World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India: Official corruption and negligence tied to 34 deaths in firecracker explosion இந்தியா: அதிகார ஊழலும், கவனமின்மை வாணவேடிக்கை வெடிப்பில் 34 பேர் இறப்பிற்கு காரணமாகின்றன By K. Sundaram, Sasi Kumar and Arun Kumar வெள்ளியன்று மாலை தென்னிந்திய மாநிலமான சென்னைக்கு மேற்கே 125 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிப்பட்டு என்னும் கிராமத்தில் தீபாவளி வெடிக் கடை, கிட்டங்கியில் ஏற்பட்ட தீவிபத்தையொட்டி வந்த பெரும் வெடிப்பினால் 34 பேர் உயிரிழந்தனர். இத்தீயினால் இன்னும் குறைந்தது 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்த அனைவரின் சடலங்களும் கிட்டத்தட்ட சிதைந்து அடையாளம் காண முடியாத அளவிற்குக் கருகிவிட்டன. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கடை-கிட்டங்கியில் இந்து ஒளித் திருநாளான தீபாவளிக்காக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து 40 சதவிகித கழிவு விற்பனை விலையில் வாணவெடிகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். அவர்களில் பலர் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் ஆவர். வெடிகள் விற்பனை பற்றி மாவட்ட நிர்வாகமும் போலீஸ் அதிகாரிகளும் இருக்கும் கட்டுப்பாடுகளை முறையாகச் செயல்படுத்தியிருந்தால் இந்தப் பெரும் சோகம் தவிர்க்கப்பட்டிருக்க முடியும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் மற்ற உள்ளூர் மக்களும் உறுதியாகக் கூறுகின்றனர். "மாமூல்" அல்லது கணிசமான இலஞ்சத் தொகைக்கு ஈடாக உள்ளூர் அதிகாரிகள் இந்தக் கடை வெடிமருந்துகள் சட்டத்தின்கீழ் தேவைப்படும் உரிமத்தைப் பெற்றிராததைப் பொருட்படுத்தவில்லை, மேலும் சில்லறை விற்பனை நிலைத்திற்கு அருகே கிடங்கு இருக்கக்கூடாது என்ற இரண்டையும் விற்பனைக் கடை மீறியது. இந்திய அதிகாரிகள் அசட்டைத்தனத்திற்கு இகழ்வு பெற்றவர்கள். வெடிகள் விற்பனைக் கடையாயினும், தொழில்துறை பணியிடங்களாயினும் பாதுகாப்புச் சட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பதற்கு ஊழல்நலிந்த கையூட்டு அங்கு போதுமானது. தீயணைப்புத்துறை ஆய்வாளர்கள் இன்னமும் வெடிப்பிற்கு காரணத்தை நிர்ணயிக்கவில்லை. அதிக இறப்பு எண்ணிக்கைக்கு இரு காரணங்களில், ஒன்று தீயை அணைக்கப் போதுமான நீர் இல்லாததும், திருட்டுகளை தவிர்ப்பதற்காக கடைச் சொந்தக்காரர் ஒரு குறுகிய வெளியேறும் வழியை வைத்திருந்ததும்தான் எனத் தெரிய வந்துள்ளது. பள்ளிப்பட்டு பெரும் சோகத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அதிக மக்கள் சீற்றத்தால், போலீசார் கைவிடப்பட்ட அரிசி ஆலையை உரிமையாளரையும் அதனை வெடிக் கிட்டங்கியாகவும்/கடையுமாக மாற்றிய முதலாளி மற்றும் நிர்வாகியைக் கைது செய்தனர். நான்கு உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகளும் மூன்று போலீஸ் அதிகாரிகளும் முறையே, "உரிமம் பெறாத வெடிகள் சில்லரை விற்பனையாளர், மொத்த விற்பனையாளர்களை பரிசோதிக்கத் தவறியதற்கும்", "சட்ட விரோதமாக வெடிகள் கிட்டங்கியில் வைக்கப்பட்டதை நிறுத்ததாதற்காகவும்" தற்காலிகமாக பணிநீக்கம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கங்கள் கருணைத்தொகை அல்லது இழப்பீட்டுத் தொகையாக (அமெரிக்க$2,200) இந்திய 100,000 ரூபாய்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளன. உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் புத்தூர் என்னும் கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிலரின் குடும்பங்களைச் சென்று பார்வையிட்டனர். 23 வயதான மூன்று சக்கர டாக்சி ஓட்டுனரான முனுசாமி மற்றும் அவருடைய மைத்துனரான 15 வயது கணேஷ் இருவரும் வெடிப்புத் தலத்தில் இறந்து போயினர். அவர்களும் கணேஷின் தந்தையான 40 வயது கிருஷ்ணமூர்த்தியும் பள்ளிப்பட்டுக் கடைக்கு தீபாவளி வெடிகளை வாங்கச் சென்றிருந்தனர். முனுசாமியின் தந்தையான தனசேகர் WSWS இடம் கூறினார்: "கிருஷ்ணமூர்த்தி வெளியே காத்திருக்கும்போது ஒரு பெரிய வெடிச் சத்தத்தைக் கேட்டார். உடனே மயக்கமுற்று விழுந்துவிட்டார். அருகில் நகரி என்னும் இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்த பின்புதான் அவர் மயக்கம் தெளிந்தது. அதன் பின் அவர் எங்களுக்கு வெடியின் சேதம் பற்றித் தொலைபேசியில் கூறினார். "சம்பவ இடத்திற்கு நாங்கள் ஆட்டோ ரிக்ஷாவில் உடனே விரைந்தோம். ஆனால் அங்கிருந்த போலீஸ்காரர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று எங்களிடம் பொய் கூறினர். கிட்டங்கியிற்குள் நாங்கள் செல்ல அனுமதிக்கப்படவிலலை. "தீயை அணைப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலையில் தீயணைப்பு வாகனங்கள் வந்தன. வெடிகள் கடையைச் சுற்றி சிறிது தண்ணீர்கூட இல்லை! கடைக்கு உரிமமும் இல்லை. ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருந்து தண்ணியைக் கொண்டுவருவதற்கு தீயணைப்புப் படையினருக்கு இன்னும் ஒரு மணி நேரம் தேவைப்பட்டது. தீயை அணைப்பதற்கு நீர் இல்லாமல் ஒரு தீயணைப்புப் படை இருந்து என்ன பயன்?. "கிராம மக்கள் அன்று இரவு வெடிகள் கடைக்கு முன் சூழ்ந்தனர். அதன் ஒருபுற பக்கச் சுவரை ஓரளவிற்கு இடிக்க வேண்டும் அப்பொழுதுதான் முற்றிலும் மூடப்பட்டிருக்கும் இடம் திறக்கப்பட முடியும் என்று அவர்கள் கோரினார். ஆனால் தீயணைப்புப் படை மறுத்துவிட்டது. தாங்கள் அப்பணியைச் செய்ய அனுமதி இல்லை என்று அவர்கள் கூறினர். "வெடிகள் விற்பனைக் கடையில் பல கதவுகள் இருந்தாலும் அது வெடித்த நேரத்தில் அவை அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வெளியில் காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் முறையற்று உள்ளே நுழைந்த பின்னர் கடை ஊழியர்களிடம் நிர்வாகம் அனைத்து கதவுகளை மூட உத்தரவிட்டனர். வெடிகளை வாங்குபவர்கள் பணம் கொடுத்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நிர்வாகிகள் விரும்பினர்." தனசேகர் தொடர்ந்தார்: "கருகிய உடல்கள் அனைத்தும் திருத்தணி அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கிருந்து நாங்கள் எங்கள் மகன், மற்றும் கணேஷின் சடலங்களை எடுத்து வந்தோம். என்னுடைய மகனை நான் அவர் கையில் இருந்து மோதிரத்தை வைத்துத்தான் அடையாளம் காண முடிந்தது." முனுசாமிக்கு இரு தம்பிகளும் ஒரு சகோதரியும் உள்ளனர். இவர்களின் மூத்தவரான மது, அறிவியல் பட்டத்திற்கு படித்துக் கொண்டிருக்கிறார். மற்ற இருவரும் இன்னும் பள்ளியில் உள்ளனர். மதுவும் பகுதி நேர மூன்று சக்கர வண்டி ஓட்டுனராக இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ள உதவுகிறார். இப்பொழுது நாள் ஒன்றிற்கு 200 ரூபாய் (அமெரிக்க 4 டாலர்) சம்பாதித்துவந்த முனுசாமியின் இழப்பினால், மது குடும்பத்தைக் காப்பாற்ற முழுநேர ஆட்டோரிஷக்ஷா டிரைவராக வேண்டும் என்று தனசேகர் விளக்கினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 100,000 ரூபாய் இழப்புத் தொகை பற்றிய அரசாங்கத்தின் அளிப்பை மது சாடினார். "ஒரு நபரின் வாழ்க்கை பற்றி அராசங்கம் கொண்டுள்ள மதிப்பு இதுதானா? நாங்கள் அவர்களுக்கு 100,000 ரூபாய் கொடுத்தால் அவர்கள் இறந்தவருக்கு உயிர் பெற்றுத் தருவார்களா? அரசாங்க அதிகாரிகள் வெடிக்கடை கிட்டங்கி நடத்த அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளனவா என்று கூட பார்க்க அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அங்கு நீரும் இல்லை, தீயணைப்புக் கருவிகளும் இல்லை. "இதே பகுதியில் போன ஆண்டு ஒரு தீ விபத்து ஏற்பட்டு நான்கு பேர் கொல்லப்பட்டனர்; அப்படியும் தமிழ்நாடு அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி மேற்பார்வையிடவில்லை. இப்பொழுது இம்முறை தீ வெடிப்பு இன்னும் பல உயிர்களைக் குடித்துள்ளது. இறந்த முனுசாமிக்கு 18 வயதான கர்ப்பிணி மனைவியும், ஒன்றரை வயதான குழந்தையும் உள்ளனர். WSWS நிருபர்கள் பள்ளிப்பட்டு தீ விபத்தில் இருந்த கிரி பாபு (27), ஹரி பாபு (25) என்ற இரு சகோதரர்களின் குடும்பத்திற்கும் சென்றிருந்தனர். அவர்களுடைய தந்தை பேட்டிக்கு கிடைக்கவில்லை என்றாலும் ஒரு இளம் அண்டை வீட்டினர் கூறினார்: "ஒரு கிட்டங்கியில் விற்பனையை நடத்த தேவையில்லை. அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அலட்சியமாக இருந்து, வெடிக்கடையை உரிமம் இல்லாமல் நடத்த அனுமதித்தனர். நீர் இல்லாமல் தீயணைக்கும் படை நமக்கு எதற்கு?"பள்ளிப்பட்டு வெடிவிபத்தும் தீயும் தொடர்ந்த பல வெடி விபத்து இறப்பில் சமீபத்தியவைதான். இந்த விதத்திலான விபத்துக்கள் குற்றம்சார்ந்த, பொருட்படுத்தாத் தன்மை, கவனக் குறைவு, அப்பட்டமான ஊழல் அதிகாரிகள் இடையேயும் இந்தியாவின் அரசியல், பொருளாதார உயரடுக்கு முழுவதிலும் இருப்பதைத்தான் நிரூபிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் இத்தகைய வெடிகளினால் ஏற்பட்ட வெடிவிபத்துக்கள் கடந்த 10 மாதத்தில் ஆகக்குறைந்தது 5 ஏற்பட்டுள்ளன. பெப்ருவரி 6ம் தேதி அனுமதியில்லாத வெடி தயாரிக்கும் செயலில் மேட்டூருக்கு அருகே ஏற்பட்ட வெடிப்பில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். செப்டம்பர் கடைசியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெடிகள் கிடங்கு இருந்த ஒரு கட்டித்தைச் சுற்றி தீ பரவியது. இதனால் ஒரு மூன்று மாடிக் கட்டிடம் சரிந்து எட்டு பேர் கொல்லப்பட்டு, குறைந்தது 15 பேர் காயமுற்றனர். ஜூல் 20 அன்று தெற்கு தமிழ்நாட்டில் சிவகாசி என்னும் இடத்தில் ஏற்பட்ட வெடிகள் தயாரிப்பு நிறுவன வெடிப்பில் 10 பேர் இறந்ததுடன், 13 பேர் படுகாயமுற்றனர். அந்த மாவட்டத்தில் ஒரு பதினைந்து நாட்களுக்குகள் அது இரண்டாம் விபத்து ஆகும். மதுரைக்கு அருகே வடக்கம்பட்டியில் முன்னதாக நடந்த வெடி விபத்தில் 17 பேர் கொல்லப்ட்டு, 21 பேருக்கு மேல் காயமுற்றனர். |