World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: What is behind the Socialist Party's plans for a presidential primary?

ஒரு ஜனாதிபதி ஆரம்பத் தேர்தலுக்கான சோசலிஸ்ட் கட்சியின் திட்டங்களின் பின்னணி யாது?

By Kumaran Ira
5 September 2009

Use this version to print|Send feedback

சோசலிஸ்ட் கட்சி (Parti Socialiste PS) ஒரு அமெரிக்க மாதிரியிலான வெளிப்படையான ஆரம்ப முறைக்கு கோட்பாட்டளவில் ஒப்புதல் கொடுத்து, இடதுசாரி வாக்காளர்கள் என்று தங்களை விவரித்துக் கொள்ளுபவர்கள் அனைவரையும் ஒரு PS தலைவர்கள் பட்டியலில் யார் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்று கூற அனுமதிக்கிறது. இந்த நடவடிக்கைக்காக வாதிடுபவர்கள் கொடுத்துள்ள ஆவணங்கள், இந்த முயற்சி இதன் வணிகச் சார்பு கொள்கைகள் பற்றி பெருகிய முறையில் வெகுஜன அதிருப்தி இருந்தும், PS க்கு பின் மக்கள் ஆதரவைத் திரட்டும் ஒரு பிற்போக்கு தன்மை வாய்ந்தது எனக் காட்டுகின்றன.

வெளிப்படையான ஆரம்ப தேர்தல் பற்றிய கொள்கை நீண்ட காலமாகவே PS ன் 2007ம் ஆண்டு தோல்வியுற்ற ஜனாதிபதி வேட்பாளர் செகோலீன் ரோயாலுடன் தொடர்பு கொண்டது. PS க்குள் நடந்த தலைமைக்கான போட்டிகளில் அவர் இணையம் மற்றும் 2006 இவர் தேர்தலுக்கு நியமிக்கப்பட்டபோது குறைக்கப்பட்ட 20யூரோக்கள் கட்டணம் ஆகியவற்றினால், சேர்ந்திருந்த புதிய உறுப்பினர்களிடமிருந்து கணிசமான வாக்குகளைப் பெற்றார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற Reims மாநாட்டில், இவர் "வெஜனங்களுக்கு கட்சியை திறந்துவிடுதல்", "நம் கட்சியை பெரும் வெகுஜன ஆதரவுடைய கட்சியாக செய்தல்" ஆகியவை பற்றிப் பேசினார்.

ஆகஸ்ட் 26ம் தேதி பிரெஞ்சு நாளேடு Liberation, PS உடன் பிணைப்புள்ள ஒரு சிந்தனைக் குழுவான Terra Nova ஆல் முன்முயற்சிக்கப்பட்ட, "குடிமக்களில் இடதுசார்பு உடைய அனைவரும் பங்கு பெறும் ஒரு வெகுஜன ஆரம்ப தேர்விற்கு" அழைப்பு கொடுத்த ஆவணத்தை வெளியிட்டது. அப்பொழுதில் இருந்து டெர்ரா நோவாவின் திட்டம் PSன் முழு தலைமையிலானலும் கிட்டத்தட்ட ஏற்கப்பட்டுவிட்டது.

டெர்ரா நோவாவின் திட்டம் சுற்றறிக்கையில் வந்தபோது, மற்ற முக்கிய PS தலைவர்களும் அதற்கு ஆதரவு கொடுத்தனர். முன்னாள் பிரதம மந்திரி Laurent Fabius வெளிப்படையான ஆரம்ப முயற்சிகள் "தவிர்க்க முடியாதவை" என்றார். பாரிஸ் மேயர் Bertrand Delanoë கூறினார்: "உண்மையில் நாம் கதவுகளையும் சன்னல்களையும் திறந்து வைத்து இடதுசார்புடைய குடிமக்கள் அனைவரையும் அழைக்க வேண்டும்."

இறுதியாக அரசாங்கம் குறுக்கிடவேண்டும் என்று பொதுப்படையாகக் கூறும் PS க்குள் இருக்கும் பிரிவின் தலைவர் PS ன் முதல் செயலாளர் மற்றும் ரோயாலின் பிரதான போட்டியாளரான Martine Aubry, தன்னுடைய ஆதரவை இத்திட்டத்திற்கு கொடுத்தார். ஆகஸ்ட் 28-30 ல் La Rochelle ல் நடைபெற்ற கட்சியின் ஆண்டு மாநாட்டில் PS ன் முதல் செயலாளர் Le Monde யில் ஒரு தலையங்கம் எழுதினார்; அதில் எமது கட்சிக்குள் இருக்கும் வழக்கங்கள், அரசியல் வினாக்கள் ஆழ்ந்த முறையில் மாற்றப்பட வேண்டும், அதிலும் குறிப்பாக நம் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வெளிப்படையான ஆரம்ப முயற்சிகளை அமைப்பதில்" என்று கூறியுள்ளார்.

இந்த மாற்றங்கள் La Rochelle மாநாட்டில் உத்தியோகபூர்வமாக கூறப்பட்டன. தன்னுடைய ஆரம்ப உரையில் Aubry, "PS, முதலில் இருந்து கடைசிவரை மாற்றப்பட வேண்டும்" என்றார். "2010 ஜனாதிபதித் தேர்தல்களில் வேட்பாளர்களை நியமிக்க உறுப்பினர்கள் வெளிப்படை ஆரம்ப தேர்தல்கள் என்ற கோட்பாட்டுடன் உடன்பட்டுள்ளனரா எனக் கேட்கப்படுவர்" என்றார்.

ரோயால் கூறினார்: "நான் எப்பொழுதுமே PS இன்னும் வெளிப்படையாக, பரந்த அளவில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவள். சரியான சிந்தனைகள் முன்னேறுகின்றன. ஆனால் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கும் முடிவு விரைவில் எடுக்கப்பட வேண்டும்."

Terra Nova தயாரித்துள்ள ஆவணங்கள் தெளிவாக்கியுள்ள வகையில், PSன் தோற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் நிலைமையை சரி செய்வதற்கு வெளிப்படை ஆரம்ப தேர்தல்களை புதிதாக தொடக்கும் இலக்கு உள்ளது. PS ஆட்சியின் தொடர்ந்த காலங்களில் --பிரான்சுவா மித்திரோன் (1981-1995) ஜனாதிபதிக் காலம், பின் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பனின் பன்முக இடது அரசாங்கம் (1997-2002)--PS தாமே சிக்கன நடவடிக்கைகள் எடுத்தது, சமூக நலக் குறைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கியது போன்றவற்றால் மக்கள் முன் இழிவடைந்தது.

2002 ஜனாதிபதி தேர்தலில் ஜோஸ்பன் தோல்வியடைந்ததில் இருந்து, PS பல பின்னடைவுகளை கண்டுள்ளது; மிகச் சமீபத்தில் அது 2007 ஜனாதிபதித் தேர்தல்களில் தோல்வியுற்றது. 2009 ஐரோப்பிய தேர்தல்களிலும் அதற்கு அதிக ஆதரவு இல்லாமற் போய்விட்டது. கட்சிக்குள் உட்பிளவுகள் Reims ல் கடந்த நவம்பரில் நடந்த சமீபத்திய PS மாநாட்டில் கொதிநிலையில் இருந்தன. ரோயால் பிரிவு பகிரங்கமாக Aubry யை Reims ல் அவர் கட்சித் தலைவர் என்று வெற்றிபெற்ற தேர்தல் மோசடியானது என்று குற்றம் சாட்டியுள்ளது.

"ஒரு பிரெஞ்சு முறை ஆரம்ப தேர்தல்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் Terra Nova எழுதியது: "லியோனல் ஜோஸ்பனுக்கு பின் தோன்றல் இன்னும் உறுதியாகவில்லை. இதற்குக் காரணம் நம் கட்டுமானம்: நீடித்த நிறுவன வழிவகை, கட்சித் தலைமைப் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்கும் வழிவகை இல்லை. இச்சூழலில் ஒரு "இயல்பான" தலைவர் வெளிப்படுவது என்பது நெருக்கடியை தீர்க்க அனுமதிக்கும்.... ஒரு திறமையான, நீடித்த தேர்தல் வழிவகையில் சோசலிஸ்ட் கட்சியை வைப்பது அதற்கு முக்கியமானதாகும்."

மரபார்ந்த வகையில் PS ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் கட்சி உறுப்பினர்களின் வாக்கை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் Terra Nova வேட்பு என்பது எவர் சோசலிச வாக்காளர் என்று தன்னைக் கூறிக் கொண்டாலும் அவரால் வெளிப்படையாக நிர்ணயிக்கப்படலாம் என்று வாதிடுகிறது. "ஒரு வெகுஜன ஆரம்ப தேர்தலுக்கு அழைப்பு விடுகிறோம்; இது ஆதரவாளர்களுக்கு வாக்கு என்றும் இருக்கும்; அதையொட்டி இடது சார்பு குடிமக்கள் மற்றும் முன்னேற்றம் நாடுவோர் ஜனாதிபதித் தேர்தலில் தங்களுக்கு பிடித்த வேட்பாளரைத் தேர்நதெடுக்கலாம்."

இதன் பின்னர் Terra Nova இந்த மாற்றத்திற்கான அரசியல் செயல் நோக்கத்தை விளக்குகிறது. "இது வெளிப்படை ஆரம்பநிலை தேர்தல் அளிக்கும் நவீனமுறைப் பாங்கு மற்றும் ஆற்றல் மிக்க தன்மைக்கு ஆதரவு கொடுக்கும் தோற்றம் பற்றிய பிரச்சினை ஆகும். இதில் ஒரு தேர்தல் தொடர்புடைய இயக்கமும் உள்ளது: வெளிப்படை ஆரம்ப தேர்தல் முதலில் வேட்பாளருக்கு வலுவான நெறியைக் கொடுக்கிறது. [2006 இத்தாலிய பிரதம மந்திரி ரோமனோ] ப்ரோடி 4 மில்லியன் குடிமக்களால் இருத்தப்பட்ட வலிமை, அல்லது [அமெரிக்க ஜனாதிபதி பாரக்] ஒபாமா 35 மில்லியன் மக்களால் இருத்தப்பட்ட வலிமையானது, 200,000 பிரெஞ்சு சோசலிஸ்ட்டுக்கள் கொடுக்கும் ஆதரவுத் தன்மையைவிட மிகச் சிறந்தது."

சுருங்கக் கூறின், இது PS ஜனதிபதி வேட்பாளருக்கு செய்தி ஊடகத்தில் கவனத்தில் பெரும் ஏற்றம் அளிக்கவும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான வலதுசாரி நடவடிக்கைகள் எடுக்கும் ஒரு PS வேட்பாளருக்கு அரசியல் நெறி போன்ற ஆதரவைக் கொடுக்கும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டெர்ரா நோவா தொடர்ந்தது: "ஒரு ஜனநாயக இயக்கமும் இதில் உள்ளது: இத்தகைய ஆரம்ப தேர்தல் குடிமக்கள் அரசியலில் பங்கு பெறும் விருப்பத்துடன் ஒத்துள்ளது. இத்தாலியில் 'Veltroni primary' உதாரணம் --மூன்று மில்லியன் வாக்காளர்கள் எந்தப் பொருளுரையும் இல்லாமல் தேர்தலில் பங்கு பெற்றது-- இந்த பங்கு பெறும் களிப்பிற்கு சான்றாக உள்ளது."

இதன்பின் இந்த வர்ணனை முன் முயற்சியின் ஜனநாயக விரோத உள்ளடக்கத்தின் இதயத்தானத்திற்கு செல்லுகிறது. முன் முயற்சி அரசியலில் மக்கள் ஆர்வத்தை இழிந்த முறையில் திரிக்க முற்படுகிறது, PS ன் வணிகச் சார்புடைய வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் வாக்காளர்களை செல்வாக்கிற்கு உட்படுத்துகிறது. இதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் வழிவகை இத்தாலிய நிலைமையை போல்தான் உள்ளது, அதாவது, "எந்த உண்மை உள்ளடக்கமும் இல்லாமல்."

டெர்ரா நோவா குறிப்பிடும் PS க்கான அயல்நாட்டு மாதிரிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இரண்டிலும் --இத்தாலியில் ப்ரோடி, அமெரிக்காவில் ஒபாமா-- வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற முடிந்ததற்குக் காரணம், அவர்கள், போலித்தனமான செய்தி ஊடகத்தாலும், அரசியல் நடைமுறையினாலும் அவர்களுடைய வலதுசாரி முன்னோடிகளிடம் இருந்து முறித்துக்கொள்ளுவதை பிரதிபலிக்கின்றனர் என்று கூறப்பட்டதால்தான். இது பிரான்சில் இருக்கும் நிலைமையுடனும் ஒத்து வருகிறது; இங்கு PS கன்சர்வேட்டிவாக பதவியில் இருக்கும் ஜனாதிபதி சார்க்கோசியை பதவியிழக்கச் செய்ய வேண்டும் என்று முயல்கிறது.

2005 இத்தாலிய ஆரம்ப தேர்தலில், l'Unione எனப்பட்ட ஒரு மைய-இடது அரசியல் கட்சிக் கூட்டணி தன் வேட்பாளராக ரோமனோ பிரோடியை தேர்ந்தெடுத்தது. பிரோடி பின்னர் அப்பொழுது பிரதமராக இருந்த சில்வியோ பேர்லுஸ்கோனியை 2006 தேர்தல்களில் தோற்கடித்தார். ஆரம்ப தேர்தல் வலதுசாரித் திட்டங்களை பதவிக்கு வந்ததும் செயல்படுத்தும் திட்டத்தை கொண்ட ஒரு பெரும் வணிகச் சார்புடைய அரசியல்வாதியான பிரோடி, இத்தாலியில் தொழிலாள வர்க்க அபிப்பிராயத்தின் முறையான பிரதிநிதி என்று முன்வைக்கப்பட்டார்.

உண்மையில், பிரோடியின் அரசாங்கம்--Rifondazione Communista போன்ற இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி உட்பட முழு உத்தியோகபூர்வ இத்தாலிய இடதின் ஒத்துழைப்புடன் பேர்லுஸ்கோனியின் கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தியது. அதிகாரத்தில் இருக்கும் போது, பிரோடியின் அரசாங்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனானில் இத்தாலிய துருப்புக்கள் நிலைநிறுத்தப்படுதல், இத்தாலியில் அமெரிக்க விமானத்தளத்தை விரிவுபடுத்தும் திட்டம் ஆகியவற்றை மேற்பார்வையிட்டது. உள்நாட்டுக் கொள்கையை பொறுத்த வரையில் அவர் பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கியது, ஓய்வூதியக் குறைப்புக்கள் மற்றும் கடும் சிக்கன நடவடிக்கைகளை எடுத்தது ஆகியவற்றைச் செய்தார்.

2007 ம் ஆண்டு வால்டர் வெல்ட்ரோனியை பிராடிக்கு பின்னர் பதவிக்கு வரவிருப்பவர் என்று காட்டுவதற்கான முயற்சிகள் --இதன் வெற்றுக் காட்சி டெர்ர நோவாவினால் பாராட்டப்பட்டாலும்--ஒரு தோல்வியில் முடிவடைந்தது. L'Unione 2008 தேர்தல்களில் பெரும் தோல்வியைக் கண்டது; தொழிலாள வர்க்க வாக்காளர்கள் மிகப் பெரிய அளவில் வாக்களிக்காதது குறிப்பிடத்தக்கது ஆகும். இதன் விளைவு பேர்லுஸ்கோனி மீண்டும் பதவிக்கு வந்ததும், அதிதீவிர வலதின் அரசியல் நல்வாய்ப்பில் குறிப்பிடத்தக்க உயர்வு இருந்தது, குறிப்பிடத்தக்க வகையில் ரோமில் ஒரு புதிய பாசிச மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகும்.

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் உதாரணம் பற்றி டெர்ர நோவா பலமுறை கூறியுள்ளது. இப்பொழுதுள்ள தேவையின்படி PS ஜனாதிபதி வேட்பாளர், PS ன் தேசியக் குழுவில் 15 சதவிகித ஆதரவைப் பெற வேண்டும் என்பது, "இப்பொழுதுள்ள சூழ்நிலையில் ஒரு 'பிரெஞ்சு பாரக் ஒபாமா' வெளிப்படுவதற்கு வாய்ப்பைக் கொடுக்கவில்லை" என்ற உண்மை பற்றி புலம்புகிறது.

ஆனால் இந்த வர்ணனயில் தான் விரும்பியதைவிட அதிகாமக டெர்ரா நோவா வெளிப்படுத்தியுள்ளது. பாரக் ஒபாமா பிரச்சாரமே அமெரிக்க அரசியல் மற்றும் செய்தி ஊடக நடைமுறை தோற்றுவித்ததுதான்; ஒரு அதிகம் அறியப்படாத, ஒப்புமையில் அதிக அனுபவமற்ற வேட்பாளரை மிக உயர்ந்த பொதுப்பதவிக்கு விரைவில் உயர்த்தும் முயற்சி என்ற விதத்தில். "மாற்றம்" என்ற தெளிவற்ற கோஷத்தில் பிரச்சாரம் செய்த ஒபாமா வெற்றி அடைந்தது, முன்னால் இருந்த புஷ் நிர்வாகத்தை மக்கள் நிராகரித்ததை அடுத்து நடந்த செயல் என்றுதான் பரந்த முறையில் விளக்கப்படுகிறது.

ஆனால் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, ஒபாமா அவருக்கு முன் பதவியில் இருந்த புஷ்ஷின் பிற்போக்குக் கொள்கைகளை தொடர்ந்ததுடன் தீவிரமாகவும் செயல்படுத்தி வருகிறார். ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்கிறது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்புக்கள் இரு மடங்காக்கப்பட்டுள்ளன. வங்கிகள் மற்றும் நிதியப் பிரபுத்துவத்திற்கு டிரில்லியன்களை அளிக்கையில், அவர் மகத்தான சமூக சிக்கனத் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார் --அமெரிக்க கார் நிறுவனங்கள் திவாலாவதை மேற்பார்வையிடல், கல்வி, சமூக நலன்களை போதிய அரசாங்க உதவி இல்லாமல் அழித்தல், சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்பது தொழிலாள வர்க்கத்திற்கு குறைந்துவிட்டது என்ற விளைவைக் கொடுக்கும் பிற்போக்கான சுகாதார "சீர்திருத்தத்தை" தயாரித்தது ஆகியவை இவற்றில் அடங்கும்.

இதன் விளைவு அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்ட பேரழிவுச் சரிவு ஆகும்.

இத்தகைய முன்னோடிகள்தான் PS ஆர்வத்துடன் விரும்புவதற்கான தரமாக மேற்கோளிடப்படுகின்றன என்னும் உண்மை, 2012 தேர்தலில் PS மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்க்கோசியின் தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளை தொடர முற்படும் என்பதற்கான மற்றும் ஒரு அடையாளம் ஆகும்.