World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான் 

Japan: Democrats prepare to slash public spending

ஜப்பான்: ஜனநாயக கட்சியினர் பொதுச்செலவுகளைக் குறைக்க தயாராகிறார்கள்

By Peter Symonds
11 September 2009

Use this version to print | Send feedback

எதிர்பாரா தேர்தல் வெற்றியைக் கைப்பற்றிய பின்னர், அரை நூற்றாண்டிற்கும் மேலாக நடைமுறையில் உடைக்க முடியாமல் இருந்த தாராளவாத ஜனநாயக கட்சியின் (Liberal Democratic Party - LDP) ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஜப்பான் ஜனநாயகக் கட்சி (Democratic Party of Japan - DPJ) அடுத்த வாரம் பதவி ஏற்க உள்ளது.

அந்நாட்டின் அடுத்த நிதித்துறை மந்திரியாக வரக்கூடிய ஹிரோஹிசா புஜி (Hirohisa Fujii), புதிய அரசாங்கத்தின் பொருளாதார திசையை இந்த வாரம் குறிப்பிட்டு காட்டினார். புதனன்று அவருடனான ஒரு நேர்காணலில், அடுத்த நிர்வாகம் நிதிப் பொறுப்புக்களை விரைவாக எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது, அத்துடன் முந்தைய அரசாங்கத்தின் மானிய செலவுகளிலும் ஆழ்ந்த வெட்டுக்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது என்று கூறினார்.

குறிப்பாக அரசாங்க செலவுகளுக்காக ஒதுக்கப்பட்ட 2.9 ட்ரில்லியன் யென் (31 பில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் அரசாங்கத்தின் உசிதப்படி நிர்ணயிக்கப்பட்ட நிதிகளுக்கான 4.3 ட்ரில்லியன் யென் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, "துணை பட்ஜெட்டை மாற்றி அமைப்பது தான் முதல் வேலையாக இருக்க கூடும்அது மிகவும் அவசியமானதும் கூட," என்று புஜி பைனான்சியல் டைம்ஸிற்கு தெரிவித்தார்.

"இது முழுவதும் வீணானது என்று நான் சொல்லவில்லை, ஆனால் அவசரகால பொருளாதார பொதி என்ற பெயரில் இது இந்த அளவிற்கு மதிப்புடையது தானா என்ற கேள்வி எழுகிறது. ஒரு கணிசமான வெட்டுக்கள் தேவைப்படுவதாக தான் நான் உணர்கிறேன்." என்று தெரிவித்தார். இது போன்ற முறைமைகள் வளர்ச்சிக்கு குழிபறிக்குமா என்று கேட்டதற்கு, பொருளாதார சூழ்நிலை "மிகவும் சிக்கலாக" இருப்பதாக அவர் ஒத்துக் கொண்டார்.

77 வயது நிரம்பிய புஜி, கட்சியின் முக்கிய ஆலோசகராகவும், பதவியில் இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலரில் ஒருவராகவும் இருக்கிறார். இரண்டு தசாப்தங்களுக்கு நிதி அமைச்சக அதிகாரியாக இருந்த பின்னர், 1977ல் LDPஐ சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1993ல் தாராளவாத ஜனநாயக கட்சியை விட்டு வெளியேறிய அவர், 1993 ஆகஸ்டு மற்றும் 1994 ஜூன் மாதத்திற்கு இடையில் குறுகிய காலம் மட்டும் ஆட்சியில் இருந்த தாராளவாத ஜனநாயக கட்சி அல்லாத கூட்டணி அரசாங்கங்களில் நிதி மந்திரியாக இருந்தார். மக்களின் அதிருப்தியைப் பெற்றிருந்த நுகர்வு வரியை உயர்த்தும் அதன் முயற்சியால், முதல் கூட்டணி உடைந்தது.

தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 170 சதவீதமாக இருக்கும் (இது ஏனைய எல்லா முக்கிய தொழில்துறை நாடுகளையும் விடவும் மிக உயர்ந்த அளவாகும்) நாட்டின் அதிகளவிலான பொதுக்கடன்களைக் கட்டுப்பாட்டில் வைக்க, ஜனநாயக கட்சி ஜப்பான் மற்றும் சர்வதேச வியாபார வட்டாரங்களின் அழுத்தத்தின் கீழ் இருக்கிறது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க நுகர்வு வரியை 5லிருந்து 10 சதவீதமாக இரட்டிப்பாக்க வேண்டும் என்று ஒரு சக்திவாய்ந்த வியாபார குழுமமான Keidanren ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவைத் தளமாக கொண்ட High Frequency Economicsஐ சேர்ந்த பொருளாதார நிபுணர் Carl Weinberg, Bloomberg.com -க்கு பின்வருமாறு தெரிவித்தார்: "அதிகளவில் வாங்கப்பட்ட கடன்களின் செலவுகள் ஒரு நம்பத்தக்க சாத்தியக்கூறாக இல்லாத ஒரு காலக்கட்டத்தில் முந்தைய அரசாங்கம் செலவிட்டதை விட அதிகமாக செலவிடும் ஓர் அரசாங்கம் வரவிருக்கிறது," என்று கூறிய அவர், "நடப்பு நிதி நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில், ஜப்பானின் பொதுத்துறை நிதிகளின் ஒரு பேரழிவான உடைவு தான் நமது காலத்தில் உலக பொருளாதாரத்தைத் தாக்கவிருக்கும் மிகப் பெரிய விஷயமாக இருக்கும்," என்று அவர் எச்சரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, குழந்தைகள் உதவித்தொகை, சாலை வரிகள் வெட்டு, விவசாயிகளுக்கான உதவி மற்றும் இலவச கல்வி உட்பட DPJ பல வாக்குறுதிகளை அளித்தது. இதற்கு, 2013ஆம் ஆண்டு வாக்கில் ஆண்டுக்கு 16.8 ட்ரில்லியன் யென் தேவைப்படும். அதே நேரத்தில், பொதுக்கடன்களையோ அல்லது நுகர்வு வரியையோ உயர்த்த கூடாது என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர், ஆனால் "கழிவுகளையும்", LDPன் பன்றியிறைச்சி பேரல் திட்டங்களையும் குறைப்பதன் மூலம், அவர்களின் நடவடிக்கைகளுக்கு செலவுகளைக் கொண்டு வர முடியும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

செலவுகளைக் குறைப்பதன் மூலமாக மட்டும் அவர்களின் கொள்கைகளுக்கு தேவையான நிதியை DPJயினால் திரட்டி விட முடியாது என்று நொமூராவின் தலைமை பொருளாதார வல்லுனர் Takehide Kiuchi, இலண்டனை மையமாக கொண்ட டைம்ஸ் பத்திரிகைக்கான பதிலில் குறிப்பிட்டிருந்தார். குறைந்தபட்ச சம்பளங்களை உயர்த்துவதற்கான மற்றும் தொழிலாளர் சட்டங்களை (இவை தான் குறைந்த சம்பளம் மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் பயன்பாட்டைப் பரவலாக்குவதற்கு இட்டு சென்றது) மாற்றுவதற்கான திட்டங்களுடன் அடுத்த அரசாங்கம் முன்நகர்ந்தால், வேலையின்மை அதிகரிக்க கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

புஜியை நிதி மந்திரியாக தொடர்ந்து நிலைக்க வைத்திருப்பது, புதிய அரசாங்கம் பெரிய வியாபாரங்களின் நலன்களைப் பாதுகாக்கும் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது. மிஜூஹோ ஆய்வகத்தின் மூத்த பொருளாதார நிபுணர் Hirotaka Kusaba, வோல்ஸ்ட்ரீட் இதழுக்கு பின்வருமாறு தெரிவித்தார்: "DPJன் நிதி மந்திரி பதவிக்கு புஜி தான் சிறந்த துருப்பு சீட்டாக இருக்கிறார், பங்குச்சந்தைகள் உட்பட எல்லா சந்தைகளும் அவரின் நியமனத்திற்கு சாதகமாகவே அவற்றின் பிரதிபலிப்பைக் காட்டும்" என்று தெரிவித்தார். நிதி அமைச்சகத்தில் புஜியின் அனுபவம், சுமூகமான செலவு வெட்டுக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக கட்சி முன்னாள் தலைவர் Naota Kan, ஏற்கனவே புதிய தேசிய மூலோபாய துறை மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, ஜப்பானின் சக்திவாய்ந்த அரசு அதிகாரத்துவத்தை விட அரசாங்கம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கம் கொண்டது. Kan, சந்தை ஆதரவான மறுகட்டமைப்பிற்கு ஆதரவாளராக அறியப்படுகிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, "இதுபோன்ற பகுத்தறிவற்ற விஷயம் தனியார் துறையில் செய்யப்படுவதில்லை" என்று கூறியதன் மூலம், அமைச்சகங்களின் அனாவசிய செலவுகளைக் குற்றஞ்சாட்டினார்.

Kan மற்றும் புஜியை முக்கிய பதவிகளில் நியமித்திருப்பது, DPJன் பழமைவாத, வணிக ஆதரவிலான பாத்திரத்தையே அடிக்கோடிடுகிறது. 1998ல் உருவாக்கப்பட்ட இந்த கட்சி, முன்னாள் தாராளவாத ஜனநாயகவாதிகள் மற்றும் முன்னாள் சோசலிச கட்சி குழுக்களின் ஸ்திரமற்ற கூட்டுக்கலவையாக இருக்கிறது, ஆனால் முக்கிய தலைமை பதவிகள், கட்சி தலைவர் Yukio Hatoyama மற்றும் முன்னாள் தலைவர் Ichiro Ozawa உட்பட, முன்னாள் LDP பிரபலங்களின் கைகளில் வலுவாக இருக்கிறது. முன்னாள் தலைவர் Ichiro Ozawa தான், தற்போது DPJன் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கீழ்சபையில் பெருமளவிலான பெரும்பான்மை இருந்த போதினும், ஜனநாயக கட்சியினர் ஒரு வலுவான நிலையில் இல்லை. தாராளவாத ஜனநாயக கட்சிக்கு எதிராக தான் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனரே தவிர, DPJ மீதான நன்மதிப்பால் அல்ல என்ற உண்மையைத் தான் சமீபத்திய தேர்தல்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. இந்த தேர்தல் முடிவு குறித்து சுமார் 63 சதவீதத்தினர் மகிழ்ச்சி தெரிவித்திருப்பதாகவும், ஆனால் LDP மீதான அதிருப்தி காரணமாக தான் இந்த முடிவு ஏற்பட்டிருக்கிறது என்று பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்ததாகவும் NHK பொது தொலைக்காட்சியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

Hatoyama அரசாங்கம் அதன் தேர்தல் வாக்குறுதிகளை உடைக்க தொடங்கும் போதும், பொது செலவுகளில் ஆழ்ந்த வெட்டுக்களை அது கொண்டு வரும் போதும், பரவலான அதிருப்தியும், விரோதமும் வளரும். ஜப்பானிய பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் 0.9 சதவீதம் உயர்ந்திருக்கும் நிலையில், முதல் காலாண்டில் 4.0 சதவீதம் மற்றும் 3.8 சதவீதம் முறையே 2009 மற்றும் 2008ன் பாரிய சுருங்குதல்களை தொடர்ந்து இந்த வலுவற்ற வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நாட்டின் முக்கிய ஏற்றுமதி தொழில்துறைகள், இந்த சர்வதேச பின்னடைவால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய பொருளாதார புள்ளிவிபரங்களின்படி, இயந்திரங்களின் ஆர்டர்களில் 9.3 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது, வியாபாரங்கள் ஒரு வெறுமையான எதிர்காலத்திற்குள் சென்று கொண்டிருப்பதால் ஒட்டுமொத்த மூலதன செலவுகளின் வீழ்ச்சிக்கான ஒரு வலுவான அறிகுறியாக இது இருக்கிறது.

சாதாரண வாக்காளர்களுக்கான உதவிகள் குறித்து அதன் அனைத்து தேர்தல் ஆரவாரங்களுக்கு இடையில், பொருளாதார நெருக்கடியின் பாரத்தை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவது தான் அடுத்து வந்திருக்கும் அரசாங்கத்தின் முக்கிய வேலையாக இருக்கும். அரசாங்க வேலைகளையும், சேவைகளையும் குறைப்பது மற்றும் வரிகளை உயர்த்துவது ஆகியவற்றின் மூலமாக மட்டும் தான் பொதுக்கடன்களுக்குள் ஏதாவதொரு கணிசமான பாதையை உருவாக்க முடியும். முக்கியமாக, DPJன் வரி குழுவிற்கு தலைமை வகிக்கும் புஜி, நுகர்வு வரியை உயர்த்துவதன் மூலம் சமூக செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை ஏற்கனவே நடத்த அழைப்புவிடுத்திருந்தார்.

ஜப்பானில் வேலையின்மை விகிதம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு ஜூலையில் 5.7 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டின், குறிப்பாக குறைந்த சம்பள மற்றும் தற்காலிக தொழிலாளர்களின் வேலைநீக்கங்களைத் தான் பிரதிபலிக்கிறது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள், உண்மையான மொத்த வேலையின்மை அளவுகளைக் குறைமதிப்பிடுகின்றன. வேலையில்லாவர்களுக்கு குறைந்தளவில், குறுகிய-கால நலன்கள் மட்டுமே வழங்கப்படுவதால், வறுமை மற்றும் வீடு இழந்தோர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. சுகாதார நலன்கள் மறுக்கப்பட்டதால், சிலர் உயிரையும் விட்டுவிட்டனர். கடந்த மாதம், ஒன்பது யென்னுடன் அல்லது 10 அமெரிக்க சென்டுகளுக்கும் குறைவான தொகையுடன் இறந்து கிடந்த 39 வயது நிரம்பிய ஒருவரின் சம்பவத்தை Agence France Presse வெளியிட்டிருந்தது. அவர் பர்ஸில், "உதவுங்கள்" என்று எழுதி அனுப்பப்படாத ஒரு கடிதம் இருந்தது.

Hatoyama அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்குள் அதன் கொள்கைக்கு இருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்க, அது முன்னாள் சோசலிஸ்ட் கட்சி பிரமுகர்களையும், அவர்களோடு தொடர்புபட்ட தொழிற்சங்கங்களையும் பாரியளவில் சார்ந்து இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, பல நாள் சச்சரவுகளுக்கு பின்னால், சோசலிச ஜனநாயக கட்சி (SDP) மற்றும் புதிய மக்கள் கட்சி (PNP) ஆகிய இரண்டு சிறிய கட்சிகளுடன் DPJ ஒரு கூட்டணி உடன்பாட்டிற்கு ஒத்துக் கொண்டிருக்கிறது. 1994ல் முன்னாள் சோசலிஸ்ட் கட்சி உடன் ஒரு பெரிய கூட்டணிக்குள் நுழைந்த போது அதன் ஆதரவு சரிந்த போது, அதிலிருந்து வெளியேறியவர்களால் 1996ல் சோசலிச ஜனநாயக கட்சி உருவாக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் மேற்சபையில் ஜனநாயக கட்சி அவர்களின் கட்டுப்பாட்டை வைத்திருக்க வேண்டுமானால், அவர்களுக்கு SDP மற்றும் PNPன் ஆதரவு தேவைப்படுகிறது. மேலும் முக்கியமாக, தொழிலாளர்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிராக ஏற்படும் எவ்வித கிளர்ச்சியையும் தடுக்கவும், தணிக்கவும் சமூக ஜனநாயக கட்சியினர் அழைக்கப்படலாம். ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சியாலும் இதே பாத்திரம் தான் ஆற்றப்படும். அது ஆளும் கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லாத போதும், ஒரு கட்டுக்கோப்பான எதிர்கட்சியாக செயல்படுவோம் என்று ஏற்கனவே JCPன் தலைவர் Kazuo Shii வாக்குறுதி அளித்துவிட்டார்.

55ஆண்டு கால LDP ஆட்சியின் முடிவு, ஓர் அரசியல் வீழ்ச்சியைக் குறிக்கிறது, ஆனால் நாட்டின் ஆளும் உயரடுக்கால் காட்டப்படும் திசையில் எவ்வித அடிப்படை மாற்றமும் Hatoyama அரசாங்கத்திற்கு கிடையாது. பைனான்சியல் டைம்ஸூடனான நேர்காணலில் புஜி, "அரசாங்க மாற்றம் என்பது ஒரு புரட்சி கிடையாது." என்று வலியுறுத்தினார். புதிய நிர்வாகம், உழைக்கும் மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் மோதும் போது தான் நிஜமான அரசியல் எழுச்சிகள் நிகழும்.