World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Wildfires ravage central and southern California

காட்டுத்தீயால் சூறையாடப்படும் மத்திய மற்றும் தெற்கு கலிபோர்னியா

By Dan Conway
2 September 2009

Use this version to print | Send feedback



மேற்கு அமெரிக்காவில் அதிகரித்து வரும் வெப்பநிலைகள், கடந்த வாரத்தில் ஒரு பெரிய காட்டுத்தீயை ஏற்படுத்தி இருக்கிறது. கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் 120,000த்திற்கும் மேலான ஏக்கர் (485 சதுர கிலோமீட்டர்) எரிந்துவிட்டிருக்கிறது, இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வர மேலும் இரண்டு வாரங்கள் பிடிக்கும் என்று தீயணைப்பு அதிகாரிகள் கணித்துள்ளார்கள். காட்டுத்தீ விரைவாக பரவ முக்கிய காரணமாக அமையும் வேகமான காற்று இல்லாவிட்டாலும் கூட, தீ பெருமளவில் பரவிவிட்டிருக்கிறது. நாட்டில் தொடர்ச்சியான மூன்றாண்டு கால மழையின்மையால் தாவரங்கள் பெருமளவில் காய்ந்திருப்பதாலும், உயர்ந்த வெப்பநிலையாலும் இந்த காட்டுத்தீ தூண்டிவிடப்பட்டிருக்கிறது.

ஞாயிறு இரவு இரண்டு மடங்காக உயர்ந்த "ஸ்டேஷன் தீ" மட்டும், 100,000 ஏக்கருக்கும் மேலான லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பிரதேசத்தை இரையாக்கிவிட்டிருக்கிறது. இது, 6,600 இற்கும் மேலான குடும்பங்கள் வெளியேறும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த காட்டுத் தீயினால் இருபத்தியொரு வீடுகள் இதுவரை எரிந்து நாசமாகி உள்ளன, மேலும் காட்டின் Big Tujunga Canyon மனமகிழ் பகுதியில் 23 கேபின்களும் அழிக்கப்பட்டுள்ளன.

நெருப்பு, இதுவரை 5 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கணித்திருக்கும் தீயணைப்பு அதிகாரிகள், வரவிருக்கும் நாட்களில் காற்று வீசத்தொடங்கும் என்றும் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இந்த காட்டுத்தீ, கலிபோர்னியாவின் வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். தற்போது மந்தமாக இருக்கும் காற்று, நெருப்பு பரவுவதற்கு நேரடியாக பங்கு வகிக்கவில்லை என்ற போதினும், கலையாத பெரும் மேகக் கூட்டங்களால் ஏற்பட்டிருந்த மோசமான வானிலையால், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் இருந்து நீரையும், பிற தீயணைப்பு பொருட்களையும் வீச முடியாத சிக்கலான நிலைமையை ஏற்படுத்தி இருந்தது.

அங்கிருந்த காற்றின் தரமும் மிகவும் பாதிப்பேற்படுத்துவதாக மாறிவிட்டிருக்கிறது, குடியிருப்போர் ஒன்று வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியாகவோ அல்லது சில காலத்திற்கு வெளியூரில் இருக்கும்படியாகவோ எச்சரிக்கப்பட்டார்கள். லாஸ் ஏஞ்சல்ஸின் நகர பகுதிகள், காட்டுத்தீயிலிருந்து நீண்ட தூரத்தில் இருந்தாலும் கூட, சாம்பல்களால் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

பல ரேடியோ நிலைகள், செல்போன் ஒலிபரப்பிகளுடன் 22 தொலைக்காட்சி நிலையங்களையும் கொண்டிருக்கும் மவுண்ட் வில்சன் சிகரத்தை காட்டுத்தீ எட்டும் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது. தொலைதொடர்பு கருவிகளை உள்ளபடியே விட்டுவிட்டால் மிகவும் அபாயகரமாக மாறிவிடும் என்று தீர்மானித்ததால், தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தீயணைக்கும் இரசாயனங்களை தொலைதொடர்பு சாதனங்களின் மீது பூசியிருக்கிறார்கள்.

மவுண்ட் வில்சன் மீதான காட்டுத்தீ 104 ஆண்டு கால வில்சன் ஆய்வகத்தையும் அச்சுறுத்துகிறது, இங்கு தான் விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் ஹப்பிள், பிரபஞ்சத்தில் பால்வெளி மண்டலங்களுக்கும் கூடுதலாக பிற நட்சத்திர மண்டலங்களும் இருக்கின்றன என்ற பிரபலமான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். அதன் பின்னர், நட்சத்திர மண்டலங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று நகரும் வேகத்தை கண்டறிய ஹப்பிள் இந்த ஆய்வகத்தின் ஹூக்கர் தொலைநோக்கியை பயன்படுத்தினார், இது பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு கோட்பாட்டிற்கு உதவியாக இருந்த ஒரு முக்கிய ஆய்வாக அமைந்தது. ஒருமுறை இந்த ஆய்வகத்தைப் பார்வையிட்டுள்ள ஆல்பேர்ட் ஐன்ஸ்டீனும் கூட, விரைவில் அழிக்கப்பட இருக்கும் அறைகளில் ஒன்றில் தமது பல இரவுகளைக் கழித்துள்ளார்.

காட்டுத்தீ மிகப் பெரியளவில் இருக்கும் நிலையில், மிக பெரியளவில் பொருட்களை நாசப்படுத்தியுள்ள இந்த காட்டுத்தீ, மத்திய கலிபோர்னியாவில் ஏற்பட்டிருக்கும் 49வது காட்டுத்தீயாகும். இது வரலாற்று பிரசித்தி பெற்ற தங்க நகரமான ஆபர்னில் (Auburn) 60திற்கும் மேலான வீடுகளை எரித்து விட்டிருக்கிறது. மிக வேகமாக அப்பகுதி முழுவதும் பரவிய இந்த ஆபர்ன் காட்டுத்தீ, ஒருசில வினாடிகளில் ஒட்டுமொத்த குடியிருப்பு பகுதிகளையும் தரைமட்டமாக்கியது. "எங்கள் வீடு அழிந்துவிட்டது. ஒட்டுமொத்த பகுதியும் எங்கள் பகுதியும் தரைமட்டமாகிவிட்டது," என்று அந்நகரத்தில் வசிக்கும் கென்னி ஜேம்ஸ் வருத்தப்பட்டார்.

கலிபோர்னியாவின் தற்போதைய நிதி நெருக்கடி, Cal Fire என்று அழைக்கப்படும் தீவிபத்து பாதுகாப்பு சேவைகளுக்கான, குறிப்பாக கலிபோர்னியாவின் வன மற்றும் காட்டுத்தீ பாதுகாப்பு துறையின் நிதிகளையும் சுரண்டிவிட்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் போது மட்டும், 27 மில்லியன் டாலருக்கும் அதிகமான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், நடப்பில் இருக்கும் தீயணைப்பு சாதனங்களிலேயே மிக சிறந்த ஒரேயொன்றாக பரவலாக கருதப்படும் தீயணைப்பு விமானமான ஞிசி-10ஐ பயன்படுத்துவதற்கான மூன்று வருட ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் அரசு சமீபத்தில் மறுத்துவிட்டது.

வலைத் தளத்தில் செயல்படும் Fire Department Network News பத்திரிகையுடனான ஒரு செவ்வியில், 10 Tanker Air Carrier ன் மேலாண்மை கூட்டாளி ரிக் ஹாட்டன் (Rick Hatton) கூறுகையில், இந்த ஒப்பந்தம் இரத்து செய்வதற்கான முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். "Cal Fire" உள்ள அதிகாரிகளைப் போல நாங்களும் ஆச்சரியமடைந்தோம். கலிபோர்னியாவின் பிற தீயணைப்பு விமானங்களை விட பத்து மடங்கு சிறப்பாக செயல்படக்கூடிய, ஒரு நிரூபிக்கப்பட்ட வான்வழி தீயணைப்பு சாதன பயன்பாட்டை உடனடியாக நிறுத்துவதென்பது, முற்றிலும் தவறானதாகும்."

நெருப்பு தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், தற்போதைய காட்டுத்தீயைச் சமாளிப்பதற்கு தேவையான போதிய கருவிகள் தீயணைப்பு வீரர்களிடம் இல்லை என்று அரசு அதிகாரிகள் தற்போது முறையிடுகிறார்கள். எவ்வாறிருப்பினும், மிக சமீபத்தில், ஒரு ஞிசி-10 விமானத்திற்காக, அதிக பணம் பறிக்கும் வகையிலான ஓர் ஒப்பந்தத்தை அவசரகதியில் பேரம் பேசும் கட்டாய நிலைக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது. இது சனிக்கிழமை வரை ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை. "pay as you go" என்ற முறையில் அரசிற்கு இரண்டாவது DC-10 விமானம் அளிக்கப்பட உள்ளது, ஆனால் இதுவும் செவ்வாய்கிழமை வரை காணப்படவில்லை. "super scooper" என்று அழைக்கப்படும் அமெரிக்க வன சேவைகளின் விணீக்ஷீtவீஸீ விணீக்ஷீs கிவீக்ஷீ ஜிணீஸீளீமீக்ஷீன் சமீபத்திய இயந்திர கோளாறினால், தற்போதைய காட்டுத்தீக்கு எதிராக போராட முடியாத நிலையை ஏற்படுத்தி இருப்பதால், DC-10 விமானங்களை வாங்குவதற்கான அவசரத்தின் ஒரு பகுதியாக உள்ளது.

Cal Fireக்கு செய்யப்பட்ட 27 மில்லியன் டாலரில், 17 மில்லியன் டாலர் வாகன பராமரிப்பு மற்றும் மாற்றுவதற்கான நிதி ஒதுக்கீடுகளில் இருந்து வெட்டப்பட்டதாகும். இதனால் பழைய தீயணைப்பு விமானங்களையும், பல இடங்களில் பாதுகாப்பற்ற வாகனங்களையும், சாதனங்களையும் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டு தீயணைப்பு விமானங்களின் இயந்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுந்துவிட்ட போது, ஆக்டன் நகரில் ஏற்கனவே அவற்றின் வாழ்வை அவை இழந்து விட்டிருக்கின்றன. அந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் மேற்படி எந்த தகவலும் அளிக்கவில்லை என்ற போதினும், Cal Fire க்கும், பிற அமைப்புகளுக்கும் நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததால் தான் இவ்வாறு நடந்ததாக சர்ச்சைகள் உருவாகி உள்ளன.

கூடுதலாக, வீட்டு உரிமையாளர்கள் மீதான காட்டுத்தீயின் பேரழிவுமிக்க பாதிப்பு, காப்பீட்டுத்துறையால் எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளாலும் சுற்றி வளைக்கப்படும்.

நாட்டில் காட்டுத்தீ அடிக்கடி ஏற்படுவதாக கூறி வீடுகளுக்கான காப்பீட்டு பிரிமீயம் தொகையை 4 முதல் 7 சதவீதத்திற்கு உயர்த்த அரசு ஆணையத்திடமிருந்து கடந்த ஆண்டு, காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புதலை வென்றன.

நியாயப்படுத்தப்பட்ட இந்த உயர்விற்கான காரணம், வெறுமனே கணக்கியல் கண்ணோட்டத்தில் எடுத்துக் கொண்டாலும் கூட, முற்றிலுமாக பொருத்தமற்றது. 2003ல் 3,000 வீடுகளை எரித்த சான்டிகோ (San Diego) காட்டுத்தீ போன்ற இதுவரை மிக அதிகமான சொத்துக்களுக்கு பாதுப்பு ஏற்படுத்திய கலிபோர்னியாவின் காட்டுத்தீ சம்பவங்களும் கூட, நாட்டில் ஏதோவொரு வகையில் 15 மில்லியன் வீடுகள் சொத்து காப்பீட்டைக் கொண்டுள்ளன என்ற உண்மையின் அடிப்படையில் பார்க்கும் போது, அது காப்பீட்டு துறையில் மிக குறைவான பாதிப்பை தான் ஏற்படுத்தி உள்ளன.

காப்பீட்டுத்துறையின் இரண்டாவது மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான AllState, கலிபோர்னியாவில் மேற்கொண்டு புதிய வாடிக்கையாளர்களைப் பெற போவதில்லை என்று அச்சுறுத்திய பின்னர் தான், அரசு காப்பீட்டுத்துறை கமிஷனர் அலுவலகம் விகித உயர்வை ஒப்புக்கொண்டது.

கலிபோர்னியாவில் காட்டுத்தீ அடிக்கடி ஏற்படுவதாகும், உயிர்களையும், வீடுகளையும் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகளையும் பாதுகாக்க தேவையான போதிய ஆதாரங்களைத் திரட்ட இயலாத, இலாப முறையின் முழுமையான இயலாமையையே இந்த கலிபோர்னியாவின் காட்டுத்தீ சம்பவம் மீண்டுமொரு முறை எடுத்துக்காட்டி உள்ளது. ஏற்பட்டிருக்கும் எல்லாவிதமான சேதத்திற்கான பொறுப்பும், கவர்னர் ஸ்கூவட்ஜனர் மற்றும் ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் அமைப்பு உட்பட, அரசாங்கத்தின் தோள்களில் தான் முழுவதுமாக விழுகிறது. மேலும், அரசை முழுவதுமாக உறிஞ்சியிருக்கும் மற்றும், தங்களின் இலாப விகிதங்களை உயர்த்த பெருமளவிலான மனித இழப்புகளை மேலும் மேலும் பயன்படுத்த விரும்பும் பெரிய வங்கிகள் மற்றும் பெரிய வியாபார மேற்தட்டுகளையும் அது சாரும்.