World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
What is the AFL-CIO? AFL-CIO Barry Grey AFL-CIO இந்த வாரம் அதன் மாநாட்டில் அவ்வமைப்பில் 14 ஆண்டுகள் தலைவராக இருந்து ஓய்வு பெற இருக்கும் ஜோன் ஸ்வீனிக்கு பதிலாக ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுத்தது. இந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சிதைந்த தன்மையின் ஒரு அளவீடாக வெளிப்படுவது இந்தத் தலைமை மாற்றம் மக்களுடைய நனவில் மிகக்குறைவாக பதிந்திருப்பதாகும்; அதுவும் தொழிலாளர்களிடையே ஆகும். AFL-CIO இன் உறுப்பினர்களாக இருக்கும் சிறுபான்மை எண்ணிக்கைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.மற்றொன்று ஸ்வீனிக்கு அடுத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பற்றியது--ரிச்சர்ட் ட்ரும்கா. முந்தையவர் போலவே ட்ரும்காவும் அமெரிக்க தொழிற்சங்கங்க கருவியிலுள்ள சிறு முதலாளிகள் மற்றும் பெருவணிக முதலாளிகளை உருவகப்படுத்துபவர் ஆவார். இவருக்கு புகழைத் தேடித் தந்தது இவர் 1982-1995 வரை ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து, சுரங்கத் தொழிலாளர்களின் பெரும் தோல்விகளுக்கு, திரும்ப அளித்தல், சுரங்க உரிமையாளர்களுக்கு சலுகைகள் கொடுத்தல், அமெரிக்கத் தொழிற்சங்கங்களிலேயே மிகப் போர்க்குண அமைப்புக்களுள் ஒன்றாக இருந்ததை கிட்டத்தட்ட தகர்த்தது ஆகியவற்றுக்கு தலைமைதாங்கிய வேளையாகும். இவர் அதை விட்டு நீங்கி ஸ்வீனியின் உதவியாளராக வேலையை எடுத்துக்கொண்டபோது, ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்களின் தீவிர உறுப்பினர் எண்ணிக்கை அவர் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் இருந்த உறுப்பினர் எண்ணிக்கையில் பாதியாகி விட்டது. இத்தகைய நபர் உயர்ந்த பதவிக்கு உயர்த்தப்படமுடியும் என்பதே AFL-CIO வின் சிதைந்த தன்மைக்கு சான்று ஆகிறது. மற்றொரு வியத்தகு உண்மை இந்த அமைப்பின் 55 ஆண்டுகால வரலாற்றில் ட்ரும்கா நான்காவது தலைவர்தான். தலைமை மாற்றம் என்பது எத்தகைய அபூர்வம் என்று இருககும் நிலையில், AFL-CIO வரலாறு பற்றி ஒரு கண்ணோட்டத்தைக் காண இது உரிய நேரம் ஆகும். 1955 ம் ஆண்டு AFL-CIO முன்பு போட்டி தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களாக இருந்த அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் தொழில்துறை அமைப்பு பேரவை ஆகியவற்றின் இணைப்பின் மூலம் அமைக்கப்பட்டது. இந்த இணைப்பு கம்யூனிச எதிர்ப்பு, சிவப்பைத் தாக்குதல், மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குளிர் யுத்த செயல்பட்டியலுக்கு வெளிப்படை ஆதரவு என்ற அடிப்படை மீதான தொழிலாளர் அதிகாரத்துவத்தின் பல்வேறு கன்னைகள் ஒன்று சேர்ந்து வருதலைப் பிரதிநிதித்துவம் செய்தது.AFL தலைவர் ஜோர்ஜ் மீனி, இணைந்த தொழிலாளர் கூட்டமைப்பின் முதல் தலைவரானார். பழைய தந்திரம் மிகுந்த தொழிற்சங்கவாதத்தின் பிற்போக்கு வாரிசுத்தன்மையை அவர் உருவகப்படுத்தியிருந்தார். 1979ல் தலைவர் பதவியை முடித்துக் கொள்ளுவதற்கு சற்று முன்னதாக அவர் "என்னுடைய வாழ்வில் ஒருமுறைகூட மறியலில் ஈடுபட்டதில்லை" என்று பீற்றிக் கொண்டார்.உள்நாட்டில் வர்க்க ஒத்துழைப்புடன் நாட்டு வெறியை இணைத்ததுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கைக்கும் மீனி ஆதரவு கொடுத்தார். AFL-CIO வின் வெளியுறவுத் துறை CIA மற்றும் அரசுத்துறையுடன் ஒத்துழைத்து சோசலிச விரோத, அமெரிக்க ஆதரவு தொழிற்சங்கங்களை உலகம் நெடுகிலும் நிறுவியதுடன், அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரங்களை இலத்தின் அமெரிக்கா, ஆசியா இன்னும் பல இடங்களிலும் முட்டுக் கொடுத்து நிறுத்தியது. வியட்நாம் போருக்கு மீனி பெரும் ஆதரவைக் கொடுத்திருந்தார். AFL-CIO நிறுவப்படுவதற்கு இரண்டாம் பெரும் துணையாக இருந்தவர் வால்டர் ரூத்தர் ஆவார்; இவர் CIO உடன் பிணைந்திருந்த ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். முந்தைய போர்க்குணம், இடதுசாரித்தனம் இவற்றை நீண்ட காலம் முன்னரே கைவிட்டு, ஜனநாயகக் கட்சி கருத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டு, தொழில்துறையில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தை நிராகரித்த அல்லது முதலாளித்துவ அமைப்பில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தத்தையும் மறுத்துவிட்ட நிலையைத்தான் இவர் உருவகப்படுத்தி நின்றார்.CIO வில் சோசலிஸ்ட்டுக்கள் மற்றும் இடது சாரிப் போராளிகளை அகற்றிவிடும் செயலுக்கு ரூத்தர் தலைமை தாங்கினார்; இது AFL உடன் ஒன்றுபடுவதற்கு ஒரு முன்னிபந்தனையாக இருந்தது. இந்த சூனிய வேட்டையின் நோக்கம் தொழிலாளர் இயக்கத்தில் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பை அடக்குவதும் சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரிவாக்க செயற்பட்டியலுக்கு ஆதரவு தருவதும்தான்.இரண்டாம் உலகப்போரை தொடர்ந்த ஆண்டுகளில் அமெரிக்காவின் உலகப் பொருளாதார மேலாதிக்கம் மற்றும் போருக்குப் பிந்தைய பொருளாதார செழுமையை அடித்தளமாகக் கொண்டு AFL-CIO--ஒரு மிகக் குறைந்த காலத்திற்கு--தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஊதியங்களிலும் நலன்களிலும் ஆதாயங்களில் முன்னேற்றத்தைத் தேடித் தரமுடிந்தது. இந்த ஆதாயங்களை பெறுவதில் மிக முக்கிய காரணி அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமாகும்; அது அரசியலில் ஜனநாயகக் கட்சியுடனான தொழிற்சங்கத்தின் உடன்பாட்டின் மூலம் ஆளும் வர்க்கத்திற்கு AFL-CIO ஆல் கீழ்ப்படுத்தப்பட்டிருந்திருந்தாலும், தொடர்ந்து உயர்ந்த போர்க்குணத்தைக் கொண்டிருந்தது. ஆனால் AFL-CIO நிறுவப்பட்ட சில ஆண்டுகளுக்குள், தானியங்கி முறை வளர்ச்சி மற்றும் இதர உழைப்பைக் குறைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியும் இவ்வமைப்பின் சரிவின் ஆரம்பங்களை அடையாளம் காட்டின. தொழில்துறையின் தனியார் உடைமை, இலாப முறை ஆகியவற்றின் பாதுகாப்பிற்கு முற்றிலும் இணைந்துவிட்ட வகையில், தொழிலாளர் கூட்டமைப்பபு இத்தகைய விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ற விடையிறுப்பைக் கொண்டிருக்கவில்லை. போருக்குப் பிந்தைய செழுமை பிரிக்கப்பட்டதும், அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார மேலாதிக்கத்தில் ஏற்பட்ட அரிப்பும் AFL-CIO வை நெருக்கடியில் ஆழ்த்தின; இதில் இருந்து அது மீளவே இல்லை. 1970களின் தொடக்கத்தில் இருந்த ஒரு ஆழ்ந்த மந்த நிலை "தேக்க வீக்கம்" என்று அழைக்கப்பட்டதால் தொடர்ந்தது; இதையொட்டி சந்தையில் அமெரிக்க தொழில்துறையின் கட்டுபாட்டிற்குள் இருந்த பங்குகள் அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் பெரும் சரிவைக் கண்டன. மரணத்தின் நுழைவாயிலில் இருந்த மீனி 1979ல் ஓய்வு பெற்றார்; அவருக்குப் பின், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் AFL ல் ஆராய்ச்சித் துறையில் பணியைத் தொடங்கிய லேன் கிர்க்லாண்ட், பதவிக்கு வந்தார். தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் கிர்க்லாந்து எவ்விதத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. அவருடைய குவிப்பு சர்வதேச அளவில் AFL-CIO உடைய எதிர்ப்புரட்சி நடவடிக்கைளில்தான் இருந்தன. கிர்க்லாண்ட் 1995 வரை அமைப்பிற்குத் தலைவராக இருந்தார்; இதில் முக்கிய தசாப்தமான 1980 களும் அடங்கும். அப்பொழுது AFL-CIO ஒரே முனைப்புடன் றேகன் மற்றும் மூத்த புஷ் நிர்வாகங்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை சிதைப்பதிலும் அடக்குவதிலும்தான் செயல்பட்டிருந்தது. இதற்கான நிலைப்பாடு பாட்கோ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் 1981ல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது அவர்களை AFL-CIO காட்டிக் கொடுத்ததில் ஆரம்பித்தது. றேகன் 11,300 வேலைநிறுத்த கட்டுப்பாட்டு அதிகாரிகளையும் வேலையை விட்டு நீக்கி கரும்பட்டியலில் இட்டு, தொழிற்சங்கத்தின் உரிமையையும் பறித்தார். இவ்வாறு அவர் செய்வதற்கு கிர்க்லாண்ட்டும் AFL-CIO வின் மற்ற தலைமையும் அனுமதித்தன; அவர்கள் பாட்கோ வேலைநிறுத்தம் செய்தவர்களை தனிமைப்படுத்தி தீவிர ஒற்றுமை நடவடிக்கைள் ஏதும் வராமல் தடுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து பெருநிறுவனங்களின் தொழிற்சங்க உடைப்புக்கள், வேலைநிறுத்த முறிப்புக்கள் AFL-CIO காட்டிக் கொடுப்புக்களால் உதவப்பெற்று, உந்தப் பெற்று, மூன்று தாசப்தங்களாக பெற்ற சலுகைகள் அனைத்தையும் திரும்பக் கொடுத்தல் இன்று வரை நடைபெற்றுவருகிறது; இப்பொழுது ஒபாமா நிர்வாகத்தின் கார்த் தொழிலாளர்கள் மீதான தாக்குதலில் அது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 1980களில் போர்க்குணம்மிக்க கடுமையான போராட்டங்களின் தோல்விகள் அனைத்தும் தொழிலாள வர்க்க அதிகாரத்துவம் கடந்த காலத்தின் வர்க்கப் போராட்ட மரபுகளில் எஞ்சியிருந்தவை அனைத்தையும் அழித்து, ஒரு பெருநிறுன வகையிலான தொழிற்சங்க-நிர்வாக ஒத்துழைப்பை அனைத்துத்தர தொழிற்சங்க அமைப்பிலும் செயல்படுத்த வசதியைக் கொடுத்தன. இவ்விதத்தில் அது செயல்பட்டுவந்ததில் பாதிக்கும் மேலான காலம் AFL-CIO ஊதியங்களை, நலன்களை குறைத்தல், வேலைகளை அகற்றுதல், அதன் உறுப்பினர்கள் சுரண்டப்படுவதை தீவிரப்படுத்ததுல் இவற்றில்தான் ஈடுபட்டு வந்துள்ளது. ஒரு தலைமுறை தொழிலாளர்களும் அவர்களின் முழு பணி வாழ்க்கையையும் எந்த வேலைநிறுத்த அனுபவமும் இன்றி கழித்துள்ளனர்--அல்லது வேலைநிறுத்தங்களில் தோல்வியைத்தான் அடைந்துள்ளனர். இந்த அப்பட்டமான உண்மை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மத்தியதர வர்க்க "இடதிற்கு" வக்காலத்து வாங்குபவர்களால் புறக்கணிக்கப்படுகிறது. 1990 களின் ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி அமைப்பான வேர்க்கர்ஸ் லீக் இப்படிக் குவிக்கப்பட்ட காட்டிக்கொடுப்புக்கள், குறிப்பாக முந்தைய தசாப்தங்களுடையவை, மகத்தான தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கைச் சரிவு மற்றும் வேலைநிறுத்த நடவடிக்கையை அடக்குதல், பெருநிறுவனத் தன்மையை தழுவுதல், தொழிற்சங்க அதிகார அமைப்பை பெருநிறுவன நிர்வாகத்தின் கட்டமைப்புடன் இணைத்தல் ஆகியவை, நீடித்த சீரழிவு நிகழ்வுப்போக்கின் முழுமையைக் குறிக்கிறது என்ற முடிவிற்கு வந்தது. AFL-CIO மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புக்களை தொழிலாளர்களுடைய அமைப்புக்கள் என்று இனி கருதுவதற்கு இல்லை; கீழிருக்கும் தொழிற்சங்க உறுப்பினர்கள் கொடுக்கும் அழுத்தத்தால், புரட்சிகரமாக்கப்படல் என்பது ஒருபுறம் இருக்க, அவை சீர்திருத்தப்படக் கூட முடியாதவையாகும்.இந்தப் பகுப்பாய்வு பின்னர் வந்த நிகழ்வுகள் மூலம் முற்றிலும் சரி என்று ஆயின. 1995ல் ஜோன் ஸ்வீனி கிர்க்லாண்டிற்கு பதிலாக வந்தார்; தாராளவாத செய்தி ஊடகம், மத்தியதர வர்க்க "இடது" இவை பெரும் ஆர்வத்துடன் வரவேற்றன. அமைப்பின் அடிப்படை அரசியல் சார்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அவர் AFL-CIO வை புதுப்பித்து அதை ஒரு புதிய முன்னேற்ற வளர்ச்சிக் காலத்திற்கு வழிநடத்துவார் என்று கூறப்பட்டது. உண்மையில் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்ததே. 2005ம் ஆண்டில் பல முக்கிய தொழிற்சங்கங்கள், ஸ்வீனியின் Service Employees Inernational Union தலைமையில் AFL-CIO விடம் இருந்து பிளவுற்று "வெற்றிக்கு மாறுதல்" என்ற கூட்டணியை அமைத்தன. AFL-CIO போன்றே Change to Win தொழிற்சங்கங்களும் ஊதிய, நலன் சலுகைகள் பற்றி பேச்சுவார்த்தைகளைத் தொடர்கின்றன; அவற்றின் முயற்சிகளை வர்க்கப் போராட்டங்ளை அடக்குவதில்தான் குவிப்புக் காட்டுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் Change to Win பல சர்வதேசப் பிளவுகள் மற்றும் அதிகார வரம்பு பூசல்களில் உருக்குலைந்து கிடக்கிறது. ஸ்வீனி அமெரிக்காவில் தனியார் துறை தொழிற்சங்கமயமாக்கல் விகிதம் 1900த்தில் இருந்து மிகக்குறைவாக 7.6 என்ற சதவிகிதம் இருக்கையில் வெளியேறுகிறார். AFL-CIO உடைய மடிவு ஒரு பரந்த உலகளாவிய நிகழ்வின் பகுதி ஆகும். உலகெங்கிலும், தொழிற்சங்கங்கள் இதேபோன்ற இழிசரிவைத்தான் அடைந்துள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக நடந்துவரும் உற்பத்தி பூகோளமயமாக்கல் ஒரு தேசிய முன்னோக்கு உடைய அனைத்து தொழிலாளர் அமைப்புக்களுக்கும் சாவுமணி அடித்துவிட்டது. ஆனால் அமெரிக்கத் தொழிற்சங்கங்கள், தங்கள் வெறித்தனமான சோசலிச எதிர்ப்பு மற்றும் உலகின் மிகுந்த சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய அதிகாரத்துடன் அடையாளம் கண்டுள்ள நிலையில், இப்போக்குகளை மிகுந்த நயமற்ற வகையில் வெளிப்படுத்தியுள்ளன--இது வர்க்க நனவைச் சிறிதும் வெளிப்படுத்தாத திரு ட்ரும்கா போன்ற அவற்றின் முக்கிய பிரதிநிதிகளில் பிரதிபலித்துக் காட்டுகிறது.பெரு மந்த நிலைக்குப் பின்னரான ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி ஒரு புதிய வர்க்கப் போராட்ட காலத்திற்கான சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறது. அமெரிக்க தொழிலாள வர்க்கம், AFL-CIO என்ற சடலத்தில் இருந்து தன்னை பிரித்து, விடுவித்துக் கொண்டு தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட, பழைய தொழிற்சங்க கருவிகளுக்கு முற்றிலும் எதிரிடையான, அவற்றிலிருந்து சுயாதீனமான புதிய அமைப்புக்களைக் கட்டமைக்க வேண்டும். இத்தகைய புதிய அமைப்புக்களை கட்டமைத்தல் ஒரு புதிய அரசியல் மூலோபாயத்துடன் கட்டாயம் பிணைந்துள்ளது-- அது பெருவணிக கட்சிகளுடன் முறித்துக் கொள்ளுதல், மற்றும் தொழிலாளர் ஆட்சியதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கு போராடக்கூடிய வெகுஜன தொழிலாள வர்க்க கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியமைப்பதாகும். |