World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Revolt and "dialogue" in Honduras

ஹொண்டூரஸில் எழுச்சியும், "பேச்சுவார்த்தையும்"

Bill Van Auken
26 September 2009

Back to screen version

பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி மானுவெல் ஜெலயா ஹொண்டூரஸிற்கு இந்த வாரம் திரும்புகையில், நாட்டின் மூன்று மாத கால நெருக்கடியை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அழுத்தம் தாராளவாத கட்சித் தலைவர் ரோபர்ட்டோ மைக்கலேட்டியின் தலைமையில் உள்ள சதி ஆட்சியின் அரசாங்கத்திற்கு அதிகரித்துள்ளது.

அமெரிக்க நாடுகளின் அமைப்பும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்கள் தூதர்கள் டெகுசிகல்பாவிற்கு மீண்டும் அனுப்பப்படுவதாகவும், அவர்களில் சிலர் வெளியுறவு மந்திரியுடன் வந்து ஒரு முடிவைக் காண்பதற்கு வருவர் என்றும் அறிவித்துள்ளன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் ஆட்சி மாற்றத் தலைவரிடம் தன்னை பேச்சுவார்த்தைகளை நடத்துமாறு அழைக்குமாறு வலியுறுத்தியுள்ளார். சர்வதே நாணய நிதியம் (IMF) நாட்டுடனான உறவுகள் "தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக" கூறியுள்ளது. பங்குகளையும் கடன்களையும் மதிப்பிடும் Standard & Poor நாட்டின் நாணயத் தன்மையின் தரத்தை கீழ்நோக்கிக் குறைத்துள்ளது.

இந்த அழுத்தம் கொடுக்கும் நடவடிக்களின் நோக்கம் வியாழனற்று "ஹொண்டூரஸ் விஷயங்கள் இன்னும் குழப்பமாகின்றன" என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட் தலையங்கத்தில் மிகவும் அப்பட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள பிரேசிலிய தூதரகத்தில் இருந்து "வெகுஜன புரட்சியை....தூண்ட" முற்படுவதற்காக ஜெலயாவை தலையங்கம் கண்டித்துள்ளது.

"பிரேசில் தொடங்கி இத்தகைய நடவடிக்கை அமெரிக்க நாடுகள் அமைப்பின் பொறுப்பான அங்கத்துவ நாடு எதனாலும் திரு.ஜெலயா அதிகாரத்திற்கு பெயரளவிற்கு வருவதற்கு ஆதரவு கொடுப்பதைத் தவிர, வேறு எதையும் செய்வதைத் தடுக்க வேண்டும்." என்று போஸ்ட்டின் ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். "ஒபாமா நிர்வாகம் (நாம் செய்துள்ளதைப் போலவே), ஜூன் மாதம் இராணுவத்தால் சட்டவிரோதமாக திரு.ஜெலயா அகற்றப்பட்டது செல்லுபடியாகாது என்பதற்காக இத்தகைய மீட்பிற்கு ஆதரவு கொடுக்கிறது. இப்பகுதியில் இதையொட்டி கூடுதலான கொள்கையான ஜனநாயக ஒழுங்கு என்ற கொள்கையின் மதிப்பு நிலைநிறுத்தப்படும்." எனவும் குறிப்பிட்டது.

"இப்பொழுது திரு. ஜெலயா அல்லது அவருடைய ஆதரவாளர்கள் மக்கள் ஒழுங்கீனம் அல்லது வன்முறையைத் தூண்ட முற்படுவது என்பது அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற பொருள் கொடுக்கும். இது அவரை அவருடைய தீரச்செயலுக்காக ஒத்துழைக்கும் பிரேசிலிய அரசாங்கத்தில் அவரை நிரந்தர விருந்தாளியாக ஆக்கிவிடும்." என அத்தலையங்கம் தொடர்ந்தது.

இதுதான் யாங்கி (அமெரிக்க) ஏகாதிபத்தியத்தின் உண்மைக் குரல் ஆகும். தனக்கு தெற்கு இருக்கும் நாடுகளைப்பற்றிய பெரும் இகழ்வு மற்றும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் அடக்குமுறை, வறுமையில் தள்ளப்பட்டுள்ள நிலையில் எத்தகைய மக்கள் புரட்சியின் அடையாளம் வந்தாலும் அதன் மீது காட்டப்பட இருக்கும் சீற்றத்தின் அடையாளம் ஆகும். ஒழுங்கை மீட்பது ஒன்றுதான் போஸ்ட் மற்றும் அது வாதிடும் அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் ஒரே அக்கறை ஆகும். நெருக்கடி தொடர்ந்தால் ஹொண்டூரஸ் ஆளப்பட முடியாத நிலை வந்து, ஒரு உண்மையான புரட்சியின் அச்சுறுத்தல் தோன்றக்கூடும் என்று அது அஞ்சுகிறது.

ஜெலயா ஒரு புரட்சியைத் தூண்டிவிடுகிறார் என்னும் குற்றச்சாட்டு தவறானது ஆகும். திங்களன்று ஹொண்டூரஸிற்கு இரகசியமாக அவர் திரும்பி வந்தபின் ஏற்பட்டுள்ள எழுச்சிகள் ஆட்சி சதி நடத்திய குழுவின் தூண்டுடதலில் நடைபெற்றது. 7 மில்லியன் மக்களை கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைத்து, தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவுகளை செயல்படுத்த அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படைகளும் முயல்கின்றன.

டெகுசிகல்பாவின் வறிய புறநகர்ப்பகுதிகளிலும் நாட்டின் மற்ற பகுதிகளிலும் இருக்கும் தொழிலாளர்களும் இளைஞர்களும் ஊரடங்கு உத்தரவுகளை இயல்பாக மீறி, எங்கும் தடுப்புக்களை அமைத்து இராணுவத்துடும் போலீசாருடம் சண்டையிடுகின்றனர். வறுமையினால் மக்கள் அன்றாடம்தான் உணவை வாங்க முடியம் என்ற கட்டாயம் இருக்கும் நாட்டில், வீட்டை விட்டு வெளியே ஏதேனும் சாப்பிடலாம் என்று புறப்பட்டவர்கள் அடி, உதை இன்னும் மோசமானவற்றை எதிர் கொள்ளுகின்றனர்.

ஜெலயாவின் வெகுஜன வார்த்தைஜாலங்கள் எப்படி இருந்தாலும், அவர் ஒரு புரட்சிக்கு தலைமை தாங்கவில்லை. தெருக்களுக்கு வந்து போராடும் மக்களுடைய சமூக, வர்க்க நலன்களையும் அவர் ஒன்றும் பகிர்ந்து கொள்ளவில்லை. சர்வாதிகாரத்தை மக்கள் அகற்ற வேண்டும் என்றும் அவர் முயலவில்லை. மாறாக வாஷிங்டனிடத்தில் இருந்து அழுத்தத்தைதான், அதுவும் அமெரிக்க நாடுகள் அமைப்பும், பிரேசில் இன்னும் பல நாடுகளும் அவரை மீண்டும் பதவியில் இருத்துவதற்கு அழுத்தத்தைத்தான் எதிர்பார்க்கிறார்.

தன்னை ஆட்சியில் இருந்து அகற்றிய, அதன் ஒரு பகுதியாக இருக்கும் ஆளும் தன்னலக் குழுவிடம், "பேச்சுவார்த்தைக்காக" ஹொண்டூரஸிற்கு திரும்பிய பின் ஜெலயா முறையீடு செய்துள்ளார்.

இந்த விவாதத்தின் அடித்தளத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அது முன்னாள் கொஸ்டாரிக்காவின் ஜனதிபதி ஓஸ்கார் ஏரியாஸினால் தயாரிக்கப்பட்டுள்ள San Jose உடன்பாடு என்று அழைக்கப்படுகிறது. அவரோ வாஷிங்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் ஆவார். இத்திட்டம் ஜெலயா மற்றும் ஆட்சிசதியின் தலைவர்கள் ஆகியோர் இணைந்து "தேசிய ஒற்றுமை" அரசாங்கம ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், நாட்டின் பிற்போக்குத்தன அரசியலமைப்பை திருத்தும் எந்த முயற்சியும் கைவிடப்பட வேண்டும் என்றும், அலையெனப் படுகொலைகள், காணாமற் போதல், சித்திரவதைகள், அடி, உதைகள் மற்றும் ஒருதலைப்பட்டமாக காவலில் வைத்தல் என்று 90 நாட்களாக ஜெலயா ஒரு விமானத்தில் ஏற்றப்பட்டு நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதில் இருந்து கட்டவிழித்துவிடப்பட்ட செயல்களைப் புரிந்துவர்களுக்கு மொத்த பொது மன்னிப்பையும் நாடுகிறது.

இத்திட்டத்திற்கு ஆதரவு தரும் ஒபாமா நிர்வாகத்தின் நோக்கம் ஆட்சி சதியின் இலக்குகளைக் காப்பாற்றி, அதே நேரத்தில் "ஜனநாயகத்திற்கு" உறுதி என்ற தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவதும் ஆகும். ஜெலயா அகற்றப்பட்டது பற்றி வாஷிங்டன் அரைமனதுடனான விமர்சனம் இன்றளவும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அதை உத்தியோகபூர்வமாக ஆட்சி சதி என்று கூற மறுப்பதால் வெளிப்படுகிறது. இதற்கிடையில் ஹொண்டூரஸில் Palmerola நகரில் இருக்கும் அமெரிக்காவின் இராணுவத்தளம் அதன் செயற்பாடுகளை வாடிக்கையாகச் செய்து வருவதுடன், வணிகத் தடைகளைச் சுமத்தும் நடவடிக்கைகள் எதையும் வாஷிங்டன் எடுக்கவில்லை.

ஏரியஸ் திட்டம் ஜெலயாவை இவருக்குப் பின் மூன்று மாதங்களில் பதவிக்கு வர இருப்பவர் பொறுப்பேற்கும் வரை ஒரு பெயரளவு அரசாங்கத் தலைவர் என்ற நிலைக்குத்தான் தள்ளுகிறது. அந்த பரிதாபமான உடன்பாட்டையும் அவர் ஏற்றுள்ளது செவ்வாயன்று பலனளிக்கும் போல் தோன்றியது. ஏனெனில் ஆட்சிசதியை ஆர்வத்துடன் வரவேற்றிருந்த கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்படிநிலையின் பிரதிநிதி ஒருவரும், பின்னர் நவம்பர் 29 அன்று நடக்க இருக்கும் தேர்தல்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் நான்கு பேரும் அவரை வரவேற்க தரகத்திற்கு வந்தனர்.

ஸ்பானிய மொழி நாளேடான El Pais, கூறுவதாவது: "துப்பாக்கிச் சூடுகள், உதைகள் என்பவை இப்பொழுது புன்சிரிப்புக்கள், தழுவல்கள் ஆகிய விதத்தில் மாறியுள்ளன." ஹொண்டூரஸ் தொழிலாளர்கள், இளைஞர்கள் என்று துப்பாக்கிச் சூடு, உதைகளை பெற்ற பலருக்கும், ஜெலயா ஆட்சி சதிக்கு ஆதரவு கொடுத்த நான்கு வேட்பாளர்களையும் அணைத்து சிரிப்புடன் நிற்கும் காட்சி இகழ்வுணர்வுடன் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டைக் கொடுத்துள்ளது.

ஜெலயாவின் விருப்பங்கள் எப்படி இருந்தாலும், அல்லது அவரைப் பார்க்க வந்தவர்களுடையதும் எப்படி இருந்தாலும், வாஷிங்டன், ஏரியாஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் அமைப்பு (OAS) ஆகியவை சமாதான முறையில் நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும் என்பதற்கு கொடுத்துள்ள கருத்துக்கள் உத்தரவாதம் அற்றவை. வெள்ளியன்று, ஹொண்டூரஸ் பாதுகாப்புப்படைகள் பிரேசிலிய தூதரகத்தை தொந்திரவு செய்வதற்கு ஐ.நா. பாதுகாப்புக்குழு கண்டனம் தெரிவித்த சில மணி நேரங்களுக்கு பின்னர், தூதரகத்தை முற்றுகையிட்டிருந்த துருப்புக்கள் வளாகத்திற்குள் புகை குண்டுகள் போட்டதாகவும், அதையொட்டி ஜெலயாவுடன் அங்கிருந்தவர்கள் மூக்கின் வழியே இரத்தம் கொட்டியும், வாந்தியெடுத்தும் அவதிப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

ஜெலயாவின் உயிருக்கு ஆபத்து என்பது உறுதிதான்; கடந்த 90 நாட்களில் நடைபெற்ற கொலைகள், அடக்குமுறை ஆகியவை மகத்தான முறையில் உண்மையான வகையில் பெரிதாகக் கூடும். ஏனெனில் அரசாங்கம் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தன்னலக்குழு நலன்களை காப்பாற்றுவதற்கு மரணக்குழுக்களையும் மற்றும் மிருகத்தன நடவடிக்கைகளைப் பயன்படுத்துவதற்கு வாஷங்டனிடம் பயிற்சி பெற்ற இராணுவத்தைத்தான் நம்பியுள்ளது.

கடந்த மூன்று மாத நிகழ்வுகள் முதலாளித்துவ தேசியவாத அரசியலின் திவால்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளன. அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் ஹொண்டூரஸ் தொழிலாள வர்க்க மக்களின் சமூக நிலைமகள் மீதான தாக்குதல்கள் ஜெலயா குறுகிய காலத்திற்கு ஜனாதிபதி அரண்மனைக்கு மீளகொண்டுவரப்பட்டாலும் தொடரும்.

ஜூன் 28 ஆட்சி சதிக்கு அவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு கொடுத்ததன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்களுடைய நோக்கங்கள் ஒரு புரட்சிகர போராட்டத்தின் மூலம்தான் நிறைவேற்றப்பட முடியும். இத்தகைய போராட்டம் ஆளும் உயரடுக்கின் அனைத்துப் பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமாக இருக்க வேண்டும். மத்திய அமெரிக்கா மற்றும் முழு உலகப் பகுதி மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் ஹொண்டூரஸில் சோசலிசத்தை நிறுவ அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved