World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Ten years since East Timor's independence vote

கிழக்கு தீமோர் சுதந்திரத்திற்கு வாக்களித்து பத்து ஆண்டுகளுக்கு பின்னர்

Patrick O'Connor
31 August 2009

Back to screen version

இந்தோனேசியாவில் இருந்து பிரிந்து ஒரு தனி தேசிய நாடாக திகழ வேண்டும் என்று கிழக்கு தீமோரிய மக்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் வாக்களித்த 10 ஆண்டுகள் நிறைவை நேற்றைய தினம் குறிக்கிறது.

ஒரு தசாப்தத்திற்கு பின்னர், இச்சிறு தீவின் சுதந்திரம் ஒரு மோசடி என்று நிரூபணம் ஆகியுள்ளது. இப்பகுதி முழுவதும், ஏகாதிபத்திய சக்திகளை முற்றிலும் நம்பி இருப்பதுடன் அவற்றிற்கு அடிபணிந்தும் நிற்கிறது. டிலி ஒரு சூழ்ச்சியின் வலையாக உள்ளதுடன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, போர்த்துகல் இன்னும் பிற நாடுகளில் இருந்து அதிகாரிகளும் பெருநிறுவன நிர்வாகிகளும் திமோரின் பரந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்களை அடைவேண்டும் என்று தந்திர உத்தியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் தீமோரின் 1.1 மில்லியன் மக்கள் உலகில் மிக வறியவர்களில் ஒரு பகுதியாக, பெருகிய முறையில் அடக்குமுறையைக் கையாளும் மேலை ஆதரவுடைய அரசாங்கத்தின்கீழ் உள்ளனர். சில முக்கிய சமூக அடையாளங்கள் இந்த 10 ஆண்டுகளில் உண்மையில் மோசமாகிவிட்டன.

இச்சான்று தேசியவாதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய "சுயநிர்ணயம்", "தேசிய சுதந்திரம்" என்று 21ம் நூற்றாண்டில் இருந்த கருத்துக்களின் திவால் தன்மைக்கு துன்பியலான நிரூபணம் ஆகும்.

1999 வாக்குப் பதிவு இந்தோனேசியாவின் சுஹார்ட்டோ இராணுவ ஆட்சி ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று வெளிவந்த மக்கள் எதிர்பைத் தொடர்ந்து சரிந்ததை அடுத்து நடத்தப்பட்டது. ஆனால் தீமோரிய எதிர்ப்பு தேசியக்குழு (CNRT) இந்தோனேசிய தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் இயக்கத்தை அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சக்திவாய்ந்த திறன் கொண்ட கூட்டு என்று கருதாமல் பெருகும் உறுதியற்ற தன்மை மற்றும் நிட்சயமற்ற தன்மை ஆகியவற்றை பற்றி கவலை கொண்டுள்ள பிராந்திய முக்கிய சக்திகள் மற்றும் பெருநிறுவன முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்படுவதற்கு உதவும் ஒரு கருவி என்றுதான் நினைத்தது. தீமோரிய எதிர்ப்பு தேசியக்குழுவின் உயர்தலைவர் ஷனானா குஸ்மாவோ (Xanana Gusmao) தன்னுடைய ஜாகார்த்தா சிறையில் இருந்து 1998ல் ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான BHP யின் நிர்வாகிகளுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தினார், அவற்றின் சர்வதேச எண்ணெய், எரிவாயு முதலீடுகளை கிழக்கு திமோரிய நிர்வாகம் பாதுகாக்கும் என்ற உத்தரவாதத்தை கொடுத்ததாக வியக்க வைக்கும் நிகழ்வு நடந்துள்ளது.

1999 பொதுஜன வாக்கெடுப்பிற்கு பின்னர் இந்தோனேசிய இராணுவமும் அதன் சார்பினில் செயல்பட்ட உள்ளூர் போராளிகளும் வன்முறை அலையைக் கட்டவிழ்த்த போது, குஸ்மாவோ சுதந்திரத்திற்கு முன்பு இருந்த FLINTIL கெரில்லா படைகளை திமோரிய மக்களைக் பாதுகாக்க அனுமதிக்கவில்லை. கிழக்கு தீமோரிய சாதாரண குடிமக்கள் கிட்டத்தட்ட 1,400 பேர் இறந்தது கூட, சுதந்திரம் என அழைக்கப்படும் நிலைக்கு மாறுவதற்கு முக்கிய சக்திகளின் ஆதரவை பெறும் முயற்சியில் குறுக்கிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஆஸ்திரேலிய இராணுவம், வாஷிங்டனுடைய உதவியுடன் பின்னர் ஐ.நா. ஆதரவு கொடுத்த தலையீட்டுப் படை ஒன்றை "மனிதாபிமான" செயற்பாடு என உத்தியோகபூர்வமாக கூறி உள்ளே நுழைந்தது.

உண்மையில் தீமோரிய மக்களின் பாதுகாப்பு, பொதுநலன்கள் ஆகியவை கன்பெராவின் கணக்குகளில் எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கிழக்கு தீமோர் பற்றிய நிலைப்பாடு அப்பகுதியில் தன்னுடைய மூலோபாய நலன்களை முன்னேற்றுவிக்க வேண்டும் என்ற அதன் உறுதிப்பாடும் மற்றும் முக்கிய எரிபொருள் முதலீடுகளைப் பெற வேண்டும் என்பதில்தான் உந்ததுல் பெற்றது. பெரும் சேதங்களை அனுமதித்தபின்னர், பிரதம மந்திரி ஜோன் ஹோவார்டின் அரசாங்கம், தொழிற்கட்சியின் முழு ஆதரவுடன், நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்த இராணுவ நடவடிக்கையை தொடக்கியது.

ஆஸ்திரேலியாவில் உள்ள பல குட்டி முதலாளித்துவ அரசியல் அமைப்புக்கள் முக்கிய, பிற்போக்குத்தன பங்கைக் வகித்தன. நவ-காலனித்துவ தலையீட்டிற்கு ஒரு "முற்போக்கு" திரையை கொடுக்கும் விதத்தில் "துருப்புக்களை அனுப்பு" என்ற தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

கன்பெராவின் தந்திர உத்திகள் கிழக்கு தீமோரில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் இழிந்த வரலாற்றுடன் முற்றிலும் பொருந்தியிருந்தன. தொடர்ச்சியான தொழிற்கட்சி மற்றும் லிபரல் அரசாங்கங்கள் இந்தோனேசிய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு கொடுத்தன. அமெரிக்க அதிபர் கெரால்ட் போர்டின் நிர்வாகம் போல் கொவ் விட்டலமின் தொழிற் கட்சி அரசாங்கமும் 1975 படையெடுப்புக்களுக்கு ஊக்கம் கொடுத்தது. இதில் 180,000 இறப்புக்கள் நேர்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிரிவினை தவிர்க்க முடியாது, குறிப்பாக முன்னாள் காலனித்துவ ஆட்சி நாடான போர்த்துகல் உட்பட போட்டி சக்திகளின் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன என்று கணக்கிட்ட பின்னர் ஹோவார்ட் அரசாங்கம் காட்டிய தந்திரோபாய மாற்றம் இந்தோனேசிய இறைமை அங்கீகரிக்கப்பட்டதற்கு முற்றுப்புள்ளி வைத்தது. சிறிய நாட்டிற்கு ஆயிரம் துருப்புக்களை அனுப்பிய பின்னர் கன்பெர்ரா விரைவில் உயர்நிலையை அடைந்தது. அதன்பின் ஹோவார்ட் அரசாங்கம் சர்வதேச சட்டத்தை தூக்கி எறிந்து, தீமோரின் பரந்த கடல் பகுதி எரிபொளுள் இருப்புக்களை கைபற்றுவதற்கு தீமோரிய அரசாங்கத்திற்கு கொடுத்து வந்த அனைத்து நிதியங்களையும் நிறுத்திவிடுவதாக அச்சுறுத்தியது.

2006 ஐ ஒட்டி, முதல் தீமோரிய சுதந்திரத்திற்கு பிந்தைய Fretilin உடைய Mari Alkatiri நிர்வாகம் ஆஸ்திரேலிய ஆணைகளுக்கு போதுமான இணக்கம் தரவில்லை என்றும் போர்த்துகல், சீனா மீது கூடுதல் சார்புடையதாகவும் கருதப்பட்டது. இதன் விளைவாக ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றொரு இராணுவ தலையீட்டுப் படையை அனுப்பிவைத்து, ஒரு ஆத்திரமூட்டும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.

1999 மாற்றத்தின் பத்தாம் ஆண்டு நிறைவுவிழா களிப்புக்கள் நேற்று கிட்டத்தட்ட 800 ஆஸ்திரேலிய, நியூஜிலாந்து படையினர் கிழக்கு தீமோரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நடைபெற்றன. இவர்களுடன் கிட்டத்தட்ட 1000 போர்த்துகீசிய, மலேசிய ஐ.நா. துருப்புக்களும் உள்ளன. இவை நாட்டின் சுதந்திரம் என்று அழைக்கப்படுவதில் உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

உத்தியோகபூர்வ களிப்பு விழாக்களில் தீமோரிய அரசாங்கம் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிடம் இழிந்த முறையில் காலடிகளில் விழுந்தது நன்கு புலனாயிற்று. ஜனாதிபதி ஜோஸ் ராமோஸ்-ஹோர்ட்டா முன்னாள் ஆஸ்திரேலிய தளபதியும் 1999 தலையீட்டுப் படையின் தலைவருமான Peter Cosgrover க்கு கிழக்கு தீமோரின் பதக்கம் (Order of East Timor) என்னும் உயர்ந்த விருதை வழங்கினார்.

இது இந்தோனேசிய வெளியுறவு மந்திரி 45 நிமிஷங்கள் தாமதமாக வந்ததை அடுத்து நிகழ்ந்தது. ராமோஸ்-ஹோர்ட்டாவின் கூடியிருந்த கனவான்களுக்கு கூறிய கருத்துக்களில் அவர் இந்தோனேசிய ஆளும் உயரடுக்குடன் ஆக்கிரமிப்புப் படையின் மிருகத்தன செயற்பாடுகள் பற்றிய வரலாற்றை மூடிமறைப்பது உட்பட நெருக்கமான உறவுகளை வளர்ப்பதற்கு தேவையான அனைத்தையும் செய்ய உள்ள தன் விருப்பத்தை வலியுறுத்தினார். சர்வதேச நீதிக்குழு ஒன்று இந்தோனேசியா 1975ல் இருந்து 1999 வரை செய்த குற்றங்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்ற அழைப்புக்களையும் ஜனாதிபதி கோபத்துடன் நிராகரித்தார். மேலும் சுதந்திரத்திற்கான கருத்துக் கணிப்பிற்கு பின்னர் பேரழிவிற்கு காரணமாக இருந்தவர்கள் மீது குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று நிறுவப்பட்ட ஐ.நா.வின் தீவிர குற்றங்கள் பிரிவு மூடப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

சுதந்திரத்திற்கு பின் வந்துள்ள தீமோரிய அரசாங்கங்கள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆணைகளை செவிமடுத்து எண்ணெய், எரிபொருள் உரிமை வருமானங்களை அமெரிக்க கருவூலப் பத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட Petroleum Fund என்பதில் பூட்டி வைத்துள்ளனர். அது இப்பொழுது அமெரிக்க ஐந்து பில்லியன் மதிப்புடையது ஆகும். இதற்கிடையில் மக்களில் பாதிப்பேர் உத்தியோகபூர்வ வறுமைக் கோடான நாளொன்றுக்கு 55 அமெரிக்க சென்டுகளுக்கும் கீழ் வாழ்கின்றனர். வேலையின்மை விகிதம் 1999ல் இருந்த 33.33 சதவிகிதத்தில் இருந்து கிட்டத்தட்ட 50 சதவிகிதம் என்று உயர்ந்துவிட்டது. அடிப்படை சுகாதாரம், கல்வி இன்னும் பிற சமூகசேவைகள் பரந்த அளவில் மக்களுக்கு கிடைப்பதில்லை. இதன் விளைவாக சிறுவயது இறப்பு விகிதம் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் என்று 1000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளில் 88 இறப்புக்கள் ஏற்படுகின்றன. சராசரி ஆயுட்கால எதிர்பார்ப்பு 60 ஆண்டுகள் என்றுதான் உள்ளதுடன், வயது வந்த மக்களில் 30 சதவிகித்தினர் எழுத்தறிவற்றவர்கள் ஆவர். பெரும்பான்மையான மக்கள் கிராமப்பகுதிகளில் வசிப்பதுடன், உயிர்வாழ்விற்கு விவசாயத்தை நம்பியிருப்பதுடன், நீர் விநியோக வசதிகளும் மின்சாரமும் இல்லாமல் வாழ்கின்றனர்.

கிழக்கு தீமோரியமக்களின் நிலைமைகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய தேசியத் தலைமை "சுதந்திரம்" என்று அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டதின் மோசமான தீர்ப்பாகத்தான் உள்ளது.

கிழக்கு தீமோரின் துன்பியல் முதலாளித்துவ தேசியவாத்தின் வரலாற்றுத் தோல்வியின் தீவிர வெளிப்பாடுகளில் ஒன்றாகும். 18ம் நூற்றாண்டு கடைசி, 19ம் நூற்றாண்டு ஆரம்ப ஆண்டுகளில், தற்கால ஐரோப்பிய தேசிய அரச அமைப்பு என்பது ஒரு முற்போக்கான வளர்ச்சியாக, சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த காலம் கடந்துவிட்ட நிலமானிய முறையின் தடைகளை அகற்றியதுடன் பிணைந்து இருந்தது. ஆனால் தற்போதைய உலக முதலாளித்துவ சகாப்தத்தில் தேசிய முதலாளித்துவ உயரடுக்குகள், மக்களின் மிகவும் அடிப்படையான தேவைகளைக் கூட வளங்க முடியாத நிலையில்தான் உள்ளன--இதில் கெளரவமான வாழ்க்கைத் தரங்கள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளும் அடங்கும். தேசிய "சுதந்திரம்" என்பது புதிய தனிப்பகுதிகளை தோற்றுவிப்பது என உள்ளது. இங்கு மிகச்சிறிய உயரடுக்குகள் ஏகாதிபத்திய பாதுகாவலர்களாக இரக்கமற்ற முறையில் உள்ளூர் மக்களை சுரண்ட வெளிநாட்டு முதலீடுகளுக்கு அழைப்பு விடுகின்றன.

கிழக்கு தீமோர் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட நாடுகளின் தொழிலாள வர்க்கமும் வறிய கிராமப்புற மக்களும் சுரண்டப்படல் மற்றும் வறுமையில் இருந்து உண்மையான விடுதலையை இந்தோனேசியா, ஆசியா முழுவதும் மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்தும் ஒரு அரசியல் இயக்கத்தை வளர்ப்பதின் மூலம்தான் அடையமுடியும். அந்த இயக்கம் இலாப முறைக்கு எதிராக, உலக சோசலிசத்திற்கான பேராட்டம் என்பதை அடிப்படையாக கொண்டிருக்கவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved