World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Great power conflicts overhang G20 summit in Pittsburgh

G20 பிட்ஸ்பர்க் உச்சி மாநாட்டில் பெரும் சக்தி மோதல்கள்

By Barry Grey
24 September 2009

Back to screen version

இன்றும் வெள்ளியும் பிட்ஸ்பர்க்கில் நடக்க இருக்கும் G20 குழுவின் உச்சிமாநாட்டிற்கு முக்கிய பொருளாதாரங்களின் அரசியல் தலைவர்களும் மத்திய வங்கியாளர்களும் கூடுகையில், உலகப் பொருளாதாரத்தை புதுப்பித்து மற்றொரு நிதிய நெருக்கடியைத் தடுப்பது பற்றிய கொள்கைகள் பற்றி வெளிப்படையான கடும் பூசல்களை காகித வடிவத்தில் பெரிதுபடுத்தாத முயற்சியை எதிர்கொள்ளுகின்றனர்.

உலக நிதிய முறையின் சரிவிற்கு ஓராண்டிற்குப் பின்னர் அனைவரும் சேர்ந்து ஒருங்கிணைத்தல் என்ற உறுதிமொழிகள், வாஷிங்டனில் கடந்த நவம்பர் G20, லண்டனில் ஏப்ரல் மாத உச்சிமாநாடுகளில் அறிவிக்கப்பட்ட காப்புவாத கொள்கைகள் நிராகரிப்பு ஆகியவை இப்பொழுது பொருளாதாரக் கொள்கை பற்றிய பிளவுகளால் நிழலிடப்பட்டுவிட்டன. இந்த வேறுபாடுகள் அமெரிக்க, ஐரோப்பிய ஆளும் உயரடுக்கின் தேசிய நலன்கள் மற்றும் ஆசியா, இலத்தின் அமெரிக்காவில் எழுச்சிபெற்று வரும் பொருளாதார சக்திகளின் நலன்கள், எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவுடையது ஆகியவை குறித்த வேறுபாடுகளை ஒத்துள்ளன.

செவ்வாயன்று ஒரு ஜேர்மனிய அதிகாரி, "நீடித்து செயல்படுத்தக்கூடிய, சமச்சீர் வளர்ச்சி பற்றிய வடிவமைப்பு" என்று ஒபாமா நிர்வாகம் கொடுத்ததற்கு விடையிறுக்கும் வகையில் இதில் "பரந்த வேறுபாடுகள் உள்ளன" என்று எச்சரித்தார்

உச்சிமாநாட்டிற்கு இரு வாரங்களுக்கு முன்பு ஒபாமா நிர்வாகம் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் டயர்கள் மீது 35 சதவிகித காப்புவரிகளை அறிவித்து, அமெரிக்க கார் பாகங்கள் மற்றும் கோழிவளர்ப்புத்துறை பற்றியதில் ஏற்றுமதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்ற சீன அச்சுறுத்தல்களை தூண்டியது; இது உலகின் மிகப் பெரிய மற்றும் மூன்றாம் பொருளாதாரங்களுக்கு இடையே வணிகப் போர் என்ற ஆவியுருவை வரவழைத்தது.

சாராம்சத்தில் அமெரிக்கா முன்வைத்துள்ள "வடிவமைப்பு" என்பது வாஷிங்டனின் முக்கிய உலகப் போட்டியாளர்கள்மீது அமெரிக்க வங்கி முறை சரிவினால் எரியூட்டப்பட்ட நெருக்கடிச் சுமையைத் தள்ளும் ஒரு அமெரிக்க முயற்சியாகும். இந்த தேசியச் சார்பு அனைவருக்கும் நலன் கொடுப்பது போன்ற ஒத்துழைப்பு, "உலக சமசீரற்ற தன்மையைக் கடத்தல்" போன்ற சொல்லாட்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கா முன்பு இருந்த நெருக்கடிகளைவிட நலிந்த நிலைமையில் இருந்துதான் செயல்படுகிறது. புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் "ஒரு தசாப்தத்திற்கு முன் ஆசிய நிதிய நெருக்கடிக் காலத்தில் இருந்து உலக சக்தியில் ஒரு மாற்றம் வந்துள்ளது" என்று சுட்டிக் காட்டியுள்ளது. "அப்பொழுது அமெரிக்க கருவூலமானது....IMF உதவியைக்கொண்டு அமெரிக்கத் திட்டங்களுக்கு நிதியளிக்க உலக மூலோபாயத்தை நிறுவியது" என்றும் ஜேர்னல் தொடர்ந்து எழுதியது.

"இம்முறை அமெரிக்க நிதிய முறையே பிரச்சினையின் இதயத்தானமாக இருக்கையில் --பெரிய வளரும் நாடுகள் இன்னும் கூடுதலான பொருளாதாரப் பங்கைக் கொண்டிருக்கையில்-- நிதி அமைச்சர் கீத்னர் இன்னும் பொருத்தமான அணுகுமுறையைக் கொள்ள வேண்டும். அதில் ஒரு பகுதி அமெரிக்காவின் உடந்தைத் தன்மையை ஒப்புக் கொள்ளுவதாக இருக்க வேண்டும் 'அவர் அழுத்தம் கொடுப்பதை விட ஒருமித்த உணர்வைக் கட்டமைக்கிறார்.' என்று ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தின் பொருளாதார வல்லுனர் ஈஸ்வர் பிரசாத் கூறியுள்ளார்."

இந்தக் கூடுதலான "நுட்பமான" அணுகுமுறை சீனா, இந்தியா, பிரேசில் இன்னும் பிற எழுச்சி பெரும் பொருளாதாரங்களை அமெரிக்க புறத்திற்கு அதன் "வடிவமைப்பு" திட்டத்திற்காக வாதிடும் வகையில் ஈர்த்துள்ளது; இதனால் அவற்றின் IMF ல் வாக்களிக்கும் சக்தியில் பெருக்கம் உள்ளது; இது ஐரோப்பிய சக்திகளால் எதிர்க்கப்படுகிறது; ஏனெனில் IMF க்குள் அவற்றின் செல்வாக்கு இதையொட்டி நீர்த்துப் போகின்றது.

பிட்ஸ்பேர்க் உச்சி மாநாட்டில் மாறிவிட்ட நிலைப்பாடு பற்றி Associated Press கீழ்க்கண்டவாறு சுருக்கிக் கூறியுள்ளது: "டிரில்லியன் கணக்கிலான டாலர் பற்றாக்குறைகளுடன் அமெரிக்கா ஒருகாலத்தில் பொருளாதார உச்சிமாநாடுகளில் கொண்டிருந்த செல்வாக்கை இப்பொழுது பெற்றிருக்கவில்லை. சீனா, பிரேசில் போன்றவை; தங்கள் சொந்த பிரச்சினைகளை முன்னுக்கு கொண்டுவரும் விதத்தில், இப்பொழுது, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் புதுச் சிறுவர்களும் மேசையில் உள்ளனர்."

உச்சிமாநாடு நடக்கும் இடமே ஒரு அடையாள முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. ஒருகாலத்தில் உலக மையமாக இங்கு இருந்த எஃகுத் தொழில் மடிந்துள்ளதே அமெரிக்கத் தொழில்துறையில் அதன் அடர்த்தியான வடிவத்தின் சரிவையும் அமெரிக்க முதலாளித்துவத்தின் இழிசரிவையும் காட்டுகிறது.

இது கூறப்பட்டாலும், அமெரிக்கா இன்னும் மகத்தான அதிகாரத்தைக் கொண்டுள்ளது; இதற்குக் காரணம் இதன் உயர்ந்த பட்ஜெட், வணிக, நடப்பு நிதிப் பற்றாக்குறைகளாகும். அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் நூற்றுக்கணக்கான பில்லியன்களை வைத்துள்ள சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் டாலரின் சரிவை தங்கள் பொருளாதாரத்தின் சரிவு என்று காண்கின்றன; ஏற்றுமதியை மிகவும் நம்பியுள்ள பொருளாதாரங்கள், சீனா, ஜப்பான், ஜேர்மனி போன்றவை அமெரிக்க சந்தை புதுப்பிக்கப்படுதல், பெருகுதல், அவற்றோடு தொடர்பை பெருக்குதல் இவற்றில் பெரும் தனிப்பட்ட அக்கறைகளைக் கொண்டுள்ளன.

ஒபாமா நிர்வாகத்தின் "வடிவமைப்பு" அந்த சக்தியை அமெரிக்க நிதிய, பெருநிறுவன அடுக்கின் நலன்களுக்கு ஏற்ப செயல்படுத்த விரும்புகிறது. அமெரிக்கத் திட்டத்தில் மூன்று அடிப்படைக் கூறுபாடுகள் உள்ளன.

முதலில் அமெரிக்க G20 நாடுகளில் இருந்து, அமெரிக்கத் தலைமையில் இருக்கும் கடன்பட்டுள்ள நாடுகளுக்கும், வணிக, நடப்பு இருப்பு உபரிகள் இருக்கும் சீனா, ஜப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கும் இடையே உள்ள உலகப் பொருளாதார சமசீரற்ற தன்மை பற்றி உறுதிமொழிகளை நாடுகிறது. இதன்பின் அமெரிக்கா அதன் பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்கும் கொள்கைகளை இயற்றும்--அடுத்த தசாப்தத்தில் இது $9 டிரில்லியன் இருக்கும் என்று ஒபாமா நிர்வாகத்தால் மதிப்பிடப்பட்டுள்ளது; மற்றும் உபரி நாடுகள் அவற்றின் ஏற்றுமதியை நம்பியிருக்கும் தன்மையைக் குறைத்துக் கொள்ள வேண்டும்; சீனாவை பொறுத்த வரையில் உள்நாட்டுத் தேவையை அதிகரித்துக் கொள்ள வேண்டும், ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் வணிக முதலீட்டை உயர்த்திக் கொள்ள "அடிப்படை மாறுதல்களை" செய்து கொள்ள வேண்டும்.

தேவையான மாற்றங்களை செய்யத் தவறும் நாடுகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகள் ஏதும் வராது என்றாலும், IMF "சக அந்தஸ்து பெற்ற நாடுகள்" பற்றி மேற்பார்வையிடும்; செயல்படுத்தாத நாடுகள்மீது அழுத்தங்களைக் கொண்டுவரும்.

சீனாவும் --இன்னும் அழுத்தமாக, ஜேர்மனியும்-- இந்தத் திட்டத்தை குறைகூறியுள்ளன; தங்கள் வணிக உபரிக் கொள்கையை தாக்கும் ஒரு கருவி என இதை நினைக்கின்றன. அதுவும் IMF மீது அமெரிக்கா தொடர்ந்து மேலாதிக்கம் கொண்டிருப்பதால் இன்னும் அவநம்பிக்கையைக் கூடுதலாகக் கொண்டுள்ளன.

அமெரிக்க ஆளும் உயரடுக்கைப் பொறுத்த வரையில், உலகப் பொருளாதாரத்தை அத்தகைய "மறு சீரமைத்தல்" என்பது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதலுடன் பிணைந்துள்ளது. CNN க்கு ஞாயிறு கொடுத்த பேட்டியில், ஒபாமா அமெரிக்கா G20 க்கு கொடுத்துள்ள திட்டத்தை உள்நாட்டு நுகர்வைக் குறைக்கும் அவருடைய நிர்வாகக் கொள்கையுடன் பிணைத்தார்.

"சீனா அல்லது ஜேர்மனி அல்லது மற்ற நாடுகள் நமக்கு அனைத்துப் பொருட்களையும் விற்கும் சகாப்தத்திற்கு திரும்ப முடியாது; நாம் ஒரு கொத்து கடன் அட்டைகளால் வந்த கடன்கள், வீடுகள் சந்தைக் கடன்கள் என்று எடுக்கிறோம், ஆனால் எதையும் விற்பதில்லை" என்றார் அவர்.

ஆனால் ஒபாமா கூறாமல் விட்டது, இந்த அமெரிக்க நுகர்வில் குறைப்பு என்பது வெகுஜன தொழிலாளர்களுக்கு மட்டும்தான் பொருந்துகிறது, நிதிய உயரடுக்கிற்கு இல்லை; இது அதிக வேலையின்மை விகிதத்தை தக்கவைத்துக் கொள்ளுவதின் மூலம், ஒரு கருவியாக அதைப் பயன்படுத்தி ஊதியங்களை குறைத்து, சமூக நலன்களான சுகாதாரப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப்பாதுகாப்பு போன்றவற்றில் முன்னொருபோதும் எதிர்பார்த்திருந்திரா வெட்டுக்களை ஏற்படுத்தும் என்பதே ஆகும்.

ஐரோப்பிய பொருளாதாரங்களில் "அடிப்படை மாற்றங்களுக்கான" கோரிக்கை என்பது இப்பொழுது தொழிலாளர்களுக்கு எஞ்சியிருக்கும் இருக்கும் சமூகப்பாதுகாப்புக்களை அகற்றுதல், இன்னும் பல நடவடிக்கைகளை எடுத்து இந்தப் பொருளாதாரங்களை அமெரிக்கப் பொருட்கள், மூலதனத்திற்கு திறந்துவிடுதல் என்பதாகும். தன்னுடைய தொழிலாள வர்க்கத்தின் மீதே இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் ஐரோப்பிய முதலாளித்துவம், வெளிப்படையான, முன்கூட்டிய உந்துதல் மூலம் இன்னும் இருக்கும் பணிநீக்கங்களுக்கு எதிரான பாதுகாப்புக்களை கொண்டுவருவது, அமெரிக்க பாணியிலான தொழிலாளர் தரங்களை சுமத்துவது பற்றிய அரசியல் உட்குறிப்புக்களைப் பற்றி கவலை கொண்டுள்ளது.

அமெரிக்க "வடிவமைப்பின்" இரண்டாம் தளம் இன்னும் கடுமையான மூலதன இருப்பு விகிதங்களை வங்கிகள் கொள்ள வேண்டும் என்பதாகும். 2010 இறுதிக்குள் இத்தகைய தரங்கள் பற்றி உடன்பாடு வேண்டும் என்றும் அவை 2012 இறுதிக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் கீத்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதை ஐரோப்பியர்கள் தங்கள் வங்கித் துறைகளை அமெரிக்க வங்கிகளோடு ஒப்பிடுகையில் ஆதாயக் குறைவு செய்யும் முயற்சியெனக் காண்கின்றனர். ஐரோப்பியப் போட்டியாளர்களைவிட பெரிய அமெரிக்க வங்கிகள் அதிக மூலதன இருப்புக்களைக் கொண்டுள்ளன; இதற்குக் காரணம் வோல் ஸ்ட்ரீட்டை அமெரிக்கா மகத்தான முறையில் பிணை எடுப்பு செய்ததுதான்; எனவே அத்தகைய தேவைகளை அது எளிதில் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும்.

பிரெஞ்சு நிதி மந்திரி Christine Lagarde கடந்த வாரம் ஒரு பேட்டியில், அமெரிக்கத் திட்டம் பற்றிக் கூறியதாவது: "உலகில் அனைத்து வங்கிகளும் நெருக்கடிக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக மூலதனத் தேவையைக் கொண்டுள்ளன." ஆனால், "இதன் விளைவாக ஒரு வங்கிக் குழுக்களுக்கு ஆதரவு தரும் வகையில் விதிகளைக் கொண்டுவருவது விந்தையாகிவிடும்; ஏனெனில் பிறருக்கு நலன்கள் இல்லாத வகையில் பொது நிதியத்தின்மூலம் அவை மகத்தான முறையில் மறு கட்டமைப்பைப் பெற்றிருக்கும்" என்று அவர் கூறினார்.

அமெரிக்க "வடிவமைப்பின்" மூன்றாம் கூறுபாடு IMF முடிவுகளில் கூடுதலான செல்வாக்கை எழுச்சி பெற்று வரும் பொருளாதாரங்களுக்கு அளித்தல் ஆகும்.

உலக நிதியமுறையின் மையமாக அதன் வங்கித் துறை இருப்பதால், பிரிட்டனின் பொருளாதாரம் அத்தகைய பங்கை மிகப் பெரிய அளவிற்கு நம்பியிருப்பதால், பொதுவாக அமெரிக்கத் திட்டங்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் அதன் ஐரோப்பிய போட்டி நாடுகளுக்கு எதிராக தடைகளை இணைக்க அது விரும்புகிறது; இதற்கு "trigger mechanism" --தூண்டிவிடும் கருவிகள்-- என்றவிதத்தில் தங்கள் ஏற்றுமதிக் கொள்கைகளை சரிசெய்யத் தவறுதல் மற்றும் தங்கள் நடப்பு இருப்பு உபரிகளைக் குறைத்துக் கொள்ளாத நாடுகள்மீது அபராதங்கள் ஆகியவை வேண்டும் என்று அது கூறுகிறது.

ஜேர்மனியும் பிரான்ஸும் உலகப் பொருளாதார சமசீரற்ற நிலையின் மீது அமெரிக்கா வலியுறுத்துவதை அமெரிக்க சார்புடைய செயற்பட்டியலுக்கு போலிக் காரணம் என்று குறைகூறி, அதற்குப் பதிலாக வங்கிகள் மீது உலகமுறையில் கடுமையான கட்டுப்பாடு வேண்டும் என்று கூறியுள்ளன. தங்கள் வங்கித் துறைகளுக்கு ஏற்றம் கொடுப்பதற்கு வோல் ஸ்ட்ரீட்டின் மதிப்பு, செல்வாக்கு ஆகியவற்றின் சரிவை அவை ஆதாயமாகக் கொள்ளப் பார்க்கின்றன.

இவை தங்களுடைய அமெரிக்க எதிர்ப்பு செயற்பட்டியலை வங்கியாளர்களுக்கு ஊதியங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற பதாகையின்கீழ் தொடர்கின்றன. குறிப்பாக பிரான்ஸின் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி வங்கியாளர்கள் ஊதியத்தில் உண்மையான வரம்புகள் வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். ஆனால் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அவரும் ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலும் தங்களுடைய அத்தகைய கோரிக்கையில் பின்வாங்கி, அமெரிக்கர்களுக்கு ஏற்கத்தக்க வகையில் ஒரு தீர்மானத்தை ஒட்டுப் போட்டவிதத்தில் கொண்டுவந்து, அதையொட்டி எந்தவித தீவிர தடைகளும் வராது என்ற வகையில் உடன்பட்டுள்ளனர்.

Brookings Institution உடைய பொருளாதார வல்லுனர் பிரசாத், இந்த உச்சிமாநாடு "பெரிய அளவிலுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளில் பெரும் பிளவைக் கொண்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள வடிவமைப்பை அமெரிக்கா அதன் மகத்தான நிதியப் பற்றக்குறையில் இருந்து கவனத்தை திருப்பும் தரமற்ற செயல் என்றுதான் தொடர்ந்து காண்கிறது" என்றார்.

IMF ன் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுனர் சைமன் ஜோன்சன், அமெரிக்கத் திட்டத்தை "வெற்று வனப்புரை", கடந்த காலத்தில் சோதிக்கப்பட்டு, தோற்றுவிட்டது என்று கூறியதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மேற்கோளிட்டுள்ளது.

இத்தகைய முரண்பாடுகளுடைய நலன்களின் விளைவு ஒரு சக்தியில்லாத G20 தீர்மானம், 1930 களுக்குப் பின்னர் மிகப் பெரிய பொருளாதாரத்திற்கு வழிவகுத்த முறையான பிரச்சினைகளைப் பற்றி ஆராயாத ஒன்று கொண்டுவரப்படும் என்பதாகும். இது இன்னும் கூடுதலாக பொருளாதரத் தேசிய வெடிப்பு மற்றும் சர்வதேச அழுத்தங்கள் தீவிரமாதல் ஆகியவற்றிற்கான அரங்கைத்தான் அமைக்கும்.

முதலாளித்துவத்தின் வடிவமைப்பிற்குள் பொருளாதார நெருக்கடிக்கு பகுத்தறிவார்ந்த, ஒருங்கிணைந்த, சர்வதே அடிப்படையிலான விடையிறுப்பு ஏதும் இல்லை. தற்போதைய நெருக்கடி முதலாளித்துவ முறையின் நிலைமுறிவையே பிரதிபலிக்கிறது; இது ஒரு தேசிய அரசு முறையுடன் பிணைந்துள்ளது; அது உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முரணிய நிலையில் உள்ளது. இந்த நெருக்கடி முக்கிய சக்திகளிடையே சந்தைகள் கட்டுப்பாடு, குறைவூதிய தொழிலாளர் தொகுப்பின் ஆதாரங்கள் ஆகியவற்றிற்கான போட்டியை ஏற்படுத்தும்; சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட்டால் அன்றி அது தீர்க்கப்பட முடியாது; அது பெருகிய வறுமைக்கும் போருக்கும்தான் வழிவகுக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved