World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா Ethnic tensions flare again in China's Xinjiang region சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் மீண்டும் இன பதட்டங்கள் சீறியெழுகின்றன By John Chan சிறுபான்மை உகூர்களால் தூண்டிவிடப்பட்ட ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களுக்காக, சீனாவின் வடமேற்கு பிராந்தியமான ஜின்ஜியாங் மாகாணத்தின் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) செயலாளர் Wang Lequan, அவர்தம் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டுமென கோரி ஆயிரக்கணக்கான ஹன் சீனர்கள் அப்பிராந்தியத்தின் தலைநகரான உரூம்கியின் தெருக்களில் இறங்கியதால், ஜின்ஜியாங்கில் கடந்த வாரம் மீண்டும் இன கொந்தளிப்பு எழுந்தது. ஆயிரக்கணக்கான கனரக ஆயுதமேந்திய துருப்புகள் மீண்டும் அந்நகரை முற்றுகையிட்டன. இந்த மோதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். போராட்டகாரர்களை சமாதானப்படுத்துவதற்காக, உரூம்கியின் CCP செயலாளர் Li Zhi மற்றும் ஜின்ஜியாங்கின் தலைமை போலீஸ் அதிகாரியான Zhu Changjie ஆகிய இருவரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்கள். இனப் பதட்டங்களுக்கு காரணமான எந்த அடிநிலைகளும் இதுவரை தீர்க்கப்படவில்லை என்று சமீபத்திய போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். Guangdong மாகாணத்தின் ஒரு பொம்மை ஆலையில், ஜூனில் நடந்த ஒரு கொடூரமான பூசலில் இரண்டு உகூர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து, மாணவர்கள் தலைமையிலான ஆயிரக்கணக்கான உகூர்கள் ஜூலை 5ல் போராட்டத்தில் இறங்கினார்கள். வெளிநாட்டு உகூர் குழுக்களின் கருத்துப்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸால் தூண்டிவிடப்பட்ட பின்னர் தான், இந்த போராட்டக்காரர்கள் சீன ஹன் தனிநபர்களுக்கு எதிராகவும், வியாபாரங்களுக்கு எதிராகவும் திரும்பினார்கள். உத்தியோகபூர்வ உயிரிழப்பு 197, முக்கியமாக இது ஹன் சீனர்களை உட்கொண்டிருக்கிறது. கணக்கில் தெரியாத பல உகூர் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர, 825 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இந்த கலகம் தொடர்பாக 196 நபர்கள் மீது உத்தியோகபூர்வமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உரூம்கியில் கடந்த வாரத்தின் போராட்டங்களின் முத்திரையைத் தொடர்ந்து எச்ஐவி மற்றும் பிற தொற்றுநோய்களுக்கான அச்சத்தை இது ஏற்படுத்தி இருக்கிறது. ஆகஸ்ட் மாத மத்தியிலிருந்து 530க்கும் மேலானவர்கள் காயப்பட்டிருப்பதாகவும், முக்கியமாக ஹன் சீனர்கள் உட்பட, ஹூவ், உகூர் மற்றும் பிற இன சிறுபான்மையினரும் காயப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு யார் பொறுப்பாக இருந்தாலும், இந்த தாக்குதல்கள் இன வெறுப்பைத் தான் தூண்டிவிட்டிருக்கிறது, மேலும் நகரத்திலுள்ள உகூர்களுக்கு எதிராக ஒரு போலீஸ் அடக்குமுறையைத் தற்போது கோரி வரும் பெய்ஜிங் ஆட்சியின் மற்றும் ஹன் இனபற்றாளர்களின் (Han chauvinists) கரங்களுக்குள் தான் இது நேரடியாக நடந்திருக்கிறது. அரசாங்கத்தின் பாதுகாப்பை கோரி கடந்த வியாழனன்று அம்மாகாணத்தின் CCP தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் 1000த்திற்கும் மேலான ஹன் குடிமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக Xinhua செய்தி நிறுவனம் அறிவித்தது. இதில் 10,000 முதல் 20,000 வரையிலான மக்கள் கலந்து கொண்டிருக்கலாம் என்று பிற செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு ஹன் பெண்மணி Agence France Presseக்கு கூறுகையில், "மக்கள் தெருக்களில் நடந்த செல்லும் போது, அருகில் நடந்து வரும் பிறரைப் பார்த்து ஸ்தம்பிக்கிறார்கள். உகூர்கள் தான் இவ்வாறு ஸ்தம்பிக்க செய்கிறார்கள்" என்றார். ஜின்ஜியாங்கின் சிசிறி செயலாளர் Wang பதவி விலகக் கோரி கூட்டத்தினர் கோஷமிட்டனர். சிலர், அவரை தூக்கிலிட வேண்டும் என்று கோரினர். கூட்டத்தைக் கலைத்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்புமாறு Wang வலியுறுத்த முயன்றார், ஆனால் அது தோல்வியடைந்தது. கலக தடுப்பு போலீஸிற்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல்களில் ஐந்து போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர், 14க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயுதமேந்திய போலீஸாரை ஏந்திய வாகனங்களையும், கனரக வாகனங்களையும் பின்புலத்தில் கொண்டு தாக்குதலுக்கான ரைப்பிள்களுடன் ஆயிரக்கணக்கான துணை இராணுவப்படை போலீஸ் அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டனர், மேலும் உரூம்கிக்குள் அனைத்து முக்கிய சாலைகளையும் மூடிவிட்டனர். அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கனத்த பாதுகாப்பு முறைமைகளுக்கு இடையிலும், வெள்ளியன்று சிறிய போராட்டங்கள் தொடர்ந்தன, இதற்கிடையில் மூன்று ஹாங்காங் பத்திரிகையாளர்கள் போலீஸால் அடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த வாரயிறுதியில் தான் "அமைதி" திரும்பியது. ஊசிமுனை தாக்குதல்கள் நடத்துவோர் மீது மரணதண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல்களோடு செப்டம்பர் 6ல், உரூம்கி போலீஸ் மற்றும் வழக்கறிஞர்கள் ஒரு பொது எச்சரிக்கை விடுத்தனர். "மக்களிடையே ஒழுங்கை கெடுக்கும்" வதந்திகளைப் பரப்புவோர்களுக்கு, ஐந்து ஆண்டு கால சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்தார்கள். குற்றமான வகையில், கூர்மையான தாக்குதல்கள் நடத்தியதற்காக இதுவரை மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் (மூன்று நபர்களும் உகூர்கள்) கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் யாருக்கும் எச்ஐவி மற்றும் பிற நோய்கள் எதுவும் கிடையாது என்று சீன அதிகாரிகள் தெரிவித்திருந்த போதினும், தொற்றுநோய்களுக்கான ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்று நோயாளிகளை மருத்துவர்கள் பரிசோதித்து வருவதால் தொடர்ந்து அச்சம் நிலவுகிறது. CCP ஆட்சி உடனடியாக இந்த தாக்குதல்களுக்காக, எவ்வித ஆதாரமும் அளிக்காமல், ஜூலை கலகத்தைத் தொடர்ந்து அது செய்ததைப் போலவே, "பிரிவினைவாதிகள்" மற்றும் "பயங்கரவாதிகளைக்" குற்றஞ்சாட்டியது. இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டு உலக உகூர் காங்கிரஸ் போன்ற பிரிவினைவாத குழுக்களின் நாசக்காரர்களை மக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் Meng Jianzhu குற்றஞ்சாட்டினார். "சமீபத்திய கூர்மையான தாக்குதல், ஜூலை 5ன் தொடர்ச்சியாக இருந்தன. இன ஒற்றுமையை உடைப்பதும், தாய்நாட்டிற்குள் பிளவுகளை உருவாக்குவதும் தான் அவர்களின் எண்ணம்" என்று அவர் அறிவித்தார். அக்டோபர் 1ல் சிசிறின், 1949 புரட்சியின் 60வது ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கு தொந்தரவு கொடுக்கும் எந்த போராட்டங்களையும் ஒடுக்க குறிப்பாக பெய்ஜிங் கவலை கொண்டிருக்கிறது, மேலும் தேசியளவிலான பாதுகாப்பு ஒடுக்குமுறைக்கும் அது உத்தரவிட்டுள்ளது. எச்ஐவி நோயாளிகளின் பிரத்யேக ஊசிமுனை தாக்குதல்கள் முன்னரே சீனாவில் ஏற்பட்டுள்ளன, நோயை தடுப்பதில் ஏற்பட்ட அரசாங்கத்தின் தோல்வி மற்றும் எச்ஐவி/எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை உத்தியோகபூர்வமாக ஒருதலைபட்சமாக நடத்துவது ஆகியவற்றால் ஏற்பட்ட சீற்றமும், மலைப்பும் அடிக்கடி பிரதிபலித்திருந்தது. சீனாவில் ஜின்ஜியாங்கில் தான் அதிகளவிலான எச்ஐவி பாதிப்பு விகிதம் இருக்கிறது (2008ல் மட்டும் 25,000 புதிய நோயாளிகள்)இது பரவலாக இருக்கும் போதை மருந்து பழக்கம் மற்றும் விபச்சாரம் ஆகியவற்றிற்கு இட்டு செல்ல கூடிய சமூக உடைவின் மற்றொரு அறிகுறியாக உள்ளது. ஜின்ஜியாங்கில் நடந்து வரும் இன பதட்டங்களின் ஆணிவேரானது, நாட்டில் ஆழமாக தீவிரமடைந்து வரும் சமூக நெருக்கடிகளிலும், CCP அரசாங்கத்தாலும், அதன் ஜனநாயகத்திற்கு எதிரான போலீஸ் ஆட்சி முறைகளாலும் தூண்டிவிடப்பட்டிருக்கும் ஹன் சீன இனப்பற்றுக்களிலும் ஊடுருவியுள்ளது. உகூர் மக்கள் சமூக இடர்பாடுகளாலும், திட்டமிட்ட வகையில் கைவிடப்பட்டிருப்பதாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலர், கிழக்கு கடற்கரை மாகாணங்களில் உள்ள மாடுழைப்பு கூடங்களுக்கு தொழிலாளர்களாக செல்ல, அதிகாரிகளால் கட்டாயமாக அம்மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜின்ஜியாங் ஒரு எரிசக்தி வளர்ச்சியைக் கண்டு வந்த போதினும், உழைக்கும் மக்கள் உகூர் மற்றும் ஹன் சீனர்கள் போன்றோர் எவ்வித பலன்களையும் பெறவில்லை. "ஜின்ஜியாங்கில், இயற்கை எரிவாயு பற்றாக்குறையில் உள்ளது. உரூம்கி மற்றும் காஷ்கருக்கு இடையில் உள்ள அக்சூவில், பேருந்துகளும், டாக்சிகளும், தனியார் கார்களும் ஒவ்வொரு நாளும் இயற்கை எரிவாயு வினியோக நிலையங்கள் முன்னர் அரை கிலோமீட்டருக்கு வரிசையில் நிற்கின்றன. இப்பிராந்தியத்தின் பெட்ரோல் மற்றும் எரிவாயு விலைகள் சீனாவில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக உள்ளன. அப்பிராந்தியத்தின் இயற்கை எரிவாயு பிற மாகாணங்களில் விற்கப்பட்டு விட்டதால், ஜின்ஜியாங்கின் பெரிய முக்கிய நகரங்கள் தவிர, பிற பெரும்பகுதிகளில் உள்ள வீடுகளில், எரிப்பதற்காக கரியும், கட்டையுமே பயன்படுத்தப்படுகின்றன," என்று பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிட்டது. ஜின்ஜியாங்கிற்கு புலம்பெயர ஊக்குவிக்கப்பட்ட ஹன் சீனர்கள், பொருளாதார பிரச்சினைகளை முகங்கொடுத்து வருகிறார்கள். பைனான்சியல் டைம்ஸின் கருத்துப்படி, பலவீனமான பொருளாதாரம் குறித்து ஹன் போராட்டக்காரர்களும் குற்றஞ்சாட்டி வருகிறார்கள், மேலும் அரசாங்கத்தின் நிதியுதவியையும் கோரி வருகிறார்கள். "சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துவிட்டதால் கடை உரிமையாளர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். மேலும் ஜூலை கலகத்திற்கு பின்னர் பொருள்நுகர்வும் வீழ்ச்சி அடைந்துள்ளது," என்று அக்கட்டுரை குறிப்பிட்டது. ஜின்ஜியாங்கின் அமைதியின்மை பரந்த சமூக கொந்தளிப்புகளை ஏற்படுத்த கூடும் என்று சீன அதிகாரிகள் ஆழமாக கருதுகிறார்கள். உயர்ந்து வரும் வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையால், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்களும், வேலைநிறுத்தங்களும் தீவிரமடைந்து வருகின்றன. செப்டம்பர் 1-2ல், நீண்ட வேலை நேரம் மற்றும் சம்பள வெட்டுக்களுக்காக Shenzhenல் உள்ள Weikang மருந்துவ உபகரணங்கள் தயாரிப்பு ஆலையில் பணியாற்றும் 1000த்திற்கும் மேலான பெண் தொழிலாளர்கள் வேலைகளை நிறுத்தினார்கள். இந்த போராட்டத்தை கலைக்க உள்ளூர் அரசாங்கம் டஜன் கணக்கான துணை இராணுவ போலீஸை அனுப்பி வைத்தது, இதில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்தனர். மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம், பன்னாட்டு பெருநிறுவனமான பிலிப்ஸின் ஒரு சேய் நிறுவனமாகும். ஜனாதிபதி ஹூ ஜின்டோவிடம் செல்வாக்கு மிக்கவரும், CCP பொலிட்பீரோவில் பெரிய உறுப்பினருமான அம்மாகாணாத்தின் CCPன் செயலாளர் Wangன் இராஜினாமாவிற்காக உரூம்கியில் போராட்டக்காரர்கள் கோருவது, குறிப்பாக பெய்ஜிங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 14 ஆண்டுகளாக ஜின்ஜியாங்கின் பொறுப்பில் Wang இருந்து வருகிறார், இது சீனாவின் மாகாண நியமன முறையில், அசாதாரணமான வகையில் நீண்ட காலமாகும். போராட்டம் தொடங்கியதிலிருந்து, Wang அரசு தொலைகாட்சியில் தோன்றவில்லை என்பதால் அவரின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று உரூம்கியில் வதந்திகள் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் அறிவித்தது. அவரின் அனுபவத்தின் காரணமாக, சிசிறின் மத்திய கமிட்டியில் இருந்து மட்டுமே ஒரு வாக்கெடுப்பின் மூலம் Wang நீக்கப்படலாம். இதுபோன்றதொரு முடிவு சிசிறி அதிகாரத்துவம் முழுவதுமே எதிரொலிக்கும் என்று அப்பத்திரிகை குறிப்பிட்டது. "Wang போன்றவொரு மூத்த அதிகாரியை நீக்குவதென்பது, சீன மக்களுக்கு அதிகாரிகளை வெளியேற்றும் சக்தி இருக்கிறது என்ற ஒரு சமிக்ஞையை ஜின்ஜியாங்கையும் கடந்து வெளியில் அனுப்பும்," என்று குறிப்பிட்டது. இதெல்லாம் சந்தேகத்திற்கிடமின்றி, கீழ்பதவியில் இருக்கும் இரண்டு அதிகாரிகளின் பதவிகளைத் தியாகம் செய்வதற்கு பின்னணியில் கவனிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அம்மாகாண தலைமை போலீஸ் அதிகாரியும், உரூம்கி CCPன் தலைவருமான Li Zhiம் நீக்கப்பட்டு, ஜின்ஜியாங்கின் சட்ட ஒழுங்கு கமிஷனின் தலைவர் Zhu Hailun அவ்விடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இன பதட்டங்களையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி இருக்கும் இந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு காரணமான இந்த CCP அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமான படைபலம் மற்றும் போலீஸ் ஒடுக்குமுறை என்ற ஒரேயொரு பதிலை மட்டுமே கொண்டிருக்கிறது என்பதையே இந்த நியமனம் தெளிவுபடுத்துகிறது. |