WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
British secret service chief justifies torture
பிரிட்டிஷ் இரகசியப் பிரிவுத் தலைவர் சித்திரவதையை நியாயப்படுத்துகிறார்
Chris Marsden
21 October 2009
Use this
version to print | Send
feedback
அமெரிக்காவுடன் இணைந்து சாட்சியத்தை நசுக்கிவிடும் தொழிற்கட்சி அரசாங்கத்தின்
முயற்சிகள் சீர்குலைந்துவிட அச்சுறுத்துகையில், பிரிட்டனின் இரகசியப் பிரிவான
MI5 இன் தலைவர்
கடந்த வாரம் பயங்கரவாதிகள் என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக சாட்சியத்தை சேகரிக்க சித்திரவதையை
பயன்படுத்தியதை பகிரங்கமாக ஆதரவளித்தார்.
MI5 தலைமை இயக்குனர் ஜோநாதன்
இவான்ஸ் அக்டோபர் 15ம் தேதி பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பேசினார். அதே நேரத்தில் லார்ட் நீதிபதி தோமஸும்,
திரு.ஜஸ்டிஸ் லாயிட் ஜோன்ஸும் 2002 இல் பிரிட்டிஷ் குடிமகன் பின்யம் முஹம்மது விசாரணை பற்றிய ஒரு
CIA
தகவலை தொழிற்கட்சி அரசாங்கம் வெளியிடலாமா என்பது பற்றிய தீர்ப்பை தயாரித்துக் கொண்டிருந்தனர்.
இவான்ஸின் அறிக்கைகள் நீதிமன்றத்திலுள்ள வழக்கு பற்றிய கருத்தை தெரிவிப்பதாக
விளக்கப்பட முடியும் என்று Times of London
குறிப்பிட்டுள்ளது. சாட்சி
B என்று அறியப்பட்ட
ஒரு MI5
அதிகாரி தற்பொழுது மெட்ரோபோலிடன் போலீசாரால் "குற்றம் சார்ந்த செயலைச் செய்திருக்கக்கூடும்"
என்பதற்காக விசாரிக்கப்பட்டு வருகிறார்.
எதியோப்பியாவில் பிறந்த முஹம்மத் பாக்கிஸ்தானில் கைதுசெய்யப்பட்டு,
மொரக்கோவிற்கு கடந்திச் செல்லப்பட்டு பின் கியூபாவிலுள்ள குவாந்தநாமா குடாவில் காவலில் வைக்கப்பட்டார்.
பெப்ருவரி மாதம் அவர் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் விடுவிக்கப்பட்டார். அவர் தன்னுடைய சித்திரவதைக்கு
MI5
உடந்தையாக இருந்தது என்ற காரணத்தைக்காட்டி பிரிட்டிஷ் அராசங்கத்தின்மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
MI 5 கேட்கப்பட வேண்டிய
வினாக்களை வழங்கியமை மற்றும் முஹம்மது பற்றிய தனிப்பட்ட தகவல்களை கொடுத்ததாக
குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒரு MI5
அதிகாரியான சாட்சி B
என்பவர் தான் மொரக்கோவில் சிறையில் இருந்தபோது தன்னை வந்து பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
CIA கொடுத்துள்ள தவகலை
வெளியிடுவது தேசியப்பாதுகாப்பிற்கு ஒரு ஆபத்து என்று பிரிட்டிஷ் அரசாங்கம் சவால் விடுத்துள்ளது. ஆவணம்
வெளியிடப்படுவது அமெரிக்கா உளவுத்துறை ஒத்துழைப்பை பின்வாங்கக்கூடிய நிலையை ஏற்படுத்திவிடும் என்றும் அது
கூறியுள்ளது.
இந்த வாதத்தை தங்கள் அக்டோபர் 16 தீர்ப்பின்போது நீதிபதிகள் நிராகரித்து,
வெளியுறவு மந்திரி டேவிட் மிலிபாண்ட் சட்டத்தின் ஆட்சிக்கு தீமை பயக்கும் விதத்தில் நடந்து கொள்ளுவதாக
குற்றம்சாட்டினார்கள். "ஜனநாயகத்தின் அடித்தளமே சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பது, அதற்கு அடிபணிய
செய்வதல்ல" என்று அவர்கள் தீர்ப்புக் கூறினர்.
முஹம்மதிற்கு எந்த நடந்தது என்பதை மறைப்பதில் இவான்ஸிற்கு சொந்த நலன்
உண்டு. ஏனெனில் அவர் அந்த நேரத்தில் பயங்கரவாத எதிர்ப்பிற்கு பொறுப்பான
MI5 இயக்குனராக
இருந்தார்.
தன்னுடைய உரையில் அவர் சட்டத்தின் ஆட்சி என்பது "பயங்கரவாதத்தின் மீதான
போர்" என்று அழைக்கப்படுவதுடன் பொருந்தி இருக்க முடியாது என்று அவர் வாதிட்டார். கடந்த நூற்றாண்டின்
உலகப் போர்கள் போல் இல்லாமல், அப்பொழுது ஜேர்மனி விரோதியாக இருந்தபோதும் மற்றும் "சர்வதேச
சோவியத் ஊக்கத்தில் வந்த கம்யூனிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு" முற்றிலும் மாறான வகையில்,
"1970கள் மற்றும் 1980 களின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான" போர், 9/11க்கு பின்னர்
"இங்கிலாந்தும் மற்றும் பிற மேலை நாடுகளும் எதிராக அல் குவேடாவின் பயங்கரவாத அச்சுறுத்தல்
வேறுபாடற்ற, பொறுப்பற்ற, உலகந்தழுவிய பாரிய தன்மையைக் கொண்டிருந்தது என்ற உண்மையை
எதிர்கொண்டுள்ளன" என்றார்.
எனவே பயங்கரவாதத்திற்கு எதிராக கடைப்பிடிக்கப்படும் வழிவகைகளில் நயமானவற்றை
மட்டும் செய்தல் என்பது இயலாது. MI5
"மக்களைச் சித்திரவதை செய்யவில்லை, சித்திரவதைக்கு நாங்கள்
ஒத்துழைக்கவும் இல்லை, மற்றவர்களை எங்கள் சார்பில் சித்திரவதை செய்யவும் சொல்லவில்லை" என்று அவர்
அறிவித்தார். ஆனால் 9/11 க்குப் பின்னர் ''உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளில் தரங்கள், வழக்கங்கள்
ஆகியவற்றில் நம்நாட்டினுடையதில் இருந்து முற்றிலும் அப்பாலுள்ள பல நாடுகளுடன்
MI5 ஒத்துழைக்க
வேண்டியிருந்தது."
MI5 "9/11 க்குப் பின்னர்
அமெரிக்க வழக்கத்தில் வெளிவந்த வடிவமைப்பை காண்பதற்கு சற்று தாமதித்திருக்கக்கூடும்" என்று அவர்
தொடர்ந்தார். ஆயினும்கூட, "இந்த தீவிரப் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க
அமைப்புக்களுடனான நம் ஒத்துழைப்பில் இங்கிலாந்து உளவுப்பிரிவு பாரிய நலன்களை பெற்றுள்ளது. அமெரிக்க
நிறுவனங்கள் நம்முடன் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுவதில் தாராளமாக இருந்துள்ளன."
இரு ஒரு இரட்டை வேஷப் பேச்சு ஆகும்.
M15
மற்றவர்களால் செய்யப்பட்ட தவறுகளை பொருட்படுத்துவதில்லை அல்லது அது பற்றி அறியாமல் உள்ளது
என்பதற்காக மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் இணைந்தவிதத்தில் அது அமெரிக்கா
மற்றும் அதன் வாடிக்கை ஆட்சிகளுடன் சித்திரவதையை வெளிநாடுகளில் செய்தல் என்பதற்கு ஒப்பாக அசாதரண
கடத்தல் திட்டம் போன்றவற்றில் தீவிர ஒத்துழைப்பு கொடுத்ததற்கு உள்ள கணிசமான சாட்சியத்தை ஒடுக்கி
வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டைக் கொண்டுள்ளது.
வாடிக்கையான நேரடி ஒத்துழைப்பை மறுத்தல் என்று இருந்தாலும், இவான்ஸின்
பேச்சு ஒரு நெருக்கடி நிலையில், அதாவது சித்திரவதை மூலம் சாதிக்க முடியும் என்பதால் அதற்கு அப்பட்டமான
ஆதரவு கொடுக்கும் விதத்தில் உள்ளது.
"ஒரு இரகசிய சேவைத்துறையை தாராளவாத ஜனநாயகத்தின் கீழ் செயல்படுத்துவது
என்பது பிரச்சினைகளையும் சில நேரங்களில் சங்கடங்களையும் ஏற்படுத்தும் என்பது சரியே" என்றார் அவர்.
இத்தகைய "சங்கடங்களுக்கு" அவருடைய விடையிறுப்பு ஜனநாயக அரசாங்கத்தின் விதிகள் பயங்கரவாதத்திற்கு
எதிராகப் போராடுபவர்களுக்கு பொருந்தாது என்பதுதான்.
இவான்ஸின் பேச்சு எந்த அளவிற்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளமை
அதிகரித்துள்ளது என்பதற்குத் தெளிவான அடையாளம் ஆகும். சட்டவிரோதமாக, உள்துறை மந்திரியின் அதிகாரம்
மற்றும் "பாராளுமன்ற உறுப்பினர்கள் உளவுத்துறை பாதுகாப்புக் குழுவிற்கு பொறுப்பளித்தல்" உட்பட பல கட்டுப்பாடுகள்
இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். உண்மையில் MI5
மீது கண்காணிப்பு கொள்ளும் பொறுப்பு உடையவர்கள் சட்டத்தின் ஆட்சி இனி பொருந்ததாது என்பதில்
உடன்படுகின்றனர்.
இவருடைய உரையின் கணிசமான பகுதி ஆகஸ்ட் 2009 ல் மிலிபாண்டும் உள்துறை மந்திரி
ஆலன் ஜோன்சன் எழுதிய கட்டுரையில் இருந்த மேற்கோளைத் தளமாகக் கொண்டிருந்தது; அதில் "வெளிநாடுகளில்
இருந்து வரும் உளவுத்தகவல்கள் பயங்கரவாதத்தை நிறுத்துவதில் நாம் வெற்றிபெற முக்கியமாகும்" என்று
வலியுறுத்தப்பட்டுள்ளது. "சித்திரவதை அல்லது தவறாக நடத்துதலுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடாது என்பதில்
உறுதியாக இருக்க வேண்டும்.....ஆனால் அனைத்து ஆபத்துக்களையும் அகற்றுவது என்பது இயலாது" என்று கட்டுரை
தொடர்ந்து கூறுகிறது.
உள்துறை மற்றும் வெளியுறவு மந்திரிகள் "நமக்கு எளிமையான விடைகள் கிடைத்து
விடுவதில்லை என்ற சிக்கல் வாய்ந்த சூழ்நிலையில் செயல்பட்டு வருகிறோம்" என்பதை அறிந்து கொள்ள வேண்டும்"
என்று இவான்ஸ் அறிவித்தார்.
லார்ட் நீதிபதிகளான தோமஸ் மற்றும் ஜோன்ஸின் தீர்ப்பை மிலிபாண்ட் தொடர்ந்து
சவால் விடுகிறார். அவருடைய நிலைப்பாட்டிற்கு ஒபாமா நிர்வாகத்தின் ஆதரவு உள்ளது.
குற்றம்சார்ந்த நடவடிக்கைகளை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில்
நியாயப்படுத்துவது ஒவ்வொரு பிரித்தானிய குடிமகனினதும் ஜனநாயக உரிமைகளுக்கும் உடனடி அச்சுறுத்தல் ஆகும்.
MI5
சமீபத்திய ஆண்டுகளில் பாரிய விரிவாக்கத்தை அடைந்துள்ளது. 2010 ன் இறுதியில் அது 2001ல் இருந்ததை விட
இரு மடங்கு பெரிதாக இருக்கும் மற்றும் அதில் 4,100 ஊழியர்கள் பணியாற்றுவர்.
பிரிட்டிஷ் அரசாங்கம் 1.86 பில்லியன் பவுண்டுகளை
MI5, MI6
மற்றும் GCHQ
உளவுத்துறை ஆகியவற்றிற்கு செலவழிகிறது. இதில் MI5
க்குப் பெரும்பகுதி செலவாகிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து எனக் கருதப்படும் 2,000 பேர் மீது
கண்காணிப்பு வைத்துள்ளதாக இந்த அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இது பனிப்பாறையின் உச்சிதான் இது.
பாதுகாப்புப் பிரிவுகள் கணக்கிலடங்கா அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மற்றும் தொழிற்சங்கவாதிகள்
பற்றியும் கோப்புக்களை கொண்டுள்ளன. தேவைப்பட்டால் அவர்கள் பயங்கரவாத குற்றம்சாட்டப்பட்டபவர்களிடம்
இருந்து மாறுபட்ட விதத்தில் நடத்தப்பட மாட்டார்கள்.
இராணுவவாதத்திற்கான திருப்பம், காலனித்துவவகைப் போர்களின் வெற்றி
ஆகியவற்றுடன் ஜனநாயக நெறிமுறைகள் பொருந்ததாது என்பதற்கு ஒரு வெளிப்படையான அடையாளம்தான்
சித்திரவதை அனுமதிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துவது உள்ளது. பிரிட்டன் அமெரிக்காவுடன் ஆப்கானிஸ்தானிலும்
ஈராக்கிலும் நடத்திவரும் போர்கள், ஆக்கிரமிப்புக்கள் கொள்ளைமுறையைச் சேர்ந்தவை. எண்ணெய், எரிவாயு
என்னும் முக்கிய மூலாதாரங்கள்மீது கட்டுப்பாட்டைக் கொள்ளும் நோக்கத்தைக் கொண்டவை. 9/11 க்கு பின்னர்
அல் குவேடா மற்றும் "போக்கிரி நாடுகள்" காட்டும் அச்சுறுத்தலைச் சமாளிக்க இவை தேவை என்ற கூற்றுக்கள்
மூலம் நியாயப்படுத்தப்பட்டன. இரு போர்களும் பொய்களின் அடிப்படையில் பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை மீறி
தொடக்கப்பட்டன.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இப்போர்களின் பெரும் துன்பம் மோசமான
பின்னரும், உண்மை, போலித்தனம் என்று இருவித பயங்கரவாத ஆபத்துக்களுக்கும் எதிராக இன்னும் ஒடுக்குமுறையான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சித்திரவதை வாடிக்கையாக பயன்படுத்தப்பட்டு வாஷிங்டன் மற்றும் லண்டனின்
போர் வெறியை நியாயப்படுத்தும் விதத்தில் போலி ஒப்புதல் வாக்குமூலங்களை பெற உதவின. அதேபோல்
போரை எதிர்ப்பவர்களை மிரட்டும் நோக்கத்துடன் கடுமையான அடக்குமுறை சட்டங்களும் இயற்றப்பட்டன.
உதாரணமாக, அல் குவேடா முகவர் Abu Zubaydah
கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதை ஒட்டி புஷ் அரசாங்கம் அல் குவேடாவிற்கும் ஈராக்கின் சதாம்
ஹுசைன் ஆட்சிக்கும் இடையே பிணைப்பு இருந்ததாக சாட்சியங்களைப் போலியாகத் தயாரிக்க உதவியது.
பின்யம் முஹ்மத்திடம் இருந்து "சாட்சியத்தை" பற்றி எடுக்க பயன்படுத்திய
வழிவகைகளில் முகச்சவர பிளேடைப் பயன்படுத்தி சித்திரவதை இருக்கும் என்ற அச்சுறுத்தலும் ஒன்றாகும். அவருடைய
ஒப்புதல் வாக்குமூலம்தான் அமெரிக்க குடிமகன் Jose
Padilla அமெரிக்க நகரங்கள்மீது "அணுக்கதிர்வீச்சுடன் கூடிய
குண்டுகளை" (dirty bomb)
வீசத் திட்டமிட்டதாகக் கூறப்பட்டதற்கு அடித்தளம் ஆகும். பல ஆண்டுகாலம்
இராணுவச் சிறை வைத்திருக்கப்பட்டு, வக்கீல்கள், உறவினர்கள் என்று எவருடனும் தொடர்பு மறுக்கப்பட்டபின்,
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், "அணுக்கதிர்வீச்சுடன் கூடிய குண்டு" குற்றச்சாட்டு கைவிடப்பட்டு, சாதாரண
நீதிமன்றத்தில் தொடர்பற்ற குற்றச்சாட்டான வெளிநாட்டு ஜிகாத் திட்டம் பற்றியும் அமெரிக்காவிற்கு வெளியே
இருக்கும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதிதிரட்டும் சதிக்காகவும்
Padilla விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டார்.
இராணுவவாதம், போருக்கான உந்துதல் சமூகத்தின் உச்சியில் உள்ள நிதிய உயரடுக்கின்
ஆணையின்கீழ் உலகின் முழு மூலாதாரங்களைப் பற்றும் நோக்கத்திற்காக நடக்கிறது. வரலாற்றில் முன்னோடியில்லாத
வகையில் ஒரு தன்னலக்குழு சொந்தச் சொத்துக்களை குவிப்பதுடன் பிணைந்துள்ளது. இது சர்வதேசத் தொழிலாளவர்க்கத்தை
பெரும் பாதிப்பிற்கு உட்படுத்துவதின் மூலம் நடைபெறுகிறது.
ஏகாதிபத்திய ஆளும் உயரடுக்குகள் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வ நெறிகளை
அனைத்தையும் அழித்துவிடும் முயற்சியில் ஈடுபடுகின்றன. ஏனெனில் பெரும்பாலான பரந்த மக்களின் நலன்களுக்கு விரோதமான
கொள்கைக்கு மக்கள் ஆதரவைப் பெறுவது இயலாததாகும். இதனால் வரும் வர்க்க அழுத்தங்கள் பெருகிய முறையில்
ஜனநாயக ஆட்சி வகைகளுடன் பொருந்ததாது.
ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் சர்வதேச தொழிலாள வர்க்கத்தால்,
வறுமை, அடக்குமுறை, போர் இவற்றிற்கு ஆதாரமான இலாபமுறைக்கு எதிராக ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை
வளர்ப்பதின் மூலம்தான் நடத்தப்பட முடியும். |