WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
G20 summit sets stage for sharpening of international tensions
சர்வதேச அழுத்தங்கள் தீவிரமாவதற்கு
G20
உச்சிமாநாடு அரங்கம் அமைக்கிறது
By Barry Grey
26 September 2009
Use this
version to print | Send
feedback
வெள்ளியன்று முடிவடைந்த
G20 முக்கியப் பொருளாதார நாடுகளின் பிட்ஸ்பேர்க்
உச்சிமாநாடு உலகப் பொருளாதாரத்தை புதுப்பிக்க மற்றும் ஒரு பெரிய நிதியக் கரைவை தவிர்ப்பது பற்றி
பெரும் சக்திகளிடையே இருக்கும் தீவிர பூசல்களை மூடிமறைக்கும் வகையில் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்ட
விதத்தில் முடிவடைந்தது.
அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும், ஆசிய,
இலத்தின் அமெரிக்காவில் எழுச்சி பெற்று வருபவை எனக் கூறப்படும் நாடுகளுக்கும் மிகச் சக்தி வாய்ந்த
மேற்குநாடுகளுக்கும் இடையே உள்ள முக்கிய கருத்து வேறுபாடுகள் உச்சிமாநாட்டு அறிக்கையில் தவிர்க்கப்பட்டன.
இதையொட்டி தேசிய மற்றும் பிராந்திய அழுத்தங்கள் வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் தொடர்ந்து
அதிகரித்து பிரச்சனையை கொடுக்கும்.
உச்சிமாநாட்டில் மேலாதிக்கம் செலுத்திய ஏகாதிபத்திய நலன்கள் அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா, பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிரெளன் ஆகியோரால்
இந்த அரங்கத்தை தங்கள் இராஜதந்திர மற்றும் பொருளாதாரத் தாக்குதலை ஈரான்மீது பெருக்குவதற்கும்,
தெஹ்ரானுக்கு எதிராக இறுதியில் இராணுவ அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தியது. மூன்று தலைவர்கள் வெள்ளி காலை
அவர்கள் குறிப்பிட்ட அறிக்கையில் ஈரானில் ஒரு இரகசிய அணுவாயுத நிலைய அமைப்பது என்பது பற்றியும்,
அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்க இருக்கும் தெஹ்ரானுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்பு இறுதி எச்சரிக்கை
கொடுத்ததும், பொருளாதார விஷயங்கள் பற்றி அரசாங்க தலைவர்களின் விவாதங்கள் மற்றும் முடிவுகளை
பின்னுக்குத் தள்ளப்பட்டன.
உச்சிமாநாட்டின் முடிவில் தன்னுடைய செய்தியாளர் கூட்டத்தில் மாநாட்டின்
விருந்தோம்பல் நாட்டிற்கு தலைவர் என்ற முறையில் ஒபாமா மீண்டும் ஈரானின் அணுவாயுத திட்டத்தைப் பற்றி
பேசி, ஈரான் மற்றும் ஆப்கான் போர் பற்றி நிருபர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் விடையிறுத்தார்;
உச்சிமாநாடு பற்றி மிக அதிக இகழ்வுதான் மிஞ்சியது.
உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய உள்ளடக்கமுடைய முடிவு பொருளாதார ஊக்க
நடவடிக்கைகளையும் வங்கிகளுக்கு உதவித் தொகை அளித்தலையும் அவற்றை நல்ல முறையில் மீண்டும் இயக்குவதை
தொடர்தல் (கூட்டம் தொடங்குவதற்கு முன்பே எல்லா நாடுகளாலும் இது உடன்பாடு கொள்ளப்பட்டது) மற்றும்
நடைமுறையிலுள்ள தொழில்துறை நாடுகளின் G8
குழுவிற்கு பதிலாக, G20
குழுவை சர்வதேச பொருளாதாரங்கள் பற்றிய மத்திய விவாத அரங்காக ஆக்குதல் என்பதும் ஆகும்.
பிந்தைய முடிவு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் உலகப்
பொருளாதார விஷயங்களில் பெற்றுவரும் கூடுதலான கனத்தை மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின்
ஒப்புமையில் சரிவு ஆகியவற்றையும் ஒப்புக் கொள்ளும் தன்மையை பிரதிபலித்தது. ஆனால் அமெரிக்கா முன்வைத்த
பல முன்முயற்சிகளை போல் இதுவும் வாஷிங்டனின் நிலைப்பாட்டை அதன் முக்கிய ஐரோப்பிய போட்டி நாடுகளுக்கு
எதிராக குறிப்பாக ஜேர்மனிக்கு எதிராக, வலுப்படுத்தும் வடிவமைப்பை கொண்டிருந்தது. ஐரோப்பிய
சக்திகள்தான் தங்கள் செல்வாக்கின் பெரும் நீர்த்த தன்மையை
G8 க்குப் பதிலாக
G20
வருவதில் காணும்.
இதேபோல் அமெரிக்கா சர்வதேச நிதிய நிதியத்தில் (IMF)
"வளர்ச்சியுறும்" நாடுகளின் வாக்களிக்கும் சக்தியை "குறைந்த பட்சம்" 5 சதவிகிதமாவது அதிகரிக்கும் உடன்பாடு
ஒன்றையும் பாடுபட்டுக் கொண்டுவந்தது; இந்த மாற்றம் அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகளைத்தான்
அதிகமாக எதிர்மறையாக பாதிக்கும்.
சர்வதேச உறவுகளில் இருந்த நெருக்கடித்தன்மை வெள்ளியன்று பைனான்சியில்
டைம்ஸின் தலையங்கத்தில் பிரதிபலித்தது "சர்வதேச நிதிய நிதியம் பற்றிய அழுத்தங்கள்
G20 ஐ பாதிக்கும்
அச்சுறுத்தலை கொடுக்கின்றன". இக்கட்டுரை இங்கிலாந்தும், பிரான்ஸும் வியாழனன்று அமெரிக்க அளித்த
திட்டமான சர்வதேச நிதிய நிதிய நிர்வாகக்குழு உறுப்பினர் எண்ணிக்கையை 24ல் இருந்து 20க்கு குறைத்தல்,
மற்றும் குறைவான ஐரோப்பிய பிரதிநிதிகள் என்பது பற்றி அதிர்ச்சி மற்றும் சீற்றத்துடன் எதிர்கொண்டன.
இத்திட்டம் இரு நாடுகளின் சர்வதேச நிதிய நிதியத்தில் பதவி மற்றும் இயக்குனர்கள் குழுவிலும் அச்சுறுத்தக்கூடும்.
பைனான்ஸியல் டைம்ஸின் கருத்துப்படி பிரிட்டனும் பிரான்ஸும் சர்வதேச நிதிய
நிதியம் பற்றிய அனைத்துப் பிரச்சினைகளும் விவாதத்திற்கு விடப்பட வேண்டும் என்று வாதிட்டன. இதில்
அமெரிக்காவின் நடைமுறைப்படி இருக்கும் தடுப்பதிகாரமும் அடங்கும். ஆனால் எப்படிப் பார்த்தாலும் அமெரிக்கா
இத்திட்டத்தை ஒதுக்கிவிட்டது. அது இறுதி அறிக்கையில் வரவில்லை. மாறாக சர்வதேச நிதிய சீர்திருத்தம்
வரவிருக்கும் அதன் மாநாடுகளில் முடிவெடுக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுவிட்டது.
உச்சிமாநாட்டிற்கு முன்பு ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் விவாதங்களின்
மத்திய குறிப்பாக உலகப் பொருளாதாரம் மறு சீரைமைக்கப்பட வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் என்ற
ஒபாமா நிர்வாகத்தின் வலியுறுத்தலை கண்டித்தார். ஜேர்மனி, சீனா இரண்டுமே அதன் பாரிய பற்றாக்குறைகளை
அமெரிக்கா பிற நாடுகளுக்கு தள்ளுதல், மற்றும் தங்கள் ஏற்றுமதிச் சார்பு உடைய பொருளாதாரம்,
அதையொட்டி ஏற்பட்டுள்ள வணிக, நடப்பு இருப்பு கணக்கில் உபரிகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் என்று
கருதுகின்றன.
தங்கள் பங்கிற்கு ஜேர்மனியும் பிரான்ஸும் வங்கிகள் மீது உலகக் கட்டுப்பாடு
வேண்டும், வங்கியாளர்களின் ஊதியங்கள் மீது தடுப்புக்கள் என்பதை மத்திய பிரச்சினைகளாக விவாதிக்கப்பட
வேண்டும் என்று செல்வாக்கைக் காட்ட முயன்றன. இந்த முயற்சி நிதிய பொருளாதார நெருக்கடிகளுக்கான
பொறுப்பை Wall Street
இன் மீது இருத்துவதுடன் தங்கள் வங்கித் தொழில்களின் நலனை முன்னேற்றுவிக்க
அமெரிக்க வங்கி முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அதையொட்டி வரும் நலன்களையும் பயன்படுத்திக்
கொள்ளுவது ஆகும்.
"நாம் ஒன்றும் செயற்கையான பிரச்சினைகளை தேடத் தொடங்கி, நிதியச்
சந்தைகள் கட்டுப்பாடு பற்றிய தலைப்பை மறந்துவிடக்கூடாது" என்று மேர்க்கெல் அறிவித்தார்.
மற்றொரு பூசலுக்குரிய பிரச்சினை வங்கிகள் கணிசமான கூடுதல் மூலதன இருப்புக்களை
எப்பொழுதும் வைத்திருக்கவேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது ஆகும். ஐரோப்பிய
வங்கிகளைவிட ஏற்கனவே அதிக இருப்புக்களைக் கொண்டிருக்கும் அமெரிக்க வங்கிகளுக்கு இது சிறப்பான
ஆதாயங்களை கொடுக்கும்--அவற்றிடம் இருப்புக்கள் அதிகம் இருப்பதற்கு ஓரளவு காரணம் மகத்தான முறையில்
அமெரிக்க அரசாங்கம் வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுத்ததுதான். இறுதி அறிவிப்பு 2012 வரை மூலதன இருப்புக்கள்
பற்றிய முடிவுகள் தள்ளிவைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வங்கி உயர் நிர்வாகிகள் ஊதியத்தைப் பொறுத்த வரையில் பிரான்ஸும் ஜேர்மனியும்
அமெரிக்காவிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு வந்ததை அடுத்து ஊதியங்களுக்கு உச்ச வரம்பு என்ற தங்கள்
கோரிக்கையைக் கைவிட ஒப்புக் கொண்டன. இதற்குப் பதிலாக அறிக்கை வங்கிகளை ஊதியங்கள், மேலதிக
கொடுப்பனவுகளை மறுசீரமைக்குமாறும், பெரும் பணய வகை கடன்கள் கொடுத்தலை தவிர்க்குமாறும், நீண்ட கால
செயற்பாட்டில் குவிப்பு காட்டுமாறும் வலியுறுத்தியது. இந்த மழுங்கிய வேண்டுகோளில் எவ்வித பொருளாதாரத்
தடைகளும் கிடையாது, செயல்படுத்தப்படுவதற்கு கருவியும் கிடையாது.
தொடர்ச்சியான மற்ற பரிந்துரைகளான பங்குகளுக்கான கொடுப்பனவுகள் பற்றிய
மட்டுப்படுத்திய கட்டுப்பாடு, நிலத்தடி எரிபொருள்களுக்கு உதவித் தொகை கொடுப்பதை நிறுத்துவது பற்றிய
தெளிவற்ற உறுதி, பாதுகாப்பு வரிகள் கிடையாது என்ற போலித்தன உறுதிமொழிகள், அரசாங்க ஊக்கம் மற்றும்
வங்கிகள் பிணை எடுப்புத் திட்டங்களை முடித்துக் கொள்ள "வெளியேறும் மூலோபாயம்", உயரும் வேலையின்மை,
பட்டினி மற்றும் வறுமை பற்றி கவலைகள்--ஒரு வலுவான, நிலைத்திருக்கக்கூடிய, சமசீர் வளர்ச்சிக்கான
வடிவமைப்பு என்று அறிக்கைக்குள் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ன.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊக்கம் கொடுத்துள்ள "வடிவமைப்பு" என்பது
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பற்றாக்குறை நாடுகள் உள்நாட்டு நுகர்வைக் குறைத்து வரவுசெலவுத்திட்ட
மற்றும் வணிகப்பற்றாக்குறைகளையும் குறைக்க வேண்டும் என்றும், சீனா, ஜப்பான், ஜேர்மனி போன்ற உபரியை (surplus)
கொண்டிருக்கும் நாடுகள் தங்கள் வணிக, நடப்பு இருப்புக்கணக்கு உபரிகளைக் குறைத்து உள்நாட்டுக்
கோரிக்கைகளை அதிகப்படுத்திக் கொள்ளும்படியும் கோருகிறது.
"கட்டமைப்பிற்குள்" G20
நாடுகள் ஒவ்வொன்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)
உதவியுடன் மற்றவை செயல்படும் முறையை ஆராய்ந்து பலமான அழுத்தத்தை தங்கள் சீரற்ற தன்மையையை
குறைக்காமல் இருக்கும் உறுப்பினர்கள் மீது செலுத்தி அவற்றைக் குறைக்குமாறு செய்ய வேண்டும் சீனாவும்,
ஜேர்மனியும் ஆரம்பத்தில் இத்திட்டத்தை எதிர்த்தன, ஆனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு செயல்பாட்டை
கட்டாயப்படுத்தும் அதிகாரம் கிடையாது, விதிகளைச் செயல்படுத்தாத நாடுகள்மீது அபராதங்களோ,
பொருளாதாரத் தடைகளோ வராது என்று உறுதியளித்த பின்னர்தான் கையெழுத்திட்டன.
BRIC நாடுகள் எனப்படும்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகியவற்றைப் பொறுத்த வரையில், அவை "அமெரிக்காவுடன் சீரான
வளர்ச்சி வடிவமைப்பு பற்றி அமெரிக்காவுடன் பகிரங்கமாக எதிர்க்கவில்லை, ஆனால் இந்நாடுகள் எச்சரிக்கையாக
இருந்து, அதற்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதால்தான் அறிக்கையில் கையெழுத்திட்டன" என்று
பைனான்ஸியல் டைம்ஸ் எழுதியுள்ளது.
செய்தித்தாள் தொடர்கிறது; " 'BRIC
ஒரு வலுப்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கண்காணிப்பு முறை அமெரிக்காவால் மீண்டும் தன்னுடைய சர்வதேசப்
பொருளாதாரக் கொள்கை செயற்பட்டியலை முன்னேற்றுவிக்க பயன்படுத்தபடலாம் என்ற கவலையைக்
கொண்டுள்ளது' என்று Cornell
ல் இருக்கும் முன்னாள் சர்வதேச நாணய நிதிய அதிகாரியான ஈஸ்வர் பிரசாத் கூறினார்."
சில தலைவர்கள் "கட்டமைப்பை" உலகப் பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல்
என்று பாராட்டினர். "இங்கு பிட்ஸ்பேர்க்கில் உலகின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டைப் பிரதிபலிக்கும்
தலைவர்கள் வேலைகள், வளர்ச்சி, தொடர்ந்த பொருளாதார மீட்பு பற்றி உலகளாவிய திட்டத்தை ஒப்புக்
கொண்டுள்ளனர்" என்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் கூறினார்.
மற்ற வர்ணனையாளர்கள் இன்னும் நிதானமான பார்வையைக் கொண்டனர்.
"பொருளாதாரத் தடைகள் இல்லாமல், இந்த உடன்பாடு எந்தப் பயனையும் தராது" என்று மேரிலாந்த்
பல்கலைக் கழகத்தின் பொருளாதார வல்லுனர் பீட்டர் மொரிகி கூறினார். "நாடுகள் மாறுதல்கள் பற்றி
விவாதித்து வெறுமே அறிக்கைகளை விடும்."
"மறுசீரமைப்பு" வடிவமைப்பின் அச்சாணி, அதன் பொருளுரையின் உண்மைத்
தன்மையின்படி, அமெரிக்க நுகர்வை மிருகத்தனமாக குறைப்பது ஆகும். ஒபாமா நிர்வாகம் அமெரிக்க
முதலாளித்துவத்தின் உலகந்தழுவிய சிறப்புக்களை, அமெரிக்க டாலரின் நம்பகத்தன்மை, அது முக்கிய உலக இருப்பு
நாணயமாக இருப்பது உட்பட, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களை மிகப் பெரிய அளவில்
குறைப்பதுடன் பிணைத்துள்ளார்.
வாஷிங்டனில் இருக்கும்
Peterson Institute for International Economics
ல் வணிகச் சிறப்பு வல்லுனராக இருக்கும் Gar
Hufbauer வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலிடம் கூறியபடி,
"G20
ன் மறுசீரமைப்பு வழிவகை அமெரிக்கா முதலில் தான் கொடுத்துள்ள உறுதிமொழிகளை செயல்படுத்துவதில்
இருக்கிறது; அவற்றுள் அரசாங்க செலவுகளைக் குறைந்தல், வரிகளை உயர்த்துதல் ஆகியவையும் அடங்கியுள்ளன."
ஒபாமாவோ G20
ஊதியங்கள், நுகர்வு, அரசாங்கத்தின் சமூகச் செலவீனங்களை குறைத்தல் ஆகியவற்றை வேலைகளை தோற்றுவித்தல்,
வறுமையைக் குறைத்தல் என்ற தங்கள் உயர் கருத்துக்களுடன் சமன்படுத்த எந்தவித முயற்சியையும்
மேற்கொள்ளவில்லை.
G20 திட்டங்களில் வங்கிகளை
தீவிரமாக கட்டுப்படுத்தவோ, ஊகத்தை கட்டுப்படுத்தவோ, மோசடியை கட்டுப்படுத்தவோ ஏதும் இல்லை. அதே
போல் தொழில்துறையை மறு கட்டமைக்க எந்த முயற்சியும் இல்லை. உற்பத்திக்கான மூலதனத்தை
விரிவுபடுத்துதலுக்கும், குறிப்பாக அமெரிக்காவில், எந்த நினைப்பும் இல்லை. பெரும்பாலான உழைக்கும்
மக்களுடைய வேலை தகர்ப்புக்கள், வாழ்க்கைத் தரங்கள் அழிப்பு அவற்றை நிறுத்த எந்த நடவடிக்கையும்
சிந்திக்கப்படவில்லை; அதேபோல் உலக முதலாளித்துவத்தின் முறிவினால் ஏற்பட்டுள்ள சமூக பேரழிவில் இருந்து
நிவாரணமும் இல்லை.
மாறாக சந்தைகள், குறைவூதிய தொழிலாளர் தொகுப்பிற்கான ஆதாரங்கள் மீது
முதலாளித்துவ போட்டி தேசியக் குழுக்களிடையே உள்ள மோதல், உலகின் நிதிய உயரடுக்கை பிணை எடுப்பதில்
இருந்து விளைந்துள்ள பாரிய அரசாங்கக் கடனால் எரியூட்டப்பட்டு தீவிரமாகும். கடந்த நவம்பர் மாதம் முதல்
G20
உச்சிமாநாட்டிற்கு பின்னர் வியத்தக அளவில் பெருகியுள்ள பொருளாதார காப்புவரி முறை தொடர்ந்து
தீவிரமாகும். அதனுடன் இன்னும் கூடுதலான தாக்குதல்களும் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தின்
மீதும் அதிகமாகும். |