"நாங்கள்
வவுனியா மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் நோயாளர்களை அனுமதிப்பதற்கான அனுமதியைப் பெறுவதற்கு கடுமையான
நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். முதலில் நாங்கள் நோயாளர்களை முகாம் வைத்திய நிலையத்துக்கு கொண்டு சென்று
அங்குள்ள வைத்தியரிடம் சிபார்சு பெற்று பின்னர் பொலிசிடம் அனுமதி பெற வேண்டும். ஆகவே நோயாளி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட முன்னர் இறந்துவிடலாம்.
"7 வயதான எனது மைத்துனி செப்ரிசீமியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். வவுனியா
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கான அனுமதியை பொலிஸ் தாமதித்ததால் அவர் மரணமடைந்தார். அவரது உடலை
முகாமில் தகனம் செய்யக் கூட அனுமதி நிராகரிக்கப்பட்டது. முகாமில் இதேமாதிரி மரணங்கள் பல இடம்பெற்றதை நான்
கேள்விப்பட்டுள்ளேன்."
முகாமில் தண்ணீர் மற்றும் மல கூட வசதிகளுக்கு மிகவும் மோசமான பற்றாக்குறை
நிலவுவதாக அந்தப் பெண் தெரிவித்தார். ''நாங்கள் குழாய்க் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கும் மற்றும் அதேமாதிரி
மலசலகூடம் செல்வதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு ஐந்து லீட்டர்
தண்ணீர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. இதில் குழிப்பது மற்றும் சமையல், துவைத்தல் போன்ற அத்தியாவசிய தேவைகளும்
நிறைவு செய்யப்பட வேண்டும். நான் அங்கு இருந்த போது, வலயம் ஐந்தில் 10,000 பேர் இருந்தனர் (இராநாதன்
முகாமின் ஒரு பிரிவு) ஆனால், அங்கு இரண்டு குழாய் கிணறுகளே இருந்தன.
"மக்களுக்கான உணவு பற்றாக்குறையாக இருந்துடன் வழங்கப்படும் உணவும் கூடுதலாக அரை
அவியலாகவும் உண்ணமுடியாததாகவும் இருந்தது. ஆனால், மாற்றீடு இல்லாத காரணத்தால் தங்கியிருந்தவர்கள் தமக்கு கிடைத்த
எதையும் சாப்பிடத் தள்ளப்பட்டனர். தரம் குறைந்த உணவின் காரணமாக முகாமில் பல பேர் சுகயீனமுற்றனர்."
இலங்கைப் படைகள் இளைஞர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
என்று இந்தப் பெண் கூறினார்.
"இளைஞர்கள் பொலிஸ் மற்றும் இராணுவம் உட்பட பாதுகாப்பு புலனாய்வுப் படைகளால்
அடிக்கடி விசாரணை செய்யப்பட்டு வந்தனர். பெண்கள் மீதான இராணுவத்தின் தவறான அணுகுமுறைகளைப் பற்றி பெண்கள்
முறைப்பாடு செய்தால் அவர்கள் வெளியில் கொண்டு செல்லப்பட்டு, கொல்லப்பட்டிருப்பதை அல்லது காணாமல்
போயிருப்பதை நீங்கள் அறிய முடியும். வலயம் ஐந்தில் நான் இருந்தபோது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனதும்,
சகோதரியினதும் உடல்களைக் கண்டேன். இவர்களுடைய மரணத்துக்கு இராணுவம் தான் காரணம் என்று மக்கள் கூறினார்கள்."