WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Profiting on death
பிறர் இறப்பிலும் இலாபம் காண்பவர்கள்
Joe Kishore
10 September 2009
Use this version
to print | Send
feedback
ஞாயிறன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் விவரிக்கிறவாறு,
முதலீட்டு வங்கிகள் ஆயுள் காப்பீட்டு பத்திரங்களை கொண்டுள்ள மனிதர்களின் வாழ்வு, இறப்பு ஆகியவற்றில்கூட பந்தயம்
கட்டும் வழிவகைகளை திட்டமிடுகின்றன.
"ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை ரொக்கத்திற்கு விற்கத் தயாராக இருக்கும் நோய்வாய்ப்பட்டுள்ள
மற்றும் வயதானவர்களின் பத்திரங்களை --காப்பீடு செய்துள்ள நபரின் ஆயுள் எதிர்பார்ப்பை பொறுத்து, உதாரணமாக
1 மில்லியன் டாலர் பத்திரத்தை 400,000 டாலருக்கு என-- வாங்குவதற்கான 'ஆயுள் உடன்பாடுகளை' வாங்குவதற்கு
வங்கியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்" என்று டைம்ஸின் கட்டுரையாளர் ஜென்னி ஆண்டர்சன் தகவல்
கொடுத்துள்ளார். "இதன்பின் அவர்கள் இந்த பத்திரங்களை, முதலீட்டாளர்களுக்கு விற்பதற்காக, வோல் ஸ்ட்ரீட்
சொல்லாட்சியில், நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான பத்திரங்களை ஒரு பதிவுப் பத்திரமாக மாற்றி,
இந்த காப்பீட்டுப் பத்திரங்களை 'பாதுகாக்கத்' திட்டமிடுகின்றனர்.
முதலீட்டாளர்கள் காப்பீட்டின் மீது தொடர்ந்து கட்டணத்தை கொடுத்து வந்து, அந்த
நபர் இறந்தபின் காப்பீட்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணத்தைப் பெறுவர். "காப்பீட்டுப் பத்திரக்காரர் முன்கூட்டியே
இறந்துவிட்டால், ஆதாயம் அதிகமாக இருக்கும்". கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில் காப்பீடு 1 மில்லியன்
டாலருக்கு இருந்தால், அது 400,000 டாலருக்கு விற்கப்பட்டது, ஒரு முதலீட்டாளர் காப்பீட்டுக் கட்டணமாக
100,000
டாலருக்கு நபர் இறக்கு முன் கட்டுகிறார் என்றால், கிடைக்கக் கூடிய இலாபம்
அரை மில்லியன் டாலர்கள் ஆக இருக்கும்.
ஆனால் முதலீட்டாளருக்கு பெரும் ஆபத்து மக்களின் குறிப்பிட்ட பிரிவில் ஆயுள்
எதிர்பார்ப்பு தீவிரமாக உயர்ந்துவிடுவதுதான். "வாழ்க்கை உடன்பாடுகளின் தொகுப்பைக் கொண்ட ஒரு பத்திரம்
சீரிய முறையில் பலவித வியாதிகளை கொண்டிருக்கும் நபர்களை பெற்றிருக்கும்--இரத்தசோகை, நுரையீரல்
புற்றுநோய், இதய நோய்கள், மார்பக புற்றுநோய், ஆல்ஷிமர் நோய்" என டைம்ஸ் குறிப்பிடுகிறது.
இது இந்நோய்கள் எவையாவது குணம் அடைந்து விட்டாலும் மற்றவை இருப்பதால் வாங்குபவர்க்கு பாதுகாப்பு
இருக்கும்.
பிறருடைய ஆயுட்காப்பீட்டுப் பத்திரங்களை வாங்கி விற்கும் வழிவகை ஏற்கனவே
உள்ளது. (Business Week ran a story in
2007 under the headline, "Death Bonds"),"
ஆனால் இந்தப் பத்திரங்களுக்கு "பாதுகாப்பளித்தல் என்பது, முதலீட்டை
எளிதாக்குவதற்கு என்பது, இன்னும் தொடக்கப்பருவத்தில்தான் உள்ளது. ஆயினும்கூட இந்த நிலைப்பாடு பற்றி பெரும்
ஆர்வம் வந்துள்ளதாக டைம்ஸ் தெரிவிக்கிறது. ஒரு தரம் பிரிக்கும் நிறுவனத்தின் முகவர், "எங்கள்
தொலைபேசிகள் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன." என்றார். "முதலில் பத்திரத்தை விற்கத்
தொடங்கியவுடன் பெரும் மந்தைபோல் கூட்டம் குவியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்று முதலீட்டு
வங்கியாளர் ஒருவர் கூறினார். Credit Suisse,
Goldman Sachs ஆகியவை புதிய திட்டத்தில் ஆர்வம் காட்டும்
வங்கிகளில் அடங்கும்
இந்தச் சந்தை $500 பில்லியனை எட்டக் கூடும் என்று டைம்ஸ் குறிப்பிடுகிறது;
இது "அமெரிக்க வீடுகள் அடைமான பத்திரச் சந்தைகள் சரிவினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்வதற்கு
வோல் ஸ்ட்ரீட்டிற்கு உதவும்....." என்றும் கூறுகிறது.
புதிய ஆயுள் காப்பீட்டு பாதுகாப்புப் பத்திரச் சந்தைகள் --ஒரு அறிவாளி
இதையொட்டிய பத்திரங்களை 'கூட்டுப் பொறுப்பு ஆக்கப்பட்டுவிட்ட இறப்பு நன்றிக்கடன்கள்,
(collateralized death obligations') என்று
கூறியுள்ளார்--அதிக இலாபம் தரக்கூடியவையாக வரக்கூடும்.
முதலில் மில்லியன் கணக்கான மக்கள் பெரும் திகைப்புத் தரும் நிதி நிலையை
எதிர்கொள்கையில், வறிய, முதிய தொழிலாளர்களின் பெரும் தொகுப்பு தங்கள் காப்பீட்டு கட்டணத் தொகையை
கொடுக்க முடியாத நிலையில் இருக்கலாம். அடைமானப் பணத்தை திரும்பக் கொடுக்க உடனடி ரொக்கத்
தேவையும் அவர்களுக்கு இருக்கலாம்; அதே போல் மருத்துவச் செலவுகள், தங்களுக்கோ உறவினர்களுக்கோ மற்ற
தேவைகளுக்கு பணம் தேவைப்படலாம். பொருளாதார நெருக்கடி ஆழமாகுகையில் தனிநபர்கள் தங்கள் காப்பீட்டுப்
பத்திரங்களை குறைந்த விலைக்கு விற்கும் விருப்பம் அதிகரிக்கும்.
இரண்டாவதாக, முதலீட்டாளர்கள் அடிப்படையில் சராசரியாக தனிநபர்கள் இந்தப்
பத்திரங்களை விற்ற காப்பீட்டு நிறுவனங்கள் எதிர்பார்ப்பதைவிட சீக்கிரம் இறந்துவிடுவர் என்பதில்தான் பந்தயம்
கட்டுவர்; அதாவது மக்களுடைய ஆயுட்கால எதிர்பார்ப்பு வளைவு சரியும் என்பதில் பந்தயம் கட்டுவர்.
அமெரிக்காவில் ஆயுட்கால எதிர்பார்ப்பு என்பது ஏற்கனவே சமீபத்திய ஆண்டுகளில்
தேக்க நிலையில் உள்ளது; குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில். புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ள கடைசி ஆண்டான
2007ல் ஆயுட்கால எதிர்பார்ப்பு சற்றே அதிகரித்தது; ஆனால் இது பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன்பு
கிடைத்த தகவல் ஆகும்.
பொருளாதார நெருக்கடியின் குறிப்பிடத்தக்க தாக்கம் அமெரிக்க மக்களின்
வாழ்க்கைத் தரங்களில் பெரும் குறைப்பை ஏற்படுத்துவதாகும். ஊதியங்களும் நலன்களும் நிரந்தரமாக
குறைக்கப்படுகின்றன. தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகள் உயர்ந்த வீட்டுவிலைகள் ஆதரவில் பெற்ற கடன் மூலம்
கூடுதல் வாழ்க்கைத் தரத்தை தக்கவைத்தது இப்பொழுது காற்றில் கரைந்துவிட்டது; இன்னும் வேறுவழிக் கடன்களும்
வறண்டுவிட்டன. இவை அனைத்தும் தவிர்க்க முடியாமல் தொழிலாளர்கள் முந்தைய சராசரியை விட முன்னதாகவே
இறப்பதற்கு வழிகோலும்.
இறுதியாக, முதலீட்டாளர்கள் சுகாதாரப் பாதுகாப்புச் செலவினங்களில் ஒபாமாவின்
"சீர்திருத்த" முயுற்சிகளால் பெரும் குறைப்புக்களை எதிர்பார்க்கின்றனர். டிரில்லியன்கள் கணக்கில் வங்கிகளுக்கு
கொடுத்த பின்னர், அமெரிக்க ஆளும் வர்க்கம் சமூக நலச் செலவினங்களை, குறிப்பாக மருத்துவப் பாதுகாப்பு,
மருத்துவ உதவி ஆகியவற்றில், குறைக்கப் பார்க்கிறது.
ஜூன் மாதம் ஒபாமா அறிவித்தபடி, "எமது சுகாதார பாதுகாப்புச் செலவினம்
நம் பொருளாதாரத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது. எமது குடும்பங்கள், வணிகங்களுக்கு பெருகும் சுமையாக
உள்ளது. கூட்டாட்சி பட்ஜேட்டால் அது நேரம் விதிக்கபட்ட குண்டு போல் உள்ளது. அமெரிக்காவிற்கு அது
கட்டுபடியாகாது." "சுகாதாரப் பாதுகாப்புத் திறமை", "தேவையற்ற சோதனைகள்" என்பவற்றின் பின்
செலவுகளை குறைப்பதற்கு முக்கிய வழிவகை பணிகளைக் குறைப்பது என்பதை முதலீட்டாளர்கள் நன்கு அறிவர்.
காங்கிரஸில் இருக்கும் பல திட்டங்கள் மருத்துவ பாதுகாப்பு செலவு அதிகமாவதை கட்டுப்படுத்துவதில் குவிப்பைக்
காட்டுகின்றன. மெடிகேர் உட்பட, அரசாங்கம் அளிக்கும் சுகாதாரத் திட்டங்கள், 20ம் நூற்றாண்டில் ஆயுட்கால
அதிகரிப்பிற்கு ஊக்கம் அளிக்கும் முக்கிய கூறுபாடுகளில் ஒன்றாக இருந்தன.
"இறப்புப் பத்திரங்களில்" ஆர்வம் அதன் தனிப்பட்ட உறையவைக்கும்
முக்கியத்துவத்தைத் தவிர, இன்னும் பொதுவான நிகழ்விற்கு அடையாளம் ஆகும்: அதாவது ஆளும் வர்க்கத்தின்
ஒட்டுண்ணித்தனம் ஆகும். "உற்பத்தியின்மூலம் இல்லாமல், ஏற்கனவே பிறரிடம் இருக்கும் சொத்துக்களை அபகரிப்பதின்
மூலம்" ஒரு ஆளும் வர்க்கம் செல்வம் கொழிக்கும் நிலையில் இருக்க விரும்புகிறது என்று அதன் சமூகத் தன்மையைப்
பற்றி மார்க்ஸ் விளக்கிய நேர்த்தியான உதாரணத்தைவிட சிறப்பாக எதையும் கற்பனை செய்வதற்கில்லை.
தற்போதைய உலக பொருளாதார நெருக்கடி, உண்மையான மதிப்பை உற்பத்தி செய்வதில்
இருந்து முற்றிலும் அகற்றப்பட்டுவிட்ட வழிவகைகள் மூலம் தன்னுடைய மகத்தான செல்வத்தைக் குவிக்கும் ஒரு நிதியப்
பிரபுத்துவத்தின் அதிகார ஏற்றத்துடன் நெருக்கமாக பிணைந்துள்ளது. குறைந்த மதிப்பிற்கான அடைமான ஆதரவு பத்திரங்களில்
ஊகக் குமிழியின் வளர்ச்சியே மிகவும் இயலாதவர்களிடம் இருந்து செல்வத்தை உறிஞ்சும் முயற்சியைத்தான் தளமாகக்
கொண்டிருந்தது.
ஆயுள் காப்பிட்டுப் பத்திரங்களை வளர்ப்பதில் போட்டி என்பது, இந்த வழிவகைகளிலுள்ள
சூதாடும் குழுவின் கடைசியான என்று இல்லாத சமீபத்திய வகைதான்.
கடந்த ஓராண்டாக அரசாங்கக் கொள்கைகள் --புஷ் மற்றும் ஒபாமாவின்கீழ்--
நிதியப் பிரபுத்துவத்தின் மேலாதிக்கத்தை வரம்பிற்கு உட்படுத்துவதில் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல், அதை
உண்மையில் வலிமைப்படுத்தியுள்ளது. மிகப் பெரிய வங்கிகள் அமெரிக்க நிதியத்தின்மீது தங்கள் ஏகபோக உரிமையை
பெருக்கியுள்ளன; உயர்மட்ட நிர்வாகிகளும் வணிகர்களும் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவிற்கு போனஸை எதிர்பார்க்கின்றனர்.
தொழிலாள வர்க்கத்தின் நிலைமை இன்னும் சரிந்துகொண்டிருக்கையில், மில்லியன்
கணக்கான மக்கள் வீட்டிலிருந்தும் வேலைகளிலிலிருந்தும் தூக்கி எறியப்படுகின்ற வேளையிலும், பள்ளிகள் மூடப்பட்டு,
சமூகநலத் திட்டங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருக்கையிலும் கூட, நிதியத் துறையை வாழ்க்கை விஷயத்தில்
நிதியுதவிகளை திரும்பப்பெறுமாறு அழைப்பு விடுவது தற்செயலான ஒன்று அல்ல, இவ்விரு நிகழ்ச்சிப்போக்குகளும்
நேரடியாகத் தொடர்புடையவை.
இந்த ஒட்டுண்ணித்தன உறவை நெறியாக்குவதற்கு ஒரு பாதுகாப்புப் பத்திரத்தை
அவர்கள் தோற்றுவிப்பதும் இயல்பானதே ஆகும். |