WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஜேர்மனி
Following GM announcement on new talks with Magna
German auto union offers further concessions to Opel
Magna உடன் புதிய
பேச்சுக்கள் என்று GM
அறிவித்ததைத் தொடர்ந்து
ஜேர்மனிய கார் தொழிலாளர் சங்கம் ஓப்பலுக்கு இன்னும் அதிக சலுகைகளை கொடுக்கின்றது
By Dietmar Henning
14 September 2009
Use this version
to print | Send
feedback
மீண்டும், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கார் பாகங்கள் அளிக்கும்
Magna இவற்றிற்கு
இடையே GM
ன் துணை நிறுவனமான ஐரோப்பிய ஓப்பல் கிளையை எடுத்துக் கொள்ளுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கான
முன்மொழிவானது ஓப்பலை "மீட்பதற்கு" என்று காட்டப்படுகின்றன.
கடந்த வியாழனன்று GM
குழு ஓப்பல் விற்பனை குறித்த பேச்சுவார்த்தைகளை மாக்னா, ரஷ்ய
Sberbank வங்கி
மற்றும் ரஷ்ய GAZ
கார் உற்பத்தியாளர்கள் மூன்றும் அடங்கிய ஒரு குழுவுடன் நடத்தியது. ஜேர்மனிய அரசியல் வாதிகள் மற்றும் செய்தி
ஊடகத்துடன் சேர்ந்து ஓப்பலில் இருக்கும் பணிக்குழுக்கள், தொழிற்சங்கங்கள்,
GM மற்றும்
மாக்னா ஆகியவை ஏற்கனவே ஐரோப்பிய ஓப்பலை எடுத்துக் கொண்டுவிட்டது போல் விடையிறுத்தன.
இந்த மாதம் இறுதியில் நடக்க இருக்கும் கூட்டாட்சித் தேர்தல்களில்,
SPD (சமூக
ஜனநாயகக் கட்சி) யின் அதிபர் வேட்பாளரும், வெளியுறவு மந்திரியுமான பிரான்ஸ்-வால்டர் ஸ்ரைன்மையர்
கூறினார்: "இது ஓப்பலுக்கு நல்ல நாளாகும்." CDU
வைச் சேர்ந்த தற்பொழுதைய கூட்டாட்சி அதிபர் அங்கேலா மேர்க்கெல் "பொறுமையும் உறுதிப்பாடும்" வெற்றி
பெற்றுவிட்டதாகக் கூறி "மாக்னா பற்றிய GM
முடிவை" அவர் வரவேற்றார்.
வெள்ளியன்று, ஓப்பலின் பணிக்குழுத் தலைவர்
Klaus Franz
ன் கருத்துக்களை எதிரோலிக்கும் அமைப்பாக பல மாதங்கள் சேவைசெய்திருக்கும்
Frankfurther Rundschau,
"மகிழ்ச்சிகரமான முடிவு" என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டது.
மே மாத இறுதியில் ஓப்பல் "மீட்கப்பட்டதாக" கூறப்பட்டதைத்தான் இது நினைவு
படுத்துகிறது. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே உறுதியாக எதுவும் முடிவெடுக்கப்படவில்லை.
GM
மாக்னாவுடன் பேச்சுவார்த்தைகளை தொடரத்தான் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளது.
ஒரு உடன்பாடு இன்னும் கையெழுத்திடப்பட வேண்டும். "நாங்கள் மீண்டும் பேச்சு
வார்த்தைகளை தொடர வேண்டும்" என்று GM
குழுவின் துணைத் தலைவரும் நிறுவனத்தின் தலைமை பேச்சுவார்த்தை நடத்துபவருமான ஜோன் ஸ்மித் கூறினார்.
ஓப்பல் விற்பனை பற்றி GM
ன் முடிவை Sberbank
கும் இறுதியானது என்று நினைக்கவில்லை. Sberbank
ன் தலைவரான German Gref
பேச்சுக்கள் கடினமாக இருக்கும் என்றும் வரவிருக்கும் நிறுவனத்தின் கட்டமைப்பு சிக்கல் வாய்ந்ததாக இருக்கும்
என்றும் கூறினார். பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டும் என்று கூறும் ஆவணம் மட்டுமே 1,000 பக்கங்களுக்கு மேல்
உள்ளது.
Suddeutsche Zeitung
உடன்பாடு முடிய இன்னும் பல பாக்கி இருப்பதாகக் கூறியது. "மாறாக, கடந்த சில மாதங்களாக உள்ள
பரபரப்பு வெட்கமின்றித் தொடர்கின்றன--இம்முறை உயர்மட்டத்தில்."
இத்தகைய புதிய அட்லான்டிக் கடந்த தந்திர உத்திகள் கூட்டாட்சி தேர்தல்கள்
தினமான செப்டம்பர் 27 க்கும் மேல் நீடிக்கும். "உறுதியாகக் கூறக்கூடியது எதுவும் உறுதியில்லை என்பதுதான்"
என்று Suddeutsche Zeitung
எழுதியது. "முழு பேச்சுவார்த்தைகளும் வியத்தகு அளவில் சரியக்கூடும். இதுவரை பேச்சுவார்த்தைகளில் சட்ட
பூர்வமாகக் கட்டுப்படுத்தும் உடன்பாடு ஏதும் இல்லை."
GM ன் முக்கிய பேச்சுவார்த்தை
நடத்துநர் ஸ்மித், மாக்னா, Sberbank
உடனான பேச்சுக்கள் நவம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
ஜேர்மனிய ஓப்பல் பணிக்குழுக்களும்
IG Metall
தொழிற்சங்கமும் GM
ன் அறிவிப்பை தங்கள் சொந்த வெற்றிக்கான சான்று போல் வரவேற்றன. ஏனெனில் மாக்னா தற்போதைக்கு
நான்கு ஜேர்மனிய ஓப்பல் ஆலைகள், Rüsselsheim,
Bochum, Eisenach, Kaiserslautern ஆகியவற்றில்
இருப்பவற்றை தக்க வைக்கும் விருப்பத்தை அறிவித்துள்ளது. ஆனால் ஸ்மித் அவ்வளவு உறுதியாக இல்லை. "இது
இப்பொழுது மாக்னாவின் திட்டம்" என்றார் அவர்.
ஓபலின் பெல்ஜியம் ஆன்ட்வெர்ப்பில் இருக்கும் பணிகள் அடுத்த ஆண்டு மூடப்படும்
என்பதுதான் உறுதி. லூடனில் இருக்கும் British
Vauxhall பணியிடம் இரண்டு ஆண்டிற்குள் மூடப்படலாம்; வடக்கு
ஸ்பெயினில் Saragosa
விற்கு அருகே உள்ள Figueruelas
ன் GM
ஆலையில் இருக்கும் 7,500 வேலைகளில் 1,650 க்கும் மேற்பட்டவை பாதிப்பின் அச்சுறுத்தலில் உள்ளன.
உத்தியோகபூர்வத் தகவல்படி, ஐரோப்பாவில் இருக்கும் கிட்டத்தட்ட 54,000
தொழிலாளர்களில் 11,000 பேர் வேலையிழக்கக்கூடும்; இதில் ஜேர்மனியில் 2,500 பேர் இருக்கக்கூடும். ஆனால்
Klaus Franz
இடம் இருந்து தன்னுடைய ஐரோப்பிய பணிக்குழு சக ஊழியர்களுக்கு வந்த உட்கடிதம் ஒன்றை
Bild
மேற்கோளிட்டுள்ளார்; இதன்படி மாக்னா திட்டம் செயல்படுத்தப்பட்டால் 21,000 வேலைகள் இழக்கப்படும்
என்று அவர் கணக்கிட்டுள்ளார்.
பணிக்குழுக்களும் IG
Metall உம் இதன் பொருள் இன்னும் கூடுதலான ஆலைகள்
மூடப்படும் என்பதா என்பது பற்றி மெளனம் சாதிக்கின்றன.
செவ்வாய் அறிவிப்பைத் தொடர்ந்த ஆரம்ப அறிக்கைகள் பெரும் வேலை இழப்புக்கள்
உறுதியெனக் காட்டுகின்றன. மாக்னாவின் தலைவரான
Frank Stronach, "ஒரு கடினமான மறுகட்டமைப்பு
வழிவகை" வரவிருப்பதாகக் கூறினார். Österreich
செய்தித்தாள் ஓப்பல் நீண்ட காலமாக இலாபம் காணவில்லை
என்றும் பொருளாதாரம் ஏற்றதாக இல்லை என்றும் எழுதியுள்ளது. இந்த எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை
"சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் ஒரு கடின வழிவகை" என்று அது கூறியுள்ளது.
பணிக்குழுக்களும் IG
Metall அலுவலர்களும் ஓப்பல் தொழிலாளர்களால் கடந்த
காலத்தில் வென்னெடுக்கப்பட்ட பணி நிலைமைகளில் உள்ள அனைத்து முன்னேற்றங்களும் புதிய மாக்னா நிர்வாகத்திற்கு
தியாகம் செய்யப்பட்டுவிடும் என்று அடையாளம் காட்டியுள்ளன.
IG Metall ன்
பிராங்பேர்ட்டிற்கான வட்டார மேற்பார்வையாளரும் ஓப்பல் மேற்பார்வைக்குழுவின் உறுப்பினருமான
Amin Schild,
மாக்னா ஒரு "கடுமையான, இரும்பு போன்ற உறுதி கொண்ட ஆங்கிலோ சாக்சன் முதலாளித்துவ வகையாகும்"
என்றார். மேலும், "அவர்கள் நேரடியாக சங்கிலி ரம்பத்தைத்தான் பயன்படுத்துவர்" என்றும் சேர்த்துக்
கொண்டார்.
IG Metall ன் தலைவரான
Berthold Huber
நிறுவனம் மறு கட்டமைப்பிற்கு உட்படுவதற்கு மாற்றீடு ஏதும் இல்லை என்றார். வருங்காலத்திற்கு நின்று பிடிக்கும்
வகையில் கிறிஸ்துமஸ், விடுமுறை ஊதியங்கள் கோரிக்கை கைவிடப்படல் போன்ற இன்னும் சலுகைகள் ஓப்பல்
ஊழியர்களிடம் இருந்து கிடைக்கும் என்றும் அவர் கூறினார்".
தான் எப்படி தொழிலாளர்களின் பைகளில் இருந்து எவ்வளவு எடுத்துக் கொள்ளத்
தாயர் என்பது பற்றி Klaus Franz
தெளிவாக அடையாளம் காட்டினார்: ஆண்டு ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில்
1.65 பில்லியன் யூரோக்கள் வேலைகள் அகற்றப்படுதல், ஊதியக் குறைப்புக்கள், கிறிஸ்துமஸ், விடுமுறை ஊதியங்கள்
தவிர்க்கப்படல் ஆகியவற்றால் சேகரிக்கப்படும். இந்த சேமிப்புக்கள் "நிறுவனத்தில் தொழிலாளர்கள் மூலதனப்
பங்கீடு" என்று அழைக்கப்படுவதின் கருவூலத்திற்குச் செல்லும்."
இந்த நிறுவனத்தில் நிர்வாக, மேற்பார்வைக் குழுக்கள் ஜேர்மனியில் உள்ள பல
ஓப்பல் ஆலைகளில் இருக்கும் பணிக்குழுக்களின் தலைவர்களைக் கொண்டிருக்கும்; மற்றும்
IG Metall
அலுவலர்களையும் கொண்டிருக்கும். ஓப்பலின் பங்குகளில் 10 சதவிகிதத்தை கொள்ளப் போகும் நிர்வாகக் குழுவின்
தலைவர், Klaus Franz
தான்.
புதிய ஓப்பல் நிறுவனத்தில் 55 சதவிகிதப் பங்குகள் மாக்னா மற்றும்
Sberbank ன்
கூட்டு உடைமையாக இருக்கும், GM
இடம் 35 சதவிகிதம் இருக்கும்.
இத்தகைய வெட்டுக்கள் அனைத்தும் இருந்தாலும், ஓப்பல் திவால் தன்மை என்று பதிவு
செய்யக்கூடும். ஓபலை விற்பதற்கான முடிவானது நிறுவனம் உண்மையில் காப்பாற்றப்பட்டது என்று
அர்த்தப்படுத்தவில்லை என்றார்.
பேச்சுவார்த்தைகள் இன்னும்கூட சரிந்து போகலாம். டிட்ரோயிட்டில் கடந்த
செவ்வாய், புதனில் GM
குழுக் கூட்டத்திற்கு முன்பு, GM
ஓபலைத் தக்க வைத்துக் கொள்ளும் திட்டத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால்
KPMG என்னும்
தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை குழுவின் மனத்தை மாற்ற வைத்தது.
இந்த அறிக்கை ஓப்பலை
GM குடும்பத்திற்குள் வைத்துக் கொள்ளுவதற்கு
GM கிட்டத்தட்ட
6.1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று வெளிப்படுத்தியது.
GM ன் முந்தைய
கணிப்பான, ஓப்பலின் மறுகட்டமைப்பு $4.64 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று இருந்தது
நம்புவதற்கு அரியதாக இருந்ததாக KPMG
சுட்டிக் காட்டியுள்ளது.
இப்பொழுது ஓப்பலை மாக்னா மற்றும் அமெரிக்க $4.5 பில்லியன் என்று ஜேர்மனிய
கூட்டாட்சி அரசாங்கம் உறுதியளித்துள்ள வரிப்பணத்தைக் கொண்டு மறுகட்டமைக்க
GM தயாராக
இருக்கிறது. "ஜேர்மனிய கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களில் இருந்து பிரத்தியேகமான நிதியத் தொகுப்பு"
என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று
GM கூறியுள்ளது.
ஆனால் பில்லியன் கணக்கான யூரோக்கள்,
GM, Opel
ஆகியவற்றின் தொழில்நுட்பம் ரஷ்யாவிற்கு செல்வதைத் தடைசெய்யும் வகையில் வெளிப்படையாக நிபந்தனைகளை
GM
போட்டுள்ளது இவ்விதத்தில் ஜேர்மனிய அரசாங்கம் கொடுக்கும் நிதிய உத்தரவாதங்கள் ரஷ்யாவிற்கு பொருந்தாது.
"இந்த இருப்புக்கள் புதிய ஓப்பல் நிறுவனம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
ரஷ்யாவில் முதலீடு என்பது மற்ற நிதிய இருப்புக்கள் மூலம் செய்யப்பட வேண்டும்" என்று ஓப்பல் அறக்கட்டளை
ஆலோசனைக் குழுவின் அமெரிக்கப்பிரிவுத் தலைவரான
Frederick வலியுறுத்தினார். ரஷ்யப் பங்காளிகள்
GM ன் காப்புரிமைகளைப்
பயன்படுத்துவது பற்றி தடை செய்யும் அதிகாரம் GM
ற்குக் கொடுக்கப்படும்.
GM ன் செயற்பாடுகளில் ஓப்பல்
தொடர்ந்து ஒருங்கிணைக்கப்படும். இது மாக்னாவுடன் ஒருங்கிணைக்கப்படாது; மாறாக ஒரு சுதந்திர அமைப்பாக
நிர்வகிக்கப்படும். GM
ன் ஐரோப்பிய பிரிவின் தற்போதைய தலைவரும், ஓப்பல் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான
Carl-Peter Forster,
New Opel
ன் தலைவராக வரவிருக்கிறார்.
வல்லுனர் Willi Diez
உடைய கருத்தின்படி, ஓப்பல் தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் கேள்விக்கு உரியது, அது அடுத்த இரண்டு
அல்லது மூன்று ஆண்டுகளில்தான் நிர்ணயமாகும். |