இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), "உலகப் பொருளாதார
நெருக்கடியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமும்" என்ற தலைப்பில் பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
இந்தக் கூட்டம் மத்திய பெருந்தோட்ட பிரதேச நகரான ஹட்டனில் செப்டெம்பர் 27 ஞாயிற்றுக் கிழமை
நடைபெறவுள்ளது.
வறிய மட்டத்திலான சம்பளத்தை திணிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் முதலாளிகளுக்கும்
இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டமை, பெருந்தோட்டத்
தொழிலாளர்கள் மத்தியில் பரந்தளவில் எதிர்ப்பை கிளறிவிட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும்
சங்கங்கள் உட்பட சகல தொழிற்சங்கங்களும், ஒழுக்கமான சம்பளம் மற்றும் நிலைமைகளுக்கான எந்தவொரு சுயாதீன
போராட்டத்தையும் நசுக்குவதற்கே முயற்சிக்கின்றன.
அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், தமது
சொந்த சுயாதீன நடவடிக்கை குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதே நடவடிக்கையை
எடுக்குமாறு ஏனைய பெருந்தோட்டங்களிலும் மற்றும் வேலைத் தளங்களிலும் இருக்கும் தொழிலாளர்களுக்கும் அழைப்பு
விடுக்கின்றனர். எந்தவொரு தொழிற்சங்கத்தின் மீதும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை இல்லாததோடு விவகாரத்தை
தமது சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என அவர்களது வேண்டுகோள் பிரகடனம் செய்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் தீர்க்கமான பல பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்படும். முதலாளிகளுக்கும்
அரசாங்களுக்கும் சேவை செய்யும் பகிரங்கமான தொழிற்துறை பொலிஸ்காரனாக தொழிற் சங்கங்கள் மாறியமைக்கு
வழிவகுத்த காரணிகள் என்ன? பூகோள பொருளாதார வீழ்ச்சி இலங்கை பொருளாதாரத்தில் எவ்வாறு தாக்கத்தை
ஏற்படுத்துகிறது? அரசாங்கத்துக்கும் முதலாளிகளுக்கும் எதிராக மட்டுமன்றி, தமது சொந்த தொழிற்சங்கங்களுக்கு
எதிராகவும் தொழிலாளர்கள் ஒரு அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பது எப்படி?
சோ.ச.க. பேச்சாளர்கள் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தின் படிப்பினைகளைப்
பற்றி கலந்துரையாடுவதோடு ஜனநாயக உரிமைகளையும் வாழ்க்கைத் தரத்தையும் காத்துக்கொள்ள ஒரு ஐக்கியப்பட்ட
அரசியல் போராட்டத்துக்குத் தேவையான சோசலிச முன்நோக்கையும் விளக்குவார்கள். இந்த இன்றியமையாத பிரச்சினைகளை
கலந்துரையாட கூட்டத்துக்கு வருகை தருமாறு நாம் அனைத்து தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு
விடுக்கின்றோம்.
இடம்: தொழிலாளர் பொழில் (கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு) மண்டபம்,
டன்பார் வீதி, ஹட்டன்
நேரம்: செப்டெம்பர் 27, ஞாயிறு, மு.ப. 10.00 மணி
பிரதான உரை: சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ்