வேறு நாடுகளுக்கு சித்திரவதைக்கு அனுப்பப்படுவதற்காக "பயங்கரவாத சந்தேகத்திற்கு
உரியவர்களை" நாடுகடத்தலாம் என்ற ஒபாமா நிர்வாகத்தின் முடிவு அமெரிக்க ஜனநாயகத்தின் ஆழ்ந்த வீழ்ச்சிக்கு
சான்றாக உள்ளது.
ஒபாமாவின் கீழும் புஷ் நிர்வாகத்தில் இருந்ததுபோலவே ஆட்கடத்தல் வழக்கம் தொடரும்.
நியூயோர் டைம்ஸிற்கு இத்தகவலை கசிய விட்ட வெள்ளை மாளிகையின் விசாரணை, கைமாற்றுதல் பற்றிய பணிக்குழுவிற்கு
நெருக்கமான அனாமதேயே ஆதாரம், சித்திரவதைப் பழக்கம் இல்லாத நாடுகளுக்குத்தான் கைதிகள் "கடத்தப்படுவர்"
என்றும் இராஜதந்திரிகள் அவர்களைக்காண அனுமதிக்கப்படுவர் என்ற தெளிவற்ற உத்தரவாதத்தையும் கொடுத்தார்.
புஷ் நிர்வாகமும் இதே போன்ற உத்தரவாதங்களைத்தான் கொடுத்திருந்தது. உண்மையில்
சித்தரவதைக்கு வசதியளிக்கும் மற்றும் பொதுக்கட்டுப்பாட்டை சிறிதும் பொருட்படுத்தாத நாடுகளின் சேவையை
பயன்படுத்துதல் என்பதைத் தவிர கடத்தலுக்கு வேறு காரணம் ஏதும் இல்லை.
"பயங்கரவாதத்தின் மீதான போர்" தொடர்பாக சட்டவிரோத, ஜனநாயக விரோதத்
தன்மை தொடர்புடைய பல குற்றச்சாட்டுக்கள் வந்த ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது; இது
இராணுவ-உளவுத்துறை அமைப்பின் பெருகிய அதிகாரத்தையும், அமெரிக்க போலீஸ் அரசாங்கத்திற்கான உள்கட்டுமானம்
உறுதிப்படுத்ப்படுவதையும் பிரதிபலிக்கிறது.
*ஆகஸ்ட் 20ம் தேதி,
CIA மத்திய உளவுத்துறை பிளாக்வாட்டர் அசோசியேட்ஸ்
எனப்படும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை அல் குவைடா செயலர்கள் எனக்கூறுப்படுபவர்களை "இலக்கு வைத்து
கொல்லும் திட்டத்திற்கு" ஈடுபடுத்தியதாக தகவல் கொடுக்கப்பட்டது.
CIA இவ்வித்தில்
அமெரிக்க சட்டமான இத்திட்டம் பற்றி காங்கிரஸிற்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பதை மீறியது.
*
ஆகஸ்ட் 21ம் தேதி நியூ
யோர்க் டைம்ஸ் ஒபாமா நிர்வாகம் இதே கூலிப்படை நிறுவனத்தை
CIA ன் ஆளில்லாத
பிரிடேட்டர் ட்ரோன் மூலம் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றில் படுகொலைகளுக்கு பயன்படுத்தியது என்று
கூறியுள்ளது.
*
ஆகஸ்ட் 22 அன்று
Der Spiegel,
CIA
பிளாக்வாட்டரை கைதிகளை குவான்டனாமோ குடாவில் இருந்து மத்திய ஆசியாவில் உள்ள இரகசிய
சிறைச்சாலைகளுக்கு அழைத்துச்செல்ல, அங்கு சித்திரவதையை எதிர்நோக்க பயன்படுத்தியது என்று
உறுதிப்படுத்தியது.
* ஆகஸ்ட் 24 அன்று, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிய கைதிகளை சித்தரவதை,
கொலை பற்றி CIA
தலைமை அதிகாரியின் பெரிதும் மாற்றப்பட்ட ஆவணத்தை வெள்ளை மாளிகை பகிரங்கமாக்கியது. இதிலிருந்த
தவறாக நடாத்துதல்களான, விசாரணையாளர்கள் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவர்களுடைய
தாயார்களும் குழந்தைகளும் கைது செய்யப்படுவர், கற்பழிக்கப்படுவர் என்பன இருந்தன. இந்த அறிக்கை 2004ல்
இருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு நீதிமன்றம் அமெரிக்க குடியுரிமை அமைப்பினால் சுதந்திர தகவல் (Freedom
of Information) வழக்கில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து
வெளிவந்த உத்தரவினால் இது வெளிவந்தது.
இதற்கு முந்தைய நிர்வாகம் அமெரிக்க சர்வதேச சட்டத்தையும் மற்றும் அடிப்படை
மனித உரிமைகளையும் முறையாக மீறியது என்பதற்கான பெரும் சான்றுகளை எதிர்கொண்ட நிலையில், ஒபாமா
நிர்வாகம் சேதத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
CIA
தலைமை ஆய்வாளர்
அறிக்கையை வெளியிட்ட பின்னர், தலைமை அரசாங்க வக்கீல் ஹோல்டர் ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ள சில
சித்திரவதை வழக்குகள் பற்றி ஒரு வக்கீலை விசாரணை நடத்தச் சொன்னார். விசாரணையின் பரப்பு புஷ்ஷின்
வெள்ளை மாளிகையால் குறிப்பாக ஒப்புதல் கொடுக்கப்பட்ட சித்திரவதை வடிவமைப்புக்களை மீறிய "மோசமான
முகவர்கள்" பற்றி விசாரிக்க மட்டும் என்று இருந்தது. நிர்வாகக் கொள்கைக்கு ஏற்ப, புஷ் நிர்வாக அதிகாரிகள்
மீது விசாரணைகள் ஏதும் இருக்காது இதில் புஷ், துணை ஜனாதிபதி டிக் ஷென்னி என சித்திரவதை திட்டத்தை இயற்றி
மேற்பார்வையிட்டவர்கள் அடங்க மாட்டார்கள்.
ஒபாமா இந்த அரைகுறை நடவடிக்கையில் இருந்து உடனடியாகத் தன்னை ஒதுக்கிக்
கொண்டார். ஒபாமாவின் மந்திரமான "நாம் வருங்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும், பின்னோக்கி அல்ல"
என்பதை ஒருசெய்தித் தொடர்பாளர் மீண்டும் கூறி, ஹோல்டர்மீது விசாரணை பற்றிய பொறுப்பு சுமத்தப்பட்டது.
அவர்தான் "இறுதியில் முடிவுகளை எடுப்பார்" என்றும் கூறப்பட்டுவிட்டது.
அறிக்கை வெளியிடப்பட்டதற்கும் மற்றும் ஒரு விசாரணை வக்கீலை நியமித்ததற்குமான
CIA
உடைய வெளிப்படையாக எதிர்ப்பு கீழ்ப்படிதல் இன்மை என்ற தரத்தை அடைந்தது. அமைப்பின் செய்தித்
தொடர்பாளர் இந்த வழக்குகள் ஏற்கனவே புஷ்ஷின் நீதித்துறையினால் விசாரிக்கப்பட்டுவிட்டன என்று அறிவித்தார்.
"நீதித்துறை 2004ல் முழு ஆவணத்தையும் பெற்றது, அவர்களுடைய முழுநேர
வக்கீல்கள் இதை கவனத்துடன் சட்டப் பொறுப்பிற்காக பரிசீலித்தனர்" என்றும் "அது ஏற்கனவே முடிந்துவிட்டது"
என பெளல் கிமிக்ளியானோ கூறினார்.
"தலைமை ஆய்வாளரின் அறிக்கை வெளியிடப்பட்டபின்,
CIA
முன்னோடியில்லாத நடவடிக்கையான இரு இரகசிய ஆவணங்களை வெளியிட்டது; இவற்றின் வெளியீடு டிக் ஷென்னியால்
கோரப்பட்டது. முன்னாள் துணை ஜனாதிபதி இந்த ஆவணங்கள் "விரிவான விசாரணை தொழில்நுட்பங்ககளின்"
தேவையை நிரூபணம் செய்யும் என்று கூறினார்.
எதிர்பார்த்தபடி, இந்த ஆவணங்கள் சித்திரவதை மூலம் கிடைத்த உளவுத்தகவல் பற்றி
எந்த சிறப்புக் குறிப்பையும் கொண்டிருக்கவில்லை. மாறாக அவை
CIA
விசாரைணகளினால் தடைக்கு உட்பட்ட பயங்கரவாத சதித்திட்டங்கள் பற்றி இழிந்த, ஆதாரமற்ற கூற்றுக்களைத்தான்
அளித்திருந்தன.
செவ்வாயன்று தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஷென்னி நீதித்துறை
திட்டமிட்டுள்ள விசாரணை பற்றி பெரும் இருண்ட சொற்றொடர்கள் மூலம் குறைகூறினார். "இது நம் நாட்டின்
பாதுகாப்பு காப்பாற்றப்படுவது பற்றிய நிர்வாகத்தின் பொறுப்பை சந்தேகத்திற்கு உட்படுத்துகிறது." என்று
ஷென்னி கூறினார்.
தலைமை ஆய்வாளர் அறிக்கை வெளியிடப்பட்டபின் எழுந்த "விவாதங்களின்" தன்மை
இராணுவ-உளவுத்துறை அமைப்பின் ஆணைக்கு உட்பட்டிருந்தது. சித்திரவதை "பயனுடையதாக இருந்ததா" இல்லையா
என்பதை அது தொக்கி நின்றது. இவ்விதத்தில் அது ஒரு முறையான அறிவார்ந்த விவாதத்திற்குரியது எனக்
கூறப்பட்டது.
தற்பொழுது ஒபாமாவால் நியமிக்கப்பட்ட
CIA இயக்குனராக
இருக்கும் லியோன் பானெட்டா, சித்திரவதை தாக்குதல்களை குழப்பிவிட்டது என்று ஷென்னியின் கூற்றை
எதிரொலித்துப் பேசினார். அத்தகைய வழிவகைகள் "தகவலை பெற ஒரே வழிதானே என்பது விவாதத்திற்கு உரிய
பகுதியாகத்தான் இருக்கும் என்றும் அமெரிக்கர்கள் பயன்படுத்தப்பட்ட வழிவகைகள் பற்றி பலவிதக் கருத்துக்கள்
கொண்டுள்ளதாகவும்" கூறினார்.
இப்பின்னணியில் ஒபாமாவின் அறிவிப்பு கடத்தல் தொடரும் என்பது
இராணுவ-உளவுத்துறை அமைப்பிடம் நற்பெயர் வாங்கும் வெளிப்படையான முயற்சி ஆகும். இந்த அறிவிப்பு தலைமை
ஆய்வாளரின் அறிக்கை வெளியிடப்பட்டதால் ஏற்பட்ட "தாக்கத்தை அகற்றும் ஒரு பகுதி என்ற இலக்கைக்
கொண்டிருப்பது போல்" தோன்றுகிறது என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ஒபாமா கடத்தலை தொடர்தல் என்பது அவருடைய தேர்தல் பிரச்சார
உறுதிமொழிகளில் மற்றொன்றை நிராகரிப்பது ஆகும்.
Foregin Affairs
2007ல் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒபாமா தான் "தீவிர
கடத்தல் வழக்கத்தை, நம் பிற நாடுகளுக்கு சித்திரவதைக்காக கைதிகளை அனுப்பும் வழக்கத்தை அகற்றுவதாக"
கூறியிருந்தார்.
ஒபாமாவிற்கு வாக்களித்தவர்கள் பலர் புஷ் நிர்வாகத்தின் சித்திரவதை மற்ற சட்டவிரோத
வகைகள் மீது கொண்ட இகழ்வை அடுத்து அவ்வாறு செய்தனர். ஆனால் ஒபாமாவின் போர் எதிர்ப்பு காட்டிக்
கொள்ளல், புஷ்ஷின் பெருநிறுவன செயற்பட்டியலை மாற்றுதல் என்ற உறுதிமொழிகள் போலவே, பிரச்சாரத்தின்
போது கொடுக்கப்பட்ட கருத்தான "மாற்றத்தை நீங்கள் நம்புங்கள்" என்பதும் மதிப்பற்றதாக போய்விட்டது.
ஒவ்வொரு அடிப்படைப் பிரச்சினையிலும் ஒபாமா நிர்வாகம் அதன் முந்தைய நிர்வாகத்தின் பிற்போக்குத்தன கொள்களைகளை
தீவிரப்படுத்தி தொடர்கிறது.
ஒபாமா நிர்வாகம் கடத்தலுக்கு ஒப்புதல் கொடுத்தமை சித்திரவதை, கடத்தல்,
படுகொலைகள், ஆக்கிரோஷப்போர் என்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஜனநாயக விரோத வழிவகைகளை நிரூபிக்கிறது.
இவை அரசியல்வாதிகளின் தனிப்பட்ட தன்மைகளில் வேர்களை கொண்டிருக்காததுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
ஒரு கட்சிக்கு பதிலாக மற்றொன்றை பதவியில் இருத்துவதின் மூலம் கடக்கப்பட முடியாது என்பதை
நிரூபிக்கிறது.
அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஆளும்
உயருடக்கு முற்றிலும் ஆக்கிரோஷப் போர்களுக்கு திரும்பியிருப்பதின் தவிர்க்க முடியாத தன்மையில்தான் ஒரு போலீஸ்
அரசாங்கம் என்ற ஆபத்து வெளிப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நெருக்கடியை ஒரு பரந்த முறையில் அமெரிக்காவில்
வர்க்க உறவுகளை நிதிய பிரபுத்துவத்தின் நலனுக்காக கட்டமைக்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த
நிதிய உயரடுக்கோ இரு கட்சிகளையும் அரசாங்க அதிகாரத்தை கட்டுப்படுத்தும் அனைத்து நெம்புகோல்களையும்
தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் விளைவாக வெளிவந்துள்ள சமூக சமத்துவமின்மையின் தன்மை இப்பொழுது "பயங்கரவாதத்தின்
மீதான போரில்" உபயோகிக்கப்படும் நடவடிக்கைகள் இறுதியில் அமெரிக்காவிற்குள்ளேயே தொழிலாள வர்க்கத்திற்கு
எதிராக கட்டவழித்துவிடப்படும்.