World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Eight years since 9/11

The pretext for a historic shift in world politics

9/11 இன் எட்டு வருடங்களின் பின்னர்

உலக அரசியலில் ஒரு வரலாற்று ரீதியான மாற்றம் நடைபெற்றதற்கான போலிச்சாட்டு

Patrick Martin
11 September 2009

Use this version to print | Send feedback

இன்றைக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 11 2001ல் கிட்டத்தட்ட 2,700 பேர், ஓர் ஒருங்கிணைந்த பயங்கரவாதச் செயலால் உயிரிழந்தனர்; கடத்தப்பட்ட ஜட் விமானங்கள், உலக வணிக மையம், பெண்டகன் மற்றும் பென்சில்வேனியாவின் Shanksveilleக்கு அருகே இருக்கும் வெற்று வயல் ஆகியவற்றில் மோதப்பட்டதால் இது நேர்ந்தது. 9/11 தாக்குதல்களின் சூழ்நிலை பற்றிய சரியான தகவல்கள் இன்றளவும் --தொடர்ச்சியான உத்தியோகபூர்வ வெள்ளைப்பூச்சு விசாரணைகள் நடத்தியும், அல்லது அவற்றினாலேயே-- புதிரில் ஆழ்ந்துள்ளன.

9/11 தாக்குதல் பற்றிய தகவல்களில், மிகக் குறைந்தளவே நம்பக்கூடிய உத்தியோகபூர்வ தகவல் இதுதான்: ஒசாமா பின்லேடன் தேர்ந்தெடுத்து இயக்கிய 18 அரபு பயங்கரவாதிகள், பல மாதங்களில் அமெரிக்காவிற்குள் தங்கி இருந்து, சிலரைப் பொறுத்த வரையில் தனியார் அமெரிக்க விமாù பயிற்சி நிலையங்களில் பரந்த பயிற்சியைப் பெற்ற பின்னர், தங்களையும் தற்கொலை செய்து கொண்டு, வெகுஜன மக்களையும் படுகொலைகளைச் செய்தனர்; அவர்கள் ஏன் அங்கு தங்கியிருந்தார்கள், என்ன நோக்கத்துடன் இது செய்யப்பட்டது என்பது குறித்து, பரந்த அமெரிக்க உளவுத்துறை கருவிக்கு ஏதும் தெரியவில்லை.

பல நிறுவப்பட்டுள்ள உண்மைகள் இந்த கதையை முரண்பாடுகளுக்கு உட்படுத்துகின்றன: செயல்பாட்டு தலைவர் என்ற பெயர் பெற்ற மஹ்மது ஆட்டா உட்பட பல பயங்கரவாதிகள், மற்றும் 9/11 கடத்தல்காரர்கள் எனப்படுபவர்களுமான நவாப் அல்ஹஸ்மி, கலீட் அல்மிடர் மற்றும் ஜியட் ஜாரோ ஆகியோர் தாக்குதல்களைத் தயாரித்து வந்த நேரத்தில், அமெரிக்க உளவுத்துறைகளின் கண்காணிப்பிற்கு உட்பட்டிருந்தனர். "பின்லேடன் அமெரிக்காவிற்குள் தாக்க இருக்கின்றான்" என்ற தலைப்பில் CIAன் குறிப்புடன், ஆகஸ்ட் 6, 2001ல் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷிற்கும் கூறப்பட்ட தகவல் உட்பட, வரவிருக்கும் தாக்குதல் பற்றி அமெரிக்க அரசாங்கம் பல எச்சரிக்கைகளை பெற்றது.

இந்த தாக்குதலுக்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பின் வரலாற்று முன்னுரையும் முக்கியத்துவம் பெறுகிறது: அதாவது, ஆப்கானிஸ்தாQல் ஒரு சோவியத் ஆதரவுடைய ஆட்சியை அகற்றுவதற்கு, அமெரிக்க நிதி ÜOக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஒசாமா பின்லேடனும், அவருடைய பல முக்கிய துணைவர்களும் வாஷிங்டனின் நண்பர்களாகவும், CIAவின் "சொத்துக்களாகவும்" கருதப்பட்டார்கள். Hன்லேடனுடன் ïட்ாகவும், பாதுகாப்பாளராகவும் இருந்த ஆப்கானிய தாலிபன் ஆட்சியும், மறைமுகமாக அமெரிக்க சூழ்ச்சிகளின் தயாரிப்பாக தான் இருந்îது: அதாவது, சோவியத் படைகள் திரும் பெறப்பட்டபின், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு, சோவியத்திற்கு எதிரான 1979-1989 யுத்தத்தில், CIAன் ஒரு முக்கிய கூட்டாளியாக இருந்த பாகிஸ்தானின் உளவுப்படையான ISIஆல் தாலிபான் ஆட்சி உருவாக்கப்பட்டு, ஊக்குவிக்கப்பட்டது.

CIAன்ளவுத்துறை தோல்வி" என்று காங்கிரஸ் மற்றும் செய்தி ஊடகங்களால் குறைகூறபட்டாலும், 9/11 சம்பவமானது, இன்னும் ÜFè முறையில், அமெரிக்க இராணுவம்/உளவுத்துறை கருவியின் ஒரு மட்டத்தில் அறியப்பட்டிருந்த பயங்கரவாதிகள் தங்கள் செயலைச் செய்ய அனுமதிக்è, வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவைத்தான் பிரதிபலிக்கிறது என்று கூற முடியும்; அதையொட்டி அமெரிக்க வெளியுறவு, உள்நாட்டு கொள்கையில் ஒரு தீவிர மாற்றத்தித்தை ஏற்படுத்த தேவையான போலிக்காரணத்தை, அத்தகைய நிகழ்வு மூலம் அளிக்க இயலும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

9/11சம்பவம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்கைகளைப் பொறுத்தவரை சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு முக்கிய கட்டத்தைக் குறித்தது. தேசிய சட்டமன்றத்தில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகளின் முழு ஆதரவுடன் இருந்த புஷ் நிர்வாகம், அமெரிக்காவை ஒரு போர் முகப்பிற்கு கொண்டு வந்தது. ஒவ்வொரு புதிய அடாவ® செயலுக்கும்--படையெடுப்புக்கள், சித்திரவதை, கடத்தல்கள், கொடுஞ்சிறை முகாம்கள், உள்நாட்டு ஒற்று வேலை, அரசியலமைப்பு நெறிகளை மீறல்--"9/11 சம்பவம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது" என்ற கூற்றுடன் எல்லா நோக்கத்திற்கும் பொருந்துமாறு நியாயப்படுத்தப்பட்டது.

தாக்குதல்கள் நடந்த ஒரு மாதத்திற்குள் அமெரிக்கா ஆப்கானிஸ்தானத் தாக்கியது; மூன்று மாதங்களுக்குள் தாலிபன் அகற்றப்பட்டு ஒரு அமெரிக்க ஆதரவு பெற்ற ஆட்சி காபூலில் நிறுவப்பட்டது. 9/11 சம்பவம் நடந்த ஆறு மாதங்களுக்குள் புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிராக போர்புரியும் இறுதி முடிவையும் எடுத்தது; நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல்èÀக்கும், சதாம் ஹுசைÂக்கும் இடையே இருக்கும் (இல்லாத) தொடர்பு பற்றி சேகரிப்பதற்காè, அல்குவேடா கைதிகளைச் சித்திரவதை செய்து தேவைப்படும் "சான்றுகளைப்" பெற சிமிகிக்கு வெள்ளை மாளிகை ஆணைகளைப் பிறப்பித்தது.

9/11சம்பவத்தின் முதலாம் ஆண்டு முடிவடைந்ததைப் பயன்படுத்தி, ஈராக்கிற்கு எதிராக ஐ.நா.பாதுகாப்புக் குழு தீர்மானம் ஒன்றை இயற்ற புஷ் நிர்வாகம் செயல்பட்டது; அதை தொடர்ந்து, ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த செனட் உட்பட காங்கிரஸால் ஈராக்கிற்கு எதிரான போருக்கு அனுமதி வழங்கப்பட்டது. பயங்கரவாதம் பற்றிய இழிவான புலம்பல்களைக் கூறி 2002 தேசிய சட்டமன்ற தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி பெற்றது, 2004ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு முதல் வாரயிறுதியில், பின்லேடனின் அச்சுறுத்தும் வீடியோ ஒன்று, ஒரு முன்னாள் CIA ஒப்பந்தக்காரரால் வசதியாக வெளியிடப்பட்டது, இதனைக் கொண்டு புஷ்ஷூம் அதே போன்ற முறையில் வெற்றி பெற்றார்.

2002TM, "முன்கூட்டி தாக்கி தனதாக்கும் போர்" என்ற புதிய கோட்பாட்டைத் தளமாகக் கொண்ட ஒரு ேதசிய பாதுகாப்பு மூலோபாயம் ஏற்கப்பட்டது, இதுவொரு முக்கியமான வெளிப்பாாகும். அமெரிக்è பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று கருதப்பட்டால், வாஷிங்டன் அந்நாட்டிற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்ற வாஷிங்டனில் உரிமையையும், விருப்பத்தயும் அது பறைசாற்றியது. சட்டத்திற்குட்பட்ட வகையில் வெளியுறவு கொள்கையின் ஒரு கருவியாக ஆக்ரோஷமான போரைத் தீவிரப்படுத்தி கொண்டு, 1946ல் நியூரெம்பெர்க் யுத்த குற்ற நீதிமன்றத்தால் குற்றங்கள் என்று நிராகரிக்கப்பட்ட கருத்தாய்வுகளை அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு அஸ்திவாரங்களாக கொண்டு வெள்ளை மாளிகை ஆணைகளை கொடுத்து வந்தது.

புஷ்-ஷென்னி உட்குழு இதில் தலைமையை எடுத்துக் கொண்டது; இது ஒரு நிர்வாகம் அல்லது ஒரு நாட்டின் கொள்கையை வெறுமே மாற்றிய கோட்பாடு மட்டுTMô; மாறாக, உலக வரலாற்று பரிமாணங்களுடன் தொடர்புபட்ட ஒரு பெரும் மாற்றமாகும். மற்ற ஏகாதிபத்திய நாடுகள் குறிப்பாக பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை இதேபோன்ற போக்கை முன்பு செயல்படுத்திக்கமளித்தன. பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை ஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல்களில் சேர்ந்து கொண்டன. ஆப்கானிஸ்தான் போரில் முழு நேட்டோவும் பங்கு பெற்றது; இது வட அட்லாண்டிக்கில் இருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து வந்துள்ளது. ஜேர்மனியும், ஜப்பானும் இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு, முதல்முறையாக தங்கள் போர்வீரர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தன. பேர்சிய வளைகுடாவிலும், மத்திய ஆசியாவிலும் அமெரிக்க இராணுவ சக்தி வெளிப்படுவதைப் பார்த்து, ரஷ்யாவும், சீனாவும் அவற்றின் சொந்த இராணுவ முகாமை அதற்கு எதிர்ப்பாக அங்கு நிறுவின.

சர்வதேச உறவுகளில் ஏற்பட்ட இந்î பரந்த மாறுதல்களின் ஆதாரமானது, செப்டம்பர் 11, 2001 நிகழ்வுகளை ஒட்டியதல்ல. இவை ஒரு பரந்த வரலாற்று பின்னணியில் வைத்து பார்க்கப்பட வேண்டும். இவற்றின் உண்மையான மூலங்கள், சோவியத் முகாமின் சரிவு, டிசம்பர் 1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு ஆகியவற்றின் பின்புலத்தில் இருக்கிறது; அமெரிக்க ஆளும் உயரடுக்கு இவற்றை அதன் இராணுவ சக்தியின் வரம்பற்ற தாக்குதல்களுக்கு èாட்டப்பட்ட ஒரு பச்சை விளக்காக எடுத்து கொண்டது.

1990கள் முழுவதும் வலதுசாரி சிந்தனைக் குழுக்கள் வாதிட்டிருந்த கொள்கைகள், உத்தியோகபூர்வமான கோட்பாடுகளாகும் என்று பொதுமக்களை ஏற்க செய்வதற்காக 9/11 நிகழ்வுகள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்க முதலாளித்துவத்தின் பொருளாதார நிலை பெரும் சரிவிற்குட்பட்டிருந்த நிலையில், வாஷிங்டனும் வோல்ஸ்ட்ரீட்டும் தங்களின் உலகளாவிய நலன்களைப் பெருக்குவதிற்கு, வலிமையைப் பயன்படுத்துவதுதான் ஒரேவழி என்று கண்டன. ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் இருக்கும் அவற்றின் ஏகாதிபத்திய போட்டி நாடுகள், இதையொட்டி அவர்களின் சொந்த இராணுவ சக்தியை உறுதிப்படுத்த ஊக்கம் பெற்றன.

அமெரிக்க ஏகாதிபத்திய செல்வாக்கின் விரிவாக்கத்திற்கு, மிக வெளிப்படையான வாய்ப்புக்கள், முன்னாள் சோவியத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்தன-அதாவது, மேற்கில் -பொஸ்னியா மற்றும் கொசோவோவிலிருந்து, காகசஸ், ஈராக், ஈரான், மத்திய ஆசியா வரையிலும், மற்றும் கிழக்Aல் கொரியா வரையிலான பகுதிகளில் இருந்தன. இைவ தான், ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களின் கீழ், கடந்த இரு தசாப்தங்களாக, அமெரிக்க வெளியுறவு கொள்கையில் நெருப்பைக் கக்கும் இடங்களாè உள்ளன.

இந்த ஏகாதிபத்திய கொள்கைகளிலிருக்கும் உலகளாவிய வரலாற்று தன்மை பொருந்திய மாற்றம், ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளில் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சி 2006ல் காங்கிரசின் கட்டுப்பாட்டைப் பெற்றதற்கு அதிகமான காரணம், ஈராக்கில் நடந்த போர் மீதான மக்கள் பெரும் எதிர்ப்பு தான். அந்த போர் எதிர்ப்பு உணர்வை, ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலிTM ஹில்லாரி கிளிண்டனைத் தோற்கடிக்க ஒபாமா பயன்படுத்தி கொண்டார்.

ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முன்னர் "நம்பிக்கை", "மாற்றம்" என்றெல்லாம் அதிகமாக கூறியவர், மீண்டும் புஷ்ஷின் நிர்வாகத்தில் பெண்டகன் தலைவராக இருந்த ரோபர்ட் கேட்ஸை நியமித்ததுடன், கிளின்டனையும் தன்னுடைய வெளியுறவுத்துறை மந்திரியாக நியமித்தார். பதவியேற்ற ஒரு சில வாரங்களில், ஈராக்கில் புஷ் நிர்வாகம் நிறுவியிருந்த அமெரிக்è படைகள் பற்றிய திட்டத்தைத் தக்கவைக்è போவதாக அறிவித்த ஒபாமா, ஆப்கானிஸ்தாQல் அமெரிக்க குறுக்கீட்டைப் பெரிதும் அதிகரிக்கும் வகையில், கூடுதலாக 17,000 துருப்புக்களை அனுப்ப இருப்பதாகவும் அறிவித்தார்.

ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை தளமாகக் கொண்டு, தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யாததால், புதிய ஏகாதிபத்திய போர்களுக்கு வழிவகுக்கும் போக்கில், தவிர்க்க முடியாத வகையில் உலகம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு முழு நனவுடன் கூடிய சர்வதேச சக்தியாக தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதுதான் தற்போதைய உடனடித் தேவையாக உள்ளது, அதை தான் உலக சோசலிச வலைத் தளமும் விரும்புகிறது; யுத்தங்களுக்கு Üடிப்படை காரணமாக அமையும் முதலாளித்துவம், தேசிய அரசு-முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுங்கை முடிவுக்கு கொண்டுருவதன் மூலம், உலகம் எதிர்கொள்ளும் யுத்த அச்சுறுத்தல்களை நிறுத்த முடியும்.

கட்டுரையாளர் கீழ்காணும் கட்டுரைகளையும் பரிந்துரைக்கிறார்

9/11 ல் இருந்து ஐந்து ஆண்டுகள்: ஓர் அரசியல் ஐந்தொகை