World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குUS troops out of Afghanistan ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்று Bill Van Auken ஆப்கானிஸ்தானில் நேட்டோ-அமெரிக்கப் படைகளின் தளபதியாக இருக்கும் ஸ்ரான்லி மக்கிரிஸ்டல் எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் காலனித்துவ போருக்காக மேலும் பல்லாயிரக்கணக்கான துருப்புக்கள் அனுப்பப்பட வேண்டும் என்ற முறையான கோரிக்கையை முன்வைப்பார் என்று பென்டகன் புதனன்று அறிவித்தது. பென்டகனில் இருந்து கசியவிடப்பட்ட மக்கிரிஸ்டல் எழுதிய அறிக்கை ஒன்றைத் தொடர்ந்து இந்த வேண்டுகோள் வந்துள்ளது; அதில் அவர் ஆப்கானிஸ்தானில் அவர் விரும்பும் எழுச்சி எதிர்ப்பு விரிவாக்கத்திற்கு "பொருத்தமான வளங்கள்" வேண்டும் என்று கூறப்படுவது ஏற்கப்படாவிட்டால் வாஷிங்டன் தோல்வியை எதிர்பார்க்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார். எழுச்சி எதிர்ப்பு பிரசாரம் வெளியார் ஆக்கிரமிப்பிற்கு ஆப்கான் மக்களுடைய எதிர்ப்பை முறிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. இந்தப் போரை ஒபாமா தன்னுடையது என்றே கூறியுள்ளதுடன், முன்னதாக புஷ் நிர்வாகத்தை ஆப்கானிஸ்தானில் உள்ள "தேவைக்கான போரிற்கு" இராணுவத்தை அனுப்பிவைக்கமால், ஈராக்கில் "விரும்பிச் சென்ற போரை" அனுமதித்ததற்காக அவர் குறைகூறியிருந்தார். கடந்த பெப்ருவரியில் அவர் போர் விரிவாக்கத்தின் முதல் கட்டத்தை தொடக்கி, ஆப்கானிஸ்தானிற்குள் இன்னும் ஒரு 21,000 துருப்புக்களை அனுப்ப உத்தரவிட்டு, அங்கு இருந்த தளபதியை பதவிவிலக்கி விட்டு அவருக்கு பதிலாக தளபதி மக்கிரிஸ்டலையும் நியமித்தார். ஆனால் செய்தி ஊடகத் தகவல்கள்படி, மக்கிரிஸ்டலுடைய அறிக்கையும் எதிர்வரவிருக்கும் கூடுதலான துருப்புக்களுக்கான வேண்டுகோளும் ஒபாமா நிர்வாகத்திற்குள்ளேயே ஆப்கானிஸ்தானில் சங்கடம் ஆழ்ந்துள்ள நிலையில் எத்தகைய மூலோபாயம் கடைக்கப்பிடிக்கப்பட வேண்டும் என்ற விவாதத்தை தொடக்கியிருப்பதாகத் தெரிகிறது. நியூ யோர்க் டைம்ஸ் புதன்கிழமை பதிப்பின்படி, துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் ஆப்கானிஸ்தானில் துருப்புக்கள் அதிகப்படுத்தப்படவதை எதிர்த்துள்ளார். மாறாக அவர் பாக்கிஸ்தானில் இன்னும் நேரடியான அமெரிக்கப் போரை நடத்த வேண்டும் என்ற வாதிட்டுள்ளார். "ஆப்கானிய மக்களை தலிபானிடம் இருந்து காப்பாற்ற முயலுவதைவிட, அமெரிக்கத் துருப்புக்கள் முக்கியமாக பாக்கிஸ்தானில் உள்ள அல் குவைடா முகாம்களை சிறப்புத் துருப்புக்கள், ஆளற்ற விமான பிரிடேட்டர் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தீவிர நடவடிக்ககள் மூலம் கவனம் காட்ட வேண்டும்" என்று பிடென் நிலைப்பாட்டை சுருக்கமாக டைம்ஸ் எழுதியுள்ளது. இந்த விவாதத்தின் உண்மையான முக்கியத்துவம் தெளிவாக இல்லை. நிர்வாகத்தின் உதவியாளர்கள் ஒபாமா "தளபதி மக்கிரிஸ்டலின் கூடுதல் துருப்புக்கள் வேண்டுகோளுக்கு இறுதியில் உடன்படுவதற்கு முன்பு தன்னுடைய கட்சியில் இருக்கும் தாராளவாதிகளுககு தான் ஒன்றும் போரை இன்னும் விரிவாக்க விரைந்து நிற்கவில்லை என்று உறுதியளிக்கும் வகையில் சில முன்கருத்துக்களை சோதிக்கக்கூடும்" என்று கூறியுள்ளாக டைம்ஸ் தெரிவித்துள்ளது. வேறுவிதமாகக் கூறினால் ஒபாமா நன்கு அறிமுகமாகி இருக்கும் தன்னுடைய வழமையான முறையை பயன்படுத்தி "மாற்றம் கொண்டுவருபவர்" என்ற தன்னுடைய தோற்றத்தை பின்பற்றி, அதே நேரத்தில் முந்தைய நிர்வாகத்தின் வலதுசாரிக் கொள்கைகளை இன்னும் தீவிரப்படுத்தி அமெரிக்காவின் இராணுவ-உளவுத்துறை பிணைப்பின் கோரிக்கைகளை ஏற்கக்கூடும். உண்மையான விவாதம் இருக்கும் பட்சத்தில் அது அமெரிக்க இராணுவத் தலைமைக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வேறுபாடுகளைப் பிரதிபலிக்கக்கூடும். அதன்படி ஆப்கானிஸ்தானில் மூலோபாய மதிப்பை சில கூறுபாடுகள் வினாவிற்கு உட்படுத்தி, போரை விரிவாக்குவது பற்றி ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்திருப்பதுடன், ஈராக்கிலும் தொடர்ந்து ஆக்கிரமித்து இருக்கும் தன்னார்வ படைகளில் ஒரு முறிவை ஏற்படுத்தக்கூடும் என்று கவலை உள்ளது. ஆப்கானிஸ்தானில் ஒபாமா நிர்வாகம் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. அமெரிக்க மக்கள் ஆப்கானிஸ்தான் ஒரு "நல்ல போரை" பிரதிபலிக்கிறது, மற்றொரு 9/11 மாதிரியான அல் குவைடாத் தாக்குதலைத் தவிர்க்க வேண்டும் என்றால் தொடரப்பட வேண்டும் என்ற இவர் வாதத்தை இனியும் ஏற்கத் தயாராக இல்லை. தொடர்ச்சியாக பல கருத்துக் கணிப்புக்கள் கூடுதலான பெரும்பான்மையுடன் போரை எதிர்த்துள்ளன; இன்னும் அதிக எண்ணிக்கையில் அது விரிவாக்கப்படுவதற்கும் எதிர்ப்பு கூறப்படுகிறது. புஷ் நிர்வாகத்தின் வார்த்தைஜாலங்களை எதிரொலிக்கும் ஒபாமாவின் கூற்று ஒரு அரசியல் பொய் ஆகும். தளபதி மக்கிரிஸ்டலே ஆப்கானிஸ்தானில் கணிசமான அல் குவைடாவின் பிரசன்னம் இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். ஒசாமா பின் லேடனே வாஷிங்டனால் ஒரு மறக்கப்பட்டுவிட்ட மனிதனாகி விட்டார். செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் அமெரிக்க இராணுவ வலிமை மத்திய ஆசியா, பாரசீக வளைகுடா என்னும் உலகத்தின் மிக அதிக மூலோபாய முக்கிய எரிசக்தி உற்பத்திப் பகுதிகளில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நீண்டகாலத் தயாரிப்பில் இருந்த திட்டங்களை செயல்படுத்த போலிக்காரணங்களாக பயன்படுத்தப்பட்டன. போரின் தொடக்கங்களுக்கான வேர்கள் 2001 க்கு முன்னரே செல்லுகின்றன. ஆப்கானிஸ்தானில், 1978ம் ஆண்டு சோவியத் ஆதரித்திருந்த அரசாங்கத்திற்கு எதிராக CIA இஸ்லாமிய கெரில்லாப் படைகளுக்கு ஆதரவு கொடுத்ததில் இருந்து 30 ஆண்டுகளுககும் மேலான ஆழ்ந்த, அழிவுதரும் அமெரிக்க தலையீட்டின் விளைவுதான் இது. CIA கிட்டத்தட்ட 5 பில்லியன் டாலர் உதவித் தொகை, ஆயுதங்கள் என்று ஒரு நீடித்த போரைத் தொடக்க ஏற்பாடு செய்தது. அது 1.5 மில்லியன் உயிர்களைக் குடித்தததுடன் ஆப்கானிய சமூகத்தையும் சிதைத்தது. CIA உடன் ஒத்துழைத்துவர்களுள் ஒசாமா பின் லேடனும் இருந்தார். அவருடைய அல் குவைடாவின் தோற்றம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் குறுக்கீட்டின் விளைவாகும்.ஆப்கானிஸ்தான் பற்றிய தற்போதைய நெருக்கடியில் ஒபாமா நிர்வாகம் அந்நாட்டின்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பெரும் சோகமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விளைவுகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தளபதி மக்கிரிஸ்டலை எதிர்கொண்டுள்ள சங்கடம் முறையான அரசாங்கமோ, செயல்படும் இராணுவமோ இல்லாத ஒரு நாட்டில் அவர் எழுச்சி எதிர்ப்பு நடவடிக்களுக்கு திட்டம் கூறுகிறார். ஜனாதிபதி ஹமித் கர்சாய் கொண்டிருக்கும் பங்கு பற்றி வாஷிங்டன் பெருகிய முறையில் ஏமாற்றத் திகைப்பை வெளிப்படுத்தி வருகின்றது. கர்சாயின் ஆணை காபூல் நகர வரம்புகளுக்கு அப்பால் செல்லுபடியாகவில்லை. இந்த ஆட்சிக்கு கடைசியாக இருந்த நெறி வரம்பும் ஆகஸ்ட் 20 அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலில் உடைந்து போனது. அத்தேர்தலில் முழுவதும் போலி வாக்குகள் திணிக்கப்படுதல், மோசடி மற்றும் மிரட்டுதல் ஆகியவைதான் இருந்தன. ஆனால் கர்சாய் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீட்டின் விளைபொருள் ஆகும். இவர் நீண்ட காலமாக CIA வின் ஒரு சொத்தாக இருந்து வருகிறார். அக்டோபர் 2001 படையெடுப்பிற்கு பின்னர் வாஷிங்டன் இவரை ஒரு கைப்பாவை ஜனாதிபதியாகப் பதவியில் இருத்தியது. கர்சாய் பற்றிய தற்போதைய அமைதியின்மை கென்னடி காலத்தில் தெற்கு வியட்நாமில் இருந்து Ngo Dinh Diem ஐ என்ன செய்வது என்ற நிர்வாகத்தில் கவலையை நினைவிற்கு கொண்டுவருகிறது. Ngo Dinh Diem இன் ஊழல்கள் மற்றும் தவறான ஆட்சி மக்களை அவரிடம் இருந்து விரோதப்படுத்தியிருந்தன. இறுதியில் அவரை தெற்கு வியட்நாமின் தளபதிகள் பதவியில் இருந்து அகற்றிப் படுகொலை செய்வதற்கு ஆதரவு கொடுக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இந்த குற்ற நிகழ்வு வியட்நாமில் அமெரிக்கப் போர் மிகப் பெரிய அளவில் விரிவடைய காரணமாயிற்று. இதே போன்ற விதி வாஷிங்டனின் ஆப்கானிய கைப்பாவைக்கும் நேரிடக்கூடும். ஆப்கானிஸ்தான்மீது ஏகாதிபத்தியம் சுமத்தியுள்ள பேரழிவை ஒபாமா நிர்வாகம் கொலை, அழிவு இவற்றைப் பெருக்குவதின் மூலம் எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. இதைத்தவிர வெள்ளை மாளிகையில் விவாதிக்கபடுவதாகக்கூறப்படும் இந்தத் திட்டம் ஏற்கப்பட்டாலும், இந்த ஓபர் விரிவாக்கம் பாக்கிஸ்தானில் அமெரிக்க நடத்தும் போரையும் விரிவுபடுத்தும். இதையொட்டி அப்பகுதி முழுதும் ஸ்திரமின்மை என்ன அபாயத்தை கொண்டுவருவதுடன், பெரும் குருதி சிந்தும் போர்களும் கட்டவிழ்த்துவிடப்படும். இந்தக் கொள்கைக்கான விலை முதலில் ஆப்கானிய, பாக்கிஸ்தானிய சாதாரண மக்களின் உயிர்கள் என்ற விதத்தில் கொடுக்கப்படும். அதே போல் அமெரிக்க தரைப்படை, கடற்படை துருப்புகளும் உயிரிழப்பர். தீவிரப்படுத்தப்பட இருக்கும் போரின் செலவு 100 பில்லியன் டாலர் எனப்படுவது வேலைகள், வாழ்க்கத் தரங்கள், சமூக நலன்கள் ஆகியவற்றின்மீது கூடுதலான தாக்குதல்கள் நடத்துவதின் மூலம் சேகரிக்கப்படும். இப்பகுதியில் இன்னும் பரந்த போரை தொடர்வது என்பது (பல பகுப்பாய்வாளர்களும் ஒரு தசாப்தம் அல்லது அதற்கும் மேலாக நீடிக்கும் என்று கூறுகின்றனர்) கட்டாய இராணுவ சேவையை பழையபடி அமுலுக்குகொண்டுவந்தால் ஒழிய இயலாது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானில் போர் எவ்விதத்திலும் விரிவாக்கப்படுவதை தொழிலாள வர்க்கம் எதிர்க்க வேண்டும். மாறாக அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும் உடனடியாக, நிபந்தனை இல்லாமல், அப்பகுதியில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள பரந்த இராணுவ அமைப்பு கலைக்கப்பட்டு அந்த வளங்கள் ஆப்கானிஸ்தான், ஈராக் மக்கள் மீது சுமத்தப்பட்ட பேரழிவிற்கு இழப்பீட்டு தொகைகள் கொடுக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். அதே போல் அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் தொழிலாளர்களை சூழ்ந்துள்ள பெருகிய சமூக நெருக்கடிகளைச் சமாளிக்கவும் பயன்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்துடைய முதல் எட்டு மாதங்கள் புஷ்ஷை விரட்டி ஜனநாயகக் கட்சியினரை பதவிக்கு கொண்டுவருவதின் மூலம் போருக்கு எதிரான போராட்டம் வெற்றி பெறும் என்ற மத்திய வர்க்க எதிர்ப்புக் குழுக்கள் கொண்டிருந்த முன்னோக்கை உறுதியாக நிராகரிக்கின்றன. வெள்ளை மாளிகை மற்றும் காங்கிரசின் இரு பிரிவுகளையும் ஜனநாயகக் கட்சி கட்டுப்படுத்திக் கொண்டிருக்கையில், ஈராக்கிய ஆக்கிரமிப்பு தொடர்வதுடன் ஆப்கானிஸ்தானிலும் போர் விரிவு செய்யப்பட உள்ளது. போரை எதிர்ப்பதற்கு தேவையானது இராணுவவாதத்திற்கான உண்மையான மூலமான பெருநிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் இலாப நலன்கள் மற்றும் அவற்றைப் பிரதிபலிக்கும் ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் அணிதிரளல் ஆகும். இதன் பொருள் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியைக் கட்டமைப்பது ஆகும். |