World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Post-mortems for Ted Kennedy: Burying the remains of American liberalism

ரெட் கென்னடியை பற்றிய பின் ஆய்வுகள்: அமெரிக்கத் தாராளவாதத்தின் எஞ்சியிருப்பவற்றை புதைத்தல்

Barry Grey
1 September 2009

Back to screen version

கடந்த செவ்வாயன்று 77 வயதில் காலமான செனட்டர் எட்வார்ட் (ரெட்) கென்னடி பற்றிய உத்தியோகபூர்வ சான்றிதழ்கள் மற்றும் செய்தி ஊடகக் கருத்துக்களில், ஒரு பொதுவான பல்லவி இழையோடுகிறது. செனட்டரின் மரணத்தில் அமெரிக்க அரசியலின் ஒரு அத்தியாயம் முடிவடைகிறது என்பதை ஒப்புக் கொள்ளும் பாராட்டுக்கள் அவருடைய நீண்ட அரசியல் போக்கின் மிக முக்கியத்துவமற்ற காலத்தின் மீது குவிப்பைக் காட்டுகின்றன.

பொதுக் கருத்தின்படி, தன்னுடைய ஜனாதிபதி விழைவுகளை கைவிட்டு, இனி இன்னொரு கென்னடி நிர்வாகம் வர வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து புதிய உடன்பாடு, புதிய எல்லை-பெரும் சமுதாய சீர்திருத்த முறைக்கு விரோதமாக இருந்த ஒரு வலதுசாரி சூழ்நிலையின் வரம்பிற்குள் ரெட் கென்னடி பணியாற்ற ஒரு வழி கண்டார் என்று கூறப்படுகிறது.

முன்பு ஜனாதிபதி பதவியை விழைந்தவர் பின்னர் இன்னும் வசதியான, அரவணைத்துச் செல்லும் பங்கான செனட்டின் பற்களற்ற தாராளவாத "சிங்கம்" என்பதில் தன்னை இருத்திக் கொண்டார். "ரெட்டி மாமாவுக்கு" த்ரீ சியர்ஸ்!

கன்சர்வேடிவ் கட்டுரையாளர் நியூ யோர்க் டைம்ஸின் டேவிட் ப்ரூக்ஸ் கென்னடியை "சீராகப் பெரும் வளர்ச்சியுற்றவர்" என்று விவரித்துள்ளார். ஒரு பின்னோக்குக் கட்டுரையில், "புதிய உடன்பாட்டு தாராளவாதத்தின் கடைசி உறுமலில் கென்னடி" என்ற தலைப்பில் டைம்ஸின் எழுத்தாளர் Sam Tanenhaus கென்னடியின் "நீதிபதி ரொபேர்ட் எச்.போர்க்கை 1987ல் அளவுக்குமீறி கண்டித்தது பற்றி" குறைகூறி, பதவியில் இருந்த ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரை 1980 ஜனாதிபதி ஆரம்ப தேர்தல்களில் அகற்ற முற்பட்டதை "மிகப் பெரிய தவறான கணக்கு" என்று கண்டிக்கவும் செய்தார்.

இதே போல், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், ஒரு தலையங்கத்தில் ஞாயிறன்று, கென்னடியின் "அதிக நெறியற்ற 1980 ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்" பற்றியும், "தலைமை நீதிமன்றத்திற்கு ரொபேர்ட் எச் போர்க்கை உறுதிப்படுத்துகையில், மீண்டும் பாகுபாடு உடைய உணவு அளிக்கும் இடங்கள் ஏற்படும், மறைமுகமான கருக்கலைப்புக்களை" கொண்டுவந்துவிடும் என்று அவர் கொடுத்த மிகைப்படுத்தப்பட்ட எச்சரிக்கை பற்றியும் புலம்பியது.

உண்மையில், இரு நிகழ்வுகளும் கென்னடியின் வாழ்க்கைப் போக்கில் கூடுதலான கொள்கை நிறைந்த கணங்களில் இருந்தவை ஆகும். வாட்டர்கேட் ஊழலின் போது நிக்சன் பதவியில் நீடிக்க விரும்பிய முயற்சியில் போர்க் முக்கிய இணை சதிகாரர் ஆக இருந்தார். தலைமை அரசாங்க வழக்கறிஞர் எலியன் ரிச்சார்ட்ஸனும் அவருடைய உதவியாளர் வில்லியம் ரக்கெல்ஷாஸும் நிக்சனின் ஆணையான, 1973 "Saturday Night Massacre" வழக்கையொட்டி வாட்டர்கேட் சிறப்பு வழக்கறிஞர் ஆர்ச்சிபால்ட் காக்ஸை பதவியில் இருந்து நீக்கவும் என்பதைச் செயல்படுத்துவதை விட இராஜிநாமா செய்தபோது, போர்க் இடைக்கால அராங்க வழக்கறிஞர் பதவியை ஏற்று கறைபடிந்த செயலைச் செய்தார்.

அமெரிக்க முறையீடுகள் மன்றத்தின் நீதிபதி என்னும் முறையில், உரிமைகள் சட்ட வரைவில் கூறப்பட்ட அடிப்படை குடியுரிமைகளை தாக்கிய விதத்தில் அவர் தீர்ப்புக்களை கொடுத்தார்; அவரை ரேகன் தலைமை நீதிமன்றத்திற்கு நியமனம் செய்யப்பட்டது தோற்றபின், அவர் சுதந்திரப் பிரகடனத்தை அது கொண்டிருந்த, ஊக்கமளித்த சமத்துவ உணர்வுகளுக்காக பகிரங்கமாக கண்டித்தார். இவருடைய கெளரவத்தைத்தான் கென்னடி பாதிக்கும் வகையில் பேசினார் என்று கூறப்பட்டது.

கார்ட்டரை பதவியில் இருந்து அகற்றும் கென்னடியின் முயற்சியை பொறுத்த வரையில், இந்த கன்சர்வேடிவ் தெற்கத்திய கவர்னரை 1976 ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயகக் கட்சி உயர்த்தியதே அக்கட்சியிலும் முழு அமெரிக்க அரசியலிலும் வாட்டர் கேட் மற்றும் வியட்நாம் தோல்விக்கு பின்னர் வலதிற்கு நகர்ந்ததில் ஒரு மைல்கல்லாக இருந்தது. கார்ட்டர் தேர்தலுக்கு பின்னர் 1978 சட்ட மன்றத் தேர்தல்களின் ஜனநாயகக் கட்சியின் தோல்வி ஏற்பட்டது; இது இன்னும் முக்கியமான தாராளவாத ஜனநாயகக் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் வெளியேறியதைத்தான் கண்டது.

கென்னடி ஜனாதிபதி பதவிக்கு செய்த முயற்சி செய்தி ஊடகத்தால் பரந்த அளவில் எதிர்க்கப்பட்டதுடன், அவருடைய கட்சியாலும் அவர் நிராகரிக்கப்பட்டார். 1980ல் அடைந்த தோல்வியை அவர் ஜனநாயகக் கட்சி இனித்திரும்பாத அளவிற்கு தாராளவாத சீர்திருத்த கொள்கையை கைவிட்டதின் அடையாளம் என்று கண்டு மாறிவிட்ட அரசியல் காட்சிக்கேற்ப சமரசப்படுத்திக் கொண்டு தன்னை மாற்றிக் கொண்டுவிட்டார். அவருடைய அரசியல் போக்கின் எஞ்சிய பகுதியை சிறிய நிர்வாகச் சீர்திருத்தங்களை இயற்ற முற்பட்டு செனட்டில் உடன்பாடு காண்பவர் என்று உழைத்து, அரசியலளவில் திவாலாகிவிட்ட அமெரிக்க தாராளவாத்தின் செய்தித் தொடர்பாளர் என்ற தன்னையே இழிவுபடுத்திக் கொள்ளும் பங்கை ஏற்றார்.

ஜோன் எப். கென்னடி ஜனவரி 2, 1960ல் தன்னுடைய வேட்புமனுவை அறிவித்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கடந்துவிட்டது. அமெரிக்க வரலாற்றின் வடிவமைப்பிற்குள், அந்த நிகழ்வு 1912 உட்ரோ வில்சன் தேர்தலுக்கும் 2008ல் பாரக் ஒபாமா தேர்தெடுக்கப்பட்டதற்கும் கிட்டத்தட்ட நடுவே வந்தது.

தன்னுடைய வேட்புமனுவை அறிவிக்கும்போது, தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் கீழ்க்கண்ட முக்கிய பிரச்சினைகளுக்கு விடைகள் காணப்போவதாக கென்னடி அறிவித்தார்: "அமெரிக்க அறிவியல் மற்றும் கல்வியின் மாண்பை எப்படி மறுகட்டமைப்பது, நம்முடைய விவசாயப் பொருளாதாரம் சரிவடைவதை எப்படித் தடுப்பது, நம்முடைய நகரங்கள் இழிசரிவடைவதை எப்படித் தடுப்பது, இன்னும் பணவீக்கம், வேலையின்மை ஆகியவை பெருகாமல் பார்த்துக் கொள்ளுவது, அனைத்து அமெரிக்கர்களுக்கும் பெருகிய பொருளாதார வளர்ச்சியை எப்படி கொண்டுவருவது, நம்முடைய மரபார்ந்த அறநெறி நோக்கத்திற்கு திசையளிப்பது எப்படி, நம்மை எதிர்கொள்ளும் ஆபத்துக்கள், வாய்ப்புக்கள் பற்றி ஒவ்வொரு அமெரிக்கரையும் விழிப்படைய செய்வது."

இந்த உரையை நிகழ்த்துகையில் கென்னடி தன்னை அரசியலில் ஒரு தாராளவாத முதலாளித்துவத்தின் "முன்னேற்ற" மரபின் நிதானமான பிரதிநிதி என்று கருதினார்; அம்மரபு உட்ரோ வில்சனால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. Dallas இல் படுகொலையினால் முடிவிற்கு வந்த கென்னடி நிர்வாகம் அந்த மரபின் நீடித்த மரண வேதனையின் தொடக்கத்தை காட்டியது என்பதை இப்பொழுது நாம் அறிவோம். ஏகாதிபத்திய உறுதிப்பாடுகள், பொருளாதாரச் சரிவுகள் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை தாராளவாத செயற்பட்டியலை மூழ்கடித்தன. தன்னுடைய வேட்பு மனுவின்போது கென்னடி அறிவித்த நிதானமான இலக்குகள்கூட அடையப்படவில்லை; உண்மையில் அவை நீண்டகாலத்திற்கு முன்னரே ஜனநாயகக் கட்சியினால் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

இவ்விதத்தில் பாரக் ஒபாமா ரெட் கென்னடியின் இறுதி சடங்குகளில் தன்னுடைய புகழுரையை கொடுக்கும்போது அவர் ஒருமுறைகூட "தாராண்மை" என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

கடந்த வாரத்தில் செய்தி ஊடகம் பல முறை செனட்டர் கென்னடியின் சிறந்து அறியப்பட்ட உரைகளில் இருந்து ஒரு பகுதியை --1980 ஜனநாயகக் கட்சி மாநாட்டில் அவர் ஜிம்மி கார்ட்டருக்கு காட்டிய சலுகையை - பலமுறை ஒளிபரப்பியது. மாநாடு தன்னை நிராகரித்ததை ஏற்ற கென்னடி, வெளிப்படையான நேர்மையுடன், "பணி தொடரும், இலக்குகள் நீடிக்கும், நம்பிக்கை இன்னும் உயிர்த்துள்ளது, கனவு ஒருபோதும் மடியாது" என்று அறிவித்தார்.

உண்மையில், ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க தாராளவாதத்தை பொறுத்த வரையில், பணி முடிந்துவிட்டது, சமூகச் சீர்திருத்த இலக்கு கைவிடப்பட்டது, நம்பிக்கை மடிந்தது, என்ன கனவு இருந்தாலும் அது போலித் தோற்றமாகத்தான் தொடர்ந்தது


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved