World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The real agenda behind Obama's health care "reform"

ஒபாமாவின் சுகாதார பாதுகாப்புச் "சீர்திருத்தத்தின்" பின்னணியில் உள்ள உண்மை செயற்பட்டியல்

By Jerry White
11 September 2009

Use this version to print | Send feedback

மக்களுக்கென்று ஒரு கருத்தும், ஆளும் உயரடுக்கிற்கு மற்றொரு கருத்தும் என்ற விதத்தில் தலைமை நிர்வாகி பேசுகையில், அமெரிக்காவில் முக்கிய ஜனாதிபதி உரைகள் சில அரசியல் மனச்சிதைவுகளின் கூறுபாடுகளைக் கொண்டிருப்பதாக பாத்திரப்படுத்தப்படுகிறது. புதன் இரவு சுகாதாரப் பாதுகாப்பு பற்றி ஒபாமா நிகழ்த்திய உரையும் உறுதியாக இப்படித்தான் இருந்தது.

மருத்துவ கவனிப்புகள் குறைந்துவிடும் என்று கவலை கொண்டுள்ள ஏராளமான மூத்த குடிமக்கள் உட்பட, பெருகிய முறையில் அவநம்பிக்கை கொண்டிருக்கும் மக்களுக்கு, ஒபாமா தன்னுடைய திட்டத்தை "ஒரு முன்னேற்ற" நடவடிக்கை என்றும், காப்பீடு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பை விரிவுபடுத்துவதையும், இலாபம் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படாத பெரிய காப்பீட்டாளர்களின் சமூக விரோத செயல்களைத் தடுக்கும் நோக்கத்தையும் கொண்டது என்றும் கூறி அளித்துள்ளார்.

உண்மையிலேயே வாஷிங்டனில் வலுபெற்றிருக்கும் மக்களுக்கு -- அமெரிக்க ஆளும் உயரடுக்கும் மற்றும் இரு கட்சிகளிலும் இருக்கும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் -- ஒபாமா நேரடியாக கூறவேண்டியதைக் கூறினார். மருத்துவப் பாதுகாப்பு, மருத்து உதவி உட்பட சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்கள் உயர்ந்து வருவது தேசிய பட்ஜெட்டில் பெரும் இழப்பை அளித்து வருவதுடன், அமெரிக்க பெருநிறுவனங்களைப் போட்டியிழக்கும் தன்மையிலும் தள்ளுகிறது. "வீணடித்தல், தவறாகப் பயன்படுத்துதல்" ஆகியவற்றைக் குறைத்து, திறமையை அதிகரிக்கும் வகையில் எந்த சோதனைகள், சிகிச்சைகள் நோயாளிகளுக்கு டாக்டர்கள் அளிக்க வேண்டும் என்பதை உச்ச வரம்பிற்கு உட்படுத்துவதின் மூலம் சுகாதாரப் பாதுகாப்புச் செலவுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பில்லியன்கள் காப்பாற்றப்பட முடியும்.

முதலாளித்துவ சந்தை செயற்பாடுகளுக்கும், இலாபத்திற்காக மருந்து தயாரிக்கப்படல் என்ற கோட்பாட்டிற்கும் குழிபறிக்கும் வகையில், "அரசாங்கமயமாக்கல்" என்பதற்கு முற்றிலும் மாறாக, தமது திட்டம் பெரிய சுகாதார பாதுகாப்பு ஏகபோக உரிமைகளின் செயல்களில் குறுக்கிடாது என்று ஒபாமா ஆளும் உயரடுக்கிற்கு உறுதியளித்தார்.

"நம்முடைய பொருளாதாரத்தில் ஆறில் ஒரு பங்கை சுகாதாரப் பாதுகாப்பு பிரதிபலிக்கிறது", ஒரு புதியமுறையைத் தொடக்கத்தில் இருந்து கட்டமைப்பதைவிட செயல்படக் கூடியதைக் கட்டமைத்து, செயல்படாததை சரி செய்வது தான் சிறந்தது" என்று அறிவித்ததன் மூலம், ஒபாமா வெளிப்படையாக "கனடாவில் இருப்பது போன்ற ஒரு முறை கட்டணம் (single-payer system) செலுத்தும்" திட்டத்தை நிராகரித்தார். தனியார் காப்பீட்டாளர்களை எதிர்க்கப்படும் "மக்கள் விருப்பம்" என்றழைக்கப்படுவதற்கு தமது ஆதரவைக் கைவிட விரும்புவதாக்கவும் அவர் தெளிவுபடுத்தினார்.

வோல் ஸ்ட்ரீட்டும், பெரும் காப்பீட்டாளர்களும் இத்தகவல் கிடைத்தது. அவர் உரையாற்றிய மறுநாள், சுகாதார காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தன: United Health 17 சென்டுகள் உயர்ந்து $28.57 என்று ஆயிற்று; Well Point 96 சென்டுகள் உயர்ந்து $53.80 என்று ஆயிற்று; கிமீtணீஸீணீ 59 செட்டுகள் உயர்ந்து $29.94 ஐ அடைந்தது; Humana $1.12 உயர்ந்து $39.19 ஆயிற்று. Dow Jones Industrial Average ஐந்து நாட்கள் தொடர்ந்து எழுச்சி பெற்றதைத் தொடர்ந்து அக்டோபருக்கு பின்னர் மிக உயர்ந்த அளவில் முடிந்தது.

"நிர்வகிக்கப்படும் பாதுகாப்பு பங்குகள் கடந்த வசந்த காலத்தில் ஒபாமா தேர்தலுக்குப் பின் இலாபத்தில் சரிவைக் கண்டன" என்று முதலீட்டாளர்கள் வலைத்தளம் Smartmoney.com கூறியது; "ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் இரட்டை இலக்க இலாபங்களைப் பெற்றன; ஏனெனில் ஒரு பெரிய அரசாங்க காப்பீட்டுத் திட்டம் வருவதற்கான வாய்ப்புக்கள் குறைந்துவிட்டது. முதலீட்டாளர்களின் உணர்வை புதனன்று ஒபாமா நிகழ்த்திய உரை மாற்றிவிடவில்லை."

அமெரிக்க முதலாளித்துவ முறையின் நீண்ட கால நலன்கள் ஜனநாயக, குடியரசுக் கட்சியினரின் அரசியல் திரித்தல்களை மீறி இருக்க வேண்டும் என்று கூறி தன்னுடைய உரையை ஒபாமா தொடங்கினார். காங்கிரஸில் இதற்கு முன்னதாக பேசுகையில், "இந்த நாடு பெரும் மந்த நிலைக்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது, நம்முடைய நிதிய முறை சரிவின் விளிம்பில் உள்ளது" என்று கூறியதைக் குறிப்பிட்டார்.

இச்சூழலில், பரந்த அளவில் மக்கள் எதிர்ப்பு இருந்த போதிலும்கூட, கட்சி வேறுபாடுகள் பெரிதும் ஒதுக்கப்பட்டு, இரு கட்சிகளும் இன்னும் கூடுதலாக வங்கிப் பிணையெடுப்புக்களுக்கு வாக்களித்தனர். "உங்களின் முயற்சிகளையும், ஆதரவுகளையும் பல மாதங்களாக தொடர்ந்து அளித்து வருவதற்கும், குறிப்பாக மீட்பு நடவடிக்கைகளில் நம்மை கொண்டு செல்லுவதற்கும் தங்களின் முக்கியமான வாக்குகளை அளித்தவர்களுக்கும், இந்த மன்றத்தின் உறுப்பினர்களுக்கும் என் நன்றியைக் கூற விரும்புகிறேன்" என்றார் ஒபாமா.

சுகாதார பாதுகாப்பு செலவினங்களை கட்டுப்படுத்துதல் அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்கு மிக அவசியம் என்று வலியுறுத்திய அவர், "நீண்ட கால சவாலைத் தீர்ப்பதற்கு நாட்டிற்கு கிடைத்துள்ள வாய்ப்பை இழந்தாலும், குறுகிய கால அரசியல் கருத்துக்களில் வெற்றி பெறுவதற்கான" வாதங்களைப் பயன்படுத்துவதற்காக குடியரசுக் கட்சியினரை அவர் கடிந்த கொண்டார்.

சுகாதார காப்பீடு இல்லாமல் உண்மையான நெருக்கடியை எதிர்கொள்ளும் மில்லியன் கணக்கான குடும்பங்கள், குறித்தும் அல்லது பெரிதும் உயர்ந்துவிட்ட காப்பீட்டு கட்டணங்களால் திவாலாகிவிட்டவர்களைப் பற்றியும் கூறுவதற்கு ஒபாமா ஒரு சில கணங்களை எடுத்துக் கொண்டார். அதன் பின் அவர் முக்கிய கருத்திற்கு விரைவாகத் திரும்பினார்: அதாவது உயரும் சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்கள் அமெரிக்க பெருநிறுவனங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன, அமெரிக்க அரசாங்கத்தின் திவால்தன்மையைக்கூட அச்சுறுத்துகின்றன என்றார்.

"ஊதியங்களைவிட மூன்று மடங்கு அதிகமாக காப்பீட்டு கட்டணங்கள் உயர்ந்துவிட்டன" என்று கூறிய அவர், "சர்வதேச அளவில் போட்டியிடும் அமெரிக்கப் பெருநிறுவனங்கள் --நம்முடைய கார்த்தயாரிப்பாளர்கள் போல்--மிகப் பெரிய நலன்கள் இழப்பில் உள்ளனர்." என்றும் சேர்த்துக் கொண்டார்.

இது நீண்ட நாளாகவே பெருநிறுவன அமெரிக்காவின் முக்கிய புகாராக இருந்து வருகிறது. 1974ல் இருந்து 2008க்குள் உற்பத்தித்துறையின் உண்மையான ஊதியங்கள் 5.38 சதவிகிதம் குறைந்தன; ஆனால் பெருவணிகம் இத்தகைய தொழிலாளர்களின் ஊதியங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து முழுமையாக பலனடைய முடியவில்லை; இதற்கு காரணம், குறிப்பாக ஓய்விற்குப் பிறகு நீண்ட நாட்கள் வாழும் தொழிலாளர்களினால், அதிகரித்துவிட்டிருக்கும் மருத்துவ செலவினங்கள்.

2005 ல் மாபெரும் கார் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Delphi ன் தலைமை நிர்வாக அதிகாரி Steve Miller கூறுகையில், தொழிலாளர்கள் 65 வயதில் ஓய்வு பெற்று 70 வயதில் இப்பொழுதெல்லாம் இறப்பதில்லை என்றும், உயிர் வாழ்ந்து நிறுவனங்களுக்கு இலாபம் சம்பாதித்துக் கொடுப்பதை நிறுத்திக் கொண்டு, பல தசாப்தங்கள் உயிர் வாழ்ந்து சுகாதாரப் பாதுகாப்பு நலன்களைப் பெறுகின்றனர் என்றும் புலம்பினார். (கார்த்தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் நலன்கள் மீது தாக்குதல்களை வழி நடத்த உதவிய மில்லர், ஒபாமாவின் முக்கிய சுகாதாரப் பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான Ezkiel Emanuel உடைய சமீபத்திய புத்தகம் ஒன்றின் முதல் அட்டையில் இவ்வாறு மேற்கோளிடப்பட்டுள்ளார்.")

ஒபாமா நிர்வாகத்தின் உண்மை செயற்பட்டியல், ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்பரின் பலவந்தமான திவால்களில் காணப்படலாம்; இவற்றில் நூறாயிரக்கணக்கான ஓய்வு பெற்றவர்கள், அவர்கள் குடும்பங்கள் அவர்களின் பல், கண் பாதுகாப்பை இழுந்துவிட்டதுடன், கூடுதலான கட்டணம், இணைக்கட்டணமும் செலுத்தும் கட்டாயத்தில் உள்ளனர். மறுசீரமைக்கப்பட்ட நிறுவனங்கள் "மரபிய" செலவுகளிலிருந்து பெரிதும் அகற்றப்பட்டுவிடும்; அதாவது இந்நிறுவனங்களுக்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்த தொழிலாளர்களுக்கு சொந்தமான சுகாதார பாதுகாப்பு பொறுப்புகள்.

தம் திட்டத்திற்கு நிதி திரட்ட, "மருத்துவ காப்பீட்டு நிஊவனங்களின் மிக அதிக செலவுடைய காப்பீட்டுத் திட்டங்களுக்கு" ஒரு கட்டணமோ அல்லது வரியோ சுமத்த இருப்பதாக ஒபாமா தம் உரையில் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் கட்டாயமாக காப்பீடு வாங்க வேண்டிய புதிய அலையென வரும் வாடிக்கையாளர்களிடமிருந்து, நிறுவனங்கள் பெரும் பரந்த இலாபங்களில் சிறிதேனும் இதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று ஒபாமா கூறினார். உண்மையில், இந்த நடவடிக்கை பெருநிறுவனங்கள் ஊழியர்கள் கொடுக்கும் நலன்களை அகற்ற, அல்லது தீவிரமாகக் குறைக்கதான் உந்துதல் கொடுக்கும்; ஏனெனில் கட்டணச் செலவுகளை பெருநிறுவனங்கள் பிரிமிய உயர்வின் மூலம் தான் ஈடுகட்டும்.

நியூயோர்க் டைம்ஸின் கருத்துப்படி, முதலில் மாசாச்சூசட்ஸ் (Massachusetts) ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோன் கெர்ரி அறிமுகப்படுத்திய இத்திட்டம், "முதலாளிகள் தொழிலாளர்களுக்கு மலிவான, தாராள குறைவான கவனிப்புகளை அளிப்பதற்கு தான் ஊக்கமளிக்கும்; இதையொட்டி மருந்துவ பணிகளில் அதிகப் பயன்பாடு குறைக்கப்பட்டுவிடும்."

மேலும், செனட்டின் நிதிக்குழு தலைவரான மோன்டனாவில் (Montana) ஜனநாயக கட்சி உறுப்பினரான Max Baucus தயாரித்துள்ள சட்டவரைவு விதிகளின்படி, முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே தேவையில்லை. அவ்வாறு பாதுகாப்பு அளிக்க விரும்பாதவர்கள், மருத்துவ காப்பீட்டிற்கு பதிலாக, மருத்துவ கவனிப்பிற்கான வரி சலுகையைப் பெற்று வந்த ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு கட்டணத்தைச் செலுத்தி விட வேண்டும். இதில் ஒவ்வொரு ஊழியருக்குமான அதிகபட்ச மதிப்பீட்டு கட்டணம் முதலாளிகளுக்கு $400 ஆக இருக்கும்--இது தற்போது தங்கள் தொழிலாளர்களின் சுகாதார பாதுகாப்பு கவனிப்பிற்காக செலவிடும் தொகையை விட முதலாளிகளுக்கு குறைவான செலவையே அளிக்கும்.

காப்பீட்டு பாதுகாப்பை தேர்ந்தெடுக்க விருப்பமில்லாத (அல்லது தேர்ந்தெடுக்க முடியாத) தொழிலாளர்கள் அதிக விகிதம் செலுத்த வேண்டும் என்ற விதத்தில் தண்டனைக்கு உட்படுவர். Baucus திட்டத்தின்படி, 100 முதல் 300 சதவிகிதத்திற்கு இடையிலான வருமானங்களுடன் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் --ஒரு தனிநபருக்கு 10,930 டாலர், நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு 22,050 டாலர் -- காப்பீட்டு பாதுகாப்பு இல்லாதவர்களுக்கு ஒரு நபருக்கு ஆண்டு ஒன்றிற்கு 750 டாலர் அபராதம், ஒரு குடும்பத்திற்கு அதிக பட்சம் 1,500 டாலர் அபராதமாகும்.

செலவினக் குறைப்புக்கள் என்ற மையப் பொருளுரையையே தொடர்ந்த ஒபாமா, கூட்டாட்சி சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் நாட்டை நிதியச் சரிவின் விளிம்பில் கொண்டு வந்து விட்டதற்காக குறை கூறினார். "இந்த விண்ணைத் தொடும் செலவினங்களைக் குறைக்க நாம் ஏதும் செய்யவில்லை என்றால், பின் நாம் கூடுதலாக மருத்துப் பாதுகாப்பு, மருத்துவ உதவி என்று மற்ற அரசாங்கத் திட்டம் அனைத்தும் இணைந்திருக்க கூடியதை விட அதிகம் செலவழித்து கொண்டிருப்போம். எளிமையாக கூறவேண்டும் என்றால், நம்முடைய சுகாதார பாதுகாப்பு பிரச்சினை நம்முடைய பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சினைதான். வேறு எதுவும் இதற்கு அருகில் வரவில்லை.

இந்தப் பொய்தான் குறிப்பிடத்தக்க வகையில் நியூ யோர்க் டைமஸினால் ஒப்புதல் பெறுகிறது; அதன் வியாழக்கிழமையின் முக்கிய தலையங்கம் பின்வருமாறு கூறுகிறது: "மருத்துவ பாதுகாப்பு, மருத்துவ உதவியின் இடைவிடாத செலவின உயர்வுதான் நாட்டின் பொருளாதாரத்தை முடக்குகிறது என்று மிஸ்டர் ஒபாமா முற்றிலும் சரியாகவே கூறியுள்ளார்."

உண்மையில், கூட்டாட்சி சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் செலவினம் மகத்தான வங்கிகளைப் பிணையெடுப்புக்கள் --ஜிகிஸிறி உடைய தலைமை ஆய்வாளர் $23 டிரில்லியன் செலவு என்று மதிப்பிட்டுள்ளார்-- பற்றாக்குறை பட்ஜெட், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர் செலவுகள், கூட்டாட்சி பற்றாகுறைக்கு நிதிளித்ததில் வங்கிகள் இலாபமடைந்த விதத்தில் பெற்ற வட்டி, கடந்த மூன்று தசாப்தங்களில் செல்வந்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரிக்குறைப்புக்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் பெரிதும் மங்கி விடுகிறது.

மூத்த குடிமக்கள் தங்கள் மருத்துவ பாதுகாப்புக்கள் குறைக்கப்படுவதைத்தான் காண்கிறார்கள் என்று கூறப்படும் கருத்துக்கள் குடியரசுக் கட்சியில் தன்னுடைய எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தும் "பயமுறுத்தும் உத்தி" என்று ஜனாதிபதி கூறினார். ஆனால் ஜனாதிபதியின் திட்டத்தின் மையத்தில் அத்தகைய பணிகளின் குறைப்புக்கள் தான் உள்ளன.

மருத்துவ கவனிப்பு, மருந்துவ உதவியில் வீண்டிக்கப்படுதல் மற்றும் மோசடி ஆணீயவற்றால் வீணாகும் "பல நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் தான் நீக்கப்படும் என்று ஒபாமா தெரிவித்தார். ஆனால் அவை எப்படி செய்யப்படும் என்பது பற்றிய விவரங்களைக் கூறவில்லை. "மருத்து வல்லுனர்களின்" குழு ஒன்று மிகத் திறமையான, செலவினங்கள் அதிகமில்லாத சிகிச்சை முறைகள் பற்றி நிர்ணயிப்பார்கள் என்று அவர் பின்னர் தெளிவுபடுத்தினார். இது "அனைவருக்கும் செலவினங்களைக் குறைக்கக்கூடிய விதத்தில், நாம் அளிக்கவிருக்கும் சுகாதாரபாதுகாப்பு மாற்றங்களைக் கொண்டு வரும்" என்று அவர் கூறினார்.

"நிர்வாகமும், பல மருத்துவ கவனிப்பு வல்லுனர்களும் எதிர்பார்க்கும் சேமிப்புகளை சுகாராத பாதுகாப்பு மாற்றங்கள் அளிக்க வில்லை என்றால், மருத்துவ கவனிப்பு செலவினங்களைத் தானாகவே குறைக்கும் "பற்றாக்குறை-உந்துதல்" என்றழைக்கப்படுவதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்று டைம்ஸ் குறிப்பிட்டது.

திட்டத்தின் விவரங்கள் உழைக்கும் மக்களிடமிருந்து அதிகம் மறைக்கப்பட்டுள்ன; அதே நேரத்தில் சுகாதார பாதுகாப்பு பிரிவில் செல்வாக்கு மிக்கவர்களுக்கும், காங்கிரசில் இருக்கும் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுக்கும் இடையே திரைக்குப் பின்னால் கடுமையான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

மில்லியன் கணக்கான மக்களின் மனத்தின் கோரிக்கைகளின் உட்பொருளுக்கு ஒபாமாவின் உரை ஒன்றுமே செய்யவில்லை. அதேபோல் சுகாதார பாதுகாப்பு "சீர்திருத்தம்" பற்றிய பெருகிய கவலைகளைக் குறைக்கும் விதத்திலும் இல்லை. சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ பாதுகாப்பிற்கான முந்தைய காலத்திய நகர்வுகளுக்கு முற்றிலும் மாறான வகையில் ஒபாமாவின் திட்டத்தில் பயனடையக் கூடியவர்கள் எனக் கருதப்படுபவர்களுக்கு, இத்திட்டத்திலிருந்து என்ன எதிர்பார்ப்பதென்று புரியவில்லை. அமெரிக்க மக்களிடமிருந்து உண்மையான செயற்பட்டியலை ஒபாமாவின் நிர்வாகம் மறைக்க விரும்புகிறது என்பது தான் இந்த பொய்யுரைகளின் விளக்கத்தில் உள்ள உண்மையாக இருக்கிறது.