World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The global jobs crisis

உலக வேலைகள் நெருக்கடி

Tom Eley
18 September 2009

Use this version to print | Send feedback

இந்த வாரம் வெளிவந்துள்ள வேலையின்மை, வறுமை, பணி பற்றிய செய்தித் தகவல்கள், நீண்ட கால உயர் வேலையின்மை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வறுமை ஆகியவற்றால் பண்பிட்டுக்காட்டப்படும் சமூக உறவுகளை அடிப்படையில் மறுகட்டமைப்பதை நிறைவேற்ற பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடி பற்றி விளக்கிக்க காட்டியுள்ளது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (OECD, Organisation of Economic Cooperation and Development) ஆய்வு ஒன்று புதனன்று வெளிவந்தது, 2010 இறுதிக்குள் 10 மில்லியன் வேலைகள் உறுப்பு நாடுகளில் (European Union member state) இழக்கப்படும் என்றும் 2007 இறுதியில் தொடங்கிய பொருளாதார நெருக்கடியில் இருந்து தொழில்துறையில் முன்னேறியுள்ள முப்பது உறுப்பு நாடுகளில் வேலைகள் அழிப்பு 25 மில்லியனை எட்டியுள்ளது என்றும் கூறுகிறது.

OECD வேலையின்மை விகிதம் ஜூன் மாதம் 8.3 சதவிகிதம் ஆனது, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான மிக அதிக நிலையாக உயர்ந்துள்ளது; 2007 முடிவில் இருந்தும் இது கடுமையான அதிகரிப்பாகும்; அப்பொழுது வேலையின்மை 5.6 விகிதம் என்று இருந்தது.

உறுப்பு நாடுகளுக்குள் ஸ்பெயினில்தான் மிக அதிக வேலையின்மை விகிதம் 18.1 சதவிகிதமாக உள்ளது; இத்தோடு வீடுகள் குமிழி வெடிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் இரு நாடுகளான --அயர்லாந்து, அமெரிக்காவில் இந்த ஆண்டு வேலையின்மை தீவிரமாக அதிகரித்துள்ளது. 2007 ஆரம்பத்தில் இருந்து ஸ்பெயின், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வேலையின்மை விகிதங்கள் முறையே 9.7 சதவிகிதம், 7.8 சதவிகிதம் மற்றும் 4.5 சதவிகிதம் என்று அதிகமாகியுள்ளன.

அமெரிக்காவில் உத்தியோகபூர்வ வேலையின்மை 9.7 சதவிகிதம் என்று உள்ளது; இது அடுத்த ஆண்டு 10 சதவிகிதத்தை கடக்கும் என்று OBCD கணித்துள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடாவில் வேலையின்மை அளவுகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் விரைவாக அதிகரித்து 11.8 சதவிகிதம், 11.3 சதவிகிதம், 10.5 சதவிகிதம் மற்றும் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் என்று முறையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

OECD அறிக்கை இளைஞர்களிடையே உயர்ந்த அளவிலான வேலையின்மை என்பது குறிப்பிடத்தக்க வகையில் தீவிரப் பிரச்சினை என்று சுட்டிக்காட்டியுள்ளது. OECD அடுத்த ஆண்டு 15-24 வயது வரையிலுள்ள தொழிலாளர்களுக்கு ஸ்பெயினில் வேலையின்மை கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகமாகும், இத்தாலியிலும் பிரான்சிலும் கிட்டத்தட்ட 25 சதவிகிதம், துருக்கியில் 23 சதவிகிதம் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 18 சதவிகிதம் என இருக்கும் என்று கணித்துள்ளது.

இளந் தொழிலளர்களிடையே வறுமை நோக்கிய போக்கு வெள்ளியன்று சமீபத்திய மக்கள் கணக்கெடுப்பை பகுப்பாய்வு செய்த USA Today TM வந்துள்ள அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இளைய மற்றும் மத்திய வயதுடைய தொழிலாளர்களின் வருமானங்கள் "2000த்தில் உச்சியில் இருந்து சரிந்துவிட்டன" என்று முடிவுரையாகக் கூறுகிறது.

"54 வயது அல்லது அதற்குட்டபட்ட இளைஞர்கள் இந்த மந்த நிலையில் முன்னோடியில்லாத வகையில் நிதிய முறையில் சரிவுற்றுள்ளனர்" என்று கட்டுரை கூறுகிறது. "வீட்டு வருமானம் மக்களுக்கு அதன் உச்சநிலையில் சம்பாதித்த ஆண்டுகளில் --45ல் இருந்து 54 வயதுவரை உள்ளவர்களுக்கு பணவீக்கத்திற்கு ஏற்ப சரி செய்யப்பட்ட பின்னர்-- $7,700 முதல் $64,349 வரை என்று 2000 முதல் 2008 முடிய சரிந்தது." 1955க்கு முன் பிறந்த தொழிலாளர்கள்தான் தங்கள் வருமானங்களில் 2000த்தில் இருந்து ஓரளவு அதிகரிப்பைக் கண்டுள்ளனர்.

மேலும் பொருளாதாரப் பின்னடைவினால் அகற்றப்பட்ட வேலைகள், ஊதியங்கள், நலன்கள், சமூகச் செலவினங்கள் ஆகியவை, மீண்டும் வராது என்றும் உணரப்பட்டுள்ளது.

OECD ஆய்வு "இந்தப் பெரிய வேலையின்மையில் உயர்வு இயல்பில் கட்டமைப்பாக மாறிவிடும் ஆபத்து உள்ளது" என்று எச்சரித்துள்ளது; அதே நேரத்தில் சமீபத்திய டைம் ஏட்டின் கட்டுரை ஒன்று அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் பல ஆண்டுகளுக்கு 9 முதல் 11 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.

"கணக்கிலடங்கா ஒபாமாவில்லேக்கள் பெருகும் நாட்டை கற்பனை செய்வது கடினமல்ல: வேலையற்றவர்களாக செய்யப்படும் தொழிலாளர்கள் எந்தவித நோக்கமும் இன்றி தங்கள் அடைமானக் கடன் தவணையை கொடுக்க முடியாமல், சுகாதாரப் பாதுகாப்பு இல்லாமல், அர்த்தமுள்ள வேலையின்றி, கோபமான அரசியல் என்ற வசதி ஒன்றை மட்டும் கொண்டு சுற்றி வரும் நிலைதான் உள்ளது." என்று டைம் கூறியுள்ளது.

"வளரும்" நாடுகள் என்று அழைக்கப்படுபவற்றிலும் பொருளாதார நெருக்கடி தொழிலாளர்களை நாசம் செய்து கொண்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) கொடுத்துள்ள புதிய அறிக்கை ஒரு பில்லியன் மக்களுக்கும் மேலானர்கள், அதாவது உலகில் வாழ்பவர்களில் ஆறில் ஒரு பகுதியினர் இந்த ஆண்டு பட்டினியை அனுபவிப்பர் என்று வெளிப்படுத்தியுள்ளது. துணை சகாரா ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் பசி என்பது பரந்து காணப்படுகிறது; ஆனால் இது இப்பொழுது அமெரிக்கா போன்ற முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

புதனன்று உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று இன்னும் 89 மில்லியன் மக்களை அடுத்த ஆண்டு இறுதிக்குள் வறுமையில் பொருளாதார நெருக்கடி ஆழ்த்தும் என்றும், இது பெரும்பாலும் ஏழை நாடுகளில் இருக்கும் என்றும் கணித்துள்ளது. இதையும் விட மோசமாக, "வளர்ச்சி பெற்றுள்ள" நாடுகளின் அரசாங்கங்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் ஏற்கனவே குறைவாக இருக்கும் கல்வி, உள்கட்டுமானம், சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் இன்னும் செலவினங்களைக் குறைக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.

OECD தலைமைச் செயலாளர் ஏஞ்சல் குர்றியா அரசாங்கங்கள் "டிரில்லியன்கள், டிரில்லியன்கள், டிரில்லியன்கள்" என்று பொருளாதார நெருக்கடியில் கொட்டியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் "தற்போதைய நெருக்கடியின் முக்கிய தன்மை வேலை என்பதுதான். பொருளாதாரக் குறியீடுகள் மேலேபோவதால் வெற்றி என நாம் கூறமுடியாது. உள்நாட்டு மொத்த உற்பத்தி இதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்ற முன் ஆய்வைக் கொள்ளக்கூடாது" என்று அவர் எச்சரித்துள்ளார்.

உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் Josette Sheeran தன்னுடைய அமைப்பின் 3 பில்லியன் டாலர் பட்ஜேட் பற்றாக்குறை நிரப்பப்பட்டால்தான் உலகம் முழுவதும் 108 மில்லியன் மக்களுக்கு உணவு கிடைக்கும் என்றார்; இந்தப் பணம் உலக அரசாங்கங்கள் பெரிய வங்கிகளுக்கு நிதிய முறையை முட்டுக் கொடுத்து சீராக்க ஒதுக்கிய பல டிரில்லியன்களில் ஒரு சதவிகிதத்தில் நூற்றில் ஒரு பங்குத்தான் என்று அவர் கூறியுள்ளார்.

பல டிரில்லியன் டாலர்கள் பிணை எடுப்புக்கள் வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து வேலையின்மை மற்றும் வறுமை பெருகியுள்ளது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. உலகின் முக்கிய பொருளாதாரங்களை ஆளும் நிதிய தன்னலக்குழுக்களின் தனிப்பட்ட சொத்துக்களை பாதுகாப்பதற்கு உலக மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் இரக்கமற்ற முறையில் தாக்கப்படுவது ஒரு அவசியமாகும்.

பிட்ஸ்பேர்க்கில் கூடவிருக்கும் ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவருடைய G20 சக தலைவர்களின் முக்கிய அக்கறை வேலையின்மை மற்றும் சமூக அவலத்தின் பெருக்கம் அல்ல; மாறாக இலாப விகிதம் மற்றும் பெரிய வங்கிகள், நிறுவனங்களின் பங்கு மதிப்புத்தான். அந்த அளவைக் கையாண்டு பெடரல் ரிசேர்வ் தலைவர் பென் பெர்னன்கே செவ்வாயன்று "அநேகமாக மந்த நிலை இக்கட்டத்தில் முடிந்துவிட்டது எனலாம்" என்று கூறியுள்ளார்.

உலகின் பெரும்பாலான மக்களைப் பொறுத்தவரையில் பொருளாதார நெருக்கடி இப்பொழுதுதான் தொடங்கியுள்ளது.

புதிய அறிக்கைகள் சமூக நெருக்கடி அடிப்படையில் அதன் தொடக்கங்களில் சர்வதேசப் பரப்பைக் கொண்டுள்ளது என்று கூறுகிறது. இதையொட்டி வேலையின்மை மற்றும் வறுமை தேசிய முன்னோக்கு மற்றும் குறிப்பிட்ட தேசியத் தொழில்களின் வருமானத்தை அதிகப்படுத்தக்கூடிய பாதுகாப்புவாத நடவடிக்கைகள் இவற்றின் அடிப்படையில் போராடப்பட முடியாது என்பது தொடர்கிறது; அத்தகைய முன்னோக்கிற்குத்தான் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஊக்கம் கொடுக்கின்றன.

இங்கு தேவைப்படுவது யாதெனில், சர்வதேச தொழிலாள வர்க்கம், பல்வேறு தேசிய உயரடுக்குகளின் இலாப நோக்கு செயற்பாடுகள் என்பதற்கு பதிலாக சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் உலகப் பொருளாதாரத்தை மறுஒழுங்கமைக்கும் ஒரு சோசலிச, புரட்சிகர வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான ஒருங்கிணைந்த தாக்குதலாகும்.