பிராங்பேர்ட்-மையினில் ஊர்வலம்
அரங்கிற்கு வெளியே சோசலிச சமத்துவக் கட்சியின்
(PSG) தேர்தல்
வேட்பாளர்களில் ஒருவரான Dietmar
Gaisenkersting ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடம்
ஒலிபெருக்கியில் பேசினார். கடந்த 10 ஆண்டுகளில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD)
பங்கு பெற்ற அல்லது வழி நடத்திய அரசாங்கங்களின் இருப்புநிலைக் குறிப்புடன் அவர்களை அவர் எதிர்கொண்டார்.
இந்த தசாப்தத்தின் முடிவில் 6 இலட்சம் மக்கள் வேலையின்மையில் இருப்பர் என்றும் 6.5 மில்லியன் மக்கள் குறைவூதிய
வேலைகளில் இருப்பர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். ஜேர்மனியக் குழந்தைகளில் ஐந்தில் ஒரு பகுதியினர்
வறுமையில் வாழ்கின்றனர்.அணிவகுப்பிற்கு வந்திருந்த கூட்டம் 35,000 என்று தொழிற்சங்கம் எதிர்பார்த்ததைவிட
குறைவாக இருந்தது. அணிவகுப்பன்று ஒரு செய்தித் தொடர்பாளர், தொழிற்சங்கம் 50,000 தொழிலாளர்கள்
பங்கு பெறுவர் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
தொழிற்சங்கத்தின் "நடவடிக்கைத் தினம்" ஒரு பெரிய தெருக் களியாட்டத்துடன் பல
பொதுத் தன்மையைக் கொண்டிருந்தது.
Opem platz
ற்கு வந்தவுடன் இளம் தொழிற்சங்க உறுப்பினர்கள் இலவச
T- சட்டைகள்,
ஊதல்கள் மற்றும் இலவச பீர்கள் கொடுத்து வரவேற்கப்பட்டனர். ஒலிபெருக்கிகளிடம் இருந்து வெளிவந்த இசை
உரத்த குரலில் இருந்து மற்ற உரையாடல்களைக் கேட்க முடியாமல் செய்துவிட்டது. அரசியல் விவாதம் பற்றி
ஊக்குவிக்க அமைப்பாளர்கள் எந்த ஆர்வமும் காட்டவில்லை என்பது வெளிப்படை.
பின்னர் அரங்கில் உரைகள் சுருக்கமாக நிகழ்த்தப்பட்டன; அதன் வலியுறுத்தல்
பொழுது போக்குத் தன்மையாகத்தான் இருந்தது. அயர்லாந்து பாப் நட்சத்திரம்
Geldof, "Hope"
பாப் இசைக்குழு, Rapper Sammy Deluxe
ஆகியோரும் கலந்து கொண்டனர். உள்ளூர் வானொலி நிலையத் தகவல்படி
IG Metall ஒரு
நாளைக்கு அரங்கத்திற்கு வாடகையாக 1 மில்லியன் யூரோக்களைக் கொடுத்திருந்தது.
கலந்து கொண்டவர்களுக்கு ஆற்றிய உரையில்
IG Metall ன்
தலைவர் Berthold Huber
எந்தக் கட்சிக்கு வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் வெளிப்படையான பரிந்துரை
ஏதும் கொடுக்கவில்லை என்று அறிவித்தார். ஆனால் அதன் கண்ணோட்டத்தில் பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயக
யூனியன்(CDU)
தாராளவாத ஜனநாயகக்கட்சி (FDP)
உடன் வருங்காலத்தில் கூட்டணி கொண்டால், "அது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மிக மோசமான அரசாங்கமாக
இருக்கும்...நிதிய நெருக்கடிக்கு பொறுப்பானவர்கள் நெருக்கடியில் இருந்து இலாபம் அடைபவர்களாக
வெளிப்படக்கூடாது." என்றார்.
தேர்தல் காலத்தில் புதிய தாராளவாத அரசியல் "வரலாற்றுக் குப்பைத்
தொட்டியில்" தள்ளிவிடப்பட தொழிலாளர்கள் உறுதியாகச் செயல்பட வேண்டும் என்றார். இவ்விதத்தில்
SPD ஐப்
பொறுத்த வரையில் வேண்டுமென்றே ஒரு விதிவிலக்கை
Huber கொடுத்தார்.
SPD தலைவர்
பிராங்க் வால்டர் ஸ்ரைன்மையர் சுற்றுச்சுழல், போக்குவரத்து, கல்வி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய
உள்ளதாகவும் 4 மில்லியன் புதிய வேலைகளைத் தோற்றுவிக்க இருப்பதாகவும் உள்ள உறுதிமொழி கொடுத்த,
முற்றிலும் தந்திரோபாய செயலை, இவர் வெளிப்படையாக பாராட்டினார்.
SPD நிதி மந்திரி பீயர்
ஸ்ரைன்புரூக்கின் ஆணைக்கேற்ப அரசாங்கம் சமீபத்தில் ஜேர்மனிய அரசியல் அமைப்பில் "கடன் தடை" என்பதற்கு
ஒப்புக்கொண்டுள்ள உண்மை பற்றி Huber
எதுவும் குறிப்பிடவில்லை. இந்த நடவடிக்கை அரசாங்கம் எந்த அளவிற்கு கடன் பெருக்கலாம் என்பதற்கு வரம்பு
கொடுக்கிறது. அதை ஜேர்மனிய பாராளுமன்றத்தில் எல்லாக் கட்சிகளும் ஒப்புக் கொண்டன என்றால், அடுத்த
அரசாங்கம் --எப்படிப்பட்ட கூட்டணியாக இருந்தாலும்-- ஜேர்மனிய வங்கிகளுக்கு கடந்த ஆண்டில் அரசாங்கம்
கொடுத்த பல பில்லியன்களையும் மீட்பதற்கு மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கட்டாயத்தில்
தள்ளப்படும். "கடன் தடை" என்பது SPD
தேர்தல் பிரச்சாரத்தில் கொடுக்கும் உறுதி மொழிகள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்கிவிடுகிறது.
அந்நாட்டில் டஜன் கணக்கான சாதாரண மக்களின் உயிர்களைக் குடித்த சமீபத்திய நேட்டோ
கொடுஞ்செயல் ஒரு ஜேர்மனிய இராணுவ அதிகாரியினால் தொடக்கப்பட்ட நடவடிக்கை என்றாலும், ஆப்கானிஸ்தானில்
ஜேர்மனிய இராணுவத்தின் தலையீடு பற்றியும் Huber
குறிப்பு ஏதும் கொடுக்கவில்லை. SPD
ஆப்கானிய போருக்கு உறுதியான ஆதரவைக் கொடுக்கிறது.
செய்தி ஊடகத்திடம் சனிக்கிழமை நடைபெற்ற நடவடிக்கை
IG
Metall க்கு ஒரு
புதிய நடவடிக்கையாகும் என்று Huber
கூறினார். "அரங்கிற்குப் பதிலாக தெருக்களில் மாறியது என்பது மட்டுமின்றி, அரங்கையும் தெருக்களையும்
பயன்படுத்தியதுதான்." என்று Huber
விளக்கினார். உண்மையே வேறுவிதமாக உள்ளது. அதன் உறுப்பினர்கள் கொடுக்கும் சந்தாக்களில் இருந்து மில்லியன்கணக்கான
பணத்தை IG Metall
பெருமைப்படுத்தப்பட்ட பாப் இசை நிகழ்ச்சிக்கு செலவழிக்கத் தயாராக இருக்கையில், பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க
தொழிலாளர் போராட்டம் எதையும் அது நடத்த மறுத்துள்ளது.
தற்பொழுதைய SPD
மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளின் பெரும் கூட்டணி அரசாங்கம் தொடர்வதில்
IG Metall க்கு
ஆட்சேபணை ஏதும் இல்லை. இது செய்தியாளர் கூட்டத்தில் தெளிவாயிற்று. மீண்டும் ஹ்யூபர்
CDU-FDP கூட்டை
"அனைத்து விருப்பங்களிலும் மிக மோசமானது" என்று குறிப்பிட்டார். தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தும்
விதத்தில் ஒரு CDU-FDP
கூட்டணி அரசாங்கம் என்று வந்தால், FDP
"தொழிலாளர்கள் உரிமைகளை குறைத்து செல்வந்தர்களுக்கு ஆதரவாக உள்ளது என்றார். அதாவது, அவரின்
உரையில் இருந்து SPD-CDU
கூட்டணி அரசாங்கம் உருவாகுமானால் அது ''தொழிலாளர்களின் உரிமைகளை'' குறைக்காது என்ற முடிவிற்கு
வரலாம் ஆனால் இது ஒரு போலித்தர்க்கமாகும்.
இந்த வெகுஜனத் தோற்றத்தில் மயக்கம் தரும் விளைவு இருந்தாலும், எல்லா பங்கு
பெற்றவர்களும் தங்கள் அரசியல் கருத்தை வெளியிடாமல் இருக்கத் தயாராக இல்லை. அதாவது
IG Metall ன்
சொற்களுக்கும் செயல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றிப் பேசுவதற்கு. ஜேர்மனியின் பல பகுதிகளில்
இருந்தும் தொழிலாளர்கள் அணிவகுப்பில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.
Volvo, Bosch, Opel, ABB, Man Roland,
ரூர் மாவட்டத்தில் இருக்கும் பொறியியல் ஆலைகள், பால்டிக் கடல் கப்பல்
கட்டுமிடங்கள் போன்ற பல்வேறுபட்ட தொழில்கள், தொழிற்சாலைகள் என்பவையும் இதில் அடங்கும். எல்லா தொழிலாளர்களும்
குறைந்த நேர வேலை இருப்பது பற்றியும் ஏராளமான வேலை நீக்கங்கள் பற்றியும் கவலை தெரிவித்தனர்.
தற்போதைய பிரச்சாரத்தில்
IG Metall
"ஒரே பணிக்கு ஒரே ஊதியம்" என்று கூறுகிறது. ஆனால் தான் தீவிரமாக செயல்படும் அனைத்து ஆலைகளிலும் துணை
ஒப்பந்தத்தை அனுமதிக்கிறது. "நெருக்கடியின் போது பணிநீக்கங்கள் கூடாது!" என்று தொழிற்சங்கம்
முறையிடுகிறது. ஆனால் ஓப்பலைப் பொறுத்தவரையில்
IGM தொழிற்சாலை தொழிற்சங்க குழுக்கள் 20,000
பணிநீக்கங்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளன.
தொழிற்சங்கத்தின் மற்றொரு கோரிக்கை "ஒருவர் வாழக்கூடிய அளவிற்கு
ஓய்வூதியம்!' என்பதாகும். சமீபத்தில் ஒருவரின் வேலைக்காலத்தை 67 வயதிற்கு உயர்த்தியதற்கான முயற்சி
SPD
தலைவர் பிரான்ஸ் முன்டபெயரிங்கால் முன்னெடுக்கப்பட்டது. அவருடைய கட்சி சக ஊழியர் வொல்ப்காங்
கிளேமென்ட் SPD
யின் பொதுநல விரோத செயற்பட்டியல் 2010
இயற்றப்பட கூட்டாக உதவியவர். அதுதான் வரையற்ற முறையில்
துணை ஒப்பந்த பணி (sub-contract work)
அறிமுகமாகவதற்கு சட்டபூர்வ அஸ்திவாரங்களை தோற்றுவித்தது.
தொழிற்சங்கம் "இளந்தலைமுறைக்கு தக்க முன்னோக்கு!" என்று குறிப்பிட்டு,
"வருங்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்ற கோஷத்தையும் அச்சிட்டுள்ளது. ஆனால் பயிற்சி
முடிந்தவுடன் ஓப்பல் பயிற்சித் தொழிலாளர்கள் குறைவூதிய துணை ஒப்பந்த அமைப்புக்களிடம்
ஒப்படைக்கப்படுகின்றனர். இவை அனைத்தும் தொழிற்சாலை தொழிற்சங்கக் குழுக்களின் அனுமதியுடன் நடக்கின்றன.
சோசலிச சமத்துவக் கட்சியினரும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஒரு
குழுவும் பங்கு பெற்றவர்கள் பலருடன் பேசியது. அவர்கள் தொழிற்சங்கத்தின் கொள்கை மீது தங்கள் அதிருப்தியை
வெளிப்படுத்தினர்.

பாடன்-வூர்ட்டம்பேர்க்கில் இருந்து வந்திருந்த அல்பிரெட்
"IG
Metall
பற்றி எனக்கு உளைச்சல் கொடுப்பது அவர்கள் வெளிப்படையாக
SPD க்கு
கொடுக்கும் ஆதரவுதான். இந்த முழு ஒழுங்கீனங்களையும் ஏற்படுத்தியதே
SPD தான். மாதத்திற்கு
400 யூரோக்கள் ஊதியம் அறிமுகப்படுத்தபடல் என்று அது தொடங்கியது; அதையே
SPD ஒருபோதும்
அனுமதித்திருக்கக்கூடாது. இத்கைய நடவடிக்கைகள் சமூக விரோதமானவை, சமூக நலன்களை அகற்றி தொழிலாளர்களை
சுரண்டும் தன்மை உடையவை." என்று பாடன்-வூர்ட்டெம்பேர்க்கில் இருந்து வந்த அல்பிரெட் கூறினார்.
சமையலறைக்குத் தேவையான கருவிகளைத் தயாரிக்கும்
Alno AG
நிறுவனத்தில் அல்பிரெட் பணியாற்றுகிறார். கடந்த 15 ஆண்டுகளில் நிறுவனம் பலமுறை மறுகட்டமைக்கப்பட்டதாக
அவர் தெரிவித்தார். "ஒவ்வொரு முறையும் ஒரு புதிய நிர்வாகக் குழு வரும்போது, ஓரிரு மாதங்களில் பல
பணிநீக்கங்கள் இருக்கும். இதை அவர்கள் மறுசீரமைப்பு என்பர். 1988 ல் 2,400 தொழிலாளர்கள் இருந்தனர்;
இப்பொழுது 900 பேர் மட்டுமே உள்ளோம்."
"இங்கு IG
Metall
பெரும் காட்சியை நடத்துகிறது; ஆனால் அது துணை ஒப்பந்தத் தொழிலாளிகளை (sub-contracted
workers) மோசமாக நடத்துகிறது. நீண்ட காலத்திற்கு
முன்பே தொழிற்சங்கம் இதை உணர்ந்து அதற்கு எதிரான தீவிரப் போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்." என்று
அல்பிரெட் தொடர்ந்து கூறினார்.
தன்னுடைய ஆலையிலேயே துணை ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையாக உள்ள
தொழிலாளர்கள் பெறும் ஊதியத்தில் பாதிதான் சம்பாதிக்கின்றனர் என்றும் நிறுவனத்தின் நிர்வாகம் முறையாக
ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தொழிலாளர்களை இத்தகைய துணை ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து
படிப்படியாக அகற்றும் கொள்கையை பின்பற்றுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
"துணை ஒப்பந்த தொழிலாளர்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். நிர்வாகம் நினைக்கும்
விதத்தில் அவர்கள் வந்து செல்லுகின்றனர். இது தொடர அனுமதிக்கக்கூடாது. நாங்கள் தெருக்களுக்கு வந்து வேலைநிறுத்தம்
செய்து, பொருளாதாரம் முழுவதையும் முடக்க வேண்டும்."
IGM மற்றும்
Verdi பணித் தொழிற்சங்கமும்
பொதுநல விரோத ஹார்ட்ஸ் குழுவில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட முறையில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்
என்று அவர் சுட்டிக் காட்டினார். PSG
வேட்பாளர் தொடர்ந்து கூறினார்: "தொழிற்சங்கமும் SPD தலைவர்களும் இப்பொழுது அவர்கள் பெரிதாக உரைக்கும்
வறுமைக்கும், துன்பங்களுக்கும் கூட்டாகப் பொறுப்பு கொண்டவர்கள்.."
கலந்து கொண்டவர்களிடம் Gaisenkersting கூறினார்: "SPDயும்
இடது கட்சியும் கடந்த சில ஆண்டுகளில் நிதிய உயரடுக்கின் சக்தியை முறிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று
நிரூபித்துவிட்டனர். இதற்குப் பதிலாக அவர்கள் தொழிலாளர்கள் மீதான தாக்குதலில் உந்துதல் கொண்டுள்ளனர்.
எனவே தொழிலாளர்களுக்கு ஒரு புதிய கட்சி தேவைப்படுகிறது! இந்தக் கட்சி மக்களின் தேவைகளை நிதிய தன்னலக்குழு
மற்றும் பெரு நிறுவனங்களில் இலாப நோக்கங்களை விட முன்னதாக வைக்கும் ஒரு சோசலிச முன்னோக்கை
அடிப்படையாகக் கொண்டிருக்கும். அது ஒரு சர்வதேசக் கட்சியாகவும் இருக்கும்; ஏனெனில் ஆளும் உயரடுக்கு ஒரு
சர்வதேச அடிப்படையில் அமைக்கப்பட்டு ஒரு சர்வதேச மூலோபாயத்தைத் தொடர்கிறது.
PSG, WSWS உடைய ஆதரவாளர்கள்
ஊர்வலத்தில் PSG
தேர்தல் அறிக்கையின் பிரதிகளை ஆயிரக்கணக்கில் வினியோகித்தனர். பங்கு பெற்றவர்களில் பலர்
PSG மேசைகளுக்கு
அருகே நின்று கட்சியைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முற்பட்டு அவர்களுடைய தொடர்பு விவரங்களைக்
கொடுத்ததுடன் பழைய அதிகாரத்துவ கருவிகளுக்கு ஒரு அரசியல் மாற்றீட்டு அமைப்பை கட்டுவதில் தங்கள்
ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.