதவிகிதம் குறைவு
ஆகும்; அப்பொழுது இக்கட்சிக்கு 34.2 சதவிகிதம் கிடைத்திருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்த
முடிவு சமூக ஜனநாயகக் கட்சிக்கு மிக மோசமானது ஆகும். 11 சதவிகிதத்திற்கும் மேலான சரிவு என்பது
1949க்குப் பின்னர் ஒரூ கூட்டாட்சித் தேர்தலில் ஜேர்மனியக் கட்சிக்கு பதிவான மிகப் பெரிய இழப்பு ஆகும்.
சமூக ஜனநாயகக் கட்சியின் ஜேர்மனிய பெரும் கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளாகிய
கிறஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU),
பவேரியாவை தளமாகக் கொண்ட கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSD)
ஆகியவையும் வாக்காளர்களால் தண்டிக்கப்பெற்றன. "ஒன்றியம்" எனக் கூறப்படும் கட்சிகள் வாக்குகளில் அதிக பங்கை
பெற்று வெளிப்பட்டன--மொத்தத்தில் 33.8 சதவிகிதம்--ஆனால் போருக்குப் பிந்தைய காலத்தில் இரண்டாம்
மோசமான முடிவுகளைப் பதிவு செய்தன.
ஒன்றியக் கட்சிகளுக்கு மொத்தம் என்பது 2005ல் அவற்றிற்கு கிடைத்த 35.2
சதவிகித முடிவை விட 1.4 சதவிகிதப் புள்ளிகள் குறைவு ஆகும்; போருக்குப் பிந்தைய காலத்தில் பெரும்பாலான
தேர்தல்களில் பதிவாகியிருந்த 40 சதவிகிதத்திற்கும் கூடுதல் என்பதில் இருந்து மிகவும் தள்ளித்தான் இருந்தது. பல
CDU-CSU
வாக்காளர்கள் "தடைற்ற சந்தை" ஆதரவு (FDP)
சுதந்திர ஜனநாயக கட்சிக்கு மாறியிருக்க வேண்டும் என்பது
வெளிப்படை; அது 14.8 சதவிகித வாக்குகளை, 2005 உடன் ஒப்பிடும்போது 5 சதவிகிதப் புள்ளிகள்
கூடுதலாகப் பெற்றது.
கிறிஸ்துவ சமூக ஒன்றியம்
(CSU) வும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரூ
கூட்டாட்சித் தேர்தலில் மிக மோசமான முடிவைப் பதிவு செய்தது. ஜேர்மனியின் மிகப் பெரிய மாநிலத்தின்
அரசியலில் நீண்ட காலமாக மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கும் கட்சி பவேரியாவில் 41.0 சதவிகித
வாக்குகளைத்தான், அதாவது கடந்த பவேரிய மாநிலத் தேர்தல்களில் பெற்ற 43.4 சதவிகிதத்தை
விடக்குறைவாகத்தான் பதிவு செய்துள்ளது.
வாக்காளர்கள் கூட்டம் கூட்டமாக கன்சர்வேடிவ்
CSU, வில் இருந்து
நகர்ந்த நிலையிலும் கூட சமூக ஜனநாயகக் கட்சிக்கு அதிக ஆதாயம் பெற முடியவில்லை. மாறாக
SPD யும் இதன்
மோசமான முடிவை பவேரியாவில் பதிவு செய்து கொண்டது; வாக்குப் பதிவில் 16.5 சதவிகிதத்தைத்தான்
பெற்றது.
CDU வின் அதிபர் அங்கேலா
மேர்க்கெல் ஞாயிறு மாலை வணிகச் சார்புடைய Free
Democrats உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை தான் அமைக்க
இருப்பதாகக் கூறினார். இந்தக் கூட்டணிக்கு 323 இடங்கள் பாராளுமன்றத்தின் கீழ் பிரிவில் கிடைக்கும்,
கிட்டத்தட்ட 15 இடங்கள் கூடுதல் பெரும்பான்மை இருக்கும்.
CDU-CSU-SPD பெரும்
கூட்டணியுடன் தொடர்புடைய அனைத்துக் கட்சிகளில் இருந்தும் வாக்காளர்கள் ஒதுங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள்
தங்கள் பங்கு வாக்குகளை அதிகரித்துக் கொள்ள முடிந்தது.
பசுமைக் கட்சி 10.6 சதவிகிதத்தை அடைந்தது; இது 2005 தேர்தலில் இருந்து
2.5 சதவிகிதப் புள்ளிகள் அதிகம் ஆகும். அதேவேளை இடது கட்சி 12.5 சதவிகிதம் வென்று, 2005ல்
பெற்றதைவிட 3.8 சதவிகிதம் புள்ளிகள் அதிகம் பெற்றது. பசுமைக் கட்சியை முக்கிய கன்சர்வேடிவ் கட்சிகளுடன்
சேர்த்து கூட்டாட்சி அளவில் அரசாங்கத்தில் பங்குகொள்வதை நோக்குநிலைப்படுத்தி அக்கட்சியின் முக்கிய
உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட நீண்ட பிரச்சாரம் தோல்வியுற்றதை அடுத்து, பெரும் கூட்டணிக் கட்சிகளின்மீது
இருந்து பெருகிய அதிருப்தியில் பசுமைவாதிகள் இலாபம் அடைய முடிந்தது.
2005 உடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இடது கட்சி ஓரளவிற்குத் தன் நிலைமையை
முன்னேற்றுவித்துக் கொண்டுள்ளது. தேர்தல் பிரச்சாரக்காலத்தில் கட்சி தன்னுடைய முக்கிய பங்கு சமூக ஜனநாயக
கட்சிக்கு காலாட் படையாக இருப்பது என்று பார்ப்பதாக தெளிவாக்கியது. இதையொட்டி அது சமூக ஜனநாயக
வாதிகளுக்கு ஆதரவுச் சரிவில் அதிக இலாபத்தை பெற முடியவில்லை.
2005 ல் பதிவான 77.7
சதவிகிதத்தில் இருந்து வாக்காளர் வாக்குப் பதிவு 71.2 சதவிகிதம் எனத் தீவிரமாக குறைந்தது. மிக அதிகம்
வாக்காளிக்காதவர்கள் முன்னாள் SPD
ஆதரவாளர்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக
SPD க்கு தேர்தல் முடிவுகள் ஒரு பேரழிவாக வந்துள்ளன; ஒரு
தேர்தல் தோல்வியில் இருந்து இன்னொரு தேர்தல் தோல்விக்கு அது தடுமாறி விழுந்துள்ளது. மாநில அளவில்
தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளை அடுத்து, கட்சி போருக்குப் பிந்தைய ஜேர்மனிய வரலாற்றிலும் மிக
மோசமான தேர்தல் முடிவுகளை கண்டவிதத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பியத் தேர்தல்களில்
20.8 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றது.
சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள்,
SPD யின்
நிலைமையில் புதுப்பித்தல் இருக்கும் என்று குறிப்புக்களை காட்டியிருந்தன; ஆனால் ஞாயிறு முடிவு வாக்காளர்கள்
SPD
அரசாங்கத்தில் தேசிய அளவில் அதன் 11 தொடர்ந்த ஆண்டுகளில் செயல்பட்டதை மறக்கவோ, மன்னிக்கவோ
தயாராக இல்லை என்பதைத்தான் உறுதிப்படுத்தியுள்ளது.
அக்காலக் கட்டத்தில் SPD
முதலில் பசுமை வாதிகளுடனும் பின்னர் பெரும் கூட்டணி உறுப்பினர் என்ற முறையிலும் பெருவணிகத்திற்கும் நிதிய மூலதனத்திற்கும்
தன்னுடைய முழு அடிபணிதலை நிரூபித்தது. போருக்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மனிய பொதுநலச் செலவுகளில் மிக
மோசமான பிற்போக்குக் குறைப்புக்களை செயல்படுத்தியது; இது ஜேர்மனியை தொழில்துறை முன்னேறிய நாடுகளின்
மத்தியில் உலகின் இரண்டாம் முக்கிய குறைவூதியப் பொருளாதாரமான அமெரிக்காவிற்கு அடுத்தாற்போல் உள்ளதாக
மாற்றியது.
ஞாயிறு முடிவை அடுத்து
SPD யின் முக்கிய வேட்பாளர் பிராங் வால்டர் ஸ்ரைன்மயர்
SPD
ஆதரவாளர்களிடம் பேர்லினில் கட்சித் தலைமயகத்தில் "ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சிக்கு முடிவுகள் கசப்பாக
உள்ளன; இது ஒரு கசப்பான தோல்வி" என்றார். இவருடைய சொற்கள்
SPD யின்
பாராளுமன்ற பிரிவுத் தலைவர் Peter Struck
ஆலும் எதிரொலிக்கப்பட்டன.
ஸ்ரைன்மயர் வெளியுறவு மந்திரி என்ற தன் பதவியை இழப்பார். அவருக்குப் பதிலாக
FDP
தலைவர் Guido Westerwelle
அப்பதவிக்கு வரக்கூடும்.
தோல்வியின் அளவு எப்படி இருந்தாலும், ஸ்ரைன்மயரும் கட்சித் தலைவர் பிரான்ஸ்
முன்டெபெரிங்கும் தாங்கள் SPD
யில் முக்கிய பதவிகளில் இருந்து இறங்குவதாக இல்லை என்று குறிப்புக் காட்டியுள்ளனர். நிருபர்களால்
வினாவப்பட்டதற்கு, ஸ்ரைன்மயர் தன்னுடைய கட்சியின் பொதுநல விரோத 2010 செயற்பட்டியலுக்கு முழு ஆதரவு
கொடுத்து, தான்தான் கட்சியின் பாராளுமன்றப் பிரிவிற்கு தலைமை தாங்க இருப்பதையும் கூறினார்.
SPD க்கு ஆதரவுச் சரிவு மற்றும்
ஆளும் கூட்டணியில் இருந்து மற்ற கட்சிகள் நகர்ந்தது என்பது பெருவணிக சார்பை வெறித்தனமாகக் கொண்ட
FDP
எதிர்க்கட்சியில் 11 ஆண்டுகள் இருந்த பின்னர் பதவிக்கு மீண்டும் வருவதற்கான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நிதிய நெருக்கடி வெடித்து வந்த ஆண்டில் இருந்து
FDP, பெரிய
வங்கிகள் மீது மிகச்சிறிய தடைகள் என்ற நடவடிக்கைகளைக் கூட நிராகரித்து, நிதிய உயரடுக்கிற்கு தொடர்ந்து
நட்பைக் காட்டிவந்துள்ளது. FDP, CDU
இரண்டையும் கொண்டுள்ள ஜேர்மனியின் புது அரசாங்கம் வெளிப்படையான பிற்போக்குத்தனத்தையும் வர்க்க
மோதலையும் கொண்டது ஆகும்.
ஏற்கனவே நிதிய வட்டங்கள், புதிய அரசாங்கம் நெருக்கடியின் முழுச் சுமையையும்
உழைக்கும் பரந்த தட்டுக்களின் முதுகுகளில் மாற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கண நேரமும் தாமதம்
செய்யக்கூடாது என்று கூறி குருதிக்காக குரைத்து வருகின்றன.
Bild am Sonntag
என்னும் செய்தித்தாளில்
Deutsche Bank
ன் தலைமை பொருளாதார வல்லுனர் நோர்பெர்ட் வால்டர், அரசாங்கச் செலவை பொறுத்தவரை "முன்னேற்ற
நடவடிக்கைகள் வேண்டும்" என்று கோரி, வரவிருக்கும் அரசாங்கம் நுகர்வோர் மிது அதிக புதிய வரிகள் விதிப்பது
தொடக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
ஜேர்மனிய சோசலிச் சமத்துவக் கட்சியானது (PSG),
நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு சர்வதேச சோலிச வேலைத்
திட்டத்தின் அடிப்படையில் பரந்த மக்களை அணிதிரட்டுவதன் தேவையை அதிகரிக்கும்பொருட்டு, இரண்டு ஜேர்மனிய
மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. நெருக்கடியின் உண்மையான செயற்பரப்பை மறைக்க முக்கிய கட்சிகளிடையே
சதி உள்ளது என்றும் PSG
தொழிலாள வர்க்கத்தை எச்சரிக்கை செய்தது.
குறிப்பாக PSG
முக்கிய அரசியல் மாற்றங்கள் மரபார்ந்த கட்சிகளின் மக்கள் தளத்தை அரித்துக்
கொண்டிருக்கும் சூழ்நிலையில், இடது கட்சி வர்க்கப் போராட்டத்தின் புதிய அலையை நிறுத்தி வைப்பதில் முக்கிய
பங்கை ஆற்ற தீனி ஊட்டி வளர்க்கப்படுகிறது என்பதைத் தெளிவாக்கியது.
PSG மொத்தம் 2,970
வாக்குகளைப் பெற்றது. பேர்லினில் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்திருந்த நிலையில் அதற்கு 1,423
வாக்குகள் கிடைத்தன. இது 2009 ஐரோப்பியத் தேர்தல்களில் அதற்கு கிடைத்ததைவிட இரு மடங்கு அதிகம்
ஆகும்; 2005 கூட்டாட்சித் தேர்தல் மற்றும் 2004 ஐரோப்பிய தேர்தலில் கிடைத்த அளவுதான்.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில்
PSG 1,547
வாக்குகளைப் பெற்றது; இது 2009 ஐரோப்பிய தேர்தலில் பெற்றதை விட 100 வாக்குகள் அதிகம் ஆகும்.
PSG க்கு கிடைத்த வாக்குகள்
ஒப்புமையில் குறைவுதான். ஆயினும்கூட இது தொழிலாளர்கள், இளைஞர்களிடையே ஒரு முக்கியமான அடுக்கு பெருகிய
முறையில் சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் முன்னோக்கிற்கு
செவிமடுக்கின்றனர் என்பதைக் குறிக்கிறது. |