WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
AFL-CIO names new president
Who is Richard Trumka?
AFL-CIO புதிய
தலைவரை அறிவிக்கிறது
யார் இந்த ரிச்சார்ட் ட்ரும்கா?
By Jerry White
17 September 2009
Use this version
to print | Send
feedback
புதனன்று 1995ல் இருந்து
AFL-CIO விற்குத் தலைமை தாங்கிய ஜோன் ஸ்வீனி பதவியில்
இருந்து கீழிறங்க, அவருக்குப் பின் அவருடைய நீண்ட நாள் உதவியாளரான ரிச்சார்ட் ட்ரும்கா பிட்ஸ்பர்க்கில் நடந்த
AFL-CIO
பேரவையில் எதிர்ப்பு இல்லாமல் ஒருமனதாக பிரதிநிதிகளால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வலதுசாரி தொழிற்சங்கக் கருவியின் உச்சியில் ஏற்பட்டுள்ள தலைமை மாற்றம்
பற்றி சில தொழிலாளர்களே கவனத்தில் எடுப்பர். ஆயினும், பெருநிறுவனச் செய்தி ஊடகமும் பல "இடது" தொழிற்சங்க
அதிகாரத்துவத்திற்கு வக்காலத்து வாங்குபர்களும் ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்களின் முன்னாள் தலைவர் பதவி உயர்வு
பெற்றது தொழிலாளர் இயக்கத்தை புதுப்பிப்பதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இதே போன்ற கூற்றுக்கள்தான் ஸ்வீனி, லேன் கிர்க்லாண்டிற்குப் பின் பதவிக்கு வந்தபோதும்
கூறப்பட்டன; ஆனால் அவர்தான் தொழிலாளர்களுடைய பெரும் பேரழிவிற்கு தலைமை தாங்கி, தொழிற்சங்கமயமாக்கலின்
வீதம் கடந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் இருந்த காணப்படாத அளவிற்கு குறைந்த மட்டங்களுக்கு வீழ்ச்சியையும்
கண்ணுற்றார். 2008ல் தனியார் துறைத் தொழிலாளர்களில் 7.6 சதவிகிதத்தினர்தான் தொழிற்சங்க உறுப்பினர்களாக
இருந்தனர்; இது 1900 த்தில் இருந்து மிகக் குறைவான விகிதம் ஆகும்.
ட்ரும்காவின் பணிக்குறிப்பு அவரை எந்த இடத்தில் ஸ்வீனி விட்டுச் சென்றாரோ
அங்கிருந்து தொடர அவரை பெரிதும் தகுதி உடையவராக்குகிறது. அவருடைய உத்தியோகப் போக்கு முழுவதும்
அவர் அடிமட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பை அடக்கி, தொழிலாளர்கள் மீது விட்டுக்கொடுப்புக்களை திணிப்பதில்
முதலாளிகளுடன் ஒத்துழைத்து, தேசியவாதம், கம்யூனிச எதிர்ப்பு ஆகியவற்றை வளர்த்துள்ளார்; இவைதான்
AFL-CIO
வின் முக்கிய சின்னங்களாக அது 50 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டதில் இருந்து உள்ளன.
ஐக்கிய சுரங்கத் தொழிலாளர்கள் (UMW)
அதிகாரத்துவத்தில் தன்னுடைய பணியை ஆர்னால்ட் மில்லரின் சட்ட
ஊழியர்களில் ஒருவராக ட்ரும்கா தொடங்கினார்; மில்லர் 1972ம் ஆண்டு ஒரு தொழிலாளர் துறை
மேற்பார்வையிட்டிருந்த தேர்தலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அத்தேர்தல் சுரங்கத்
தொழிலாளர்கள் ஊழல்மிகுந்த, குண்டர்கள் உதவியைக் கொண்டிருந்த டோனி போய்லின் தலைமைக்கு எதிராக வந்த
எழுச்சியின் விளைவால் ஏற்பட்டது; டோனி UMW
அதிருப்தியாளர் Jock Yablonski
யை கொலை செய்ததற்குத் தண்டிக்கப்பட்டிருந்தார்.
நிலக்கரிச் சுரங்கங்களில் திடீர் அலையென வந்த பல வேலைநிறுத்தங்கள் 1974ம்
ஆண்டு ஒரு கடுமையான வேலைநிறுத்தத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தன; 1977-78 ல் 111 நாட்கள் நடந்த
வெளிநடப்பு வந்தது; இதில் சுரங்கத் தொழிலாளர்கள் மில்லருடன் மோதி கார்ட்டர் நிர்வாகம் உத்தரவிட்டிருந்த
பணிக்கு திரும்ப வேண்டும் என்பதையும் மீறினர். 1979ல் மில்லர் இராஜிநாமா செய்யும் கட்டாயத்திற்கு
உள்ளானார்.
தோமஸ் ஜியோஜிகன் என்றும் மில்லிரின் சட்டப் பிரிவு ஊழியர்களில் ஒருவர் எழுதிய
குறிப்பின்படி, "வாஷிங்டன் டி.சி. UMW
தலைமையகத்தை எடுத்துக் கொண்ட ட்ரும்கா, [ஜியோஜிகன்] உட்பட இளம்
துருக்கியர்கள், அடிமட்டத் தொண்டர்களை கட்டுப்படுத்தமுடியாமல், அவமானப்படுத்தப்பட்டு
வெளியேற்றப்பட்டனர்."
சட்டத்தில் பட்டம் பெற்றிருந்த ட்ரும்கா தான் ஒரு அடிமட்டத் தொழிலாளர் என்ற
தகுதியை நிலைநிறுத்திக் கொள்ளவும், பதவிக்கு நிற்பதற்கு தேவையான சுரங்க அனுபவத்தைப் பெறவும்
சுரங்கங்களில் மீண்டும் வேலைக்குத் திரும்பினார். சுரங்கத் தொழிலாளர்கள் மீண்டும் எழுச்சி செய்யும்போது,
இம்முறை 1981 விற்றுவிட்ட உடன்பாடு UMW
தலைவர் சாம் சர்ச்சால் கொண்டுவரப்பட்டதற்கு எதிராக நடந்தபோது, இவருடைய வாய்ப்பு வந்தது.
1982ல் சர்ச்சிற்கு எதிராக ட்ரும்கா மிகப் பெரிய வெற்றியை அடைந்தார்.
பதவியை ஏற்றவுடன் அவர், "பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்,
சலுகைகளை அகற்றும் ஒப்பந்தங்கள் இனி இருக்காது, நிலக்கரிச் சுரங்கங்கள் அமைக்கப்படுதல் தொழிற்சங்கத்திற்கு
உறுதிப்பாட்டைக் கொண்டுவரும், அதைத்தான் நாளை தொடங்கி, நாம் செய்ய இருக்கிறோம்," என்று
உறுதிமொழி கொடுத்தார்.
ஆனால் அடுத்த 13 ஆண்டுகளும் ட்ரும்கா தொழிலாள வர்க்க ஐக்கியம்,
UMW யில்
போர்க்குண போராட்டங்கள் இவற்றை முறிக்கத்தான் உழைத்தார்; தொழிற்சங்கத்தை நிலக்கரித் தொழிலின் ஒரு
இணைப்பாக மாற்றத்தான் முற்பட்டார். 1983ல் UMW
அதன் மரபார்ந்த கொள்கையான "ஒப்பந்தம் இல்லை என்றால் பணி இல்லை" என்பதை, தொழில்துறையில் தனித்தனியே
வேலைநிறுத்தத்தை தனிப்பட்ட நிறுவனங்களுக்கு எதிரான "தெரிந்தெடுக்கப்படும் வேலைநிறுத்தங்கள்" என்ற கொள்கைக்கு
ஆதரவாக கைவிட்டது.
இது 1984-85 AT
Massey வேலைநிறுத்தம் மற்றும் 1898-90 பிட்ஸ்டன்
நிலக்கரிப் போராட்டம் ஆகியவை தனிமைப்படுத்தப்பட்டு, தோல்வியுற வகை செய்தது; இவை ஒரு புதிய வன்முறை
அலை நிலக்கரி நிறுவனங்கள் மற்றும் அரசிற்கு எதிராக வருவதற்கு வழிகாட்டியது. அது பின் போர்க்குணம் கொண்ட
சுரங்கத் தொழிலாளர்கள்மீது போலிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தவும் அவர்கள் கொலை செய்யப்படுதலிலும்
உச்சக்கட்டத்தை அடைந்தது.
1,500 பிட்ஸ்டன் வேலைநிறுத்தம் செய்துள்ள தொழிலாளர்களை காப்பதற்கு
வெகுஜன மறியலை ஏற்பாடு செய்து, போராட்டத்தை நிலக்கரிச் சுரங்கங்கள் முழுவதும் பரப்புவதற்குப் பதிலாக
ட்ரும்கா சுரங்கத் தொழிலாளர்கள் சட்டபூர்வ பணியாமை என்ற பகட்டுவித்தைகளை மேற்கொள்ள
ஆணையிட்டதோடு, சுரங்கத் தொழிலாளர்களை சுரங்கத்தின் நுழைவாயிலில் அரச படைகள் சிறைக்கு இழுத்துச்
செல்லும் வரை உட்காருமாறு உத்திரவிடுதல், பிட்சன் பங்குதாரர்களுக்கு நிறுவனக் கூட்டத்தில் முறையீடு செய்தல்
போன்றவற்றைச் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
நிலக்கரி உரிமையாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் முன் அவர் நடுங்கி நிற்கையில்
தன்னுடைய எதிராளிகளுக்கு எதிராக ட்ரும்கா உடல்ரீதியாகத் தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவற்றைப்
பயன்படுத்தினார்; குறிப்பாக, எல்லாவற்றிற்கும் மேலாக, பிட்சன் வேலைநிறுத்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவு
கொடுப்பதற்கு அனைத்துச் சுரங்கத் தொழிலாளர்களையும் தேசிய வேலை நிறுத்தம் ஒன்றிற்காக திரட்ட வேண்டும்
என்று பாடுபட்டிருந்த சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக் மீது தாக்குதலைப்
பயன்படுத்தினார்.
ஜூன் 1989ல் மேற்கு வர்ஜீனியாவின் தென்பகுதியில் அடிமட்ட சுரங்கத்
தொழிலாளர்கள் பிட்சன் தொழிலாளர்கள் தனிமைப்படுத்துவதை முறிக்க வேண்டும் என்பதற்காக திடீர்
வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். சுற்றி வந்த மறியல்காரர்கள், முகமூடியணிந்து, தொழிற்சங்கங்கள் இருந்த,
இல்லாத சுரங்கங்களை மூடுமாறு தூண்டினர். உச்சக்கட்டமாக 50,000 சுரங்கத் தொழிலாளர்கள் நிலக்கரி
உற்பத்தியை மிசிசிபிக்கு கிழக்கே முடக்கினர்.
இதை எதிர்கொள்ளும் வகையில், ட்ரும்கா பெருந்திகைப்புடன் நிலக்கரி
உரிமையாளர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு முறையீடு செய்தார்;
Charles Gazette
இடம் பிட்சனின் அசைந்து கொடுக்காத தன்மை UMW
நிலக்கரித் தொழிலுக்கு கொண்டு வந்துள்ள உறுதிப்பாடு, போட்டித்தன்மை ஆகியவற்றை அழித்துவிடும் அச்சுறுத்தலைக்
கொண்டுள்ளது என்று கூறினார்.
UMW வை உடைத்துவிடுவதில்
நிறுவனம் வெற்றி அடைந்தால், "மீண்டும் வரும் தொழிற்சங்கம் ஒருக்கால் வேறுவிதமாக இருக்கும். அநீதியை அது
பொறுத்துக் கொள்ளுவது மிகக் குறைவாக இருக்கும், நாம் அறிந்திருக்கும் செயல்படா முறைக்கு அது கொடுக்கும்
விருப்ப ஆதரவு என்பது ஒரு போதும் இருக்காது" என்று எச்சரித்தார்.
திரைக்குப் பின்னால், ட்ரும்கா முதல் புஷ் நிர்வாகம் மற்றும் ஜனநாயகக்
கட்சியினருடன்--மேற்கு வர்ஜீனியா செனட்டர் ஜே. ராக்பெல்லர் போன்றவர்களுடன் சதியாலோசனை நடத்தி--திடீர்
வேலைநிறுத்தங்களை நசுக்கி, பிட்சன் சுரங்கத் தொழிலாளர்கள் நலனை விற்றுவிடுவடுவதை திணித்தார். மீண்டும்
சுரங்கத் தொழிலாளர்களின் எழுச்சியை நசுக்குவது என்பது சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிரான பெருநிறுவன-அரசாங்க
எதிர்த் தாக்குதலை துவக்கப் பயன்படுத்தப்பட்டது; இது மேற்கு வர்ஜீனிய சுரங்கத் தொழிலாளி ஜோன் மக்காய்
ஜனவரி 1990ல் கொலை செய்யப்பட்டதில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
வீழ்ந்துவிட்ட சுரங்கத் தொழிலாளரை கெளரவப்படுத்த நினைவு நாள் என்று மரபாக
அழைக்கப்படுவதைக் கூட்ட மறுத்து, இகழ்வுடனும் பொருட்படுத்தாத்தன்மையுடனும் ட்ரூம்கா எதிர்கொண்டார்.
இறுதிச் சடங்குகளைப் புறக்கணிக்க முடிவு செய்தார். ஆனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அதில் கலந்து
கொண்டனர். கொலை செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும்
UMW எழுப்பவில்லை
--இன்றளவும் அவர்கள் சுதந்திரமாக உலவுகின்றனர்-- மக்காயின் விதவை, குழந்தைகளுக்கு வேலைநிறுத்த
நலன்களையும் மறுத்துவிட்டார்.
UMW தலைவர் நடந்து கொண்ட
முறை பற்றி சுருக்கமாகக் கூறுகையில் மக்காயின் சகோதரி டோனா கார்ட்டார் தெரிவித்தார்: இப்பொழுது
எதுவும் செய்யாமல் இருக்கையில்--ஜோன் இறந்த தினத்தில் இருந்து, ட்ரும்கா முற்றிலும் எதையும் செய்யவில்லை;
ஜோனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவனுக்கு எவ்வளவு பொறுப்பு உண்டோ அத்தனையும் இவராலும் பகிர்ந்து
கொள்ளப்படுகிறது."
1995 ல் ட்ரும்கா
UMW விட்டு நீங்கி
AFL-CIO
அதிகாரத்துவத்தில் ஒரு உயர் பதவியைப் பெற்றார். அமெரிக்காவில் ஒருகாலத்தில் மிகச் சக்திவாய்ந்த,
போர்க்குணம் மிகுந்த தொழிற்சங்கத்தின் அழிவை மேற்பார்வையிட்டுவிட்டுத்தான் அவர் விலகினார். 1982ல் அவர்
UMW
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, சங்கத்தில் 120,000 தீவிர உறுப்பினர்கள் இருந்தனர். இன்று அதில்
16,000 பேர்தான் உள்ளனர். மேற்கு வர்ஜீனியா, கென்டக்கி மற்றும் பென்சில்வேனியா ஆகிய நிலக்கரி
மாநிலங்களில் UMA
கோட்டைகளாக இருந்தவை இன்று வறுமை, நீடித்த வேலையின்மை, நோய்கள் என்ற பாதிப்பில் வாடுகின்றன.
இவருடைய வாழ்க்கையில் இருந்து இன்னும் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட வேண்டும்.
AFL-CIO
வின் செயலாளர்-பொருளாளர் என்ற பதவியை ஏற்றபின், டீம்ஸ்டரின்
தலைவர் 1996ம் ஆண்டு Ron Carey
மறுமுறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சட்டவிரோதமாக நிதி கொடுக்கப்பட்ட திட்டம் ஒன்றில் உட்படுத்தப்பட்டார்.
காரேயின் பிரச்சார மேலாளர் Jere Nash
உடைய சாட்சியத்தின்படி, மக்கள் நடவடிக்கை என்னும் தாராளவாத செல்வாக்குச் செலுத்தும் குழுவிற்கு டீம்ஸ்டர்
$150,000 கொடுக்கும் திட்டத்திற்கு ட்ரும்கா ஒப்புதல் கொடுத்தார்; இக்குழு
AFL-CIO
ஆதரவிற்கு உட்பட்டிருந்தது; காரே பிரச்சாரத்திற்கு பல தொழிற்சங்க அதிகாரிகள் இதே போன்று கொடுத்த
நன்கொடைகளுக்கு ஈடாக இது கொடுக்கப்பட்டது.
நன்கொடை பரிமாற்றத் திட்டம் என்று கூறப்பட்டது பற்றி ட்ரும்கா நியூ யோர்க்
கூட்டாட்சி ஜூரிகள் முன்பும், இவ்விஷயம் பற்றி காங்கிரஸ் துணைக்குழுக்கள் நடத்திய விசாரணைகளிலும் சாட்சியம்
கூற மறுத்தார்; அரசியலமைப்பின் ஐந்தாம் திருத்தப்படி ஒருவர் தனக்கு எதிரான சாட்சியத்தைக்
கூறத்தேவையில்லை என்ற பாதுகாப்பை இதற்காகப் பயன்படுத்தினார்.
AFL-CIO விதிகள்
ஐந்தாம் திருத்தத்தை மேற்கோள் காட்டும் தொழிற்சங்க அதிகாரி எவரும் பதவியில் இருக்கும் தகுதியை
இழந்துவிடுவர் என்று கூறியிருந்தாலும், தொழிலாளர் கூட்டமைப்பு இப்பொழுது அதன் தலைவராக இருக்கும் நபருக்கு
எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 14 ஆண்டுகளாக ட்ரூம்கா, ஸ்வீனியின் வலதுகரமாக பணிபுரிந்து வந்துள்ளார்;
மிக நெருக்கமான உறவுகளை பெரு வணிகத்துடன் வளர்த்து, "தீயை அணைக்க" அதாவது நாடெங்கிலும் தொழிலாள
வர்க்கப் போராட்டங்களை அடக்குவதற்கு பாடுபட்டார்.
பெப்ருவரி மாதம் அவர் வெள்ளை மாளிகை பொருளாதார மீட்பு ஆலோசனைக்குழுவின்
உறுப்பினராக்கப்பட்டார்; இந்த அமைப்பு ஜெனரல் எலக்ட்ரிக், ஓரேக்கிள்,
UNS ஆகியவற்றின்
பெருநிறுவன நிர்வாகிகளைக் கொண்டுள்ளது; இதற்குத் தலைவர் முன்னாள் பெடரல் ரிசேர்வ் தலைவரான போல்
வோல்க்கர் ஆவார்; அவர்தான் றேகன் ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை முன்னின்று நடத்தினார்.
வேலையின்மைக்கு எதிராகப் பெருகும் சமூகச் சீற்றத்தை திசை திருப்பும் முயற்சியில்,
ட்ரும்கா, "அமெரிக்கப் பொருட்களை வாங்குக" என்ற வெறியை, அவருக்கு முன் பதவியில் இருந்தவரை விட கூடுதலான
ஆக்கிரோஷத்துடன் தூண்டுகிறார். "ஏற்கனவே வணிகத்தில் திரு ஸ்வீனி காட்டியதை விட அதிக ஆக்கிரோஷமான நிலைப்பாட்டைக்
காட்டுகிறார்" என்று நியூ யோர்க் டைம்'ஸ் குறிப்பிட்டது; எஃகுத் தொழிலாளர்கள் சங்கத்துடன்
அவருக்கு இருக்கும் நெருக்கமான தொடர்புகளை மேற்கோளிட்டது; அதுதான் வெள்ளை மாளிகையை சீன டயர்
ஏற்றுமதிகள் மீது பாதுகாப்புவரிகளை சுமத்த வைப்பதில் வெற்றியடைந்தது.
இத்தகைய நபர், AFL-CIO
என்னும் அதிகாரத்துவமயப்படுத்தப்பட்டுவிட்ட, ஜனநாயக விரோத, பெருநிறுவனக்கருவி, முற்றிலும் தொழிலாள
வர்க்க நலன்களுக்கு விரோதமானதிற்கு தலைமை தாங்க கொண்டுவரப்படுவது தர்க்கரீதியாக முற்றிலும் சரியே.
உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் பெருநிறுவன, நிதிய உயரடுக்கின் கருவிகளாக மாறிவிட்டதை இது
அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கொண்டு கம்யூனிச எதிர்ப்பு, தேசியவாதம்
ஆகியவற்றை அடித்தளமாய்க் கொண்ட தொழிலாளர் இயக்கத்தை நிறுவும் முயற்சியின் வரலாற்றுத் தோல்வியையும்
அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |