World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

US and European powers threaten Iran

ஐரோப்பிய அமெரிக்கசக்திகள் ஈரானைஅச்சுறுத்துகின்றன

By Patrick Martin
26 September 2009

Use this version to print | Send feedback

ஒரு அரசியல் ஆத்திரமூட்டுதலின் அனைத்து அடையாங்களையும் கொண்டுள்ள விதத்தில், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை ஜேர்மனியுடைய ஆதரவுடன் ஈரானில் இரகசியமாக இருப்பதாகக் கூறப்படும் அணுவாயுத ஆலையைக் கண்டித்து, உடனடியாக நிலையம் பரிசோதனைக்கு திறந்துவிடப்படவில்லை என்றால் இராணுவ நடவடிக்கை உட்பட, பொருளாதார தடைகள் அதிகப்படுத்தப்படவும் கூடும் என்று அச்சுறுத்தியுள்ளன.

G20 உச்சி மாநாடு நடைபெற்ற பிட்ஸ்பேர்க்கில் வெள்ளியன்று காலை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகியோர் தொலைக்காட்சிகளுக்கு காமெராக்களுக்கு முன்பு ஒன்றாக நின்று எச்சரிக்கையை விடுத்தனர். பிட்ஸ்பேர்க்கில் இருந்து தாயகம் திரும்புவதற்கு புறப்பட்டிருந்த ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெலும் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களுக்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய அறிக்கையை வெளியிட்டார்.

"ஈரானிய அரசாங்கம் தன் சமாதான நோக்கங்களை செயல்கள்மூலம் இப்பொழுது நிரூபிக்க வேண்டும். இல்லாவிடின் சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேசத் தரங்களுக்கு பொறுப்பு கூற வேண்டியிருக்கும்." ஈரானிய ஜனாதிபதி மக்மூத் அஹ்மதிநெஜாட் பதிலளிப்பதற்கு ஒபாமா ஆறு நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். அதாவது ஜெனிவாவில் அக்டோபர் 1ம் தேதி நடக்க இருக்கும் கூட்டத்திற்கு முன்னர் பதிலளிக்கவேண்டும். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கிற்கு எதிராக போர் நடத்த காரணமாக இருந்த திட்டத்திற்கு அணுவாயுதங்கள் இருந்ததாக மேற்கோளிட்டிருந்த ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் அணுகுமுறையைத்தான் இவருடைய அணுகுமுறையும் எதிரொலித்தது.

ஆனால் இம்முறை அமெரிக்கா, பிரிட்டனுடம் பிரான்ஸும் தாக்குதலுக்கு போலிக்காரணத்தை தயாரிப்பதற்கு சேர்ந்து கொண்டுள்ளது.

பிரெளன் மற்றும் சார்க்கோசி இருவருமே தங்கள் கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில் இன்னும் கடுமையான அச்சுறுத்தல்களை விடுத்தனர். "நிலத்தில் ஒரு கோடு உறுதியாக வரையப்படவேண்டும்" என்று பிரெளன் கோரி, "ஈரானிய அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனத் தரம், மற்றும் சர்வதேச உடன்பாடுகளை அது மீறுவது என்று நாங்கள் நினைப்பதின் அளவு அதிர்ச்சி தருவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். ஈராக்கின் மீதான போர் தொடக்கப்பட்டு, நடத்தப்படும் காலம் முழுவதும் புஷ் மற்றும் பிளேயர் கூறிய அனைத்து பொய்களையும் களிப்புடன் தழுவிய நபரிடம் இருந்து இத்தகைய கருத்துக்கள் வந்துள்ளன.

"ஈரானிய தலைவர்களிடையே டிசம்பர் மாதத்தை ஒட்டி முழு மாறுதல் வரவில்லை என்றால், பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும்" என்று சார்க்கோசி அறிவித்தார். அவதானிகளால் ஒரு நேரடி அச்சுறுத்தல் என எடுத்துக் கொள்ளப்பட்ட விதத்தில் அவர் மேலும் கூறியதாவது: "அனைத்தும், அனைத்தும் இப்பொழுது விவாதத்திற்கு வரவேண்டும். இயந்திரங்கள ஓடிக் கொண்டிருக்கும்போது, ஈரானியத் தலைவர்களுக்கு நாம் அவகாசம் கொடுக்கக்கூடாது."

ஏகாதிபத்திய சக்திகள் குறிப்பிடும் அணுவாலை நாடன்ஸ் நகரில் இருக்கும் முக்கிய ஈரானிய அணுசக்தி நிலையத்தைவிட மிகச் சிறியது ஆகும். இது இன்னும் செயற்பட ஆரம்பிக்கவில்லை. ஆயினும்கூட, ஒபாமா, "இந்த நிலையத்தின் அளவு, கூறுபாடுகள் ஆகியவை ஒரு சமாதானமான திட்டத்துடன் பொருந்தி இருக்கவில்லை" என்று கூறினார். அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் செய்தி ஊடகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி நாடன்ஸில் 8,500 அணுப்பிரிக்கும் அலகுகள் இருப்பதுடன், இன்னும் பலவற்றிற்கு இடமுண்டு. ஆனால் முன்பு கூறப்படாத நிலையமான தெஹ்ரானுக்கு தென்கிழக்கே 100 மைல் தொலைவில் உள்ள கோம் நகரத்திற்கு அருகே இருப்பது 3,000 அணுப்பிரிக்கும் அலகுகளை இயக்கமுடியும்.

இந்தக் கருவி அதன் தன்மையை ஒட்டி இராணுவ மதிப்பு எதையும் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் அணுப்பிரிக்கும் அலகுகள் பயன்பாடு அணுசக்தி உலைகளுக்கு தேவையான எரிபொருளுக்கு அடிப்படைப் பகுதி ஆகும். அதில் ஐசோடோப் யுரேனியம் 235 ஐ 3 முதல் 5 சதவிகித செறிவாக யுரேனியமாக தூய்மைப்படுத்த வேண்டும். அணுஆயுதங்களுக்கு தேவையான யூரேனியத்திற்கு யுரேனிய- 235 இன் மிகச்செறிவான 75 முதல் 80 சதவிகிதம் வரை தேவைப்படும்.

செப்டம்பர் 21ம் தேதி திங்களன்று ஈரானிய அரசாங்கம், பொதுதேவைகளுக்கான அணுசக்தி செயற்பாடுகளை கண்காணிக்கும் ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி அதிகாரத்திற்கு (IAEA) ஒரு கடிதம் எழுதியது. அதில் முன்பு குறிப்பிடப்படாத ஒரு ஆலை இருப்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது; ஆனால் அது இருக்குமிடம், அதன் அளவு ஆகியவை கூறப்படவில்லை.

சர்வதேச அணுசக்தி அதிகாரத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க் விட்ரிகேர் "செப்டம்பர் 21ம் தேதி ஈரான் சர்வதேச அணுசக்தி அதிகாரத்திற்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் ஒரு புதிய எரிபொருள் அடர்த்தித் திட்ட ஆலை நாட்டில் கட்டமைக்கப்படுகிறது என்று எழுதியதை நான் உறுதிபடுத்துகிறேன். இக்கடிதம் அடர்த்தித் தரம் 5 சதவிகிதம் வரை இருக்கும் என்று கூறுகிறது." என கூறினார்.

தெஹ்ரானில் இருந்து வெளிவரும் பிந்தைய அறிக்கைகள் இந்த நிலையம் இஸ்ரேல் அல்லது அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்காக அடையாளம் காணப்பட்டுள்ள நாடன்ஸிற்கு மாற்றாக அமைத்துள்ளது என்று காட்டுகின்றன. அதன் அணுசக்தி திட்டத்தை அமெரிக்க அழுத்தத்திற்கு உட்பட்டு கலைத்துவிட்டு ஈரான் சரணடைந்தால் ஒழிய, இஸ்ரேலிய அதிகாரிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அத்தகைய இராணுவத் தாக்குதலை நடத்த இருப்பதாக பலமுறையும் கூறியுள்ளனர்.

இந்த ஆலை ஒரு மலைக்கு அருகே கட்டப்பட்டுள்ளது. இதையொட்டி இராணுவத் தாக்குதலை இதன்மீது நடத்துவது கடினம் ஆகும். இந்த இடம் கோமில் இருந்து 20 மைல்கள் தொலைவில்தான் உள்ளது என்பது இராணுவத் தாக்குதலை விட அரசியல் ரீதியாக முற்றிலும் ஆபத்திற்கு உட்படுத்துகிறது. ஏனெனில் இந்த நகரம் பல காலமாக ஷியைட் இஸ்லாமிய மையமாக பல மதகுருமார் பயிற்சி நிறுவனங்களையும் கொண்டது ஆகும்.

அமெரிக்கச் செய்தி ஊடகம் ஒபாமா, பிரெளன், சார்க்கோசி ஆகியோரின் குறிப்பை உணர்ந்து கோம் ஆலை பற்றி பெரும் கூக்குரல் எழுப்பி, எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த ஆலை அணுகுண்டு தயாரிப்பதற்கு முடியும் என்பதால் உலகிற்கு ஆபத்து என்று சித்திரித்துள்ளது. இந்த ஆலை இன்னும் இயங்கக்கூட ஆரம்பிக்கவில்லை. ஈரானில் எந்த ஆலையினதும் யுரேனியத் தூய்மைப்படுத்தல் என்பது 5 சதவிகிதமாகத்தான் உள்ளது. இது ஒரு அணுசக்தி எரிபொருள் உற்பத்திக்கு உதவுமே ஒழிய, அணுஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்குப் போதாது.

"ஒரு அமெரிக்க அணுஆயுத பரவல் எதிர் நடவடிக்கை அதிகாரியை" மேற்கோளிட்டு Newsweek ஏடு அதன் வலைத் தளத்தில் பின்வருமாறு கூறியது: "அமெரிக்காவும் மற்ற நாடுகள் இந்த நிலையம் உயர்ந்த அடர்த்தியுள்ள யுரேனியத்தை ஆயுதத்தயாரிப்பிற்காக கொண்டுள்ளது என நினைக்கும் காரணம் பொதுத்தேவைகளுக்கான அணுத்திட்டம் ஒன்றிற்கு தேவையான யுரேனியத்தை அதிக அளவில் அடர்த்தியூட்ட தேவையான ஆலையின் அளவு இவ்வளவு பெரிதாக இருக்கத்தேவையில்லை...."

நாடன்ஸ் நிலையத்தைப் பற்றியும் பல முறை எதிரிடையான வாதம் கூறப்பட்டுள்ளது. அதன் அளவு ஒரு பொதுத்தேவைகளுக்கான எரிபொருள் தோற்றுவிக்கும் ஆலைத் தேவைகளைவிட அதிகமாக உள்ளது என. வேறுவிதமாகக் கூற வேண்டும் என்றால், பெரிய சக்திகளுக்கும் ஈரானுக்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டவேண்டும் என்று முயல்பவர்களின் நோக்கத்திற்கு ஏற்ப கிடைக்கும் உண்மைகள் திரிக்கப்படலாம் என்பதே ஆகும். அது ஈரானிய ஆட்சியை அகற்றவதற்கு ஒரு போலிக் காரணமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணைகளுக்கு இணங்கி நடக்கும் மற்றொரு ஆட்சியையும் அதையொட்டி நிறுவ முயலுவதுமாகும்.

அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் பலமுறையும் கோம் நிலையம் இருப்பது பற்றி ஓராண்டிற்கும் மேலாக அறிந்துள்ளதாக கூறியுள்ளனர். புஷ் நிர்வாகம் குறிப்பாக ஒபாமாவிடம் இந்த "இரகசிய" ஆலை பற்றி, ஜனாதிபதி மாறுகையின்போது நடந்த விவாதங்களில் தகவல் கொடுத்ததாகவும் செய்தி ஊடகங்கள் கூறியுள்ளன. தன் பங்கிற்கு ஒபாமா இந்த வாரத் தொடக்கத்தில் இன்னும் கடுமையான பொருளாதார தடைகளுக்கான ஆதரவைப் பெறவதற்காக ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவிடம் இதைத் தெரிவித்தார்.

இந்த "கண்டுபிடிப்பின்" நேரம் ஐ.நா. பொது மன்ற கூட்டத் தொடக்கத்துடனும், G20 உச்சிமாநாட்டை ஒட்டியும் இந்த உடனடிப் பிரச்சாரம், அச்சுறுத்தல்கள் மற்றும் ஆத்திரமூட்டல்கள் ஆகியவை பொருந்திவரும் விதத்தில் இருப்பதைத்தான் நிரூபிக்கிறது. அடுத்த வியாழனன்று ஜெனிவாவில் ஈரானுக்கும் P5+1 என அழைக்கப்படும் குழுவிற்கும் (ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகள் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையுடன் ஜேர்மனியும் இணைந்த) இடையே பேச்சுவார்த்தைகள் நடக்க உள்ளன.

அக்டோபர் 1ம் தேதி பேச்சுக்களுக்கு முன் கவனமான தயாரிப்பு உள்ளது. இது இப்பொழுது ஆறு சக்திகள் ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை கொடுப்பதை முக்கியமாகக் கொள்ளும். இதில் டிசம்பர் முன்பகுதி காலக்கெடுவாக கடுமையான பொருளாதாரத் தடைகளை சுமத்துவதற்கு கொண்டுவரப்படும். அதில் எரிபொருளை ஈரான் இறக்குமதி செய்வதை தடுப்பதும் அடங்கும். ஈரானிடம் மகத்தான எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் இருக்கும்போது, தன்னுடைய உள்நாட்டுத் தேவைக்கு வேண்டிய எரிபொருள், டீசல் எண்ணெய் ஆகியவற்றை அது முழுதாகத் தாயரிக்கும் நிலையில் இல்லை என்பதுதான் அமெரிக்கத் தலைமையில் இருக்கும் பிரச்சாரத்திற்கு உண்மைக் காரணம் ஆகும்.

கடந்த 10 நாட்களாக ஒபாமா நிர்வாகம் அதன் ஏவுகணைப் பாதுகாப்பு கொள்கையிலும் ஒரு மாற்றத்தை அறிவித்துள்ளது. புஷ் நிர்வாகத்தின் திட்டங்களான ஏவுகணைத் தளங்கள், ராடர் நிலையங்களை போலந்து, செக் குடியரசு ஆகியவற்றில் கட்டமைப்பது கைவிடப்பட்டுவிட்டன. இதற்கு காரணம் ஈரானுடன் கடுமையான போக்கிற்கு ரஷ்ய ஆதரவு வேண்டும் என்பதாகும். இதன்பின் புதனன்று ஐ.நா. பொது மன்றத்தில் ஒபாமாவின் உரை வந்தது. அதைத்தொடர்ந்து ஒபாமாவே தலைமை வகித்த பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இது அணுவாயுதப் பரவலை எதிர்த்து ஒரு பொதுத் தீர்மானத்தை ஏற்றதுடன் அதன் பின்னர் வெள்ளி மாலை பரபரப்பான அறிவிப்பு வந்தது.

அமெரிக்க செய்தி ஊடகத் தகவல்கள் பாதுகாப்புக் குழுக்கூட்டம் மற்றும் வெள்ளியன்று செய்தியாளர் கூட்டத்தில் நடந்த தாக்குதல் P5+1 குழுவில் கடைசியாக இன்னும் தயக்கம் காட்டும் சீனாவை ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு அதன் எதிர்ப்பைக் கைவிடுவதற்கு நடந்தது என்று கூறுகின்றன. பாதுகாப்புக்குழுத் தீர்மானத்தில் சீனா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது; இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகும்.

உயர்மட்ட ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் ஒபாமாவின் மிரட்டும் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் கோம் ஆலை "சர்வதேச சமூகத்திற்கு ஒரு தெளிவான சவால் ஆகும்.... இந்த ஆலை நாம் அவசரமாக செயல்பட வேண்டிய நிலையை உணர்த்துவதுடன், அக்டோபர் 1ம் தேதி நம்முடன் ஈரான் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்த வேண்டிய தேவையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது; தங்கள் அணுசக்தி திட்டத்தின் முற்றிலும் சமாதான இயல்பையும் நிரூபிக்க உடனடி நடவடிகற்கைகளை அது எடுக்க வேண்டியதையும் காட்டுகிறது.

வெளியுறவுக் குழுவின் தலைவரான ஜோன் கெர்ரி "ஈரானின் தொடர்ந்த ஏமாற்றுத்தனத்தை ஒட்டி, சர்வதேச சமூகம் ஈரான் அதன் அடர்த்தி, மறு உற்பத்தித்திட்டம் ஆகியவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோர வேண்டும்" என்றார்.

திரைக்குப் பின்னால் முக்கிய வாதம் ஒன்றும் வந்துள்ளது. அமெரிக்க வலதுசாரி செய்தி ஊடகம் வெளிப்படையாகச் செய்தாலும். ஈரான் மீது ஒரு இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஒரே மாற்றீடு பொருளாதாரத் தடைகள்தான். ஏனெனில் இஸ்ரேலியத் தாக்குதல் மத்திய கிழக்கு மற்றும் உலகில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் கணக்கிலடங்கா விளைவுகளைத் தரும்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் வலைத் தளத்தில் வந்த கட்டுரை ஒன்று, பென்டகன் ஆலோசகர் Anthony Cordesman ஆல் எழுதப்பட்டது, ஈரான்மீது இஸ்ரேலியத் தாக்குதல் அணுவாயுதப் பயன்பாட்டையும் கொண்டிருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது.

"இஸ்ரேல் அதன் அணுவாயுதங்களை ஏற்றிச் செல்லும் ஏவுகணைகள் தொலைதூரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய அளவை அதிகரித்துள்ளதுடன், கடல்ரீதியாக அணுவாயுத ஏவுகணைகளை கொண்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்களையும் கட்டமைத்து வருகிறது" என்று அவர் கூறியுள்ளார். "ஈரான் இஸ்ரேலை விடப் பெரிது என்றாலும், அங்குள்ள மக்கள் வசிக்கும் பகுதிகள் இஸ்ரேலிய தெர்மோ அணுசக்தி ஆயுதங்களால் பெரும் பாதிப்பிற்கு உட்படும்; ஏற்கனவே ஈரான் தப்பிப் பிழைப்பதற்கு ஒரு பெரிய ஆபத்தாகத்தான் இஸ்ரேல் உள்ளது.

ஐ.நா. பொதுச்சபையில் வியாழனன்று இஸ்ரேலிய பிரதம மந்திரி பென்ஜமின் நேடன்யாகுவில் உரையில் இருந்த உடனடி ஆபத்துநிறைந்த குரலை வாஷிங்டன் போஸ்ட் கணக்கில் எடுத்துக் கொண்டது; அதன் நிருபர் அந்த உரையை "உலகிற்கு இறுதி எச்சரிக்கை" என்று விளக்கி, "இது மத்திய கிழக்கு போரை நோக்கு அணிவகுத்துச் செல்வதில் ஒரு மைல் கல்லாகக் காணப்படும்." என்றும் விவரித்தார்.