World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US suspends eastern European missile shield plan கிழக்கு ஐரோப்பிய ஏவுகணை கேடயத் திட்டத்தை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது By Niall Green அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தின் ஒரு பகுதியாக போலந்திலும் செக் குடியரசிலும் இரண்டு தளங்களை நிறுவவிருந்த திட்டங்களை ஜனாதிபதி பாரக் ஒபாமா தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். 2002 ம் ஆண்டில் ஏவுகணைக் கேடய முறையை கிழக்கு ஐரோப்பாவில் விரிவுபடுத்தும் வகையில் போலந்தில் ஒரு பாலிஸ்டிக்-எதிர் ஏவுகணை தளத்தையும் செக் குடியரசில் ராடார் தளத்தையும் நிறுவ இருக்கும் திட்டங்களை புஷ் நிர்வாகம் அறிவித்தது. ஆகஸ்ட் 2008ல் அமெரிக்கா இரு நாடுகளுடனும் --அதிக அமெரிக்க நிதிய ஆதரவு உதவிக்கு ஈடாக-- 2012 அளவில் புதிய வசதிகளை முடிக்கக்கூடிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.ஐரோப்பிய நேட்டோ உறுப்புநாடுகளின் மீது ஈரான் போன்ற "போக்கிரி நாட்டின்" தாக்குதலை எதிர்கொள்ளுவதற்காக என்று கூறி வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முறை நீண்டகாலமாக இருக்கும் அமெரிக்க திட்டமான சோவியத் ஒன்றியத்தின், 1991ல் இருந்து ரஷ்யாவின், அணுசக்தி திறன்களை செயலற்று செய்துவிடக்கூடிய ஏவுகணை கேடயத்தை பயன்படுத்துவது என்று இருந்தது. அமெரிக்க முறை முன்னாள் வார்சோ ஒப்பந்த நாடுகளிடையே கிழக்குப் புற விரிவாக்கத்தை நடத்த இருப்பது பற்றி ரஷ்ய உயரடுக்கு மிகுந்த விரோதத்துடன் கண்டது. இந்த ஏவுகணை கேடயத் திட்டம் தன்னுடைய நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதத்தின் தாக்கும் திறனை அச்சுறுத்தக்கூடிய ஆயுதப் போட்டி, யூரேசியப் பகுதியில் அமெரிக்காவிற்கு சார்பாக அணுசக்தி சமசீர்நிலை பற்றி மேலும் எச்சரிப்பதற்கு செய்யப்படுகிறது என்று மாஸ்கோ சரியாகக் கண்டது. அமெரிக்கா தொடர்ந்து, "ஒரு நிரூபிக்கப்பட்டுள்ள, செலவு சிக்கனத்திறன்" உடைய ஏவுகணைத் திட்டத்தை இருக்கும் தளங்கள் மற்றும் கடலைத் தளமாகக் கொண்ட இடைமறிப்பு கருவிகளைப் பயன்படுத்தித் தொடரும் என்று ஒபாமா கூறியுள்ளார். வியாழனன்று ஒரு நேடித் தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி, "நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை சிறந்த முறையில் சமாளிக்கும் பாதுகாப்பு முறையை கடைபிடிப்பது தேவையாகும்" என்றார்; மேலும் அது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்புநாடுகளின் "ஒரு வலுவான, திறமையான, விரைவான பாதுகாப்புமுறை" என்ற வடிவமைப்பைக் கொள்ளும் என்றார். அமெரிக்காவின் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் இந்த நடவடிக்கை ஐரோப்பாவில் ஒரு ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை வளர்க்கும் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது என்ற பொருளைத் தராது என்றும், 2015ல் இருந்து அவற்றின் பகுதிகளில் உயர்த்தப்பட்ட SM3 ஏவுகணை தடுப்புக்கள் செயல்படுத்தப்படும் என்று வார்சாவிடமும், பிரேக்கிடமும் பேச்சுவார்த்தைகளின்போது பென்டகன் கூறியுள்ளது என்றும் தெரிவித்தார். அமெரிக்கா தொடர்ந்து ஐரோப்பாவில் "தற்போதைய மற்றும் நன்கு நிரூபணம் ஆகியுள்ள ஏவுகணைப் பாதுகாப்பு முறைகளை செயல்படுத்தும்" என்றும் கேட்ஸ் சுட்டிக்காட்டினார்.போலந்து மற்றும் செக் குடியரசு ஆகியவற்றின் தலைவர்களிடம் தான் பேசிவிட்டதாகவும், அவற்றின் பாதுகாப்பிற்கு அமெரிக்காவின் உறுதிப்பாடு தொடர்ந்து இருக்கும் என்று உறுதிமொழி கொடுத்துள்ளதாகவும் ஒபாமா கூறினார். ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டம் பற்றிய கிரெம்ளினின் அச்சம் "முற்றிலும் ஆதாரமற்றது" என்றும் அவர் கூறினார். இதன்பின் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸ் இந்த செயற்பாடு "ரஷ்யாவை பற்றியது அல்ல" என்றும் வலியுறுத்தினார். ஏவுகணைப் பாதுகாப்பு பற்றிய ஒபாமாவின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு விரைவில் குடியரசுக்கட்சி வலதில் இருந்து வந்தது. ஜனாதிபதி புஷ்ஷின் கீழ் ஆயுதக்கட்டுப்பாடு, மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு பிரிவிற்கு உதவிச் செயலாளராக இருந்த ஜோன் போல்டன் இந்த நடவடிக்கை "குழப்பத்திற்கு இடமின்றி மோசமான முடிவு ஆகும்" என்றும் ரஷ்யாவிடம் இருந்து பதிலுக்கு எதுவும் பெறாத நிலையில் அமெரிக்கா ஒரு சலுகையைக் கொடுத்துள்ளது என்றும் கூறினார். பிரதிநிதிகள் மன்றத்தில் குடியரசுக் கட்சியின் இரண்டாம் உயரிடத்தில் இருக்கும் எரிக் கான்டர் தன்னுடைய கட்சி "இத்த தவறான கருத்துடைய கொள்கையை அகற்றப் பாடுபடும்" என்றார். "ஐரோப்பாவில் நம்முடைய ஏவுகணை பாதுகாப்பு முயற்சியை கைவிடுதல் என்பது எமது தூதரக உறவுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் நம்முடைய தேசியப் பாதுகாப்பையும் வலுவிழக்கச் செய்கிறது. நம்முடைய நட்பு நாடுகள், குறிப்பாக போலந்து மற்றும் செக் குடியரசு ஆகியவை சிறந்த முறையில் கவனிக்கப்பட வேண்டும்" என்று கான்டர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். கிரெம்ளின் கோரிக்கைகளுக்கு இணங்கி தேசிய பாதுகாப்பை சமரசத்திற்கு நிர்வாகம் உட்படுத்திவிட்டது என்று கூறப்படும் குறைகூறல்களை திசைதிருப்பும் வகையில், ஏவுகணைப் பாதுகாப்பு முறை பற்றிய பரிசீலனை இராணுவத்தால் நடத்தப்பட்டது என்றும், ஈரானிய ஏவுகணைத்திட்டம் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலை கொடுக்காது ஆனால் ஐரோப்பாவை அச்சுறுத்தக்கூடும் என்ற புதிய உளவுத்துறை தகவலை அடிப்படையாக கொண்டது என்றும், இதையொட்டி ஒரு மாற்றீட்டு பாதுகாப்பு ஏவுகணை முறை தேவைப்படும் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது. புஷ் காலத்தில் புகுத்தப்பட்ட பாதுகாப்புக் கேடய முறை --"நட்சத்திரப் போர்களின் மகன்" என்று கூறப்பட்டது-- ரேகன் சகாப்தக் காலத் திட்டமான விண்வெளியைத் தளமாகக் கொண்ட பாலிஸ்டிக் எதிர்ப்பு ஆயுதங்களை கொள்ளுவது என்பு பல ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட முடியாது, அதற்கான இருப்புக்களை இன்னும் மரபார்ந்த முறைகளை வளர்ப்பதற்கு செலவழிக்கலாம் என்ற உண்மையான அக்கறைகள் இராணுவத்திற்குள் உள்ளன. அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்து ஒரு புதிய பாலிஸ்டிக்-எதிர்ப்பு முறையை வளர்க்க ஒத்துழைத்து வருகிறது; பென்டகன் இன்னும் கூடுதலாக அதன் Aegis கடற்படை ஏவுகணை எதிர்ப்புமுறையை பயன்படுத்த முற்படலாம்; இது ஏற்கனவே ஜப்பானில் நிறுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.இராணுவப் பிரச்சினைகளை தவிர, ஒபாமா நிர்வாகம் புவிசார் அரசியல் நடவடிக்கையை செக், போலந்து தளங்களில் செய்து கொண்டிருக்கிறது. புஷ் காலத்தில் இருந்த விரோதப் போக்கை "மறு சீரமைக்கும் முயற்சியாக" இந்த ஆண்டு மாஸ்கோவுடன் முன்னேற்றமான உறவுகளுக்கு அமெரிக்கா முற்பட்டு வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் மற்றும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் ஆகியோருடன் பேச்சுக்களின்போது ஒபாமா கிழக்கு ஐரோப்பாவில் திட்டமிடப்படும் ஏவுகணைக் கேடயம் பற்றிய மாஸ்கோவின் கவலைகளை உணர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு கிரெம்ளின் ஆதாரப்படி, அமெரிக்க ஜனாதிபதி உக்ரைன், ஜோர்ஜியா என்னும் முன்னாள் சோவியத் குடியரசுகளுடன் ரஷ்யா கொண்டுள்ள உறவுகளின் "பிரத்தியேக" தன்மைகள் பற்றியும் ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது; அவற்றில் வாஷிங்டன் மேலைச் சார்பு உடைய "வண்ணப் புரட்சிகளை" நடத்தியிருந்தது. இக்குறைந்த சலுகைகள்கூட ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு கிரெம்ளின் கொடுத்துவரும் ஒத்துழைப்பிற்கு ஈடாக கொடுக்கப்பட்டுள்ளன. ஜூலை மாதம் உச்சிமாநாட்டிற்காக ஒபாமா மாஸ்கோ வருவதற்கு முன்பு மெட்வெடேவ் அமெரிக்க விமானப் படைகள் ரஷ்ய வான்வெளியில் ஆப்கானிஸ்தானிற்கு செல்லும்போது பறக்கலாம் என்ற அனுமதியை அறிவித்திருந்தார். ஈரான்மீது புதிய சர்வதேச பொருளாதார தடுப்புக்களை சுமத்துவதற்கும் மாஸ்கோவுடனான ஒத்துழைப்பை வாஷிங்டன் எதிர்பார்க்கிறது; இது யுரேனிய செறிவூட்டச் சோதனையை தெஹ்ரான் நிறுத்த மறுப்பதற்கான தண்டனை என்று கூறப்படுகின்றது; இஸ்லாமியக் குடியரசு சிவிலிய விசைகளுக்காகத்தான் அச்சோதனைகள் நடைபெறுகின்றன என்று கூறுகிறது. ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகள் தெஹ்ரானில் இருக்கும் ஆட்சியை இன்னும் அமெரிக்க நலன்களுக்கு ஏற்ற விதத்தில் ஒத்துழைக்கக்கூடிய ஆட்சியைக் கொண்டுவருவதில் முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது; இதற்காக அது தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் மிர் ஹொசைன் மெளசவியின் பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது. போலந்து மற்றும் செக் தளங்கள் பற்றிய தீர்மானத்தை ஒத்திப்போடுவது ஐரோப்பாவில் உள்ள வாஷிங்டனின் நேட்டோ நட்பு நாடுகளையும், குறிப்பாக ஜேர்மனியை திருப்திப்படுத்தும்; அந்நாடுகள் அமெரிக்கத தலைமையிலான கூட்டிற்கும் புஷ் நிர்வாகத்தின்கீழ் ரஷ்யாவிற்கும் இடையே உறவுகள் தீவிரமாக சீர்குலைந்தது பற்றி எதிர்த்தன. மாஸ்கோவுடன் குறிப்பாக அதுவும் விசைத்துறையில், நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ள ஜேர்மனி, அதன் இயற்கை எரிவாயுத் தேவைகளுக்கு ரஷ்யாவை அதிகம் நம்பியுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள கிழக்கு ஐரோப்பிய தளங்கள் நிறுத்தி வைக்கப்படுதல் என்பது அமெரிக்க மூலோபாயத்தில் பெரும் மாறுதலைப் பிரதிபலிப்பதற்கு பதிலாக ஒபாமா நிர்வாகம் புஷ் ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட அதே அடிப்படை மூலோபாய இலக்குகளை அடைவதற்கான தந்திரோபாய மாற்றத்தைத்தான் முயற்சிக்கிறது; அதாவது உலகின் மிகப் பெரிய எண்ணெய், எரிவாயு இருப்புக்களின் உறைவிடமான மத்திய கிழக்கு, மத்திய ஆசியா ஆகியவற்றில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுதல் ஆகும். BBC உலக நிகழ்வுகள் தொகுக்கும் நிருபர் போல் ரேனால்ட்ஸ் விவரித்துள்ள ஜனாதிபதி புஷ் கையாண்டதைவிட "அதிக எச்சரிக்கையுடனும் வளைந்து கொடுக்கும் தன்மையும் உடைய வெளியுறவுக் கொள்கையைத்தான்" ஒபாமா ஏற்றுள்ளார் என்பது, வாஷிங்டனின் இராணுவ, பாதுகாப்புக் கருவிகளில் பெரும்பான்மை ஒப்புக் கொண்டுள்ள கருத்தான முந்தைய நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்பாடு பேரழிவான விளைவுகளைத் தந்தது என்பதின் விளைவுதான்.ஆப்கானிஸ்தானில் போரை வெல்வதற்கும் அதே நேரத்தில் ஈரான் ஆக்கிரமிப்பைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கும் வாஷிங்டன் உலகின் மற்ற பகுதிகளில் அதன் ஆக்கிரோஷத்தை தற்காலிகமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவிற்கு வந்துள்ளது; அதே நேரத்தில் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் வட்டார சக்திகளான ரஷ்யாவுடனும் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறது. அமெரிக்க வெளியுறவு கொள்கையில் இத்தகைய மாற்றம் இந்த ஆண்டு முன்னதாக அமெரிக்க ஏகாதிபத்தையத்தை தொடர்ந்து எப்பொழுதும் வலியுறுத்திவரும் காப்பாளர்களில் ஒருவரான முன்னாள் கார்ட்டர் சகாப்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் இப்பொழுது ஒபாமா ஜனாதிபதிக்காலத்தில் முக்கிய ஆலோசகராகவும் இருக்கும் Zbigniew Brzezinki யால் வெளிப்படுத்தப்பட்டது.சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் 1979ல் ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீனுக்கு --இதுதான் தாலிபன், அல் குவைடாவிற்கு முன்னோடி அமைப்பு-- ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கியவர்களில் ஒருவரான Brzezinksi ஸ்விட்சர்லாந்தில் ஜெனிவாவில் இராணுவ, வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புடையவர்களுக்கு மாநாடு ஒன்றில் ஒரு உரை நிகழ்த்தினார். தன்னுடைய உரையில் ஆப்கானிஸ்தான் பற்றி ஐ.நா.மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்னும் பிரிட்டிஷ், ஜேர்மனிய கோரிக்கைகளுக்கு Brzesinksi ஆதரவு கொடுத்தார்; அதன்படி ஐரோப்பிய சக்திகள் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு தாங்கள் கொடுக்கும் ஒத்துழைப்பிற்கு ஈடாக தங்களுக்கு கூடுதலான பங்கை மத்திய ஆசியாவைத் துண்டாடுவதில் வேண்டும் என்று கேட்டுள்ளன.கிட்டத்தட்ட 100,000 அமெரிக்க மற்றும் நேட்டோத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்தும், ஆக்கிரமிப்பானது பெருகிய முறையில் மக்கள் விரோதப் போக்கை ஒட்டி தோல்வியை எதிர்கொள்ளுகிறது என்றும், மக்கள் இப்படைகளை வரவேற்பில்லாத படையெடுப்பாளர்கள் என்று 1980களில் சோவியத்திற்கு நடந்தது போல் நினைக்கின்றனர் என்றும் Brzezinski எச்சரித்தார்.ஆப்கானிஸ்தானில் வாஷிங்டனுடைய கொள்கை அந்நாட்டை மற்ற நாடுகளும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது உள்பட, மூலோபாய மறு ஆய்வில் அதிக தேவையுள்ளதாக இருக்கக்கூடிய" வெளியுறவுக் கொள்கை பிரச்சினையாக இருக்கக்கூடும் என்று அவர் கூறினார். அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தில் இஃரக்கும் அதன் ஐரோப்பிய நட்புநாடுகளின் ஒத்துழைப்பை பெற முடியவில்லை என்றால், "அது நேட்டோவையே முடிவிற்குக் கொண்டுவரக்கூடிய தன்மையைப் பெற்றுவிடும்" என்று Brezezinksi கூறினார்.இந்தக் கருத்துக்கள் ஆகஸ்ட் 20ம் தேதி நியூ யோர்க் டைம்ஸில் தலையங்கத்திற்கு எதிர்ப்பக்க கட்டுரை ஒன்றில் Brzezinski எழுதிய கட்டுரையில் எதிரொலிக்கின்றன; அதில் அவர் "உலக சக்தியின் பகிர்வு --அதாவது ஒப்புமையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவு மற்றும் ஐரோப்பா, ஆசியாவில் பெரிய சக்திகளின் எழுச்சி-- நேட்டோவிற்கு ஒரு புதிய மூலோபாயத்தேவையை கொடுத்துள்ளது என்றார். குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் நேட்டோ பங்கு புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் ரஷ்யா, சீனாவுடன் அளவளாவும்போது இது கருத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும் Brzezinski கூறினார். |