World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Against European calls for UN conference on Afghanistan

ஆப்கானிஸ்தான் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டிற்கு ஐரோப்பிய அழைப்புக்களை எதிர்

Alex Lantier
8 September 2009

Use this version to print | Send feedback

ஞாயிறன்று ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் கூடி பேர்லினில் அறிவித்துள்ள அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டின் கூட்டத்திற்கான திட்டம், ஆப்கானிய மக்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் இயக்கப்படும் ஒரு அரசியல் மோசடி ஆகும்.

ஐரோப்பிய சக்திகள் அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு மக்கள் எதிர்ப்பை திசைதிருப்பும் விதத்தில் ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை தாங்கள் வாஷிங்டனுடனான ஒத்துழைப்பிற்கு தொடர்ந்து ஒத்துழைக்கும் விதத்தில் நாடுவதற்கு செயல்படுகின்றன.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஜேர்மனியத் துருப்புக்களின் எண்ணிக்கையை 4,200ல் இருந்து 6,000 க்கு உயர்த்துவதற்காக மேர்க்கெலை கோருவதுதான் பிரெளனின் பேர்லின் பயணத்தின் நோக்கம் ஆகும். ஆனால் பிரிட்டிஷ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளபடி, பிரெளனின் கோரிக்கைக்கு பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுதல் செப்டம்பர் 27 ஜேர்மனிய தேசியத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள மேர்க்கெலை பொறுத்தவரையில் "தேர்தல் தற்கொலைக்கு" ஒப்பாகும்.

ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் மற்றும் அமெரிக்காவிலும் மக்கள் எதிர்ப்பு பெருகிவருகிறது. ஜூலை மாதக் கருத்துக் கணிப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுப் படைகளை திரும்பப் பெறுவதற்கு ஜேர்மனியில் 62 சதவிகிதமும் பிரிட்டனில் 52 சதவிகிதமும் மக்கள் ஆதரவைக் காட்டின.

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியுடன் தாங்களும் சேர்ந்து ஐ.நா. தலைமைச் செயலர் பான் கி-மூனிடம் ஆப்கானிஸ்தான் பற்றி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு ஐ.நா. கூட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்கப்போவதாக பிரெளனும் மேர்க்கெலும் அறிவித்துள்ளனர். அவர்கள் கருத்துக்கள் தெளிவாக்கியுள்ளது போல் இம்மாநாட்டின் நோக்கம் ஆப்கானியப் போரில் மேலும் அதிகமாக தலையீட்டை ஒழுங்கமைப்பதுதுதான்.

இதன் நோக்கம் ஆப்கானிய போலீஸ் மற்றும் இராணுவப் படைகள் "முறையான ஆதரவில்" கட்டமைக்கப்படுதல் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதாகும் என்று பிரெளன் கூறினார். டெளனிங் தெரு அதிகாரிகள் இம்மாநாடு காபூல் அல்லது லண்டனில் நடைபெறும் என்று கூறினர்.

மேர்க்கெல் "ஆப்கானிஸ்தானில் ஒரு நீடித்த பாதுகாப்பு கட்டமைப்பு தேவை என்பதை மறந்துவிடக் கூடாது என்பதுதான் இலக்கு.... இவ்விஷயத்தில் நமக்கு தீர்ம்னகரமான முன்னேற்றம் தேவை. அதுவும் ஆப்கானியர்கள் கூடுதல் பொறுப்பை எடுத்துக் கொள்ளும்போது, நாம் நம் சர்வதேச செயற்பாட்டைக் குறைத்துக் கொள்ள முடியும்." என அறிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் போரை நியாயப்படுத்தும் விதத்தில் உள்ள கருத்துக்கள் மதிப்பிழந்திருப்பதற்கு நடுவே இத்தகைய நியாயப்படுத்தல்கள், அனைத்து போர் எதிர்ப்பு உணர்வுகளையும் வெட்கம் கெட்டதனமாக காலடியில் போட்டு மிதிக்கின்றன. போரைத் தொடக்கியதற்கு அமெரிக்க அரசாங்கம் கூறிய நோக்கமான செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களை ஒழுங்கமைத்ததற்கு குற்றம்சாட்டப்பட்டுள்ள அல் குவைடாவின் வலைப்பின்னலின் தலைவர் ஒசாமா பின் லேடனைப் பிடித்தல் என்பது, அமெரிக்கா அவரைத் பின்தொடர்ந்து 2001ல் எப்படியோ அவர் தப்பியதில் இருந்து அவ்வப்பொழுதுதான் கூறப்படுகிறது. அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாயியுடைய கைப்பாவை அரசாங்கம் வாக்குப் பதிவில் செய்துள்ள மோசடிகள் பற்றி மேலை செய்தி ஊடகங்கள் கூறியுள்ளவை ஆப்கானிஸ்தானில் ஜனநாயக்திற்கான போர் என்ற மேற்கின் கூற்றில் உள்ள மோசடித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஆயினும்கூட, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் ஆளும்வர்க்கம் போர் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. சமீபத்தில் ஒபாமா நிர்வாகம் பெரியளவு தாக்குதல்கள் படையினரால் ஹெல்மாண்ட் பள்ளத்தாக்கில் மேற்கோள்ளப்படுவதை தொடங்கியது. மேலும் 21,000 கூடுதல் அமெரிக்கத் துருப்புக்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப உள்ளதுடன், இந்த எண்ணிக்கையும் இன்னும் அதிகமாக்கப்படக்கூடும்.

ஆப்கானிய போரின் மற்றொரு குற்றம் வாய்ந்த தன்மையின் நிரூபணம் செடம்பர் 4 அன்று நடந்த குண்டுவீச்சுக் கொடூரமாகும். இதில் ஜேர்மனிய, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸ் பகுதியில் தொடர்பு கொண்டிருந்தன.

தலிபான் படைகளால் பிடிக்கப்பட்டு பின் கைவிடப்பட்ட எரிபொருள் டிரக்குகளை மீட்கத் துருப்புக்களை அனுப்புவதற்கு பதிலாக, குண்டுஸுக்கு அருகில் இருந்த உள்ளூர் ஜேர்மனிய தளபதி அமெரிக்க போர் விமானங்களை அவர்கள் மீது குண்டுவீச ஏற்பாடு செய்தார். உள்ளுர்த் தகவல்கள்படி, ஏராளமான சாதாரண குடிமக்கள் உட்பட 130 ஆப்கானிய மக்கள் கொல்லப்பட்டனர். டிரக்குகளில் இருந்து எரிபொருளை எடுக்க முற்பட்டவர்களும் அடங்குவர். இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனி தோல்வி அடைந்த பின்னர் ஒரு ஜேர்மனிய இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கையில் இது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை கொடுத்துள்ளது.

இந்தப் படுகொலை ஜேர்மனிய தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு அரசியல் பிரச்சினையாகி உள்ளது. ஜேர்மனிய தளபதி போரில் நேட்டோ விதிகளை மீறியதாக அமெரிக்க அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டபின் இந்நிலை வந்துள்ளது. ஜேர்மனிய வெளியுறவு அமைச்சரகத்தின் அதிகாரிகள் இழிந்த முறையில் குண்டுவீச்சில் சாதாரண மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்ற அபத்தமான நிலைப்பாட்டை இழிவுடன் கொண்டுள்ளனர்.

முழுப் போரும் ஆப்கானிஸ்தானை காலனித்துவ நாடாக்கும் அப்பட்டமான ஏகாதிபத்திய முயற்சி என்ற குற்றச்சாட்டை எடுத்துக்காட்டுகிறது. செப்டம்பர் 11 தக்குதல்கள் அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்களை மத்திய ஆசியாவின் எண்ணெய் வளத்திற்கு நுழைவாயில் இருக்கும் நாட்டில் நிலைநிறுத்த வசதியான போலிக்காரணமாக பயன்படுத்தப்பட்டன. அது பெருகிய முறையில் யூரேசிய மூலோபாய, வணிக சமநிலையில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

இது பாரிய ஆபத்துக்களை ஆப்கானிய மக்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் கொடுக்கிறது. பிரெளன், மேர்க்கெல் மற்றும் சார்க்கோசி ஆகியோர் இன்னும் கூடுதலான ஐரோப்பிய துருப்புக்களை தலையிட செய்வது, உலகின் பெரும் சக்திகளுக்கு இடையிலான ஒரு நேரடி மோதலின் தன்மையை அடையும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

பாக்கிஸ்தானிய எல்லைப் பகுதிகளில் இருக்கும் ஆப்கானிய எழுச்சிப் போராளிகளுக்கு ஆதரவு உள்ளது என மேற்கோளிட்ட ஒபாமா நிர்வாகம் ஆப்கானிய போரைப் பயன்படுத்தி அண்டை நாடான பாக்கிஸ்தானிலும் இராணுவ நடவடிக்கைகளை தொடக்கியுள்ளது. பாக்கிஸ்தானும் அதன் பெரும் எதிரியுமான இந்தியாவும் அதிகரித்தவகையில் ஆப்கானிஸ்தானில் அரசியல் செல்வாக்கிற்கு போட்டியிடுகின்றன. இது பாக்கிஸ்தானின் நட்புநாடான சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே அழுத்தங்களை அதிகரித்துள்ளது. இந்தியாவை ஆசியாவில் சீனாவிற்கு எதிராக மாற்று கனமாக கட்டமைக்க அமெரிக்கா முற்பட்டுள்ளது. அதற்கு இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் என்று கடந்த நவம்பர் மாதம் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் பல வழிவகைகளில் ஒன்றாகும்.

அதே நேரத்தில் மத்திய ஆசியாவின் எரிசக்தி இருப்புக்களை காகசஸ் வழியே உள்ள ஏற்றுமதி பாதைகளுக்கான கட்டுப்பாடு பற்றி ஏற்கனவே அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு மறைமுகமான போர் ஆரம்பித்துவிட்டது. ஆகஸ்ட் 2008ல் வாஷிங்டன் ஜோர்ஜிய அரசாங்கத்தை தெற்கு ஓசேஷியாவில் இருக்கும் ரஷியப் படைகளைத் தாக்க ஊக்கம் கொடுத்தது. ஒபாமா நிர்வாகம் ஜோர்ஜியா மற்றும் உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் முயற்சிகளைத் தொடர்கிறது. ஆனால் இதற்கு ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட, பல நேட்டோ உறுப்பு நாடுகளின் எதிர்ப்பு உள்ளது.

இத்தகைய எழுச்சி பெற்றுள்ள நெருக்கடிகள் ஐயத்திற்கிடமின்றி ஒரு மாநாட்டை ஆரம்பிக்கும் முடிவில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இதில் ஐரோப்பிய சக்திகள் தங்கள் சொந்த எரிபொருள், பாதுகாப்பு மற்ற பெருநிறுவன நலன்களுக்காக வாஷிங்டனுடன் பேரம் பேசக்கூடியதாக இருக்கும்.

ஆனால் ஆப்கானிய போரில் பங்கு பெறுவது என்பது பெருமளவிற்கு ஐரோப்பிய சக்திகள் அமெரிக்காவுடன் தங்கள் கூட்டை தொடரும் முயற்சிதான். உலகின் காவலாளி என்ற முறையில் உள்ள வாஷிங்டனை நம்பியுள்ள ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் அதற்கு முற்றிலும் இணங்க நடந்துகொள்ளும் விதத்தில், புஷ் நிர்வாகத்தின் கொள்கைக்கு அடையாளமாக இருந்த அமெரிக்க ஒரு தலைப்பட்ச முடிவெடுத்தல் என்ற அச்சுறுத்தல் மீண்டும் வருவதை விரும்பவில்லை. அவற்றின் இலக்கு வாஷிங்டனின் இணக்கத்துடன் போரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதுதான்.

இத்தகைய ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இழிந்த, இராணுவவாத கொள்கைகளை தொழிலாளர்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். உடனடியாக நிபந்தனையற்ற விதத்தில் ஆப்கானிஸ்தானத்தில் இருந்து அனைத்து வெளிநாட்டுப் படைகளும் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட வேண்டும்.

போருக்கு எதிரான போராட்டம் என்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு அழைப்புவிடும் ஒரு புரட்சிகர, சோசலிசத் தன்மையை தளமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆயுதங்கள் மற்றும் துருப்புக்களை அனுப்பவதற்கு செலவழிக்கப்படும் இலட்சக்கணக்கான பணம் எல்லா ஆக்கிரமிப்பு நாடுகளிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திடம் இருந்துதான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெரிய வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட டிரில்லியன்களை விட மேலதிகமானவையாகும். பொருளாதார செலவினங்களைத் தவிர தொழிலாளர்கள் வரவிருக்கும் போர்களில் இறப்புக்கள், அழிவுகள் ஆகிவற்றின் கொடுமையையும் எதிர்கொள்ளுவர். பெருகிய முறையில் இவை பேரழிவு விளைவுகளைத் தரும் உலகந்தழுவிய மோதலைப் பற்ற வைக்கும் போல் உள்ளன.

போருக்கு எதிரான தொழிலாளர்கள் இயக்கம் ஏதும் 2002-2003 ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர் எதிர்ப்பு இயக்கத்தின் தோல்வியின் கசப்பான படிப்பினைகளை அறியாமல் வளர்க்கப்பட முடியாது. சர்வதேச எதிர்ப்பு மிகப் பெரிய முறையில் போருக்கு எதிராக இருந்தும், வரலாற்றிலேயே மிகப் பெரியளவில் ஒருங்கிணைந்த முறையில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது என்றாலும் மிருகத்தனமான போர் தொடங்கியது. ஈராக்கிய ஆக்கிரமிப்பு இன்றும் ஒபாமா நிர்வாகத்தின்கீழ், அனைத்து ஐரோப்பிய சக்திகளின் உடந்தையுடனும் தொடர்கிறது.

2002-2003 இயக்கம் செயலற்ற தன்மையைக் கொண்டிருந்ததற்கு காரணம் அவ்வியக்கம் முதலாளித்துவத்திற்கும் மற்றும் அதன் கட்சிகளுக்கும் அரசியல் ரீதியாக அடிபணிந்திருந்ததாகும். அமெரிக்காவில் நடந்த ஆர்ப்பாட்டங்களில், இன்று ஆப்கானிஸ்தானத்திலும் ஈராக்கிலும் போர்களை நடத்துகின்ற அதே ஜனநாயகக் கட்சித் தலைவர்களால் உரைகள் வளங்கப்பட்டன. ஐரோப்பிய ஆர்ப்பாட்டங்களில் யுத்தத்தை நிறுத்துவதற்கான கூட்டு போன்ற அமைப்புக்கள் "Viva la France" போன்ற கோஷங்களை எழுப்பின. அந்த அரசாங்கம் அப்பொழுது தற்காலிகமாக அமெரிக்கப் போர் உந்துதலை ஐ.நா.வில் எதிர்த்திருந்தது. இன்று பிரான்ஸ் கிட்டத்தட்ட 3,000 துருப்புக்களை ஆப்கானிஸ்தானத்தில் கொண்டுள்ளது.

இந்த இடைப்பட்ட ஆறாண்டு காலத்தில் இந்த எதிர்ப்புக்களை முன்னெடுத்து வழிநடத்திய மத்தியதர வர்க்க அமைப்புக்கள் உறுதியாக வலதுபக்கம் மாறியுள்ளன. அமெரிக்காவில் அவை ஒபாமா நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்துவிட்டன. அரசாங்கத்திற்கு அவர்கள் காட்டும் ஆதரவு, ஆப்கானிய போரின் விரிவாக்கத்திற்கான அரசியல் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஐரோப்பாவில், அவர்கள் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் பெருகிய முறையில் அரசாங்கம் அல்லது அதை உடனடியாக சூழ்ந்துள்ள அமைப்புக்களுக்கு வந்துள்ளனர். இது மிக முக்கியமான முறையில் மேலை செய்தி ஊடகப் பிரச்சாரம் ஜூன் மாதம் ஈரானிய தேர்தல்களில் ஈரானிய ஜனாதிபதி தேர்தலில் தோற்ற வேட்பாளர் மீர் ஹொசைன் மெளசவிக்கு பெரும் ஆதரவாக இருப்பதன் மூலம் அடையாளம் காட்டப்படுகின்றது.

முதலாளித்துவத்தினதும் மற்றும் மத்தியதர வர்க்க முன்னாள் தீவிரவாதிகளினதும் போருக்கான எதிர்ப்பின் வீழ்ச்சி என்பது எதிர்வரவிருக்கும் போர் எதிர்ப்பு இயக்கங்களில் தொழிலாள வர்க்கம் ஒரு மத்திய சமூக சக்தியாக வெளிப்படுவதற்கு வழிவகுக்கிறது. நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அத்தகைய இயக்கத்திற்கான அரசியல் தயாரிப்பு பணியை தனதாக வரித்துக் கொண்டுள்ளது.