World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Demands to curtail war reporting after raid to free New York Times journalist

நியூ யோர்க் டைம்ஸ் செய்தியாளரை விடுவிக்க சோதனை நடத்தப்பட்ட பின் போர்த் தகவல் சேகரிப்பதைத் தடுக்க கோரிக்கைகள்

By Julie Hyland
14 September 2009

Use this version to print | Send feedback

ஆப்கானிஸ்தானில் சிறைப் பிடிக்கப்பட்டிருந்த நியூ யோர்க் டைம்ஸ் செய்தியாளரை விடுவிப்பதற்கான SAS தலைமையிலான நடவடிக்கையில் எழுந்த கருத்து வேறுபாடு, இப்பொழுது பிரிட்டிஷ், அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ள போர்ப் பகுதிகளில் இருந்து எந்தவிதமான புறநிலையான மற்றும் நேர்மையான தகவல் சேகரிப்பையும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பப் பயன்படுத்தபடுகிறது.

டைம்ஸின் செய்தியாளர் Stephen Farrel, மற்றும் அவருடைய ஆப்கானிய மொழிபெயர்ப்பாளர் சுல்தான் முனடி இருவரும் செப்டம்பர் 5ம் தேதி சனிக்கிழமையன்று தலிபன் ஆதரவாளர்களால் பிடிக்கப்பட்டு வடக்கு நகரமான குண்டுஸுக்கு அருகே நான்கு நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். மூன்று நாட்களுக்கு முன் ஜேர்மனிய படைகள் கடத்தப்பட்ட டாங்கர்களை மீட்பதற்கு நடத்திய நேட்டோ வான்வழித் தாக்குதலில் குறைந்தது 125 பேர் படுகொலையுண்டதைப் பற்றி விசாரிப்பதற்கு பாரெல் அங்கு சென்றிருந்தார்.

அவர்கள் கைப்பற்றப்பட்ட தகவல் மறுநாள் புதன் கிழமை காலை அவர்களை மீட்கும் முயற்சி வரை இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது.

கிடைத்துள்ள தகவல்களின்படி, பிரெளன் அரசாங்கம் அங்கு சோதனைத் தாக்குதல் நடத்த அனுமதித்தது; இதில் இருவரும் அடைத்துவைக்கப்பட்ட வளாகத்தில் இரண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்களால் பிரிட்டிஷ் துருப்புக்கள் இறக்கப்பட்டன.

பாரெல் விடுவிக்கப்பட்டார், ஆனால் முனடி கொல்லப்பட்டுவிட்டார். அவர் பிரிட்டிஷார் அல்லது தாலிபன் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டாரா என்று தெரியவில்லை. மீட்பு நடவடிக்கை பற்றிய தன்னுடைய குறிப்பில் பாரெல் சில கணங்களுக்குப் பின்னர் பிரிட்டிஷ் குரல்களை கேட்டதாக கூறியுள்ளார். பிரிட்டிஷ் பாரட்ரூப்பர் ஜோன் ஹாரிசனும் இந்தச் சோதனைத் தாக்குதலில் இறந்து போனார்.

ஹாரிசனுடைய சடலம் அகற்றப்பட்டபோது, முனடியின் சடலம் அங்கேயே விடப்பட்டு விட்டது; இது ஆப்கானிய செய்தியாளர்களிடைய பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. முனடி தலையிலும், மார்பிலும் மூன்று முறை சுடப்பட்டிருந்தார். இவருடைய சடலம் பின்னர் உள்ளூர் கிராமவாசிகளால் மீட்கப்பட்டது; முனடியின் மொபைல் தொலை பேசியைப் பயன்படுத்தி அவர்கள் காபூலில் இருந்த டைம்ஸ் அலுவலகத்தைக் கூப்பிட்டிருக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள Media Club of Afghanistan கூட்டிய செய்தியாளர் கூட்டத்தில் 50 நிருபர்கள் கலந்து கொண்டனர்; கூட்டம் முனடி சடலம் கைவிடப்பட்டது ஒரு "மனிதாபிமானமற்ற செயல்" என்று கண்டித்ததுடன் சர்வதேச சக்திகளின் "பொறுப்பற்ற, இரட்டைத்தர நடவடிக்கையால்தான்" அவருடைய இறப்பு நேர்ந்தது என்ற குற்றத்தையும் சாட்டியது.

மீட்புப்பணி தேவையில்லை என்ற கூற்றுக்கள் வந்ததை அடுத்து சீற்றங்கள் தீவிரமாயின. பல ஆதாரங்களில் இருந்து பின்னர் வந்த தகவல்கள் இருவரையும் விடுவிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்ததாகக் கூறுகின்றன. ஆப்கானிய உள்துறை மந்திரி 300 உள்ளூர் மூத்த குடிமக்களை, சிறைப்பிடித்தவர்களுடன் இடையிட்டுப் பரிந்து பேசுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்; அதே நேரத்தில் முனடியின் சிற்றப்பாவும் உள்ளூர் தாலிபன் தளபதியுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

முனடியின் தந்தை, கார்பன் மகம்மது, Independent இடம் இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக தன்னுடைய மகன் தன்னுடன் பேசியதாக கூறினார். தன் மகனும் பாரெலும் எண்ணெய் டாங்கர்கள்மீது தாக்குதல் நடத்தியவர்கள் கொல்லப்பட்டதற்கு நடந்த இரங்கல் காலத்திற்கு பின்னர் கடத்தப்பட்டவர்களால் விடுவிக்கப்படுவர் என்று தான் நம்பியிருந்ததாகக் கூறினார்.

"சுல்தான் அது பற்றி உறுதியாக இருந்தார்" என்று அவர் கூறினார். "என்னுடைய மகனின் சொற்கள் பெரும் உவகையை எனக்கு கொடுத்தது, பல இரவுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக தூங்க முடியும் என்று நினைத்தேன். அனைத்தும் சீராக நடந்துவருவதாக அவர் நம்பிக்கை கொண்டிருந்தார்."

"ஆம், என்ன நடந்ததோ அது பற்றி நான் மிகவும் கோபமாக உள்ளேன். நான் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளேன். எந்தக் காரணமும் இல்லாமல் சுல்தான் கொலை செய்யப்பட்டுவிட்டார்."

பேச்சுவார்த்தைகளை பற்றிய செய்திகள் SAS செயல்முறைக்கு ஒப்புதல் கொடுத்ததில் பிரிட்டிஷ் அரசாங்கம் கூடுதலான "ஆர்வத்துடன்" இருந்ததாக குற்றச் சாட்டுக்கள் வந்துள்ளன; இது ஆப்கானிஸ்தானின் வெளிநட்டு ஆக்கிரமிப்பில் நம்பிக்கையை மீட்க ஒரு முயற்சி என்று கருதப்பட்டது; ஆனால் பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானவர்கள் இதை எதிர்க்கின்றனர். பெயரிடப்படாத மேலை அதிகாரி ஒருவர் இந்தநடவடிக்கை" முற்றிலும் திமிர்த்தனமானது. கொஞ்சம் பொறுமை, மரியாதையை இவர்கள் காட்டியிருந்தால், இருவரையும் ஒரு தோட்டாக் கூட சுடாமல் காப்பாற்றியிருக்க முடியும். மாறாக அவர்கள் தங்களில் ஒருவரை இழந்தனர், ஆப்கானியர் ஒருவர் கொல்லப்பட்டார்; சிவிலியர்கள் கொல்லப்பட்டனர் என்ற விதத்தில் இது முடிந்தது."

தான் கைப்பற்றப்பட்டது, விடுவிக்கப்பட்டது பற்றிய அறிக்கையில் பாரெல், முனடி மற்றும் ஹாரிசன் இறப்புக்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை வெளியிட்டார்; அதே நேரத்தில் தன்னுடைய நன்றியுணர்வு "ஒருபோதும் போதுமானதாக இல்லை, இருக்க முடியாது" என்பதையும் தான் அறிந்துள்ளதாகக் கூறினார்.

செய்தி ஊடகத்தின் பிரிவுகள் மற்றும் இராணுவத்தினால் பாரெல் "பொறுப்பற்றதன்மை", "உயிர்களுக்கு ஆபத்தைத் தேடியவர்" என்ற கடுமையான தாக்குதலுக்கு இலக்கானார். அவரும் அவரைப் போன்ற மற்ற செய்தியாளர்களும் வருங்காலத்தில் அவர்களுடைய விதிப்படி விட்டுவிடப்பட வேண்டும் என்றும் சிலர் கூறியுள்ளனர். பல டஜன் மக்களுடைய உயிர்களைக் கவர்ந்த நேட்டோ படைகளின் உண்மையான "பொறுப்பற்ற தாக்குதலை நடத்தியது பற்றி" பாரெல் விசாரிக்கச் சென்றிருக்கையில், இத்தகையை கூற்றுக்கள் பாசாங்கு மற்றும் ஏமாற்றுத்தனத்தால் நிறைந்தவை ஆகும்.

தன்னுடைய அறிக்கையில் "விமானத் தாக்குல் ஒலியை" கேட்ட கணத்திலேயே, "இது ஒரு பெரிய விவாதத்திற்குரிய விஷயமாகப் போகிறது, இறந்து போனவர்கள் தாலிபன் என்று நேட்டோ கூற்றுக்கள் வரும்போது, அவை குடிமக்கள் இறப்புக்கள் என்று வரும்" எனத் தெளிவாயிற்று என்று பாரெல் கூறியுள்ளார்.

20 ஆண்டுகள் போர் நிருபர் என்ற புகழைக் கொண்டிருக்கும், தன் பணியை கூடுதலான ஆர்வத்துடன் செய்யும் பாரெல் --வடக்கு அயர்லாந்து, ஆசியா, மத்திய கிழக்கு (ஈராக் உட்பட, அங்கு 2004ல் அவர் கடத்தப்பட்டிருந்தார்) ஆகியவற்றிற்கு சென்றிருந்தார்-- நினைத்தது சரியே.

ஆரம்பத்தில் இது "ஆயுதமேந்திய தாலிபன்" சோதனைத்தாக்குதலின் போது கொல்லப்பட்டனர் என்றும் சிவிலியர்கள் எவரும் காயமுறவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் சில நாட்களுக்குக் இந்த கூற்றுக்கள் --உள்ளூர் மருத்துவமனை மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பேட்டி கண்ட நிருபர்கள், ஆப்கானியர்கள் ஆகியோரின் நேரடி சாட்சியத்தினாலும்-- குறைந்த பட்சம் பகுதி அளவிலேனும் அம்பலப்படுத்தப்பட்டது. இவை கடத்தப்பட்ட எண்ணெய் டாங்கர் ஒரு ஆற்றில் சிக்கிய நிலையில், பெரும் தேவையில் உள்ள பெட்ரோலை எடுத்துக் கொள்ள உள்ளுர் மக்கள் டின்களுடன் விரைந்து செல்கையில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் என்பதை உறுதி செய்தன.

இந்த விமானத்தாக்குதல், நேட்டோ படைகளுக்கு டாங்கர்களால் எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்தும் உத்தரவிடப்பட்டது. இந்த மிருகத்தனமான போர்க்குற்றம் நேட்டோவின் "தூய்மைப்படுத்தப்பட்ட" தகவல் மட்டுமே வெளிவந்தால் வெளியே தெரியாமல் போயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

"ஒரு அதிக ஆர்வமுடைய நிருபருக்காக" ஹாரிசன் இறந்திருக்க வேண்டுமா என்ற வினாவை மெயில் எழுப்பியுள்ளது.

இதே செய்தித்தாளில் Max Hastings பாரெல் ஒரு "வெறியர்" என்ற கருத்தைத் தெரிவித்தார்.

"அவருடைய அனுபவத்தின் உண்மைப் படிப்பினை போர்களைப் பற்றித் தகவல் திரட்டும் செய்தியாளர்கள் தங்கள் சொந்த பணயத்திலேயே அதைச் செய்யவேண்டும் --தவறான கருத்தில் செயல்பட்டால் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்....

"எங்கள் நாட்களில் செய்தித்தாள் ஆசிரியர் என்ற முறையில் நான் வேலைக்கு வைத்திருக்கும் ஒரு நிருபரை விடுவிக்க இத்தகைய சோதனைத் தாக்குதல் நடத்தப்படட்டுமா என்று கேட்கப்பட்டிருந்தால், சிறிதும் தயக்கமின்றி "வேண்டாம்" என்றுதான் நான் கூறியிருப்பேன்."

முன்னாள் படைத் தளபதி டிம் கோலின்ஸை மேற்கோளிட்ட டெலிகிராப் கூறியது: "ஸ்டீபன் பாரெல் தன்னுடைய அனுபவத்தைப் பற்றி அதிகம் காகம் போல் கரையாத புத்திசாலியாக இருக்க வேண்டும்; ஏனெனில் அவருடைய திறமையின்மையினால் ஓர் உயிர் இழக்கப்பட்டுவிட்டது. செய்தி உலகத்தில் துரதிருஷ்டவசமாக தாங்கள் தவறே செய்ய முடியாதவர்கள் என்று கருதும் மக்களை நாம் சந்திக்கிறோம்."

ஒரு மறைமுக அச்சுறுத்தல் என்று கருதப்பட வேண்டிய வகையில் செய்தித்தாள் ஒரு பெயரிடப்படாத "மூத்த இராணுவ ஆதாரத்தை" மேற்கோளிட்டு, "இந்த நபர் பெற்றுள்ள எச்சரிக்கைகளைப் பார்த்தால், இவர் உண்மையிலேயே காப்பாற்றப்படும் தகுதி உடையவர்தானா, ஒரு வீரரின் உயிர் இதற்கு சமமாகுமா என்ற வியப்புத்தான் வரும்" என்று குறிப்பிட்டது.

"வருங்காலத்தில் சிறப்புப் படைகள் இதே போன்ற நிலையில் இரு முறை சிந்திக்கக்கூடும்."

இத்தகைய கறைபடிந்த பிரச்சாரத்தில் அரசாங்கமும் வெளிப்படையான பங்கைக் கொண்டுள்ளது; ஏனெனில் இராணுவத்தினர் அனுமதிக்காத, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாத செய்திகளைப் பற்றி குறைமதிப்பு கூறுவதின் மதிப்பை அது நன்கு உணர்ந்துள்ளது. வெளியுறவு மந்திரி டேவிட் மில்பாண்ட் ஆப்கானிஸ்தானில் அவர் எங்கு போராளிகளால் கைப்பற்றப்பட்டாரோ அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்ற "வலுவான ஆலோசனையை" புறக்கணித்தார் என்று குறைகூறினார்.

"ஒரு பக்கம் வெளிப்படையாக அவர் தைரியமானவர்தான்; ஆனால் மறுபுறம் அப்பகுதிக்கு செல்வது மிகவும் ஆபத்து என்ற வலுவான ஆலோசனைகளுக்கு எதிராக அவர் நடந்து கொண்டார்" என்று மில்பாண்ட் கூறினார்.