World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Ridge's "revelations" on US terror alerts

What the World Socialist Web Site said

அமெரிக்காவில் பயங்கரவாதம் பற்றிய எச்சரிக்கைகள் பற்றி ரிட்ஜின் "வெளியீடுகள்"

உலக சோசலிச வலைத்தளம் கூறியது என்ன

22 August 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் இயக்குனர் டொம் ரிட்ஜ் "பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டத்தை" 2004 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு உயர்த்துமாறு புஷ் நிர்வாகத்தால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக செப்டம்பரில் வெளிவர இருக்கும் ஒரு புதிய புத்தகத்தில் ரிட்ஜ் கூறியுள்ளார்.

தன்னுடைய புத்தகத்தில் தன்னைப் போற்றிக் கொள்ளும் விதத்தில் தான் அந்த நடவடிக்கையை எதிர்த்ததாகவும், அது ஓரளவேனும் பகுதி அரசியல் உந்துதல் பெற்றது என்று தான் தெளிவாகக் கருதியதாகவும், அதாவது, அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் மறு தேர்தல் பிரச்சாரத்திற்கு நலன் அளிக்கும் எனக் கருதியதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த நிகழ்வுகளுக்கு சற்று முன் ஒசாமா பின் லேடன் வெளியிட்ட வீடியோ நாடாக்கள் பற்றி குறிப்பிடுகையில் ரிட்ஜ் "நாடாக்களில் உண்மையான நடவடிக்கை வேண்டும் என்று நாங்கள் நம்பவில்லை மற்றும் கூடுதலான உளவுத் தகவல் அதை நியாயப்படுத்தும் வகையிலும் கிடைக்கவில்லை. உண்மையில் நாங்கள் எளிதில் நம்பினோம்.....நான் வியந்தேன், "இது பாதுகாப்பா அல்லது அரசியலா?". பின்னர் அவர் எழுதுகிறார், "மேசையைச் சுற்றியிருந்த எனக்கும் மற்றவர்களுக்கும் நாட்டின் பாதுகாப்பு என்ற சாதாரண அக்கறையைத் தவிர வேறு ஏதேனும் இதில் இருக்கலாம் என்று தோன்றியது." என எழுதுகிறார்.

பாதுகாப்பு எச்சரிக்கை தரத்தை (மட்டத்தை) உயர்த்துவது பற்றிய விவாதங்கள் ஒரு பயங்கரவாத தாக்குதல் தேர்தல்களுக்கு முன்னால் நடக்கக்கூடும் என்ற செய்தி ஊடக ஊகப் பின்னணியில் நடந்தது. தேர்தல்களை முற்றிலும் இரத்து செய்ய இது வழிவகுக்கும் என்றுகூட கருதப்பட்டது.

இதற்கான அழுத்தம் குறிப்பாக பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பெல்டிடம் இருந்தும் தலைமை அரசாங்க வக்கீல் ஜோன் ஆஷ்கிரோப்ட்டிடம் இருந்தும் வந்தது என்று ரிட்ஜ் கூறியுள்ளார். இறுதியில் அச்சுறுத்தல் தரம் உயர்த்தப்படவில்லை.

ரிட்ஜின் அறிக்கைகள் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற மோசடியின் அரசியல் திரித்தலுக்கு கூடுதலான சான்றுகளை கொடுக்கும்போது, இத்தகைய திரித்தல் 2004 தேர்தல்களுக்கு முன்பு உடனடியாக நடந்த ஒரு நிகழ்வுடன் ஒன்றும் நின்றுவிடவில்லை. குடியரசுக் கட்சி மட்டும் இதில் பங்கு பெறவில்லை. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவருமே ஜனநாயக உரிமைகள் மீது மிகுந்த தொலை விளைவுடைய தாக்குதல்களை நடத்துவதற்கு ஐயத்திற்குரிய தவிர்க்க முடியாத பயங்கரவாத தாக்குதல் என்பதைக் கூறி நியாயப்படுத்தியுள்ளனர்.

ஒரு தனி நிகழ்வில், ரிட்ஜ் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சில நாட்களுக்கு பின்னர் பயங்கவராத அச்சுறுத்தல் தரத்தை அறிவித்தார். இது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கெர்ரிக்கு ஏதேனும் "பெரும் ஆதரவு" ஏற்படுவதை தடுக்கும் வகையில் இருந்தது. திகதிகள் கொடுக்கப்பட்ட சான்றின் அடிப்படையில் வந்த ரிட்ஜின் அறிவிப்பு பாரிய, பரபரப்பான செய்தி ஊடக பிரச்சாரத்தை ஏற்படுத்தி, நாட்டின் தலைநகரத்தின் பெரும்பகுதியை பாதுகாப்பு தடையினுள் வைத்தது. அந்த நேரத்தில் WSWS ஆசிரியர் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றை நம் கீழே மறுபடியும் பதிப்பிக்கிறோம்.

* * *

Terror scare paves way for police-state measures

பயங்கரவாத அச்சம் போலீஸ்-அரச நடவடிகைகளுக்கு வழிவகுக்கிறது

ஆசிரியர் குழு

(முதலில் ஆகஸ்ட் 5, 2004ல் வெளியிடப்பட்டது)

"ஆரஞ்சு எச்சரிக்கை" என்று ஞாயிறன்று அறிவிக்கப்பட்டபின், வாஷிங்டன், நியூ யோர்க், நெவார்க், நியூ ஜேர்சி ஆகிய நகரங்களில் முக்கிய நிதிய நிறுவனங்களில் முன்னோடியில்லாத பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான அதிக ஆயுதமேந்திய உள்ளூர் மற்றும் மத்திய போலீசார் நியூயோர்க் பங்குச் சந்தை மற்றும் மான்ஹட்டினில் Citicorp Center, நெவார்க்கில் Prudential Financial கட்டிங்கள் மற்றும் வாஷிங்டனில் உலக வங்கி, சர்வதேச நிதிய நிறுவனங்கள் ஆகியவற்றைச் சுற்றி ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டு டிரக்குகள் மற்றும் தனியார் வாகனங்கள் காரணகாரியமற்ற சோதனைகள் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பாதுகாப்புக்களை மீறிய முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. நியூயோர்க் நகரத்தை அடைவதற்கு கடக்க வேண்டிய பாலங்ளும், நிலத்தடி வழிகளும் வணிகப் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன. தானியங்கி ஆயுதங்களை வைத்துள்ள போலீசார் தெரு மூலைகளில் நிற்பதுடன் நிலத்திடி இரயில் நிலையங்கள், இரயில்கள், பஸ்கள் ஆகியவற்றிலும் உள்ளனர். காரணகாரியமற்ற அடையாள நிரூபணங்களை கோருவதுடன் மக்களின் உடைமைகளையும் சோதிக்கின்றனர்.

பயங்கரவாத எச்சரிக்கை போலிக் காரணமாக பயன்படுத்தப்பட்டு உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி டிம் ரிட்ஜின் ஞாயிறு எச்சரிக்கை எந்தப் பொது இடங்களையும் பெயரடவில்லை என்றாலும்கூட தலைநகர கட்டிடங்கள், அதைச்சுற்றி இருப்பவையும் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டன. செனட்டின் தலைமைக் காவலர் இதைச் செய்வதற்கு தூண்டிய உளவுத்துறை, தலைநகரத்தை பற்றி அச்சத்தை குறிப்பிடவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். 14 போலீஸ் சோதனைச் சாவடிகளும் உறுதியான தடுப்புக்களும் தலைநகரம், செனட் அலுவலகக் கட்டிடங்கள், காங்கிரசின் நூலகம் மற்றும் தலைமை நீதிமன்றத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தலைநகருக்கு அருகே ஒரு முழுத் தெருவையும் உள்ளுர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்கமால் மூடியமை வாஷிங்டன் மேயர் ஆன்டனி வில்லியம்ஸை மத்திய அரசாங்கம் "அமெரிக்க சுதந்திரம், ஜனநாயகம் இவற்றினை அடையாளங்களை" அச்சத்தின் கோட்டைகளாக" மாற்றிவிட்டது என்று குற்றச் சாட்டைக் கூறவைத்துள்ளது. அவருடைய செய்தித் தொடர்பாளர், "இது மக்களை பீதிக்கு உட்படுத்துகிறது. இது ஒன்றும் பெய்ரூட் அல்ல." என்றார்.

புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாத எதிர்ப்பு" நடவடிக்கைகளுக்கு ஆர்வத்துடன் ஆதரவு கொடுத்து வரும் வாஷிங்டன் போஸ்ட் கூட புதனன்று ஒரு தலையங்கத்தை வெளியிட்டு தலைநகரை தடுப்பிற்கு உட்படுத்தியிருப்பது "ஒரு சுதந்திர தடையற்ற சமூகம் என்று நாம் கூறிக் கொள்ளுவதை கேலிக்கூத்தாக்கிவிட்டது." என்று கூறியுள்ளது.

மத்திய அதிகாரிகள் இன்னும் தடைகளை பரிசீலிக்கின்றனர் எனவும், இம்முறை அது வெள்ளை மாளிகை, நிதி அமைச்சரகத்தை சுற்றி இருக்கலாம் என்றும் அதில் போக்குவரத்து மற்றும் நடைபாதைகளை வேலியிடல் ஆகியவை அடங்கியிருக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. வாஷிங்டன் மற்றும் நியூயோர்க்கில் இருக்கும் அதிகாாரிகள் போலீஸ் நடவடிக்கைகள் கால வரையற்றுத் தொடரும் என்று கூறியுள்ளதாக Post குறிப்பிட்டது.

இத்தகைய போலீஸ்-அரசாங்க நடைமுறைகள் அல் குவைடா நிதிய நிறுவனங்களை கண்காணிக்கின்றது என 9/11 தாக்குதல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பயங்கரவாத எச்சரிக்கைக்கு தளமாக இருந்தவை என்று புஷ் நிர்வாகம் திங்களன்று ஒப்புக் கொண்ட பின்னரும் ரிட்ஜினால் மேற்கோளிடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு தொடர்கிறது என்பது பற்றி அரசாங்கத்திற்கு தகவல் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் எதிலும் குறிப்பான அல்லது தற்போதைய சதித்திட்டம் இருப்பது பற்றியும் தகவல் இல்லை என்று ஒப்புக் கொண்டனர்.

திங்களன்று காலம் கடந்துவிட்ட உளவுத்துறை தகவல்தான் இவற்றிற்கு காரணம் என்று தெரிந்தபின் ரிட்ஜின் ஆரம்ப கூற்றுக்களை விமர்சனமற்று கிளிப்பிள்ளைபோல் கூறிய செய்தி ஊடகத்தின் சிலபிரிவுகள் புஷ் நிர்வாகம் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத எச்சரிக்கையை கற்பனை செய்து கொடுத்துள்ளது என்ற பரந்த மக்கள் நம்பிக்கைக்கு வெளிப்பாடு கொடுத்தன.

இதை எதிர்கொள்ளும் விதத்தில் புதிய, இழிந்த கூற்றுக்களை அரசாங்கம் கூறியது; செவ்வாயன்று நியூயோர்க் டைம்ஸிடத்தில் நிதிய நிறுவனங்களின் மீதான கடந்தகால கண்காணிப்பிற்கு சான்றுகளைத் தவிர, "ஒரு தனி உளவுத்துறைப் பிரிவு இருப்பதாகவும்", அது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் நிதிய நிறுவனங்கள்மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் சுட்டிக்காட்டியது. "ஒரு மூத்த உளவுத்துறை அதிகாரி", "அல் குவைடா உள்நாட்டிலேயே தாக்குதல்களை முடிக்கும் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது" எனக் கூறியதாக டைம்ஸ் மேற்கோளிட்டது.

இதுதான் டைம்ஸுக்கு வெளிப்படுத்தப்பட்ட புதிய உளவுத்துறை தகவலின் மொத்த சாராம்சம் ஆகும்; ஆனால் புதனன்று செய்தித்தாள் பெயரிடப்படாத உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் வெற்றுத்தனமான கூற்றை உகந்தவை என்று விசுவாசத்துடன் ஏற்றதுடன் அதை முதல் பக்க முக்கிய செய்தியாகவும் மாற்றியது. தொலைக்காட்சி இணையங்களும் டைம்ஸிடம் இருந்து குறிப்புணர்ந்து தங்கள் மாலை செய்தி அறிக்கைகளில் தவிர்க்க முடியாமல் வரவிருக்கும் அல் குவைடா தாக்குதல்கள் பற்றிக் கூறின.

சோசலிசச் சமத்துவக் கட்சி ரிட்ஜின் பயங்கரவாத எச்சரிக்கையை அடுத்து சுமத்தப்பட்டுள்ள அனைத்து "பாதுகாப்பு" நடவடிக்களையும் முற்றிலும் எதிர்ப்பதுடன் செயற்பாடுகளுக்கு ஊக்கம் அளித்த பயனற்ற, ஆதாரமற்ற "அச்சுறுத்தல்களுக்கு" நம்பகத்தன்மையையும் கொடுக்க மறுக்கிறது. நவம்பர் தேர்தல் ஒரு அச்சம் நிறைந்த சூழ்நிலையில் நடக்க வேண்டும், ஜோர்ஜ் புஷ் மறுபடி தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஊக்கம் தரவேண்டும் என்ற கணிப்பில் இது வந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, ஈராக்கில் அமெரிக்கா எதிர்கொண்டிருக்கும் நிலைமை வீழ்ச்சியடைந்து வருகையில், நிர்வாகத்தின் நெருக்கடி ஆழ்ந்து போயிருக்கையில், 2004 தேர்தலில் புஷ் தோற்கக்கூடும் என்ற வாய்ப்பை உயர்த்தியிருக்கையில், அரசாங்க அதிகாரிகள் இடைவிடா பிரச்சார முயற்சியை, பயங்கரவாதத் தாக்குதல், தேர்தல் தினத்தன்று அல்லது அதையொட்டி வரும் என்ற பல்லவியைப் பாடிவருகின்றனர். ஒரு மாதத்திற்கும் குறைவாக, ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் தேர்தல்கள் நேரடியாக இரத்து செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்று நிர்வாகம் செய்தி ஊடகத்திற்கு தகவல்களை கசியவிட்டது.

அரசாங்கத்தாலும் செய்தி ஊடகத்தாலும் புதிய பயங்கரவாத அச்ச வெறியான தேர்தல்கால ஆத்திரமூட்டுதல் என்ற ஆபத்தைக் கொண்டுள்ளது என்பது மிக உண்மையாகும் என்பது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் நோக்கம் வாக்காளர்கள் பரபரப்புடன் புஷ்ஷை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது தேர்தல்களையே நடக்காமல் செய்துவிட வேண்டும் என்பதுதான்.

கடந்த மாத நிகழ்வுகளை ஆராய்வது பயனுடையது ஆகும். ஜூன் 8ம் தேதி ரிட்ஜ் ஒரு விந்தையான செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார்; அதில் ஒரு அல் குவைடா தாக்குதல் "ஜனநாயக வழிவகையை" தடைசெய்யும் தாக்குதல் "செயற்பாட்டுக் கட்டத்தில் உள்ளது" என்றார். வழக்கம் போல் ரிட்ஜ் தன்னுடைய கூற்றிற்கு சான்றாக எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. அவருடைய எச்சரிக்கைகளின் இழிந்த தன்மை ஒருபுறம் இருக்க பயங்கரவாத எச்சரிக்கையை மஞ்சள் நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு உயர்த்த மறுத்து விட்டார்.

செய்தி ஊடகம் பெரிதும் அவநம்பிக்கையான அணுகுமுறையைத்தான் ரிட்ஜ் அறிவிப்பு தொடர்பாக கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்குப் பின்னர் Newsweek இதழ் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீதித் துறை அதிகாரிகள் தேர்தல்களை இரத்து செய்வதற்கான சட்டபூர்வ அடிப்படை பற்றி விவாதித்தாக தகவல் கொடுத்தது. பெரிய செய்தி வெளியீடுகள் இதை எதிர்கொண்ட விதம் தகவலை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அத்தகைய விவாதங்களில் எழும் வெளிப்படையாக சர்வாதிகார விளைவுகளை கண்டித்தல், அதே நேரத்தில் நிர்வாகம் தேர்தலை நடத்தாமல் இருப்பது பற்றி எச்சரிக்கை கொடுத்தல் என்று இருந்தது. மாதத்தின் பிற்பகுதியில் பிரதிநிதிகள் மன்றம் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை இயற்றி நவம்பர் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுதல் அல்லது இரத்து செய்யப்படுதல் எதிர்க்கப்படுகிறது என்றது.

இச்சமீபத்திய பயங்கரவாத எச்சரிக்கையுடன் நிர்வாகம் குரலை சற்று உயர்த்தி, இன்னும் கூடுதலான அதிர்ச்சி தரும் பயங்கரவாதத்தை இட்டுக் கட்டியிருப்பதுடன், கடுமையான போலீஸ் அரசாங்க நடவடிக்கைகளை நியூயோர்க், நியூஜெர்சி மற்றும் வாஷிங்டனில் செயல்படுத்தியுள்ளது.

புஷ் நிர்வாகம் பயங்கரவாத அச்சுறுத்தலை பயன்படுத்தி நவம்பர் தேர்தலை திரிக்கும், இரத்து கூட செய்யும் திறனையுடையது என்பதை மறுப்பவர் எவரும் (செனட்டர், ஜனநாயகக் கட்சியின் லிபர்மன் போன்றார், அத்தகைய சந்தேகங்கள் 'பைத்தியக்காரத்தனமானது' என்றார்) தாங்களே நேரான உண்மைகளை மறுக்கின்றனர். ஈராக்கின் மீதான படையெடுப்பு என்பது ஒரு இழிந்த, முன்கணிப்பிட்ட வகையில் பயங்கரவாதத்தை பயன்படுத்தி, அப்பட்டமான பொய்களை பயன்படுத்தி நாட்டை போருக்கு இட்டுச் சென்றதை விட வேறு என்ன?

ரிட்ஜே தன்னுடைய ஞாயிறு அறிவிப்பை, புஷ்ஷின் மறு தேர்தலுக்கு பிரச்சாரமாக பயன்படுத்தினார்; அவருடைய உளவுத்துறை பயங்கரவாத எச்சரிக்கையை கொடுக்க தூண்டியதே ஒருவேளை "பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனாதிபதியின் தலைமை" இருப்பதுதான். செவ்வாயன்று மான்ஹட்டனில் Citycorp Center ல் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ரிட்ஜ் மீண்டும் தேர்தலை தடைசெய்யும் நோக்கத்தை கொண்ட ஒரு பயங்கரவாத தாக்குதல் என்ற ஆவியை எழுப்பினார்.

புஷ் நிர்வாகம் ஒரு குற்றம்சார்ந்த அரசாங்கம், இதன் முக்கிய நபர்கள், புஷ் மற்றும் துணை ஜனாதிபதி டிக் ஷென்னியில் இருந்து கீழே பலரும் ஜனநாயக வழிமுறைகள் மீது நம்பிக்கையற்றவர்கள். அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருப்பவர்கள்.

தலைநகரை சுற்றி வந்துள்ள போலீஸ் தடுப்புக்கள் தேர்தல் நாள் அல்லது அதையொட்டி தூண்டுதல் நடத்த ஒரு சதித்திட்டம்; அது ஒருதலைப்பட்ச, அரசியலமைப்பிற்கு எதிரான நடவடிக்கையை காங்கிரசில் விவாதம் ஏதுமின்றி, அதன் அனுமதியின்றி, நிர்வாகத்துறையை எடுக்க வசதியளிக்கும். எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பொதுமக்களை மிரட்டும் நோக்கத்தை கொண்டவை என்பது மட்டும் இல்லாமல், காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட்டர்களையும் மிரட்டும் நோக்கத்தைக் கொண்டவை.

குடியுரிமை சுதந்திரங்களை முற்றிலும் நிறுத்தி வைத்தலுக்கு நிர்வாகம் நியாயப்படுத்திக் கூறும் காரணங்கள் ஒரு உடனடி அச்சுறுத்தலுக்கு அவசரகால விடையிறுப்புடன் நின்றுவிட வில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சிகள் நாட்டின் நிதிய மற்றும் அரசியல் மையங்களை "செல்லக்கூடாத" பகுதிகளாக்க பயன்பட்டால், எந்த உடனடி ஆபத்திற்கும் போலீஸ்-அரச நடவடிக்கைகளை சுமத்துவதற்கும் எவ்வித நிபந்தனைகளும் இருக்காது.

ஜனநாயகக் கட்சியும் அதன் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியும் இந்த பயங்கரவாத பீதிக்கு ஆதரவளித்துள்ளனர். முன்னாள் வெர்மான்ட் ஆளுனர் ஹோவர்ட் டீன் ஞாயிறன்று புஷ் நிர்வாகம் பயங்கரவாத அச்சுறுத்தலை ஜோடித்தமை சமீபத்தில் முடிந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டினை பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைப்பதற்கும் மற்றும் சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தற்போதைய தலைமைக்கு ஆதரவு இருக்கின்றது என்ற ஒரே பிரச்சினையை உயர்த்திக் காட்டுவதற்குத்தான் என்று குற்றம்சாட்டியுள்ள கருத்தில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டுவிட்டார். கெர்ரியின் செய்தித் தொடர்பாளர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ரிட்ஜின் நோக்கங்களை வினாவிற்கு உட்படுத்தவில்லை என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுப்பதாகவும் கூறினார். கெர்ரியின் ஒரே குறைகூறல் புஷ் இன்னும் விரைவாகவும் உறுதியாகவும் "பயங்கரவாதத்தின் மீதான போரில்" நடந்து கொள்ளவில்லை என்பதுதான்.

சில நிதிய நிறுவனங்களை தன்னுடைய ஞாயிறு அறிவிப்பில் ரிட்ஜ் பெயரிட்டதும் மற்றும் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் அதை முற்றிலும் தழுவியதும் சமீபத்திய பயங்கரவாத அச்சறுத்தலைப் பற்றிய உடனடி கவலைகளைச் சுட்டிக் காட்டுகிறது. பெருநிறுவன மற்றும் வங்கி கட்டங்கள் அசாதாரண ஆபத்தான பொருளாதார, நிதிய நெருக்கடிகளின் பெரும் அடையாளங்களைக் காண்கின்றன. எண்ணெய் விலைகளில் இதுவரை இல்லாத உயர்வு, நிதிய நிலைமையை பெரிதும் உறுதிகுலைக்கும் அச்சங்களை அதிகரித்துள்ளது. அதையொட்டி வெடிப்புத் தன்மை உடைய விலைவாசி ஏற்ற தீவிரம் என்ற சமூக தாக்கங்கள், மேம்போக்கான "மீட்பு" ஆகியவை வெளிப்படுகின்றன. இது ஏற்கனவே அரசியல், சமூக அழுத்தங்கள் நிறைந்த தேர்தலுக்கு புதிய நெருக்கடிக் கூறுபாட்டைக் கொடுத்துள்ளது.

1973-74TM OPEC பெட்ரோலியம் விலைகளை இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே Yom Kippur போர் நடைபெற்றபோது நான்கு மடங்கு உயர்த்தியபோது, எட்வார்ட் ஹீத்தின் அரசாங்க்கம் லண்டனில் ஹித்ரோ விமான நிலையத்திற்கு வெளியே துருப்புக்களை நிறுத்திய விதத்தில் அதை எதிர்கொண்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குள் ஜனநாயக நடைமுறைகளைக் மீறி இராணுவச் சட்டம் சுமத்துவது பற்றிய உள்விவாதங்கள் இருந்ததாகப் பின்னர் தெரியவந்தது.

சமீபத்திய பயங்கரவாத அச்சுறுத்தலுக்குப் பின் உள்ள வரைகாலம் முடியும் என்ற கருத்துதான் புஷ்ஷையும் அவர் குழுவையும் தேர்தலை திரித்து ஜனநாயக கட்சி போட்டியாளர்களுக்கு எதிரான தங்கள் வாய்ப்பை உயர்த்திக் கொள்ள வைத்துள்ளது. ஆனால் இங்கு இன்னும் அடிப்படை கருத்தாய்வுகள் உள்ளன. இரு கட்சிகளாலும் அவை பகிர்ந்து கொள்ளப்படுகின்றன கெர்ரியும் ஜனநாயக கட்சியினரும் புஷ் நிர்வாகத்தின் போலீஸ்-அரச வழிவகை நடவடிக்கைகளை எதிர்க்க தயாராகவும் இல்லை, அவர்களால் இயலாததும் கூட, ஏனெனில் அவர்கள் தற்கால வரலாற்றிலேயே மிகுந்த வலதுசாரித்தன பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதற்கு அவர்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். புஷ்ஷை மீறும் வகையில் கெர்ரியின் இராணுவ நடவடிக்கைகளை காட்டுகின்றனர், அவரை இன்னும் திறமையான, இரக்கமற்ற தலைமைத் தளபதி என்று காட்ட முற்படுகின்றனர்.

இங்கு முக்கியமான தொடர்புடையது அமெரிக்க சமூகத்தை முழு இராணுவ மயமாக்குதல் ஆகும். இரு கட்சிகளாலும் பிரதிபலிக்கப்படும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் நலன்கள், நோக்கங்களால் இது ஆணையிடப்படுகிறது. அவற்றிற்கு இடையே எந்த தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தாலும் நிலைமை இவ்வாறுதான் இருக்கும். அமெரிக்க, உலக முதலாளித்தவத்தின் பெருகிய முரண்பாடுகளால் உந்துதல் பெற்ற அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மேலாதிக்கத்தின் உந்துதலால் செயல்படுகிறது. இதில் ஜனநாயக உரிமைகள் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரங்கள் என்று எதுவும் குறுக்கே நிற்க அனுமதிக்கப்பட மாட்டாது.

பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகத்தின் ஒத்துழைப்புடன், நிதியத் தன்னலக்குழு மற்றும் அதன் அரசியல் முகவர்கள் அமெரிக்க மக்களின் குடியுரிமைகள் தகர்ப்பு, சர்வாதிகார வகை ஆட்சி மாற்றத்திற்கு தயார் செய்கின்றனர். முன்னோடியில்லாத அரசாங்க வன்முறை, அடக்குமுறை ஆகியவற்றிற்கு அவர்கள் அரங்கு அமைக்கின்றனர்