World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Big banks grow more powerful under Obama

பெரிய வங்கிகள் ஒபாமாவின்கீழ் அதிக சக்தி வாய்ந்தவையாக வளர்கின்றன

Andre Damon
5 September 2009

Use this version to print | Send feedback

நிதிய நெருக்கடியை எதிர்கொள்ளும் விதத்தில் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்களின் கொள்கைகளின் விளைவாக அமெரிக்க வங்கி முறையில் ஏற்பட்டுள்ள மகத்தான ஒருங்கிணைப்பை கோடிட்டுக் காட்டி கடந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

"Banks 'Too Big to Fail' Have Grown Even Bigger -- 'சரியமுடியாத அளவிற்கு பெரிய வங்கிகள்' என்பவை பெரிதாக வளர்ந்துள்ளன" என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை மிகப் பெரிய வங்கிகள் எப்படி நிதியச் சந்தைகள்மீது கட்டுப்பாட்டை பலப்படுத்தியுள்ளன, தங்களின் இலாபங்களை அதிகரிக்க நுகர்வோர்கள், சிறு வணிகர்கள் மீதான கட்டணங்கள், வட்டி ஆகியவற்றை உயர்த்தியதின் மூலம் ஏகபோக உரிமை நிலையை பயன்படுத்துகின்றன என்பது பற்றி கட்டுரை கூறியுள்ளது.

"சிறு குழுவின் பிடி இறுகிவிட்டது" என்று கூறிய Moody's Economy.com ன் மார்க் ஜாண்டி போஸ்ட்டின் கட்டுரையில் மேற்கோளிடப்பட்டார். "பெரிய வங்கிகளிடையே குறிப்பிடத்தக்க வகையில் ஒருங்கிணைப்பு உள்ளது; இது வங்கி முறையையே வெற்றுத்தனமாக்கியுள்ள ஒரு வகை" என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

J.P.Morgan Chase, Wells Fargo, Bank of America ஆகியவை ஒவ்வொன்றும் இப்பொழுது நாட்டின் அனைத்து சேமிப்புக்களிலும் 10 சதவிகிதத்திற்கு மேல் கொண்டுள்ளன என்று செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இந்த வங்கிகள் சிட்டிக்ரூப்புடன் சேர்ந்து அனைத்து அடைமானங்களிலும் பாதித் தொகையை கொடுத்திருப்பதுடன், அனைத்து கடன்வசதிகள், கடன்கள் ஆகியவற்றில் மூன்றில் இரு பங்கையும் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் பத்து மிகப்பெரிய வங்கிகள் தங்கள் வங்கி சேமிப்புக்களில் உள்ள பங்கை 2007ல் இருந்த 40.6 ல் இருந்து 48.2 சதவிகிதத்திற்கு உயர்த்தியுள்ளன.

சந்தைமீது தாங்கள் கொண்டிருக்கும் கூடுதலான கட்டுப்பாட்டை பெரிய வங்கிகள் பயன்படுத்தி கட்டணங்களை அதிகமாக்கியுள்ளன. கடந்த காலாண்டில் இந்த வங்கிகள் தங்கள் சேமிப்பு பற்றிய கட்டணங்களை 8 சதவிகிதம் உயர்த்தியுள்ளபோது, சிறிய வங்கிகள் கட்டணங்களை 12 சதவிகிதம் குறைத்துள்ளன என்று போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

தோல்வியுறும் வங்கிகளை வளர்த்து உதவியளித்தலை பெரிய வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களும் எடுத்துக் கொள்ளுவதின் மூலம் அரசாங்கம் கூட்டாட்சியின் அறக்கட்டளை கட்டுப்பாடுகளை மீறியதாக போஸ்ட் குறிப்பிடுகிறது; அவ்விதிகளின்படி எந்த தனி வங்கியும் நாடெங்கிலும் இருக்கும் சேமிப்புக்களில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமானவற்றைக் கட்டுப்பாட்டில் கொள்ளக்கூடாது என்று உள்ளது. நீதித்துறையின் தனிப்பட்ட வங்கிகள் வட்டார நிதியச் சந்தைகளில் எந்த அளவு கட்டுப்பாடு கொள்ளலாம் என விதிக்கும் பொறுப்பாண்மைக் குழு (டிரஸ்டி) விரோத ஆலோசனைகளயும் இவை மீறுகின்றன.

கடந்த 18 மாதங்களில் வங்கிகள் முறையில் ஏற்பட்டுள்ள ஒருங்கிணைப்பின் முக்கிய மைல்கற்களாவன:

* மார்ச் 14, 2008: ஜே.பி. மோர்கன் சேஸ் முதலீட்டு வங்கியான Bear Stearns ஐ எடுத்துக் கொண்டது. பெடரல் ரிசேர்வ் குழு இதை வாங்குவதற்கு JP Morgan க்கு உதவித்தொகையாக $29 பில்லியனை அளித்தது.

* ஜூன்5, 2008: கூட்டாட்சி ரிசேர்வ் Countrywide Financial என்னும் நாட்டின் மிகப் பெரிய அடைமான நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுவதற்கு ஒப்புதல் கொடுத்தது.

* செப்டம்பர் 15, 2008: மெரில் லிஞ்சின் உறுதியளிப்புக்களில், பெடரலும், கருவூலமும் அதன் சொத்துக்கள் மீது $30 பில்லியன் உறுதியளித்ததால், பாங்க் ஆப் அமெரிக்கா அதை வாங்கியது.

* செப்டம்பர் 15, 2008: கூட்டாட்சி ரிசேர்வ் மற்றும் நிதியமைச்சகம் முதலீட்டு வங்கியான லெஹ்மன் பிரதர்ஸ் சரிந்துபோவதை அனுமதித்தன.

* செப்டம்பர் 21, 2008: பெடரலும் புஷ் நிர்வாகமும் முதலீட்டு வங்கிகளான கோல்ட்மன் சாஷ்ஸ் மற்றும் மோர்கன் ஸ்ரான்லி வங்கி வைத்திருக்கும் நிறுவனங்களை அனுமதித்தது; இதையொட்டி அவை சட்டப்படி மலிவான பெடரல் கடன்கள், மற்ற உதவித் தொகைகளைப் பெற முடிந்தது.

* செப்டம்பர் 25, 2008: வாஷிங்டன் ம்யூச்சுவல் என்னும் அமெரிக்காவின் மிகப் பெரிய சேமிப்பு, கடன் வழங்கும் வங்கியை JP Morgan Chase எடுத்துக் கொண்டது. இந்த செயலுக்கு FDIC எனப்படும் கூட்டாட்சி சேமிப்பு காப்பீட்டுக் கழகம் உதவிநிதி அளித்தது.

* அக்டோபர் 12, 2008: வெல்ஸ் பார்கோ மற்றொரு FDIC உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் Wachovia வை எடுத்துக் கொண்டது.

இந்த பெரிய எடுத்துக் கொள்ளல்களை தவிர, 80 சிறு வங்கிகள் FDIC யால் இந்த ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டன; பலவும் அரசாங்க உதவியினால், பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டன

இந்த வழிவகையின் விளைவினால் வோல்ஸ்ட்ரீட் நிறுவனங்களில் மூன்று மிகப் பெரியவை --பேர் ஸ்டேர்ன்ஸ், லெஹ்மன் பிரதர்ஸ் மற்றும் மெரில் லிஞ்ச்-- அழிந்துவிட்டன; பெரிய வங்கிகள் Wachovia, Washington Mutual போன்றவை மறைந்துவிட்டன; JP Morgan Chase, Goldman Sachs போன்ற பெரும் நிறுவனங்கள் சந்தை நிலைமை எப்படி இருக்க வேண்டும் என்று ஆணையிடும் விதத்தில் உயர்ந்துவிட்டது.

எஞ்சிய பெரிய வங்கிகளின் வளர்ச்சியும் பெரும் திகைப்பைக் கொடுக்கின்றன. மெரில் லிஞ்ச், மற்றும் Countrywide Financial ஐ எடுத்துக் கொண்ட பின்னர் பாங்க் ஆப் அமெரிக்கா 138 சதவிகிதம் வளர்ந்துவிட்டது என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது. JP Morgan, Bear Stearns, Washington Mutual இரண்டையும் விழுங்கிய பின்னர் 50 சதவிகித வளர்ச்சியைக் கண்டது. Wachovia ஐ எடுத்துக் கொண்ட பின்னர் Wells Fargo 43 சதவிகிதம் விரிவடைந்துள்ளது.

இந்த நெருக்கடிக்கு முன்பு வெல்ஸ் பார்கோ, ஜேபி மோர்கன் சேஸ் மற்றும் பாங்க் ஆப் அமெரிக்கா ஆகியவை வங்கிச் சேமிப்புக்களில் 4.4, 7.0 மற்றும் 9.6 சதவிகிதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தன. இப்பொழுது அவை முறையே 11, 10, 12.9 சதவிகிதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளன.

இந்த ஒருங்கிணைப்பு, ஒபாமா நிர்வாகத்தின் உறுதிமொழியான எஞ்சிய பெரிய வங்கிகள் சரிவதைத் தடுக்க எவ்வளவு பொதுப்பணம் வேண்டுமானாலும் செலவழிக்கப்படும் என்பதும் இந்த வங்கிகளை அவற்றின் சிறிய போட்டியாளர்களைவிட கணிசமான குறைந்த வட்டிகளில் கடன் வாங்கச்செய்து, ஒரு சில உயர்மட்ட வங்கிகளின் கைகளில் நிதிய சக்தி இன்னும் குவிப்பைக் காட்டும் நிலைமையை தோற்றுவித்துள்ளது. $100 பில்லியன் அல்லது அதற்கு அதிகமான சொத்துக்களைக் கொண்டிருக்கும் வங்கிகள் சிறிய போட்டி வங்கிகளைவிட 0.34 சதவிகிதப் புள்ளிகள் குறைவாக கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றன என்று வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது. அந்த ஆதாயம் 2007ல் 0.08 கத்தான் இருந்தது.

அரசாங்கம் தலையிட்டு ஒருங்கிணைப்பது ஏற்படும் வழிவகையும் தொடர்கிறது. திங்களன்று FDIC கஷ்டத்தில் இருக்கும் வங்கிகளை பெரிய நிறுவனங்கள் வாங்குவதற்கு உதவித் தொகை அளிப்பதுடன், பெரிய வங்கிகளின் இழப்புத் திறன்கள் அனைத்தையும் காக்கும் உறுதியையும் கொடுத்துள்ளது.

FDIC மற்ற வங்கிகள் தோல்வியுற்ற வங்கிகளின் சொத்துக்கள் $800 பில்லியன் 90 சதவிகிதப் பணயத்தை எடுத்துக் கொண்டுள்ளது என்று கட்டுரை கூறுகிறது. FDIC யின் மொத்த இழப்புக்கள் திறன் $80 பில்லியனுக்கு அருகே உள்ளன; இது மில்லியன் கணக்கான நுகர்வோர்களின் சேமிப்புக்களுக்கு உறுதியளிக்க வைத்திருக்கும் $10.4 உடன் ஒப்பிடத்தக்கது ஆகும்.

FDIC யின் சேமிப்புக் காப்பீட்டு நிதி ஓராண்டிற்கு முன் இருந்ததைவிட $50 பில்லியன் சரிந்துவிட்டது; அது புதிய வங்கித் தோல்விகளால் இன்னும் குறையும். 300க்கும் மேற்பட்ட வங்கித் தோல்விகள் வரவிருக்கும் மாதங்களில் எதிர்பார்க்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எடுத்துக் கொள்ளுவதற்கான உதவித் தொகைகளில் ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்ட விதத்தில் ஏற்பட்ட $14 பில்லியன் இழப்புக்களை நிறுவனம் ஈடுகட்டிவிட முடியும் என்று கருதுகிறது. FDIC இன்னும் பல பில்லியன்கள் பொதுப்பணத்தை அதன் சேமிப்புக் காப்பீட்டுத் திட்டத்திற்காக பெருக்கும் என்று பரந்தமுறையில் எதிர்பார்க்கப்படுகிறது.

FDIC யின் கொள்கையான வங்கிகளை பொதுப்பண இழப்பில் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கு ஆக்கம் கொடுப்பது "சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளுக்கு உதவித் தொகைகள் அளிப்பது போலாகும்" என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறுகிறது.

மிகப்பரந்த அளவில் நிதிய சக்தியின் குவிப்பு என்பது புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் வேண்டுமேன்றே கொண்டுவந்த கொள்கையின் விளைவு ஆகும். நிதிய உயரடுக்கின் மிகச் சக்திவாய்ந்த பிரிவுகளின் நலனுக்காக மகத்தான முறையில் அமெரிக்கப் பொருளாதாரத்தை மறுகட்டமைத்தலை செய்திடும் முயற்சிகளின் ஒரு கூறுபாடு ஆகும்; ஆனால் நெருக்கடியோ பெரிய வங்கிகளின் ஊக வணிகம் மற்றும் இலாப நோக்கினால் விரைந்து ஏற்பட்டது.

இத்துடன் இணைந்த விதத்தில், தொழிலாள வர்க்கத்தின் மீதான வேலைகள், ஊதியங்கள் மீதான முன்னோடியில்லாத தாக்குதல், தொழிலாளர்களுடைய சுகாதார பாதுகாப்பு முறையை பெரிதும் குறைத்தல், மருத்துவப்பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு ஆகிய அடிப்படை நலன்கள் திட்டத்தின் மீதான வரலாற்றுதன்மை நிறைந்த தாக்குதல்களுக்கு தயாரிப்பு ஆகியவையும் உள்ளன. இதன் நோக்கம் முதலாளித்துவ நெருக்கடியின் முழுச்சுமையையும் தொழிலாள வர்க்கத்தீன் மீது ஏற்றுவதுடன் நிரந்தரமாக தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களைக் குறைத்துவிடுவதும் ஆகும்.

ஜெனரல் மோட்டார்ஸ், கிறைஸ்லர் ஆகியவை கட்டாயமாக திவாலாக்கப்பட்டது இந்தவழிவகையில் ஒரு மைல்கல்லாகும். அவருடைய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களை போலவே, இதுவும் ஒபாமா நிர்வாகம் மற்றும் பெருநிறுவன செல்வாக்கு செலுத்துபவர்களின் மூத்த பிரிவின் ஆணையில் நடக்கிறது. நூறாயிரக்கணக்கான ஒய்வு பெற்ற கார்த் தொழிலாளர்கள் அவர்கள் குடும்பங்களுடைய சுகாதார நலன்களை அழித்தல் என்பது சுகாதாரப் பாதுகாப்பு செலவுக் குறைப்புத் திட்டங்கள் என்று இப்பொழுது சட்டமன்றத்தில் விவாதிக்கப்படுவதின் முன்னாய்வுதான்.

இந்த நிலைமையில், வங்கி கட்டுப்பாட்டு மாற்றம் என்று ஒபாமா நிர்வாகத்தால் கூறப்படுவது மோசடியைத் தவிர வேறு ஏதும் இல்லை. வோல் ஸ்ட்ரீட் நலன்களின் மிகுந்த சக்தி வாய்ந்த பிரிவின் கருவிதான் ஒபாமா நிர்வாகம் ஆகும்; ஊக வணிக, இலாபப் பேராசை என்பவற்றின் உண்மை வரம்புகளை இது கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடாது, ஈடுபட இயலாது; அதேபோல் வங்கியாளர்கள் தங்களுக்கே அளித்துக் கொள்ளும் மிகப் பெரிய ஊதிய தொகுப்புக்களையும் குறைக்க முடியாது, இயலாது.