WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
ஜேர்மனி
Former Wehrmacht officer condemned as war criminal
Italian civilians massacred in June 1944
ஜேர்மன் இராணுவத்தின் முன்னாள் அதிகாரி யுத்த குற்றவாளியானார்
1944 ஜூனில் இத்தாலிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்
By Elisabeth Zimmermann
24 August 2009
Use this
version to print | Send
feedback
முனீச்சிலுள்ள வட்டார நீதிமன்றம் ஆகஸ்ட் 11ல், முன்னாள் வெர்மாக்ற் (ஜேர்மன்
இராணுவம்) அதிகாரியான
Josef Scheungraber
ஆயுள் தண்டனை விதித்தது. 1944
ஜூனில் துஸ்கானியில் உள்ள பல்ஜனோ டி கோர்டோனாவில் (Falzano
di Cortona) 10
இத்தாலிய பொதுமக்களை கொன்றதற்காகவும், பிறரை கொல்ல முயன்றதற்காகவும் அவருக்கு இந்த தண்டனை
விதிக்கப்பட்டது.
பல்ஜனோ டி கோர்டோனாவில் அவரின் யுத்த குற்றத்திற்காக
La Speziaல்
உள்ள ஓர் இராணுவ நீதிமன்றத்தால், ஜோசப் ஸ்கூன்கிரபருக்கு ஏற்கனவே 2006ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும், அதுமுதல் இன்று வரை, அவர் ஒரு நாள் கூட சிறையில் இருந்ததில்லை. அவரின் ஜேர்மன் வழக்கு
ஒரு தீர்ப்பை எட்டும் வரை, எவ்வித தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
90
வயது யுத்தக் குற்றவாளி ஒருபோதும் சிறைச்சாலையின் உள்ளே சென்றதில்லை
என்பது இன்றும் தெளிவில்லாமல் இருக்கிறது. அவரின் வழக்கறிஞர்கள், இந்த தீர்ப்புக்கு எதிராக பெடரல் உயர்
நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். பெடரல் உயர்நீதிமன்றத்தில் ஒருவேளை அடுத்த ஆண்டு
விசாரிக்கப்படக்கூடிய இந்த மேல்முறையீடு, விசாரணைக்கு வரும் வரையில் ஸ்கூன்கிரபர் சுதந்திரமாக தான்
இருப்பார். அவர் தலைமறைவாக கூடிய அபாயம் குறித்து எதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்
கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் தொடங்கிய ஸ்கூன்கிரபருக்கு எதிரான வழக்கு,
11 மாதங்களாக நீடித்திருந்தது.
Mountain Engineer Battalion 818ன்
முதல் படைப்பிரிவின் உத்தரவிடும் அதிகாரியாக இருந்து பல்ஜனோ டி கோர்டோனாவில் 1944 ஜூன் 27ல்
"பழிவாங்கும்
முறைமைகளை எடுக்க"
ஜோசப் ஸ்கூன்கிரபர் உத்தரவிட்டிருந்தார் என்பதை முனீச் நீதிமன்ற நீதிபதிகள் ஒத்துக்கொண்டார்கள். இரண்டு
ஜேர்மன் படையினர் மீதான ஒரு கட்சிசார் தாக்குதலுக்கான பழிவாங்கும் நடவடிக்கையில், நான்கு கிராமவாசிகள்
பின்புறத்தில் சுட்டு கொல்லப்பட்டனர். 15 முதல் 67 வயதிற்கு இடையிலான மேலும் 11 நபர்கள் ஒரு வீட்டில்
ஒளிந்து கொண்டிருந்தார்கள், அவர்களும் குண்டு வீசி கொல்லப்பட்டார்கள். அந்த படுகொலையில்
காயமடைந்தவர்களில் ஒரேயொருவர் எம். ஜினோ என்பவர் மட்டும் உயிர்பிழைத்தார். தற்போதைய 80
வயதிற்கு அண்மையில் இருக்கும் அவர், ஸ்கூன்கிரபருக்கு எதிராக முனீச் வழக்கில் சாட்சி கூற வந்தார்.
இத்தாலிய பொதுமக்களின் படுகொலைக்கு தாம் எந்தவித பொறுப்பும் ஏற்க
முடியாது என்று நீதிமன்றத்தில் மறுத்த ஸ்கூன்கிரபர், கட்சிசார் தாக்குதல் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று
அறிவித்தார். ஒரு படைப்பிரிவின் தளபதியாக இருந்து
"பழிவாங்கும்
முறைமைக்கு"
இட்டு சென்றதற்கு அவர் பொறுப்பாக இருந்தது தங்கள் முன் நிரூபிக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் அறிவித்தார்கள்.
படுகொலைக்கு முன்னதாக, பிராந்திய உத்தரவளிப்பாளரிடம் பழிவாங்கும் நடவடிக்கைக்காக ஸ்கூன்கிரபர் அனுமதி
கேட்டிருந்தார்.
இத்தாலிய பொதுமக்கள் மீதான ஜேர்மன் இராணுவத்தின் பிற படுகொலைகள் மற்றும்
யுத்த குற்றங்கள் விஷயங்களில் நடந்தது போலவே, அதில் ஈடுபட்டிருந்த
SS
அதிகாரிகள், யுத்தத்தின்
போது இத்தாலியில் ஜேர்மன் துருப்புகளின் தலைமை தளபதியால்
(Commander in Chief)
அளிக்கப்பட்ட உத்தரவுகளைக்
குறிப்பிட்டு தங்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த விரும்பினார்கள். அப்போது,
Albert von Kesselring
ஜெனரல் பீல்டு மார்ஷலாக
இருந்தார்.
1944,
ஜூன் 17ல்,
Kesselring
ஜேர்மன் ஆக்கிரமிப்பு
துருப்புகளுக்கு பின்வரும் தகவல்களை அளித்திருந்தார்:
"குழுக்கள் அதிக
எண்ணிக்கையில் தோன்றும் இடங்களில், அந்த குறிப்பிட்ட மாகாணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத ஆண்கள் கைது
செய்யப்பட வேண்டும், வன்முறை நடவடிக்கைகள் ஏற்படும் பட்சத்தில், துப்பாக்கி சூடு நடத்தலாம்...
படையினரும், பிறரும் குறிப்பிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தலாம், பின்னர் அவை எரிக்கப்பட வேண்டும்.
கொடியவர்களும், குழுதலைவர்களும் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட வேண்டும்."
யுத்த குற்றங்களுக்கு
பொறுப்பானவர்கள் தான் அந்த உத்தரவுகளை பின்பற்றினார்கள் என்று வாதிட்டு, மேற்கூறிய கருத்து கடந்த
காலத்தில் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டு வந்தது.
நீதிபதி
Manfred Götzlன்
தலைமையிலுள்ள முனீச் நீதிமன்றம், ஜோசப் ஸ்கூன்கிரபரின் நடவடிக்கைகளை இரண்டாந்தர படுகொலையாக
அறிவித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், ஆகஸ்டு 12ல்
Süddeutsche Zeitung
பின்வருமாறு எழுதியது:
"அது பழிவாங்கல் குறித்த
ஒரு கேள்வி, பாதிக்கப்பட்டவர்கள் தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், ஏனென்றால் அவர்கள் தான்
அவ்விடத்தில் இருந்தார்கள்."
ஸ்கூன்கிரபர் உத்தரவுகளுக்கு
கட்டுப்பட்டிருக்க வேண்டி இருந்ததாலும், சர்வதேச விதிகளின்படி இதுபோன்ற பழிவாங்கும் முறைமைகள்
சட்டவிரோதமானவை என்பதாலும் அவர் விவாதத்திற்கு ஆதரவைப் பெற முடியவில்லை.
ஸ்கூன்கிரபரை நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த 65 ஆண்டுகள் ஆனது என்ற உண்மையானது,
பாசிசத்தின் பொறிவிற்கு பின்னரும், இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின்னரும் நாஜி ஆட்சியிலிருந்த விரல்விட்டு
எண்ணக் கூடிய முன்னணி பிரபலங்கள் மட்டும் தான் அவர்களின் குற்றங்களுக்காக நீதியின் முன்கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள்
என்ற உண்மையுடன் தொடர்புபட்டிருக்கிறது.
"NS
குற்றங்களின் வழக்குகள் ஜேர்மன்
சட்ட வரலாற்றில் ஒரு புகழ்பெற்ற பகுதி அல்ல. அண்ணளவாக 106,000 நபர்கள் குற்றஞ்சாட்டப்பட்டதில்
இருந்து 167 கொடியவர்களுக்கு மட்டுமே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது."(Süddeutsche
Zeitung)
பல தசாப்தங்களாக, முனீச்சிற்கு அருகிலுள்ள
Ottobrunn
ல் ஸ்கூன்கிரபர் எவ்வித தொந்தரவும் இல்லாமல்
வசித்து வந்தார். உள்ளூர் தீயணைப்பு படையின் மதிப்புமிக்க தளபதியான அவர், உள்ளூர் கவுன்சிலிலும் 20
ஆண்டுகளாக ஓர் உறுப்பினராக இருந்தார். 2005ல், உள்ளூர் கவுன்சில் அதன் குடிமக்கள் விருதை அவருக்கு வழங்க
ஏகமனதாக ஒப்புக்கொண்டது.
ஏற்கனவே இந்த தீர்ப்பு மிக தாமதமாக வந்திருக்கும் நிலையில், இந்த வழக்கையும்,
நீதிமன்ற அறையில் தீர்ப்பின் அறிவிப்பையும் கவனித்து வந்த பல்ஜனோ டி கோர்டோனாவிலுள்ள படுகொலையில்
சம்பந்தப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும், பிறரும் குறைந்தபட்சம் கொடியவர்களில் ஒருவராவது கணக்கில்
கொண்டு வரப்பட்டாரே என்று ஆறுதலடைந்தார்கள்.
வழக்கு பார்வையாளர்களாகவும், உடன்-வழக்குதொடுத்தவர்களாகவும் இருந்த
Angiola
மற்றும்
Margherita Lescai,
ஜேர்மன் இராணுவத்தால் நடத்தப்பட்ட
யுத்த படுகொலைகளில் தங்களின் குடும்பத்தில் தமது தந்தையையும், தாத்தாவையும்
(Angiolo
மற்றும்
Santi Lescai)
ஆக இரண்டு உறுப்பினர்களை
இழந்திருந்தார்கள். இந்த இரண்டு பெண்மணிகளும், பல்ஜனோ டி கோர்டோனா படுகொலையில் தங்களின் உறவினர்களை
இழந்த 14 இத்தாலிய குடும்பங்களின் சார்பாக தீர்ப்பு அறிவிப்பைக் கேட்க இத்தாலியிலிருந்து முனீச்சிற்கு
வந்திருந்தார்கள்.
தீர்ப்பிற்கு பின்னர்,
"இந்த
வழக்கின் தீர்ப்பைக் கேட்க என் அன்னையும் இருந்திருந்தால், மிகவும் அதிருஷ்டமாக இருந்திருக்கும்.
இதுபோன்றதொரு தீர்ப்பிற்காக தான் அவர் தம் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தார்."
என்று
Angiola Lescai
குறிப்பிட்டார். |