WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
The great unmentionable
குறிப்பிட உகந்தது அல்லாத பெரிய விஷயம்
Joe Kishore
22 October 2009
Use this version
to print | Send
feedback
கடந்த வாரத்தில் ஒபாமாவின்
தாராளவாத ஆதரவாளர்களிடம் இருந்து அமெரிக்காவின் சமூக அரசியல் உறவுகளின் நிலை பற்றி கவலையளிக்கும்
வண்ணனைகள் பல வெளிவந்துள்ளன.
பத்தி எழுத்தாளர்களிடையே ஒத்த கருத்துக்களை எழுதியுள்ளோர் நியூ யோர்க்
டைம்ஸின் Frank Rich, Paul Krugman,
Bob Hertbert, மற்றும்
Nation
ன்
Katrina vanden Heuvel
ஆகியோர் ஆவர்.
மறுக்க முடியாத அமெரிக்க வாழ்வின் ஒரு உண்மையில் இருந்து இந்த எழுத்தாளர்கள்
அனைவரும் கருத்தைத் தெரிவித்துள்ளனர்: அதாவது ஒரு புறத்தில் வங்கிகள், முதலீட்டாளர்களுடைய நல்வாய்ப்புக்களுக்கும்
பரந்த மக்கள் தொகையின் நல்வாய்ப்புக்களுக்கும் இடையே உள்ள தீவிர வேறுபாடு பற்றி. நிதிய நெருக்கடியைத்
தோற்றுவித்த அதே பெரும் வோல் ஸ்ட்ரீட் பெருநிறுவனங்கள் முன்னைக்காட்டிலும் செல்வக் கொழிப்புடன் உள்ளன.
மிக அதிக போனஸ்களை கொடுப்பதற்கு அவை தயார்செய்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் பல தசாப்தங்களாக
காணப்படாத அளவிற்கு வேலையின்மை மிக உயர்ந்த அளவிற்கு தொடர்கிறது, ஊதியங்கள் சரிகின்றன.
இத்தகைய கட்டுரைகள் அதிகமாக வந்துள்ளதே சமூகப் பதட்டத்தின் ஆழம் பற்றியும்
ஒபாமா நிர்வாகம் பற்றி மக்களின் ஏமாற்றத்தை பற்றியும் ஒரு அடையாளம் ஆகும். சீற்றம் பெருகி வருவதை உணர்ந்துள்ள
இந்தக் கட்டுரையாளர்கள், இந்த எதிர்ப்பை எப்படி கட்டுப்படுத்துவது? என்று நிர்வாகத்திற்கு ஆலோசகர்கள்போல்
எழுதுகின்றனர்.
( அக்டோபர் 20-
"செல்வந்தர்களுக்கு பாதுகாப்பு வலைகள்") என்பதில்
Herbert ஜனரஞ்சக முறை ஒலிக்குறிப்பைக் கையாண்டு
எழுதுகிறார்: "பல மில்லியன் அமெரிக்கத் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் நிலைத்திருக்க அரும்பாடு
படுகையில், தங்கள் குடும்பத்தினருக்கு வாழ ஒரு கூரையைத் தக்க வைத்துக்கொள்ள முயலுகையில், வோல்
ஸ்ட்ரீட்டின் கெட்டிக்கார நபர்கள் கொழுத்த பூனை போல் மற்றொரு சுற்று பல பில்லியன் டாலர் போனஸ்கள்
பற்றி களிக்கின்றனர்--இம்முறை இது அமெரிக்க மக்கள், சிறிதும் தடைகளற்ற முறையில் அவர்களுக்கு பிணை
எடுப்பிற்கு கொடுத்த பில்லியன்கள் தயவினால் ஆகும்."
( அக்டோபர் 18 -
"கோல்ட்மன், ஒரு சிறு காசு தரமுடியுமா") இல்
Rich தன்னுடைய கல்வி அறக்கட்டளைக்கு வங்கி ஒதுக்கிக்
கொண்டிருக்கும் 200 மில்லியன் டாலருடன் 2009ல் அது திட்டமிட்டுள்ள 23 பில்லியன் டாலருடன் ஒப்பிட்டுக்
கூறியுள்ளார். இதனை Standard Oil
இன் ஜோன் டி. ரோக்பெல்லர் 20ம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஒதுக்கி வைத்த அற்ப தொகையுடன்
ஒப்பிடுகிறார்.
ஹெர்பெர்ட் மற்றும் ரிச் இருவரும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
என்று வலியுறுத்துகின்றனர்; முந்தையவர் கோல்ட்மன் சாஷ்ஸ் பிரிக்கப்பட வேண்டும் என்றும் பிந்தையவர் ரெட்டி
ரூஸ்வெல்ட் மாதிரியில் அறக்கட்டளைகளை உடைத்தல் புதுப்பிக்கப்பட வேணடும் என்ற நம்பிக்கையையும்
தெரிவித்துள்ளனர்.
இரு கட்டுரைகளின் அடித்தளத்திலும் ஒபாமா நிர்வாகத்தின் உறுதிமொழிகளான
"நம்பிக்கை" மற்றும் "மாறுதல்கள்", ஒபாமாவிற்கு வாக்களித்தவர்களால் வெற்றுச் சொற்றொடர்கள் என்று
பெருகிய முறையில் உணரப்படுவது பற்றிய கவலைகள் உள்ளன. நிதி மந்திரி டிமோதி கீத்நர் "பெரும் செவிடு"
என்றும் நிர்வாகத்தில் இருந்து "நலன்கள் அளித்தல் என்ற தென்றல்" வெளிப்பட்டுள்ளது என்றும் ரிச்
குறைகூறியுள்ளார்.
வங்கிகளின் நலன்களுக்கு தயக்கமின்றி உதவும் அரசாங்கத்திற்கு தாங்கள் ஆதரவு
கொடுக்குமாறு ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். ஒபாமாவின் செய்தியாளர்கள்
கூட்டத்தில் உள்ள ஆலோசனை கூறுபவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தாராளவாத நடைமுறை அடுக்கிற்கு, ஒபாமா
நிர்வாகத்திற்கு எதிர்ப்பு வெடித்தல் என்பது சற்றும் குறைந்த தன்மை அற்ற பேரழிவாகத்தான் போகும்.
(அக்டோபர் 16-"மகிழ்ச்சியான நாட்களா?-) ல்
Vandel Heuvel
கட்டுரை இந்த நிலைப்பாட்டை மிகத் தெளிவாக காட்டுகிறது எனலாம். "இந்த பெரு மந்த நிலைக்கு ஒபாமா
நிர்வாகத்தின் விடையிறுப்பு வங்கிப் பிணை எடுப்பு என்ற பொது கருத்துத்தான் பெருகிய ஆபத்தாக உள்ளது.
ஒபாமா நிர்வாகத்தின் வாய்ப்பிற்கும் உறுதிமொழிக்கும் உண்மையான அச்சுறுத்தல் உள்ளது" என்று அவர்
எழுதியுள்ளார்.
ஒபாமாவிற்கு இவர் கூறும் ஆலோசனை இன்னும் இடது ஒலிக்குறைப்பை ஏற்க வேண்டும்
என்பதுதான். "நிர்வாகம் இந்த வடிவமைப்பில் இருந்து மாற வேண்டும். பெரும் வங்கிகள் பில்லியன் டாலர்
போனஸ் கொடுப்பதை மீண்டும் அளிப்பதற்கு பல டிரில்லியன் டாலர் அளிப்புக்கள் கொடுத்ததைத் தொடர்ந்து
ஒபாமா நிர்வாகம் அதே தைரியத்துடன் சாதாரண மக்கள் சார்பிலும் அணுக வேண்டும்" என்று அவர்
எழுதியுள்ளார்.
இந்தப் புள்ளி விவரங்களின் மைய நோக்கம் அரசாங்கம் மற்றும் இரு கட்சி முறை
பற்றி தொழிலாளர்கள் பரந்த முடிவுகள் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என்பதாகும். வேண்டுமென்றே மூடிமறைக்கும்
செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே நிர்வாகம் நிதிய, பெருநிறுவன உயரடுக்கின்
அரசாங்கமாகத்தான் செயல்பட்டுவருகிறது, அப்படித்தான் அது இருக்க முடியும். நிர்வாகத்தின் நடவடிக்கைகள் அது
பிரதிபலிக்கும் வர்க்க நலன்களால் நிர்ணயிக்கப்படுகிறது.
புதனன்று ஒபாமா நிர்வாகம் கணிசமாக பிணை எடுப்பு நிதிகளைப் பெற்ற ஏழு
நிறுவனங்களின் நிர்வாகிகள் ஊதியத்தில் வெட்டுக்களை சுமத்த திட்டம் இட்டுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளது. இந்த
ஆண்டின் கடைசிப் பகுதியில் போனஸ் அறிவிப்புக்களுக்கு முன்னதாகவே அதைத் தவிர்க்கும் சேதக் கட்டுப்பாட்டு
தன்மையைத்தான் திட்டம் கொண்டுள்ளது--ஒபாமாவின் தாராளவாத ஆதரவாளர்களினால் இத்தகைய நடவடிக்கை
பாராட்டுதலுக்கு உட்படும். இந்த நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் சமூக நெருக்கடியை தீர்க்கும் வகையில்
ஏதும் செய்யாது; அதேபோல் பாதிக்கப்பட்ட சிறிய எண்ணிக்கையிலான நிர்வாகிகள் எப்படியும் ஒரு சராசரித்
தொழிலாளியை விட நூறு மடங்குகள் ஊதியத்தைப் பெறுவர்.
பல குறைகூறல்கள், புகார்கள் ஆகியவற்றில், இந்த எழுத்தாளர்கள் அனைவரும்
விவாதிக்க மறுப்பது அமெரிக்க அரசியலின் "பெரும் குறிப்பிட உகந்ததல்லாத விஷயமாகும்": அதாவது சோசலிசம்
பற்றி. சமூக, பொருளாதார நெருக்கடியின் பொதுநிலை தளத்தை ஆராய விருப்பமின்றி, உண்மையான மாற்றீட்டை
அணுக மனமின்றி, இவர்களுடைய கருத்தாய்வுகள் முற்றிலும் வெற்றுத்தனமாகத்தான் உள்ளன. இறுதியில் அவை
வங்கிகளுக்கு அறநெறி வகையில் முறையீடுகள் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதுடன் ஒபாமாவுடன் கெஞ்சும்
நிலையிலும் உள்ளன.
மைக்கல் மூரின் சமீபத்தியத் திரைப்படம், முதலாளித்துவம்: ஒரு காதல் கதை
என்பதும் இதே பொருளுரையைத்தான் கொண்டிருக்கிறது. மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களை எதிர்கொண்டுள்ள
நெருக்கடியைப் பற்றிய ஒரு சித்தரித்தைக் கொடுத்தபின், மூர் தன்னுடைய படத்தை முடிக்கும்போது
முதலாளித்துவத்திற்கு பதிலாக சோசலிசம் வேண்டும் என்று கூறாமல், "ஜனநாயகம்" வேண்டும் என்று
சொல்லியுள்ளார்.
இவர் கடந்த காலத்தில் இருந்து பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் புதிய உடன்பாட்டுச்
சீர்திருத்தங்களை மிகு உயர் ஜனநாயகம் என்றும் போலித்தன ஜனரஞ்சக அரசியல் வாதிகளான ஜனநாயகக்
கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மார்ஸி காப்டூர், ஒபாமா ஆகியோரை அதன் தற்கால அவதாரங்கள் எனவும்
உயர்த்திக் காட்டுகிறார். (ஒரு சமீபத்திய கட்டுரையில், ஒபாமாவின் கொள்கைகள் பற்றி கோபம்
கொண்டவர்களிடம், "ஒரு மாறுதலுக்கு நம்முடைய வாழ்நாளின் நாம் கொண்டிருந்த சிறந்த நம்பிக்கையை
கைவிட்டுவிடாதீர்கள்" என்று வாதிடுகிறார்.)
நிதிய உயரடுக்கின் பேராசை, மிக அதிக வங்கி போனஸ்களின் அப்பட்டமான
நியாயமற்ற தன்மை, சரியும் ஊதியங்கள் மற்றும் இந்த வழிவகையில் ஒபாமா நிர்வாகம் கொண்டிருக்கும் பங்கு
ஆகியவை தவிர்க்க முடியாமல் துரதிருஷ்டங்கள் என்று காட்டப்படுகின்றன.
ஆனால் மக்களில் பெரும்பாலானவர்கள் எதிர்கொண்டுள்ள பெருமந்த நிலைமைகளுக்கும்
செல்வந்தர்களுக்கு பணமழை வரவுகளும் தோற்றத்தில்தான் முரண்பாடுகள் கொண்டவை. இவை ஒரே வழிவகையின்
இரு பக்கங்கள் ஆகும். வாழ்க்கைத் தரங்கள், ஊதியங்கள், வேலைகள், சமூகநலத்திட்டங்கள் ஆகியவற்றின் மீது
தீவிர தாக்குதலின் மூலம்தான் நிதிய உயரடுக்கு தன் செல்வத்தை பாதுகாக்க முற்படுகிறது.
இது தவிர்க்க முடியாமல் பெருநிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை தனியார்
உடைமையுடன் இருப்பதுடன் பிணைந்துள்ளது: அதேபோல் பொருளாதாரம் செல்வந்தர்களின் இலாபம், நலன்கள்
ஆகியவற்றிற்கு தாழ்த்தப்பட்டுள்ளதில் அதாவது முதலாளித்துவத்துடன் பிணைந்திருப்பதிலும் வெளிப்படுகிறது.
சோசலிசத்தை தடைசெய்திருப்பதற்கு ஒரு வரலாறு உள்ளது. நீண்ட காலத்திற்கு முன்னரே
அமெரிக்கத் தாராளவாதம் போருக்குப் பிந்தைய கம்யூனிச எதிர்ப்பை முழு மனத்துடன் தழுவியது: அதை
ஒட்டித்தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய விழைவுகள் வரிசையில் நின்று வெற்றி பெற்றன. தொழிற்சங்கங்களின்
முழு ஆதரவுடன் சோசலிஸ்ட்டுக்களும் போராளிகளும் தொழிற்சங்க இயக்கத்தில் இருந்து அகற்றப்பட்டனர்.
சோசலிசத்தை நிராகரித்தது சமூகப் பகுப்பாய்வில் அடிப்படைப் பகுதியாக வர்க்கம்
என்பது உண்டு என்பதை நிராகரிப்பதுடன் பிணைந்துள்ளது. இனம், பால் வேறுபாடு, பால் சார்பு மற்றும் பிற
அடையாங்கள் உயர்த்தப்பட்டன, ஜனநாயகக் கட்சிக்கு முக்கிய தளமாயின, மற்றும் "இடது" குட்டி முதலாளித்துவ
குழுவின் பரந்த பிரிவுகள் நாடி நின்றவையாயின.
சோசலிச மற்றும் வர்க்கப் பகுப்பாய்வு முழுமையாக ஒதுக்கப்பட்டது அமெரிக்க
அரசியலுக்கு--செய்தி ஊடக வர்ணனைகளுக்கும்-- குறிப்பாக அதன் பலவீனமான தன்மைக்கு உதவியது. இது
தொழிலாள வர்க்கத்திற்கு தன் நலன்களை பாதுகாப்பதற்கு செயலூக்கம் உள்ள முன்னோக்கு இல்லாமல் செய்துவிட்டது.
ஆனால் கடந்த ஆண்டு வீணாகக் கடக்கப்படவில்லை. தொழிலாள வர்க்கத்தின் பரந்த
பிரிவுகள் சில முடிவுரைகளை கொண்டுள்ளன. முதலாளித்துவத்தின் சிந்தனைப் போக்கு அமைப்பு மில்லியன் கணக்கான
தொழிலாளர்களின் பார்வையில் இழிசரிவுற்றுவிட்டது. அவர்கள் சந்தை மற்றும் அனைத்து உத்தியோகபூர்வ அரசியல்
அமைப்புக்களிலும் சடுதியில் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
சமூக நெருக்கடி மற்றும் ஒபாமா நிர்வாகம் பற்றிய ஏமாற்றம் விளைவித்துள்ள மகத்தான
வர்க்கச் சீற்றம் இன்னும் வெளிப்படையான அரசியல் வடிவத்தைப் பெறவில்லை. ஆனால் அவை தோன்றும்; அது நடக்கும்போது
சோசலிச இயக்கத்தின் பெரும் கோட்பாடுகள் சக்திவாய்ந்த புதுப்பித்தலை தொழிலாள வர்க்கத்திடம் காணும்--
இது ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் தாராளவாத ஆதரவாளர்களுக்கு எதிராக இருக்கும்.
இந்தக் கொள்கைகளின் மீதுதான் சோசலிச சமத்துவக் கட்சி அமைந்துள்ளது, சோசலிச
சமத்துவக் கட்சி ஒன்றுதான், இதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. |