World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குFor the mobilization of the working class to end the war in Afghanistan ஆப்கானிஸ்தானில் போரை முடிவுக்கு கொணர தொழிலாள வர்க்கத்தை திரட்டுவதற்காக Joe Kishore ஆப்கானிஸ்தானில் நடக்கும் போருக்கு அமெரிக்காவிலும், உலகெங்கிலும் வளர்ந்துவரும் மக்கள் எதிர்ப்பிற்கான தெளிவான அடையாளங்கள் உள்ளன. செவ்வாயன்று வெளியிடப்பட்ட CBS News உடைய கருத்துக்கணிப்பு, அமெரிக்காவில் விடையிறுத்தவர்களில் 41 சதவிகிதத்தினர், பெப்ருவரியில் 24 சதவிகிதத்திலிருந்து ஏப்ரலில் 33 சதவிகிதமாக உயர்த்தப்பட்ட படைகள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாகக் கூறுகிறது. அமெரிக்கத் துருப்புக்கள் திரும்பப்பெறப்பட வேண்டும் என்று கூறும் சதவிகிதத்தினர் பெருக்கம் கோருவோரைவிட இரு மடங்கு அதிகம் ஆகும். சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலான மக்கள் போரை எதிர்ப்பதாகக் காட்டுகின்றன. மக்கள் எதிர்ப்பு ஆப்கானிஸ்தானில் படைகளை நிறுத்தியுள்ள மற்ற நாடுகளில் இதே அல்லது இதைவிட அதிகமாகத்தான் உள்ளது. பிரிட்டனிலும் கனடாவிலும் 52 சதவிகிதத்தினர் படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று விரும்புகின்றனர்; ஆஸ்திரேலியாவில் 66 சதவிகிதத்தினர் போரை எதிர்க்கின்றனர்; பிரான்சில் இந்த எண்ணிக்கை 64 சதவிகிதம் ஆகும்; இது இத்தாலியில் 56 மற்றும் ஜேர்மனியில் 62 சதவிகிதம் ஆக உள்ளது. இவ்விதத்தில் போர் எதிர்ப்பு உணர்வு அதிகமாகப் பெருகியிருப்பது ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில் உள்ள ஏகாதிபத்திய சக்திகளுடன் நேரடி மோதலில் உள்ளது. இந்த ஆண்டு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட 21,000 துருப்புகள் கொண்ட "அலைக்கு" அப்பால், மேலும் பல்லாயிரக்கணக்கான துருப்புகளை உள்ளடக்கி, ஒரு பெரிய விரிவாக்கத்திற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. இப்பொழுது கிட்டத்தட்ட 100,000 வெளிநாட்டுத் துருப்புக்கள் நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன; இதில் 62,000 அமெரிக்க வீரர்கள் அடங்குவர் (இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தப்பட உள்ள கூடுதல் 6,000 வீரர்கள் இதில் சேர்க்கப்படவில்லை; அதேபோல் 70,000 க்கும் மேற்பட்ட இராணுவ ஒப்பந்தக்காரர்களும் சேர்க்கப்படவில்லை). ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளபதி ஸ்டான்லி மக்கிரிஸ்டலால் இந்த வாரம் வெளியிடப்பட்ட இரகசிய அறிக்கை ஒன்று இன்னும் 10,000 முதல் 45,000 கூடுதல் அமெரிக்க இராணுவப் படையினருக்கான முறையான வேண்டுகோளுக்கு அரங்கு அமைத்துள்ளது. ஒபாமா நிர்வாகம் எந்த வேண்டுகோளுக்கும் ஒப்புதல் கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது. வியாழனன்று பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மக்கிரிஸ்டலின் எந்த பரிந்துரைகளுக்கும், உறுதியாக அவருடைய முன்னோக்கிற்கும் திறந்த மனது கொண்டிருப்பதாக" கூறினார். அமெரிக்க இராணுவப்படைகளை ஆப்கானிஸ்தானில் விரிவாக்குவதும், பாக்கிஸ்தானில் அமெரிக்க இராணுவக் குறுக்கீட்டை அதிகப்படுத்துவதும் ஒபாமா நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கையில் மையப் பகுதியாக உள்ளன. தெற்கில் மகத்தான இராணுவ நடவடிக்கைக்குத் தயாரிப்புக்களுடன், பாக்கிஸ்தானில் ட்ரோன் எண்ணிக்கைத் தாக்குதலைப் பெருக்குவதும்--அவற்றைத் தொடர்ந்து குடிமக்கள் இறப்புக்களும்-- இந்த ஆண்டில் தீவிரமாக அதிகரித்துள்ளன நேட்டோ படைகளும் அமெரிக்க ஆதரவுடைய காபூலின் கைப்பாவை ஆட்சியும் கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பகுதியின்மீது கட்டுப்பாட்டை இழந்து விட்ட பெரும் கவலைகளுக்கு நிர்வாகம் விடையிறுக்க முற்படுகிறது. ஆப்கானிஸ்தானில் சமீபத்திய தேர்தல் சங்கடம், மிகப் பெரிய வாக்கு மோசடி நடந்தது அரசாங்கத்தை இன்னும் வலுவிழக்கச் செய்துள்ளது; இதையொட்டி சில வர்ணனையாளர்கள் ஹமித் கர்சாயிக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்துமாறு கோரியுள்ளனர். வியட்நாமில் போர் பெரிய அளிற்கு விரிவானதற்கு அரங்கு அமைத்த 1963ல் Ngo Dink Diem ன் கைப்பாவை அரசாங்கத்திற்கு எதிராக நடந்த அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சி மாற்றத்துடன் வெளிப்படையாக ஒப்புமை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒபாமாவின் படைவிரிவாக்கம்--ஏற்கனவே மிக அதிக அமெரிக்க இறப்புக்கள் மற்றும் கணக்கிலடங்கா ஆப்கானிய, பாக்கிஸ்தான் மக்கள் இறப்பிற்கு வழிவகுத்தது--இன்னும் கூடுதலான பேரவலங்களைத்தான் வரவிருக்கும் மாதங்களில் கொடுக்கும். இது குறுகிய காலத்துடன் நின்றும் விடாது. ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றில் ஒபாமாவின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான Bruce Riedel சமீபத்தில் கூறியபடி, "அடுத்த 12 - 18 மாதங்களில் நாம் வெற்றிக்கு அருகே வந்துவிடுவோம் என்று எவர் நினைத்தாலும் அது கற்பனை உலகச் சிந்தனைதான்." ஒபாமா நிர்வாகம் போரை பெருகிய மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக விரிவாக்கம் செய்ய உறுதி கொண்டுள்ளது, மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வில் பேரழிவுப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடியுடன் இணைந்து வந்துள்ளது; இது பெரிய சமூக, அரசியல் வெடிப்புக்களுக்கு, எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவில், அரங்கு அமைக்கிறது. கருத்துக் கணிப்பில் ஒபாமாவிற்கு ஆதரவு சரிந்துள்ளது தெளிவாக நிரூபிப்பது போல், புது நிர்வாகத்தின் "தேனிலவு" மிக விரைவில் பெரும் ஏமாற்றம் மற்றும் மக்களின் சீற்றமாகற மாறிக் கொண்டிருக்கிறது. ஈராக்கின் "விரும்பிச் சென்ற போருக்கு மாறாக" ஆப்கானிஸ்தான் போர் பயங்கரவாதத்திற்கு எதிரான "நல்ல போர்", என்று அமெரிக்க மக்களிடம் தாராளவாத நடைமுறையினால் கூறப்படுகிறது. இரு போர்களைப் பற்றியும் இத்தகைய வேறுபாடு காட்ட முயலும் முயற்சி சிதைந்து கொண்டிருக்கிறது; அந்த உண்மையும் வியாழனன்று நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள கட்டுரையில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. டைம்ஸ் எழுதுகிறது: "ஆப்கானிஸ்தான் போர் பற்றிய எளிய அரசியல் விளக்கம்--அதாவது இது ஒரு நல்ல போர், செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தியவர்களை அமெரிக்கா வேட்டையாடும் என்பது--நாளடைவில் மறைந்து விட்டது; மக்கள் ஆதரவு குறைந்துவிட்ட நிலையில், அமெரிக்க துருப்புகளின் இறப்புக்கள் உயர்ந்துள்ளன, ஆப்கானிய அரசாங்கத்தில் உள்ள நம்பிக்கை சரிந்து கொண்டிருக்கிறது." உண்மையில், ஈராக் போர் போல் ஆப்கானியப் போரும் துவக்கத்தில் இருந்தே ஒரு ஆக்கிரமிப்புச் செயல் ஆகும்; எண்ணெய், எரிவாயு, மற்ற இயற்கை ஆதாரஙக்கள் மிகுந்துள்ள முக்கிய புவிசார் மூலோபாயப் பகுதியான மத்திய ஆசியாமீது அமெரிக்கக் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது.இப்போரை விரிவாக்குவதில், அவர் எடுத்த மற்ற நடவடிக்கைகள் போலவே, ஒபாமா தான் பிரதிபலிக்கும் சமூக அடுக்கின் அதாவது பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகளுடைய கொள்கையைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் "முன்னேற்றச் செயல்" என்று எதுவும் முற்றிலும் இல்லை. ஒபாமாவிற்கு மில்லியன் கணக்கான மக்கள் "மாற்றத்திற்காக" வாக்களித்திருக்கையில், அவரை ஆதரித்த ஆளும் வர்க்கத்தின் பிரிவு முற்றிலும் வேறு காரணங்களுக்காக அவருக்கு ஆதரவு கொடுத்தது. அவருடைய தனிப்பட்ட பின்னணி, வெற்று வனப்புரைகள், மிகத் தீவிர வலதுசாரிக் கொள்கையை திறமையுடன் மூடிமறைக்கும் என்று கருதப்பட்டது. இந்த அடிப்படை அரசியல் உண்மை மக்களின் நனவில் ஒரு பகுதியாக உள்ளது. போருக்குப் புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்பிற்கு வெற்றிகரமான விளைவு வேண்டும் என்றால், அது ஒபாமா நிர்வாகம் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இரு கட்சிகளுக்கும் எதிராக நனவுடன் இயக்கப்பட வேண்டும். 2003 ஈராக் படையெடுப்பிற்கு முன்னதாக வரலாற்றில் மிகப் பெரிய சர்வதேச போர் ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெகுஜன மக்கள் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது; மில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியதும் இதில் அடங்கும். இந்த இயக்கம் நெரிக்கப்பட்டு, குறைமதிப்பிற்கு உட்பட்டது; ஏனெனில் அது ஜனநாயகக் கட்சிக்கு கீழ்ப்படுத்தப்பட்டு விட்டது. பல மத்தியதர வர்க்க எதிர்ப்புக் குழுக்கள் ஜனநாயகக் கட்சியினரைத் தேர்ந்தெடுப்பதின் மூலம் போர் எதிர்க்கப்பட முடியும் என்று வலியுறுத்தியிருந்தன. அதற்குப் பிறகு ஜனநாயகக் கட்சியினர் காங்கிரசின் இரு பிரிவுகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்ததுடன், பின்னர் ஜனாதிபதிப் பதவியையும் கைப்பற்றினர். ஆனால் போர் முடிவு அடைவதற்குப் பதிலாக ஈராக்கிய ஆக்கிரமிப்பு தொடர்வதுடன், ஆப்கானிஸ்தான் போரும் விரிவடைந்துள்ளது. இப்போர்கள் பெரும் சோகத்துடனும் குருதி கொட்டும் நிலையில் இருப்பதுடன், இன்னும் பரந்தபூசல்களுக்கு அரங்கு அமைத்துள்ளன. ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக எதிர்ப்பைத் திரட்டிய அமைப்புக்கள் அனைத்தும் தற்பொழுதைய நிலைமைக்கு முக்கிய அரசியல் பொறுப்பைக் கொண்டுள்ளன. அவை உண்மையில், "எதிர்ப்பு" அமைப்புக்கள் அல்ல, ஆனால் அரசியல் நடைமுறையின் ஒரு பகுதியாக முக்கிய பங்கை ஆற்றியுள்ளன. அவற்றின் முன்னோக்கு முற்றிலும் மதிப்பற்றுப் போய்விட்டாலும், அவை போருக்கு எதிர்ப்பு ஒபாமா நிர்வாகத்திற்கான ஆதரவு என்ற அடிப்படையைத்தான் தளமாகக் கொண்டாக வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. போரை வெளிநாடுகளில் விரிவாக்கும் ஒபாமாவின் திட்டம் அமெரிக்கத் தொழிலாளர் வர்க்கத்தின்மீது நிர்வாகம் நடத்தும் தாக்குதலுடன் தவிர்க்க முடியாமல் பிணைந்துள்ளது--வங்கி பிணை எடுப்புக் கொள்கைளுக்கும், முதலாளித்துவ முறை நெருக்கடிக்கும் தொழிலாளர் வர்க்கம் வேலை இழப்புக்கள், ஊதியங்கள், சமூக நலன்கள் அழிப்புக்கள் என்று விலை கொடுப்பதின் மூலம் எதிர்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இவை ஒரே வர்க்கக் கொள்கையின் இரு பக்கங்கள்தான். போருக்கு எதிரான போராட்டம் தொழிலாளர் வர்க்க மக்களின் வாழ்க்கைத் தரங்கள், ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தாக்குதல்களுடன் இணைக்கப்பட வேண்டும். அமெரிக்க மற்றும் சர்வதேசத் தொழிலாளர் வர்க்கம் ஒன்றுதான் இராணுவவாதம் மற்றும் போரை நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்தியாகும். ஏகாதிபத்தியப் போரின் ஆதாரமான இலாபமுறைக்கு எதிராக சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தை திரட்டும் தளத்தைக் கொண்ட முன்னோக்கு ஒன்றுதான் தற்பொழுதைய போர்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து ஒரு புதிய உலக வெடிப்பைத் தவிர்க்க முடியும். இதற்கு சோசலிச வேலைத் திட்டத்தின்கீழ் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீனக் கட்சியைக் கட்டியமைத்தல் தேவையாகும். கீழ்க்கண்டவற்றிற்கு SEP அழைப்பு விடுகிறது: * ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுத் துருப்புக்கள் நிபந்தனையற்ற முறையில் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும்.*பாக்கிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். *அமெரிக்க போர் இயந்திரத்தை அழித்துவிட்டு இராணுவச் செலவுத் தொகைகளை முக்கியமான சமூகத் தேவைகளுக்குத் திருப்பிவிடல் வேண்டும். *முக்கிய ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் உள்பட, இந்த சட்டவிரோத போர்களுக்குப் பொறுப்பானவர்கள்மீது நடடிக்கை எடுக்கப்படவேண்டும். போருக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முன்னேற்றப் பாதையைக் காண விரும்புவர்கள் அனைவரும் இன்றே சோசலிச சமத்துவக் கட்சியுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். |