World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Letters on the "Nobel War Prize" "நோபல் போர் பரிசு" பற்றி வந்த கடிதங்கள் 13 October 2009 On "The Nobel War Prize" "நோபல் போர் பரிசு" பற்றி Dear WSWS, "நோபல் போர்ப் பரிசு" பற்றிய பில் வான் ஒகெனின் கட்டுரை, நான் படித்ததிலேயே மிக ஆழ்ந்த, விரிவான, வரலாற்று விளக்கம், அரசியல் பின்னணியில் எழுதப்பட்டுள்ள ஒபாமா சமாதானப் பரிசு பற்றிய கட்டுரைகளில் ஒன்றாகும் (அவற்றை நான் நாள் முழுவதும் படித்து வருபவன்) மிகத் தெளிவாக வான் ஒகென் தெளிவாக்கியுள்ளது போல், அப் பரிசு ஐரோப்பிய சக்திகள் போருக்கு தாங்கள் கொடுக்கும் ஒப்புதல் என்றுதான் காணப்படவேண்டும்; எண்ணெய், எரிவாயு செழிக்கும் யூரேசியப் பகுதியில் ஏகாதிபத்தியம் பெறவிரும்பும் பெரும் ஆதாயங்களில் ஒரு பகுதி பற்றிய தங்களின் "ஒருதலைப்பட்ச" நம்பிக்கைகளைத்தான் காட்டுகிறது. ஒரு சோசலிச முன்னோக்குத்தான் முதலாளித்துவத்தின் இந்தக் கடுமையான நெருக்கடியின்போது நாம் காணுகின்ற பெரும் திகைப்புத் தரும் முரண்பாடுகளைப் பற்றி புரிந்து கொள்ளக்கூடியதாக செய்ய முடியும். இராணுவவாதம் சமாதானம் என்று காட்டிக் கொள்ளுகிறது, ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்களில் இரக்கமற்ற வெட்டுக்கள் "நாம் நம்பும் மாற்றம்" என்று கூறப்படுகின்றன, பெருநிறுவன காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் சுகாதாரக் "காப்பீட்டிற்கு" பணம்கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஏழைகளுக்கு விதிக்கும் அபராதங்கள் "சீர்திருத்தங்கள்" என்று காட்டப்படுகின்றன மற்றும் ஏகாதிபத்தியத்தின் மிகத் தீவிரப் போர்க்குற்றவாளி சமாதானத்திற்கான மிக உயர்ந்த பரிசைப் பெறுகிறார். அதன் சொந்த வெளிப்படையான முரண்பாடுகளை கட்டுப்படுத்தும் முதலாளித்துவ அமைப்பின் திறனின்மைக்கான சான்று, அதன் சொந்த செய்தி ஊடகமே இந்த சமீபத்திய கேலிக்கூத்தில் வெட்கித் தலைகுனிந்தாக வேண்டிய அளவு குழப்பமுறச்செய்கிறது. துரதிருஷ்டவசமாக கேலிக்கூத்திலோ பெரும் துயரம் தவிரக்கமுடியாததாகி, பல நூறாயிரம் மக்களின் துயரத்தை முன்னிலும் கூட்டுகிறது. உண்மை பற்றி மிக முக்கியமான உங்கள் பகுப்பாய்வுத் திறனுக்கு நன்றி WSWS. Michael R *** *** Pol Pot ற்கு இறந்த பின் நோபல் பரிசு கிடைக்கும் என்று நான் நம்பியிருந்தேன்; ஆனால் ஆப்கானிஸ்தான் போரை தாலிபனுக்கு எதிராக என்பதற்கு பதிலாக "அல் கொய்தாவிற்கு" என்று குறுக்கிக் காட்டும் முயற்சியில் ஒபாமா பெரும் தைரியத்தை கொண்டுள்ளார். Michael G *** *** ஐரோப்பிய உயரடுக்குகளுக்கு அவற்றின் "நலன்கள்" உள்ளன. இவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நோபல் பரிசுக்குழு ஒபாமாவை இணங்கவைக்கும் என்றால், ஒரு அடிமட்ட பேர விலைக்கு ஒபாமா வாங்கப்பட்டுள்ளார். ஆனால் அடுத்து கொடுக்க வேண்டிய ஆரம்ப கட்டணம் ஆப்கானிஸ்தானுக்கான துருப்புக்களாக இருக்கும். தங்கள் யூரோக்களுக்கு உண்மையில் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? வீழ்ச்சி அடைந்துகொண்டிருக்கிறது என்று அனைவரும் ஒப்புக்கொள்ளும் சக்தியுடன் கூட்டு வைத்தல் ஆகும். "என் விருப்பப்படி செய்வேன்" என்று கூறிய சக்தியின் நாட்கள் முடிந்துவிட்டன. ஐரோப்பிய உயரடுக்குகளுக்கு சரியெனக் காணப்படும் போக்கு மரபார்ந்த ஐரோப்பிய பாசாங்குத்தனத்தில் மறைக்கப்படும் போரில் இருந்து விலகுவதுதான். அவை அடுத்த உதயமாகும் நட்சத்திரத்தை வேறு இடத்தில் காணும்போது "ஐக்கியம்", "நம்பொது மரபியம்" என வலியுறுத்தும் சொற்றொடர்களின் மேகக் கூட்டம் வெளிப்படும். Chris *** *** ஜனாதிபதி ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது பற்றி உலக சோசலிச வலைத் தளம் என்ன கூறப்போகிறது என்று நான் காத்துக் கொண்டிருந்தேன். இந்தப் பரிசுகளுடன் தொடர்புடைய அனைத்தையும் தோழர் பில் கடுமையான குற்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார். "உயிரோடு இருப்பவர்களை புகழ்தல் என்பது கறைபடிந்த புகழ்" என்று ரொபேர்ட் பிரெளனிங் கூறினார். அது இந்த ஆண்டு நோபல் பரிசைப் பொறுத்தவரையில் இருமடங்கு பொருந்தும். ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்கம் செய்ய முற்படும் ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுப்பதைக் காணும்போது மனம் வெறுமே பெருந் திகைப்பில் ஆழ்வது மட்டும் இல்லாமல் சிதைந்துவிடுகிறது. Larry L *** *** மிக அதிக தகவல் கொடுக்கும் கட்டுரை, ஏனெனில் "நோபல் பரிசு பெறுவதற்குத் தகுதியாக அவர் என்ன செய்துள்ளார்?" என்பதற்கும் அப்பால் பல வினாக்களுக்கு கட்டுரை விடையளிக்கிறது. ஐரோப்பிய உயரடுக்கின் அரசியல் நிலைப்பாட்டை நோபல் சமாதானப் பரிசு பிரதிபலிக்கிறது என்னும் கருத்து பெரும் தெளிவைக் கொடுக்கிறது. அடிப்படைக் கருத்துக்களை கவனியாமல் விடும் எனது நாட்டில் உள்ள செய்தித்தாட்களுக்கு இதை நான் அனுப்பி வைக்கலாமா? Prabhakar *** *** ஆர்வெல்லின் 1984 முழுமையாக வந்துவிட்டது. வலது சாரிகள் எப்படி ஒபாமா ஒரு சோசலிஸ்ட் என்று குறைகூறி வந்தனர் என்று கூறுவது பற்றி தகவல் பலகைகள் நிறைந்து உள்ளன; ஏனெனில் ஒரு நல்ல முதலாளித்துவ வாதியைப் போல், அவர் பொது மக்கள் வரிப்பணத்தை வங்கியாளர்களுக்கு கொடையாகக் கொடுத்துள்ளார். அவர்களுடைய வாதம் நல்ல முதலாளித்துவத்தினர் எப்பொழுதும் தடையற்ற சந்தை முறை அதன் தந்திரத்தை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதுதான். எனவே "சோசலிஸ்ட்" என்ற சொல்லின் பொருள் இப்பொழுது தீமை நிறைந்த முதலாளித்துவவாதி என்று ஆகிவிட்டது. தகவல் பலகைகள் கூட ஒரு கறுப்பர் இனவெறி பற்றி குறைகூறினால் சீற்றத்துடன் நிறையக் கூறும் நிறைய சுவரொட்டிகளால் நிரம்பிவழியும். அத்தகைய மக்கள் இப்பொழுது வலதுசாரிகளால் இனவெறியர்கள் என்று கருதப்படுகின்றனர். எனவே "இனவெறியர்" என்பதற்குப் புது வரையறை, தானும் தன்னுடைய இனத்தைச் சேர்ந்தவர்களும் வரலாற்றளவில் எதிர்கொண்ட இனவாத நடத்தைகள் பற்றி புகார்கூறுபவர் ஆவார். G.W. புஷ், ஜோர்ஜ் புஷ் மற்றும் ரோனால்ட் ரேகன் அனைவரும் நோபல் பரிசு பெற்றுவிட்டனர்; ஏனெனில் அவர்கள் பல மக்களுக்கும் சுதந்திரத்தையும், விடுதலையையும் கொண்டுவந்துவிட்டனர் என்ற கருத்தைக் கூறும் சில கருத்துக்களையும் படித்தேன்.இந்தப் புதிய சமாதானம் பற்றிய வரையறையின்கீழ், ஹிட்லர்தான் உலகின் முக்கிய சமாதானம் அளித்தவராக இருந்திருப்பார்--அவருக்கு வெகு நெருக்கமாக பல அமெரிக்க அரசியல்வாதிகளும் இருப்பர். Brian M *** *** நோபல் சமாதானப் பரிசை பாரக் ஒபாமாவிற்கு கொடுத்துள்ளது அரசியல் நோக்கம் உடையதுதான். ஒபாமா, மற்றும் அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சூழ்ந்துள்ள முழு பொதுத் தொடர்பு தோற்றத்துடனும் இது நன்கு பொருந்துகிறது. சற்று பின்னோக்கிப் பார்த்தால், ஹென்றி கிஸ்ஸிங்கர், ஜிம்மி கார்ட்டர், அல் கோர் ஆகியோருக்கும் கொடுக்கப்பட்ட பரிசு நிலைமையை பளிச்சிட்டுக் காட்டுகிறது. ஒரு பன்றியின் உதடுகளில் உதட்டுச் சாயம் தடவுதலுக்கு மிகச் சிறந்த உதாரணம் கிஸ்ஸிஞ்சர்தான். அவரோடு ஒப்பிடுகையில் கார்ட்டர் மற்றும் கோர் இருவருமே வெறும் தலைவாரிவிடப்பட வேண்டியவர்களே. எப்படியும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையின் மிகச் சிறிய செயல்களைப் பற்றிக் கூட இடைவிடா விளம்பரம், தீவிரக் கவனம் என்று இருக்கும் பண்பாட்டில், தேர்ந்த பொது மக்களை ஈர்க்கும் பிரச்சாரங்கள், ஏராளமான மக்களுக்கு உண்மை என்று மாறிவிடுகிறது. ஆளும் வர்க்கம் மற்றும் அதன் இராணுவ/தொழில்துறை குள்ளர்களின் குற்ற நோக்கங்கள் ஏன் மாறுபட்ட விதத்தில் இருக்க வேண்டும்? நோபல் அமைதி பரிசு என்பது சமீபத்திய பேரழிவுதரும் திரைப்படம் அல்லது புதினமாக ஆகியுள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் புத்தக ஆய்வுக்கு சமம் என்று ஒருகாலத்தில் ஏற்கப்பட்டது, அரசாங்கத்தின் தற்பொழுதைய அரசியல் நோக்கங்கள் என்பது சிறந்த விற்பனை என்று பெயரெடுக்கின்றன. உள்ளூர் மதுக்கடையில் உளறுவதோடோ, தன்னையே போற்றிக்கொள்ளும் தருமச்செயலோடோ பொருந்தக் கூடிய வகையில், அனைவரும் அவற்றைப் படிக்கின்றனர் அல்லது படித்து விட்டதாக பாசாங்கு செய்கின்றனர். இப்படித்தான் பொதுக் கருத்துக்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பணிகள் நிறைவேறுகின்றன. பேரரசின் நிர்வாணத்தை காண்பவர்கள் ஏற்கப்பட்ட முறையை முரண்பாட்டிற்கு உட்படுத்துவதற்காக கண்டிக்கப்படுகிறார்கள். இதற்கிடையில் ஐரோப்பிய அரசாங்கங்கள் போல், சமாதானத்துடன் எந்த தொடர்பும் கொள்ளத் தகுதியற்ற ஒரு முக்கிய மனிதருக்கு கிடைத்த பாராட்டை புகழ்வது போல், தங்கள் பாராட்டும் அனைத்து போலி நபர்களுக்கும் கிடைக்கும் நலன்களை, அதாவது வருங்காலத்தில் நிலைப்பாடு மீண்டும் மாறும்போது கைகொட்டி ஆரவாரம் செய்யதல் கஷ்டமான நேரங்களில் கொள்ளையிலும் ஹெட்ஜ் நிதியிலும் ஒரு பங்கு கிடைக்க செய்யும் என்று நம்புகின்றனர். உலகின் தொழிலாள வர்க்க மக்கள் இந்த பொம்மலாட்டத்தை பொருட்படுத்தக் கூடாது. வலைத் தள சமூகத்தில் பல கருத்துக்கள் இதைத்தான் செய்துள்ளன என்பதை பார்க்கிறேன். "விளம்பரம் செய்பவரின் வணிகம், ஒரு தந்திர உத்தி, குரல், கோஷம், நம்முடைய மனத்தின் அடிமட்டத்தில் அமைதியாக சென்றுவிட்ட நிலையில் நம் செயல்களைத் தொடர வேண்டும் என்பதுதான்" என்று மார்ஷல் மக்லுகன் கூறினார். நாம் கேட்கும் மேளம் சவ ஊர்வலத்தில் வெளிப்படும் மேளமா என்று கேட்பது பொருத்தமே. Carolyn |