World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

On eve of G20 summit: Economic danger signs

G20 உச்சி மாநாட்டிற்கு முன்பு: பொருளாதார ஆபத்தின் அடையாளங்கள்

Andre Damon
23 September 2009

Use this version to print | Send feedback

நிதிய நெருக்கடி ஏற்பட்ட ஓராண்டிற்குப் பின், இவ்வார இறுதியில் வரவிருக்கும் G20 உச்சிமாநாட்டிற்கு சற்று முன்னதாக அரசியல் நடைமுறை இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து தவிர்க்க முடியாதவாறு மீண்டுவிட்டதாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

"ஒரு தொழில்நுட்ப முன்னோக்கில், மந்த நிலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது" என்று அமெரிக்க பெடரல் ரிசேர்வ் தலைவர் பென் பெர்னன்கே கடந்த வாரம் கூறினார். நிதியமுறையின் சரிவு நிறுத்தப்பட்டு, அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் பங்குச் சந்தைகள் மீண்டும் உயர்ந்துவிட்டன, வேலையின்மை அதிகரிப்பு விகிதம் குறைந்துவிட்டது என்றும் அவர் வாதாடினார்.

"ஆனால் இன்னும் சில காலத்திற்கு நலிந்த பொருளாதாரமாகத்தான் இது இருக்கும்" என்று பெர்னன்கே சேர்த்துக் கொண்டார். அவருடைய நம்பிக்கை தரும் கருத்தின்கீழ்க்கூட வேலையின்மை இன்னும் சிறிது காலத்திற்கு தொடரும் என்பதை இதையொட்டி ஒப்புக் கொண்டார். ஆயினும்கூட, மோசமான கட்டம் கடக்கப்பட்டுவிட்டது, 2008 ஆண்டின் கடைசியில் இருந்த பேரழிவு நிலைமைகள் மீண்டும் வரக்கூடிய வாய்ப்பு இல்லை என்ற உத்தியோகபூர்வ ஒருமித்த உணர்வு வெளிப்பட்டுள்ளது.

பொருளாதார மீட்பு பற்றிய ஊகங்களுக்கு தீனிபோடுவது போல் உலகப் பங்குச் சந்தைகளில் அசாதாரண ஏற்றம் உள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு முக்கிய குறியீடும் கடந்த ஆறு மாதத்தில் குறைந்தது 20 சதவிகிதம் ஏற்றத்தைக் காட்டியுள்ளது; ரஷ்ய RTS 63.38 உயர்வு, சீனாவின் Hang Seng 57.63 உயர்வு, இந்திய S&P/CNX 500 என்று கிட்டத்தட்ட 75.84 உயர்வு என்று வந்துள்ளன. அமெரிக்காவில் S&P 500 30.81 சதவிகிதம் உயர்ந்துள்ளது, நஸ்டக் 39.84 உயர்ந்துள்ளது. தங்க விலைகளும் இவ்வாறே உயர்ந்துள்ளன, கடந்த ஆறு மாதங்களில் 38.5 சதவிகிதம் உயர்ந்துவிட்டது.

சொத்துக்கள் விலைகளில் விரைவான ஏற்றம் "உண்மைப் பொருளாதரத்தின்" உண்மையான வளர்ச்சியுடன் பரந்த முறையில் விகிதாசாரமற்ற முறையில்தான் உள்ளன. பொருளாதாரச் சுருக்க விவரம் உலகம் முழுவதும் கடந்த ஆறு மாதங்களில் குறைந்துவிட்டது என்றாலும், வேலையின்மை தொடர்ந்து மிக அதிகமாகி வருகிறது. வளர்ச்சி, தீவிர இரத்த சோகை பிடித்தது போல் உள்ளது; இது இந்த ஆண்டின் நான்காம் கால் பகுதியில் கீழ்நோக்குப் போக்கை தொடருமோ என்ற அடையாளங்களும் உள்ளன.

Bank of International Settlements ன் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுனரான William White, பெர்னன்கே விளக்கியுள்ள வகையின் படி தொடர்ச்சியான வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை என்று நிராகரித்துவிட்டார். "எனக்கு ஏதேனும் வியப்பு தரும் என்றால், நாம் முன்பு இருந்த நிலையிலிருந்து விரைவாக, தொடர்ந்து மீட்பு நடந்துவிட்டாதல்தான்" என்றார் அவர்.

மேலும் உண்மைப் பொருளாதாரத்தில் தற்போதைய மீட்பு சுற்று, அரசாங்கத் திட்டங்களின்மீது மிக அதிக நம்பகத்தன்மையை கொண்டுள்ளது. அமெரிக்காவில் விற்பனை கடந்த மாதம் 2.7 சதவிகிதம் அதிகமாயிற்று; இது அரசாங்கத்தின் "Cash for clunkers" திட்டத்தினால் அதிக உந்துதல் பெற்றது.

பங்குச் சந்தைகளில் ஏற்றம் என்பது, கிட்டத்தட்ட இலவசமான முறையில் கடன் மற்றும் பல டிரில்லியன் டாலர்கள் வங்கிப் பிணையெடுப்புக்கள் உலக அரசாங்கங்களால், குறிப்பாக அமெரிக்காவால், நடத்தப்பட்டதினால்தான். இந்தப் பணம் ஊகவகை முதலீட்டில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக அதிக ஆதாயங்கள் கிடைக்கும் ஆனால் ஆபத்தான சொத்துக்களில். இதன் விளைவாக பல வர்ணனையாளர்கள் புதிய குமிழி ஏற்படுமோ என்ற கவலையை தெரிவித்துள்ளனர்.

திங்களன்று பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: "மிகக் குறைவான வட்டி விகிதங்களும் மிக அதிக ரொக்கமும் மத்திய வங்கிகளால் பொருளாதாரங்களில் உட்செலுத்தப்பட்டது இப்பொழுது நிதியச் சந்தைகளில் சொத்துக்கள் மதிப்புக்களின் எழுச்சி என்று மாறியுள்ளன; இது ஒரு புதிய ஊகவகை குமிழிக்கு வாய்ப்பு வருமோ என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது."

Mizuho Securities ன் தலைமைப் பொருளாதார வல்லுனர் Steven Ricchiuto, "தற்போதைய போக்கை ஏதேனும் முறிக்கக்கூடும், 1987 பாணியிலான ஒரு நாள் திருத்த ஆபத்து பற்றி நான் கவலைப் படுகிறேன்" என்று கூறியதாக டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது. இது "Black Monday" பற்றிய குறிப்பாகும்; அன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் 20 சதவிகிதம் சரிந்தன.

"பங்குச் சந்தைகள் அபூர்வமாகத்தான் இப்பொழுது வந்துள்ளது போல் ஆறுமாத ஏற்றத்தை கண்டுள்ளன" என்று திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியது. "Dow Jones Industrial Average ன் 46 சதவிகித ஏற்றம் கடந்த 100 ஆண்டுகளில் அத்தகைய பெரிய தன்மையைக் கொண்ட ஆறாவது நிகழ்வு ஆகும்." இத்தகைய பெரிய அளவு, மீட்புகளுக்குப் பின் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் பின்னர் பெரும் வேலைக்குறைப்புக்களில்தான் முடிந்துள்ளன. உண்மையில் சந்தைகள் இப்பொழுது 1930ல் இருந்து மிக வியத்தகு ஏற்றத்தைக் கொண்டிருக்கின்றன, பெரு மந்த நிலைக்கு நடுவே" என்று ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது.

வோல் ஸ்ட்ரீட் பற்றி மற்ற நிதிய மையங்களில் எத்தகைய வெறி இருந்தாலும், தற்போதைய நெருக்கடியை கொண்டுவந்த அடிப்படை முரண்பாடுகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. மாறாக அவை தீவிரமாகியுள்ளன.

வங்கிகளை முட்டுக் கொடுத்து நிறுத்துவதற்காக உலகெங்கிலும் அரசாங்கங்கள் --குறிப்பாக அமெரிக்காவில்-- நிதிய உயரடுக்கின் சூதாட்டக் கடன்களை ஏற்றுள்ளன. ஒருபுறத்தில் இது அரசு திவால் என்னும் ஆவியுருவை, மற்றொரு தீவிரச் சரிவு வந்தால் ஏற்படக்கூடிய அச்சத்தை, எழுப்பியுள்ளது.

மறுபுறத்தில், இது முதலில் இந்த நெருக்கடியைத் தோற்றுவித்த அதே நடைமுறைகள் மீண்டும் தொடங்கப்படுவதை ஊக்குவித்துள்ளது. மிகப் பெரிய வங்கிகள் தங்கள் இரும்புப் பிடியை நிதியமுறைமீது வலுப்படுத்தியுள்ளன; இதில் புதிய ஒருங்கிணைப்புக்கள் என்ற அலையும் உண்டு. அதே நேரத்தில் அவை மீண்டும் தொந்திரவு வந்தால் பிணை எடுக்கப்பட்டு விடும் என்ற நம்பிக்கையையும் கொண்டுள்ளன.

ஊகக் குமிழிகள் மீண்டும் வந்துள்ளன என்பதற்குக் காரணம் உண்மையான அஸ்திவாரம் இல்லாததுதான். பொருளாதார உற்பத்தி மறு எழுச்சி பெற்றுவிட்டது என்பதற்குப் பதிலாக நெருக்கடி பல மில்லியன் வேலைகளை அழிக்கின்ற ஒரு வாய்ப்பாகவும் தொழில்துறையில் பெரும் தேக்கங்கள் வரவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலான உணர்வு பெற்றுள்ள வர்ணனையாளர்கள் வேலையின்மையின் வளர்ச்சி கட்டுமான ரீதியாக உள்ளன என்பதை உணர்ந்துள்ளனர்-- வேலைகள் எளிதில் மீண்டும் வந்துவிடவில்லை.

ஒரு புதிய நெருக்கடியை சுட்டிக்காட்டும் ஏனைய காரணிகள் பின்வருமாறு:

* அமெரிக்காவிலோ, சர்வதேச அளவிலோ நிதிய முறையை தீவிரமாகக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் ஏதும் இல்லை; நிறைவேற்று அதிகாரிகளின் போனஸ்களில் வரம்புகள் ஏதும் வைக்கப்படவில்லை. மோசடி செய்து, ஊகச் செயல்களில் ஈடுபடுவதற்கான ஊக்கம், வழிவகைகள் இரண்டும் அப்படியேதான் உள்ளன.

* உலகப் பொருளாதாரத்தில் நிதிய மற்றும் நாணய முறை சமச்சீரற்ற தன்மைகள் ஆழமடைந்தே போயிருக்கின்றன, அமெரிக்க டாலரின் அந்தஸ்து ஓராண்டிற்கு முன்பு இருந்ததைவிட இன்னும் கேள்விக்குரியதாகத்தான் போய்விட்டது. ** TARP தலைமை ஆய்வாளர் மதிப்பீட்டின்படி அமெரிக்க அரசாங்கம் பிணை எடுப்பு கடமைகளுக்காக 23 டிரில்லியன் டாலர்களை எடுத்துள்ளது. டாலரின் தொடர்ந்த மதிப்புக் குறைப்பிற்கு இடையே, அமெரிக்க அரசாங்கத்தின் மதிப்பில் ஏற்பட்டுள்ள விரைந்த வீழ்ச்சி பற்றி உண்மையான கவலை உள்ளது.

* இந்த நெருக்கடி பற்றி, உலக சக்திகள் எந்த ஒருமித்த கருத்திற்கும் வரமுடியவில்லை. மாறாக உலக அழுத்தங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன என்பதற்குப் பல அடையாளங்கள் தென்படுகின்றன.

* ஐரோப்பிய சக்திகள் ஏற்கனவே வரவிருக்கும் G20 கூட்டத்தில் அமெரிக்கா கொடுத்துள்ள திட்டங்கள் பற்றி எதிர்மறையாகத்தான் விடையிறுத்துள்ளன. இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்காவும் சீனாவும் ஒரு பெரிய வணிக முரண்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சுறுத்தலைக் கொடுக்கும் நடவடிக்கைகளை எடுத்தன.

உலக முதலாளித்துவத்தை பீடித்துள்ள முரண்பாடுகள் ஆழமடைந்து போயிருப்பது வர்க்க அழுத்தங்கள் தீவிரமாகியிருப்பதுடன் தொடர்ந்து வந்துள்ளது. இக்கொள்கைகளின் அடித்தளத்தில் இருப்பது செல்வம் ஒழுங்குமுறையாக மாற்றப்படுவதுதான். மகத்தான வங்கி பிணை எடுப்புக்களானது, ஊதியங்கள் சரிவு, வேலைகள் அழிப்பு ஆகியவற்றுடன் இணைந்து வந்துள்ளது. இப்பொழுதும் சமூகப் பணிகளை இன்னும் அகற்றும் விதத்தில் கூட்டாட்சி பற்றாக்குறை வரவு-செலவு திட்டத்தை மேலும் வெட்டுவதற்கான அழைப்புக்கள் ஒபாமா நிர்வாகத்தால் ஊக்கத்துடன் நடைமுறையில் வைக்கப்பட்டு வருகின்றன.

வெளிப்படையான சமூக பூசலின் தவிர்க்கமுடியாத வெடிப்பிற்கு இத்தகைய பல்வேறு காரணிகளும் அரங்கு அமைக்கின்றன.