World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடாCanada's social democrats prop up Harper Conservative government கனடாவின் சமூக ஜனநாயகவாதிகள் ஹார்ப்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கின்றனர் By Keith Jones தொழிற்சங்க ஆதரவு உள்ள புதிய ஜனநாயகக் கட்சியும் (New Democratic Party- NDP), Bloc Quebecois (BQ) வெள்ளியன்று கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரும் வலதுசாரி அரசாங்கமான ஸ்டீபன் ஹார்ப்பரின் சிறுபான்மைக் கூட்டாட்சி கன்சர்வேடிவ் அரசாங்கத்தை முட்டுக் கொடுத்து நிறுத்தும் வகையில் வாக்களித்தன. கனடாவின் சமூக ஜனநாயகக் கட்சியான NDP பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் கூட ஹார்ப்பர் கன்சர்வேடிவ்களுக்கு ஆதரவைத் தொடர தான் தயார் என்ற அறிவிப்பைக் கொடுத்துள்ளது. அத்தகைய நடவடிக்கை, கனடாவில் வேலையற்று இருக்கும் 1.6 மில்லியன் மக்களில் மிகச்சிறிய விகிதத்தினருக்கு அற்பத்தனமாக வேலையற்றோர் உதவித்தொகையை கொடுக்கும் விதத்தில் உள்ள, அவசரமாகத் தயாரிக்கப்பட்டுள்ள கன்சர்வேடிவ் சட்ட வரைவுகளை ஏற்பதை உறுதிசெய்யத் தேவை என்ற போலிக்காரணம் இதற்கு கூறப்படுகிறது. "எங்களுடைய ஆதரவாளர்கள் எவரும் விரும்பாத ஒரு தேர்தலை சந்திப்பதை விட அவர்களுக்காக உழைப்பதை விரும்புகின்றனர்" என்று NDP தலைவர் ஜாக் லேடன் தன்னுடைய கட்சியின் 37 எம்.பி.க்கள் கடந்த ஜனவரி வரவு செலவுத்திட்டத்தினால் விளைந்துள்ள ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கான வழிவகைகளுக்கு ஆதரவு கொடுத்து வாக்களித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்; அந்த வரவு செலவுத் திட்டத்தை NDP, BQ இரண்டுமே எதிர்த்திருந்தன. சனிக்கிழமை La presse ல் வெளிவந்த பேட்டி ஒன்றில் லேடன் தன் கட்சி ஹார்ப்பர் அரசாங்கத்திற்கு கொடுத்த ஆதரவை NDP "வெறும் தோற்றங்கள்" என்று இல்லாமல் "மக்களுக்க உருப்படியான விளைவுகளை" பெற்றுத் தருவதில் அக்கறை கொண்டுள்ளதால் ஆதரவு கொடுத்ததாகக் கூறினார். அதன் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஹார்ப்பர் அரசாங்கத்துடனான உடன்பாடு கன்சர்வேடிவ் கட்சியின் வேலை காப்புறுதி(Employment Insurance-EI) சட்டம் ஏற்கப்பட்ட பின்னரும் தொடருமா என்பது பற்றி NDP பரிசீலிக்கும் என்று அவர் அடையாளம் காட்டினார். எத்தனை காலம் NDP "ஒட்டாவாவிற்கு உறுதி அளிக்க" தயாராக இருக்கும் என்று La presse யால் கேட்கப்பட்டதற்கு, லேடன், "அது பிரதம மந்திரி ஹார்ப்பரைப் பொறுத்துள்ளது. ....ஓய்வூதிய்கள், கடன் அட்டை கட்டணங்கள், சுற்றுச் சூழல் மாற்றம் ஆகியவை பற்றி விவாதத்தில் இருக்கும் முக்கியமான திட்டங்கள் பற்றி உண்மையான முறையில் விடையிறுப்பாரா?...எப்பொழுதும் மோதிக்கொண்டிருக்கும் பாராளுமன்றம் என்பதைவிட இயங்கும் பாராளுமன்றத்தை தான் விரும்புவதை குறிக்கும் விதத்தில் எங்கள் திட்டங்களுக்கு விடையிறுத்தால், (நாங்கள் ஆதரவைத் தொடர்வோம்)." ஒரு கியூபெக் பிராந்தியவாதியும் சுயாட்சிக்கட்சியுமான BQ, கன்சர்வேடிவ்களுடன் ஒத்துழைத்த நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. ஹார்ப்பர் கன்சர்வேடிவ்களுக்கு தேவையான பாராளுமன்ற வாக்குகளை, அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளவதற்கு அரசாங்கத்தின் முதல் பதவிக்காலத்திலும் (பெப்ருவரி 2006ல் இருந்த அக்டோபர் 2008 வரை) இது ஹார்ப்பரின் கன்சர்வேடிவ்களுக்கு பல முறை ஆதரவைக் கொடுத்தது. இந்த மாதம் வரை NDP பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்குகளுக்கு கன்சர்வேடிவ்களுக்கு ஆதரவைக் கொடுக்க மறுப்பது பற்றிப் பெரிதும் பறைசாற்றி வந்தது. கட்சித் தலைவர் ஜாக் லேடன் NDP தொடர்ந்து, "கொள்கை அளவில்" ஹார்ப்பருக்கு எதிர்ப்பு காட்டப்படுவதையும், இதற்கு மாறாக, BQ மற்றும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி லிபரல்களும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு 79 முறை வாக்களித்ததையும் சுட்டிக் காட்டுவதில் களிப்பு அடைந்திருந்தார். சமூக ஜனநாயக வாதிகள் தங்கள் கன்சர்வேடிவ் எதிர்ப்பு வாக்குப்பதிவு சான்றை கடந்த இரண்டு ஆண்டுகளாக இன்னும் கூடுதலான முறையில் கூடுதலாக வலதிற்கு நகர்ந்த முறையில் இருந்தது பற்றி வலியுறுத்தனர். முதலில் லேடனும் அவருடைய புதிய ஜனநாயகவாதிகளும் ஆப்கான் போரில் கனடாவின் முக்கிய பங்கிற்கு தங்கள் எதிர்ப்பைக்கைவிட்டனர். பின் கடந்த இலையுதிர்காலக் கடைசியில் அவர்கள் ஒரு லிபரல் தலைமையிலான கூட்டாட்சி கூட்டணி அரசாங்கத்தில் இளைய பங்காளிகளாக பணியாற்ற ஒப்புக் கொண்டு ஹார்ப்பரின் ஐந்து ஆண்டுகள் பெருநிறுவன வரித் திட்டமான C$50 பில்லியனைச் செயல்படுத்த ஒப்புக் கொண்டனர். கடந்த மாதம் தேசிய NDP மாநாட்டில், தலைமை பல புதிய வலதுசாரித் திட்டங்களை கொண்டுவந்தது. இவற்றில் சிறு வணிகத்தின்மீது அனைத்து வரிகளையும் அகற்றுதல், NDP பெயரை ஜனநாயகக் கட்சி என்று மாற்றுதல் (அதானல் இதன் பாரக் ஒபாமா, ஹில்லாரி கிளின்டனின் அமெரிக்க ஜனநாயக கட்சியுடனான இணக்கத்தை வலியுறுத்தல்) சுயாதீன தொழிலாள வர்க்க அரசியல் எத்தனை சிறிய இழையில் இருந்தாலும் அத்துடன் தொடர்பு இல்லை என்று கைவிட்டது ஆகியவை இதல் அடங்கியிருந்தது. "லிபரல்களும், மையவாதிகளும் வரவேற்கப்படுகிறோம் என்ற உணர்வு பெறும் கட்சி ஒன்றை நாங்கள் கட்டமைக்க விரும்புகிறோம்." என்று NDP யின் தேசிய இயக்குனர் Brad Lavigne கூறினார். இப்பொழுது சமூக ஜனநாயகவாதிகள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள தங்கள் நெருக்கமான நண்பர்களுடைய முழு ஆதரவுடன் ஹார்ப்பர் கன்சர்வேடிவ்கள் காப்பாற்றப்பட உதவியுள்ளனர். இதையொட்டி கனேடிய அரசியல் ஆளும்வர்க்கம் மற்றும் பெருவணிகத்திற்கு முற்றிலும் கட்டுப்பட்ட ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக NDP உள்ளது என்பதற்கு வேறு நிரூபணம் தேவை இல்லை. வெள்ளிக் கிழமை வாக்கெடுப்பைத் தொடர்ந்து, BQ தலைவர் Gilles Duceppe தன்னுடைய கட்சியின் ஆதரவு கன்சர்வேடிவ்களுக்கு ஒரு ஒற்றை நிகழ்வுதான் என்றும் இதற்குக் காரணம் கட்சியின் அக்கறை பாராளுமன்றம் குறைந்த காலத்திற்கு வீடுகள் புதுப்பிப்பதற்கு வரிச்சலுகை திட்டத்திற்கு இசைவு கொடுக்க வேண்டும் என்ற உந்துதல்தான் என்று கூறினார். தற்காலிகமாக வேலை காப்புறுதியை "விரிவுபடுத்துதல்" என்ற கன்சர்வேடிவ்களின் திட்டத்தை Duceppe உதறித்தள்ளினார். C 50 சட்டவரைவு கியூபெக்கின் நெருக்கடிக்குள்ளான காடுகள் துறை தொழிலாளர்களுக்கு ஏதும் செய்யவில்லை என்றும், அடுத்த மாதத் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் லிபரல்கள் கொண்டுவருவதாக இருக்கும் "எதிர்ப்பு தினத்தன்று" நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு BQ விடம் கிட்டத்தட்ட உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். "அவர்கள் எங்களிடம் கன்சர்வேடிவ் அரசாங்கத்திடம் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் எங்கள் விடை-- தெளிவு இ.ல்.லை.-- இல்லை என்பதுதான்" என்றார் Duceppe. ஆனால் NDP யோ, கன்சர்வேடிவ்களின் வேலை காப்புறுதியில் மாற்றங்களை "சரியான திசையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை" என்று புகழ்ந்து, ஒரு இழிந்த, கருமித்தனமாக, முக்கிய கூறுபாடுகளில் பிற்போக்குத்தன சட்டத்திற்கு நெறியை கொடுக்கிறது. அரசாங்கத்தின் சொந்த மதிப்பீடுகளின்படியே 190,000 வேலை தேடும் தொழிலாளர்கள்தான் இச்சட்டத்தில் இருந்து பயன் அடைவர். அவர்கள் வேலை காப்புறுதிக்கு எத்தனை ஆண்டுகள் கட்டணம் செலுத்தினரோ, அதைப் பொறுத்து ஐந்தில் இருந்து இருபது வாரங்களுக்கு கூடுதல் நலன்களை பெறுவர். பல மாதங்களாக கன்சர்வேடிவ்கள் வேலையில்லாதோர் நலன்களை முன்னேற்றுவிக்க வேண்டும் என்ற அனைத்து அழைப்புக்களையும் உறுதியாக நிராகரித்துள்ளனர். வேலை காப்புறுதியை பெறும் தரத்தைத் தளர்த்துவது அல்லது அவர்கள் வேலை காப்புறுதிக்கு எத்தனை ஆண்டுகள் கட்டணம் செலுத்தினரோ, அதைப் பொறுத்து பெறும் தரத்தை விரிவாக்குவது என்பது "வரி அதிகப்படுத்துவதற்கு" ஒப்பாகும் என்று கண்டிக்கும் அளவிற்கு ஹார்ப்பர் பேசியுள்ளார். ஆனால் கடந்த வாரம் தவிர்க்க முடியாமல் பாராளுமன்றத்தில் தோல்வி, அதையொட்டி புதிய தேர்தலை எதிர்பார்த்தல் என்பவற்றை எதிர்கொள்ளும் நிலையில், கன்சர்வேடிவ்கள் திடீரென தற்காலிகமாக காப்புறுதியை முன்னேற்றுவிக்க வேண்டும் என்று கருதினர். அவர்களுடைய தெளிவான நோக்கம் லேடனுக்கும் NDP க்கும் இரு வாரங்களாக "பாராளுமன்றத்தை செயல்பட வைக்க தயார்" என்பதை அறிவித்துக் கொண்டு இருக்கின்றன. இது அரசாங்கத்திற்கு முட்டு கொடுக்க ஒரு போலிக்காரணத்தை கொடுப்பது ஆகும். இந்த முயற்சி தோற்றால் Bill C-50 வாக்காளர்கள் முன் தங்களை நிதானக்காரர்கள், "தயை பொருந்திய கன்சர்வேடிவ்கள்" என்று காட்டிக் கொள்ளும் முயற்சிகளுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என்று அவர்கள் கணக்குப் போட்டுள்ளனர். C-50 சட்ட வரைவைத் தயாரிக்கையில் கன்சர்வேடிவ்கள் வேலையற்றோருக்கு வேலை காப்புறுதி அளித்தல் வேணடும் என்று வாதிட்டவர்களின் அனைத்துத் திட்டங்களையும் புறக்கணித்ததோடு, NDP மற்றும் இரு எதிர்க்கட்சிகள் விடுத்த எல்லா கோரிக்கைகளையும் நிராகரித்தனர். அவற்றுள் ஒரே சீரான குறைக்கப்பட்ட 360 மணி நேரம் உழைத்திருக்க வேண்டும் என்று குறைக்கப்பட்ட தகுதி வரம்பு நிறுவப்பட்டு பகுதி நேரத் தொழிலாளர்களுக்கும் காப்பு வேண்டும் என்றும் வேலையில் இல்லாத தொழிலாளர்கள் நலன்களை பெறும் வாரங்கள் விரிவாக்கப்பட்டதும் இருந்தன.C 50 சட்டவரைவு என்பது பழைய விக்டோரியா காலத்து கருத்தான தகுதியுடைய, தகுதியற்ற ஏழைகள் என்பதைத் தளமாக் கொண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் எவரேனும் 35 வாரங்கள் வேலை காப்புறுதி நலனைப் பெற்றிருந்தால்--அதாவது அனைத்து பருவகாலத் தொழிலாளர்கள் மற்றும் காடுகள், கார் பிற உற்பத்தி வேலைகளில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தால்--குறிப்பிடத்தக்க வேலை காப்புறுதி கட்டணங்களை கடந்த 10 ஆண்டுகளில் 7 ஆண்டுகள் கட்டாமல் இருந்திருந்தால் (இளைய, குறைவூதியத் தொழிலாளர்கள் போல்) வேலை காப்புறுதி நலன்கள் பெறும் தகுதி அவர்களுக்கு மறுக்கப்படும்.தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் கனேடிய கார்த் தொழிலாளர்கள் (CAW) சங்க தலைவர் கென் லிவென்சா போன்றவர்கள்கூட C50 சட்ட வரைவை "ரொட்டித் துகள்கள்" என்றுதான் வர்ணித்துள்ளனர். ஆனால் அது ஒன்றும் CAW அல்லது தொழிற்சங்கங்களை NDP முடிவான ஹார்ப்பர் அரசாங்கத்திற்கு தரவு கொடுத்தல் என்பதை நிறுத்தவிடவில்லை. லேடனைப் பொறுத்த வரையில் C50 சட்டவரைவு பற்றி அவருடைய தொழிற்சங்க நண்பர்கள் மற்றும் தன்னுடைய சொந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ள குறைகளை வெளிப்படையாக கண்டித்துள்ளது மட்டும் இல்லாமல், தனி உறுப்பினர்கள் சட்டவரைவு மூலம் வேலை காப்புறுதியில் முன்னேற்றங்களுக்கு NDP தொடர்ந்து அழுத்தம் தரும் என்று கூறியுள்ளார். "இந்த சட்டவரைவு அளிக்காத உதவியை நாடி நிற்கும் பல மக்கள் உள்ளார்கள் என்பது உண்மைதான்; ஆனால் மக்கள் மன்றத்தில் நமக்கு முன் 12 சட்ட வரைவுகள் உள்ளன. வேலை காப்புறுதி தொடர்பாக பல திருத்தங்களை அவை முயற்சித்து, உதாரணமாக பருவகாலத் தொழிலாளர்களுக்கும் உதவ முடியும்" என்றார் NDP தலைவர். இது ஒரு போலி ஏமாற்றுத்தனம் ஆகும். அரசாங்கம் பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் செயற்பட்டியலை கட்டுப்படுத்துவதால், தனி உறுப்பினர்கள் சட்டவரைவுகள் வாடிக்கையாக பாராளுமன்றத்தில் வாக்களிப்பிற்குக் கூட வரவதில்லை என்பதை லேடன் நன்கு அறிவார். NDP க்குள் இருப்பவர்கள் இப்படி திடீரென மாறி ஹார்ப்பர் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் முடிவின் உண்மையான உந்ததுல் தேர்தல்களில் இழுப்பு என்ற அச்சம்தான் என்று ஒப்புக் கொள்ளுகின்றனர். சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் NDP க்கான ஆதரவை குறைவாக, சில இடங்களில் கணிசமாகக் குறைவு என்றும், அக்டோபர் 2008 தேர்தலில் அது பெற்ற அதிகமான வாக்கான 18 சதவிகிதத்தைவிட குறைவாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.NDP உலக முதலாளித்துவத்தின் மிகப் பெரிய நெருக்கடி மற்றும் Inco, Toronto நகர தொழிலாளர்களின் சலுகைகள் பறிப்பை எதிர்க்கும் வேலைநிறுத்தங்கள் காட்டியுள்ளது போல், தொழிலாள வர்க்க எதிர்ப்பின் பெருகிய அடையாளங்கள் இருக்கும் நேரத்தில் மக்கள் ஆதரவைப் பெற இயலாத நிலையில் இருப்பது, தொழிலாள வர்க்கத்திடம் சமூக ஜனநாயக வாதிகளின் உறவுகளை சரியாக அடையாளம் காண்கிறது. மக்களின் பரந்த அடுக்குகளிடையே NDP சரியான முறையில் திறனற்ற நிலை, பாராளுமன்ற திரித்தல், வலதுசாரி சிக்கன நடவடிக்கையை சுமத்துவபவர்கள் (ஓன்டேரியா, BC, மற்றும் Sasktchewan அது 1990 களில் அதிகாரத்தை கொண்டிருந்த இடங்களில் நடந்ததுபோல்) தொழிற்சங்க அதிகாரத்துவத்தை காட்டிக் கொடுப்பவர்கள் என்றுதான் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஆனால் NDP கன்சர்வேடிவ்களுக்கு ஆதரவாக நிற்பது தேர்தல் சந்தர்ப்பவாதத்தினால் மட்டும் என்று கருதப்பட்டுவிடக்கூடாது. சமூக ஜனநாயக வாதிகள் கனடாவின் ஆளும் உயரடுக்கின் ஒருமித்த கருத்தை நிலைநிறுத்தும் வகையில் இதை எதிர்கண்டுள்ளனர். பெருவணிகம் ஒரு கூட்டாட்சித் தேர்தலை இப்பொழுது விருமபவில்லை; ஏனெனில் அது மற்றொரு சிறுபான்மை அரசாங்கத்தைத்தான் முடிவாகக் கொடுக்கும் என்று அது கணக்கிடுகிறது; அதுவோ அப்பொழுது மக்களிடம் ஆதரவு இல்லாத முடிவுகளை எடுக்கக்கூடிய பெரும்பான்மை அரசாங்கத்தை விரும்புகிறது. இது சமீபத்தில் Globe and Mail உடைய மூத்த தேசிய விவகாரங்கள் பற்றிய வர்ணனையாளர் Jeffrey Simpson ஆல் வெற்றுத்தனமாக ஒரு கட்டுரையில் விளக்கப்பட்டது; "நாம் வாக்குச் சாவடிகளுக்கு போக வேணடும் என்றால், தயவு செய்து இனி சிறுபான்மை அரசாங்கம் வேண்டாம்" என்ற தலைப்பில், சிம்சன் எழுதியது: "மந்த நிலையில் இருந்து கனடா ஊர்ந்து வெளிவரும் நேரத்தில், அது எதிர்கொள்ளும் கடன்கள் இருக்கும் நிலையில், கடினமான முடிவுகள் எடுக்கத் தேவைப்படும்....ஒரு பெரும்பான்மை அரசாங்கம்தான், அல்லது ஒருவேளை ஜேர்மனிய முறையில் கன்சர்வேடிவ்கள் மற்றும் லிபரல்களின் "பெரும் கூட்டணிதான்" அத்தகைய கடினமாக முடிவுகளை எடுக்கும் அரசியல் திறனைக் கொண்டிருக்கும். மற்றொரு சிறுபான்மை கன்சர்வேட்டிவ் அல்லது லிபரல் என்பது குறைந்த பட்ச எதிர்ப்பு என்ற வழியைத் தேர்ந்தெடுத்து கடின முடிவுகளைத் தவிர்த்துவிடும்." NDP யின் தலைமை கடந்த இலையுதிர்காலத்தில் NDP- லிபரல் கூட்டு காட்டிய எதிர்ப்பின் அளவு, வலிமை ஆகியவை பற்றி நன்கு உணர்ந்துள்ளது. அது எப்படி ஆளும் வர்க்கத்தை தட்டி எழுப்பியது என்று அறிந்திருந்தது. இப்பொழுது ஹார்ப்பர் உரத்த குரலில் "சோசலிச" NDP ஐ கண்டிப்பது ஒருபுறம் இருந்தாலும், தாங்கள் அதிகாரத்தில் ஒரு பங்கு பெறும் தகுதி உடையவர்கள் என்பதை நிரூபிக்க ஆவலாக உள்ளது. ஹார்ப்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு "ஒருதலைப்பட்ச, சிந்தனைப் போக்கு வேறுபாடுகளை" கடந்து சமூக ஜனநாயகவாதிகள் முதலாளித்துவத்திற்கு தாங்கள் அதன் நலன்களை விசுவாசமாக நிலைநிறுத்தும் என்பதை நிரூபிக்க முற்படுகின்றனர். NDP ஒரு வருங்கால கூட்டணி அரசாங்கத்தில் பங்கு பெறுவதற்கு எதிர்ப்பு காட்டுவது தேவையற்றது என்றும் நிரூபிக்க முற்படுகின்றனர்.NDP முதலில் லிபரல்களுடன் கொண்டிருந்த கூட்டு உள்ளடங்கலான கடந்த ஆண்டின் நிகழ்வுகளும் இப்பொழுது கன்சர்வேடிவ்களுடன் கூட்டு என்பதும் ஒரு தேர்தலில் பங்கு பெறும் கட்சி என்று இல்லாமல், வர்க்கப் போராட்டம் மற்றும் சோசலிசக் கொள்கைகளை கொண்ட ஒரு புதிய அரசியல் கட்சியை தொழிலாள வர்க்கம் கட்டமைப்பதற்கான போராட்டத்திற்கு சமூக ஜனநாயக வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரை எதிர்ப்பது அத்தியாவசியமானது. |