World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Karzai bows to US pressure on Afghanistan runoff

ஆப்கானிய மறு தேர்தலுக்கான அமெரிக்க அழுத்தத்திற்கு கர்சாய் பணிகிறார்

By Patrick Martin
22 October 2009

Use this version to print | Send feedback

எதிர்பார்த்ததும் ஒரு இழிவானதுமான நிகழ்வில், ஒரு அடிமை தன் எஜமானர் கால்களில் விழுவது போல், ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாய் ஒபாமா நிர்வாகத்தின் தளராத அழுத்தத்திற்கு அடிபணிந்து செவ்வாயன்று ஜனாதிபதித் தேர்தலின் விளைவு பற்றி முடிவு செய்ய ஒரு மறுதேர்தல் நடத்தப்படும் என்பதற்கு ஒப்புக் கொண்டார்.

கர்சாயியின் "முடிவை" அறிவிப்பதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டம் பல மணி நேரம் ஒத்திப் போடப்பட்டது; ஏனெனில் ஒரு ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற தேர்தல் குழு அவர் பெற்றிருந்த மொத்த வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு மோசடியானது என்று கூறியதை அவர் ஏற்க வேண்டும் என்ற அமெரிக்காவின் இறுதி எச்சரிக்கையை அவர் தொடர்ந்து எதிர்த்து வந்தார். இதற்கு செனட்டின் வெளியறுவுக்குழுவின் தலைவரான செனட்டர் ஜோன் கெர்ரியுடன் நீண்ட விவாதம் தேவைப்பட்டது. வெள்ளிக்கிழமையில் இருந்து ஐந்தாம் முறை நடந்த கர்சாய்-கெர்ரி சந்திப்பு இந்த முடிவை உறுதிபடுத்துவதற்காக நடந்தது.

"உலகம் காத்திருந்தபோது, கர்சாயும் கெர்ரியும் ஒதுக்குப்புறமான அரண்மனைத் திடலில் நீண்ட நேரம் நடந்தனர்" என்று வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. "பிற்பகல் 4.30 க்கு கர்சாய் இறுதியில் காத்திருந்த காமெராக்கள் முன் தோன்றி அவருக்கும் முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லா அப்துல்லாவிற்கும் இடையே மறு தேர்தல் போட்டி நவம்பர் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்."

கர்சாய் அறிவிப்பு கொடுத்தபோது (மற்ற செய்தி ஊடகத்தினர் அவர் "பார்ப்பதற்கு மங்கிய நிலையில் இருந்தார்" என்றனர்) அவரை கெர்ரி, ஐ.நா. சிறப்புத் தூதர் கை ஐடே, அமெரிக்கத் தூதர், லெப்டினன்ட் ஜெனரல் கார்ல் ஐகன்பெர்ரி மற்றும் பிரெஞ்சு, பிரிட்டிஷ் தூதர்கள் சூழ்ந்து நின்றனர். அரங்கில் ஐடே அவரைத் தொடர்ந்து வந்து மறு தேர்தலில் நியாயமான போட்டி இருக்கும் என்றபோது, கர்சாய் குறுக்கிட்டு, "அதன் பின் நமக்கு முடிவு வேண்டும்" என்றார்.

கெர்ரி-கர்சாய் பேச்சுக்கள் பற்றி விரிவான தகவலை நியூயோர்க் டைம்ஸ் வெளியிட்டது. இது கெர்ரி உட்பட உயர்மட்ட அமெரிக்க தகவல்களை ஆதாரமாக கொண்டது என்பது தெளிவு. ஆப்கான் ஜனாதிபதியை வழிக்குக் கொண்டுவரும் "அசாதாரண" பிரச்சாரத்தில் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன், பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தளபதி ஜேம்ஸ் ஜோன்ஸ், பிரிட்டிஷ் பிரதம மந்திரி கோர்டன் பிரெளன் ஆகியோர் அனைவரும் இதில் ஈடுபட்டிருந்தனர்.

விவாதங்களின் தன்மை பற்றி டைம்ஸ் கொடுத்துள்ள தவகலில் இருந்து ஒரு பத்தி கூறுவது:

"ஒரு மூத்த நிர்வாக அதிகாரி திரு.கர்சாய் மீதான சர்வதேச அழுத்தத்தை "ஒரு கடைசி நேர அழுத்தம்" என்றும் இதில் திரு.கர்சாயியின் பாதுகாப்பு மந்திரி தளபதி அப்துல் ரஹிம் வார்டக்கிற்கு அவ்வளவு நயமில்லாத அச்சுறுத்தல்களும் தொலைபேசி மூலம் கொடுக்கப்பட்டன என்றும் விவரித்தார். தளபதி ஜேம்ஸ் எல். ஜோன்ஸ், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் எம்.கேட்ஸும் தளபதி வார்டக்கை அழைத்து திரு கர்சாய் இதற்கு உடன்பட அழுத்தம் கொடுத்தனர் என்று ஒரு மூத்த நிர்வாக அதிகாரி கூறினார். "வார்டக் இன்னும் அதிக அமெரிக்கத் துருப்புக்களை கோருகிறார்." என்று இந்த பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறினார். ஏனெனில் இவர் தனிப்பட்ட உரையாடல்களை பற்றி விவாதித்திருந்தார். "அவர்கள் இருவரும் வார்டக்கிடம் துருப்புக்கள் பற்றிய முடிவெடுக்கும் வழிவகையை இது பாதிக்கும் என்றனர்."

"ஒருவேளை இத்தகைய "அதிக நயமற்ற அச்சுறுத்தல்களில்" கூடுதலான அமெரிக்கத் துருப்புக்களின் உதவி இல்லாவிடின் அவருடைய ஆட்சி சரியும் அவர், ஆப்கானிஸ்தானில் தலிபானால் கைப்பற்றப்பட்ட கடைசி ஜனாதிபதியின் விதியை எதிர்கொள்ள நேரிடும்" என்று நினைவுறுத்தப்பட்டும் அடங்கும். சோவியத் ஆதரவு பெற்ற நஜிபுல்லா 1996ம் ஆண்டு காபூலில் ஐக்கிய நாடுகள் வளாகத்திற்குள் இருந்த அவருடைய புகலிடத்தில் இருந்து தரதரவென வெளியே இழுத்து வரப்பட்டு, மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு, காயடிக்கப்பட்டு ஒரு விளக்குத் தூணில் இருந்து தூக்கிலிடப்பட்டார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி பிரெளனும் அச்சுறுத்தலில் சேர்ந்து கொண்டு, வார இறுதியில் மூன்று முறை கர்சாய் உடன் பேசினார் என்று டைம்ஸிடம் கூறிய ஐரோப்பிய தூதர்கள் தெரிவித்தனர். தேர்தல் குழு அறிக்கையை அவர் ஏற்க வேண்டும் என்று பிரதமர் கர்சாயியிடம் தெரிவித்ததாக ஒரு தூதர் கூறினார், இல்லாவிடின் "மேற்கின் பங்காளியாக அவர் இனி இருக்க முடியாது" என்றும் கூறப்பட்டார்.

ஆகஸ்ட் 20 முதல் சுற்றில் தனக்கு அடுத்து வாக்குகளை பெற்ற முன்னாள் வெளியுறவு மந்திரி அப்துல்லாவை கர்சாய் எதிர்கொள்வார். நவம்பர் 7 சனிக்கிழமை தற்காலிகமாக தேர்தல் தேதி என்று முடிவாகியுள்ளது. குளிர் வருவதற்கும் முன்பு அதுதான் கடைசித் தேதி. குளிர்காலம் வந்துவிட்டால் பெரும்பாலான கிராமப்புற ஆப்கானிஸ்தானில் தேர்தல் நடத்துவது இயலாது. அப்துல்லா மறு தேர்தலுக்கு உடனே ஒப்புதல் கொடுத்து தான் அதில் பங்கு பெறுவதாகக் கூறினார்.

கைப்பாவை ஜனாதிபதியின் கோபதாபங்கள், அதைத்தொடர்ந்து முணுமுணுப்புடன் சரணடைந்தது ஆகிய இந்த நிகழ்ச்சிகள் ஆப்கானிஸ்தானில் "ஜனநாயகத்தை" பாதுகாக்க போரில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்த ஒபாமா நிர்வாகத்தின் கூற்றுக்களுக்குப்பின் இருக்கும் உண்மையை நிரூபிக்கின்றன. நாடு இப்பொழுது ஏகாதிபத்திய இராணுவ சக்திகளால், முக்கியமாக அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதிகரித்தளவில் மதிப்பிழந்த கர்சாயை முன்னிறுத்தி வாஷிங்டன்தான் உண்மையான அதிகாரத்தை செயல்படுத்துகிறது.

மறுதேர்தல் என்னும் முடிவு முதலிலேயே அமெரிக்க அதிகாரிகளால் விரும்பப்பட்டது என்று கோடையின் செய்தி ஊடகங்கள் கூறின. கர்சாயின் மறுநியமனத்திற்கு மாற்றீடு எதையும் அவர்கள் காணவில்லை. ஆனால் அவரை மறு தேர்தலுக்கு ஒப்புக்கொள்ள வைக்கும் விதத்தில் ஒரு படி கீழிறக்கினர். ஒருவேளை அப்துல்லாவுடன் அல்லது அதிக ஆதரவு பெறத் தவறிய முன்னாள் நிதி மந்திரி அஷ்ரப் கானியுடன் கூட்டணி அரசாங்கம் அமைக்கவும் வற்புறுத்தக்கூடும்.

சர்வதேச தேர்தல் குழு மற்ற அவதானிகளும் அளித்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளபடி ஏராளமான தேர்தல் சட்ட மீறல்கள் இருக்கையில், கர்சாய் மற்றும் அவருடைய உயர்மட்ட ஆலோசகர்கள் தேர்தல் மோசடி என்ற குற்றச்சாட்டையும் எதிர்கொண்டிருக்கக்கூடும். அப்துல்லாவின் பிரிவினர் முக்கியமாக டாஜிக் பேசும் பகுதிகளில் இதே போன்ற மோசடிகளில் ஈடுபட்டதற்கான சான்றுகளும் உள்ளன.

குற்றச்சாட்டுக்களுக்கு பதிலாக இரு தேர்தல் தில்லுமுல்லு நபர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் ஒரு மறு தேர்தலில் எதிர்கொள்ளுவர். இது முதல் தேர்தலைவிட பெரும் மோசடியாக வரக்கூடும். வாக்களிக்க இருப்பவர்கள் தலிபான், மற்ற எழுச்சியாளர்களின் தாக்குதல், மிரட்டல், வாக்குகளைத் திணித்தல் போன்ற கர்சாய் அல்லது அப்துல்லா சார்பு ஆதரவாளர்கள் நடத்தும் செயல்களையும் எதிர்கொள்ள நேரிடும். இதைத்தவிர அவர்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து வானிலை சூழலையும் எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக மலைப்பகுதியான ஹிந்து குஷ்ஷில் கடுமையான நிலைமை இருக்கும்.

ஜனாதிபதி ஒபாமா கர்சாயியிடம் அவர் மறுதேர்தலை அறிவித்தவுடன் தொலைபேசி உரையாடல் செய்தார் பின்னர் ஒரு பாசாங்குத்தன அறிக்கையை விடுத்து இந்த முடிவு "சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியைக் காட்டுகிறது, ஆப்கானிய மக்களின் விருப்பம் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.

ஆப்கானிய மக்களின் விருப்பம் நடத்தப்பட வேண்டும் என்றால், அமெரிக்க, மற்ற வெளிநாட்டு துருப்புக்கள் விமானம் ஏறி உடனடியாக ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவாக அகல வேண்டும். ஆக்கிரமிப்பு சக்திகளும் மற்றும் அவற்றின் காபூலில் உள்ள ஊழல் மலிந்த கைக்கூலி ஆட்சியும் ஆப்கானிஸ்தான் முழுவதும் பரந்த அளவில் வெறுக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் புதனன்று வாஷிங்டன் போஸ்ட்டில் வந்த கருத்துக் கணிப்பு தகவல்படி, பெரும்பாலான மக்கள் எவ்வித போர்விரிவாக்கத்தையும் எதிர்க்கின்றனர். 9/11 தாக்குதல்களையும் ஆப்கானிய போரையும் இணைக்கும் செய்தி ஊடகப் பிரச்சாரம் இடைவிடாமல் இருந்தும் இந்த நிலைதான் தொடர்கிறது. கருத்துக் கணிப்பு குறிப்பாக ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினருக்கு வாக்களித்தவர்களிடையே கூடுதல் துருப்புக்களை அனுப்பவதற்கு வலுவான எதிர்ப்பு இருக்கிறது எனவும், ஜனநாயகக் கட்சியில் 61 சதவிகிதத்தினர் இன்னும் அதிக துருப்புக்கள் அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், 51 சதவிகிதத்தினர் தங்களை "கடுமையாக எதிர்ப்பவர்கள்" என்று விவரித்துள்ளதாக குறிப்பிடுகின்றது.

மறு தேர்தல் குறிப்பிடப்பட்டமை ஒபாமா நிர்வாகத்தால் "அரசியல் முன்னேற்றம்" என்று சித்தரிக்கப்பட்டு ஏற்கனவே முடிவெடுத்திருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான கூடுதல் படையினரை, அமெரிக்க போர்த்துருப்புக்களை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்புவதை நியாயப்படுத்தும்.

இந்த வழிதான் ஏற்கனவே புதனன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் "ஆப்-பாக் முன்னேற்றம்" என்ற தலைப்பில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கத் தீவிர வலதுசாரியின் முக்கிய குரல் ஒபாமா வெள்ளை மாளிகையில் நடக்கும் ஆலோசனை வழிவகைகளை நிறுத்தி படைகளை அனுப்புமாறு கோருகிறது.

இழிந்த தன்மையின் அதியுயர் வடிவத்தை காட்டும் வகையில், ஜேர்னல் தலையங்கம் பல வாரங்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டபின் வந்துள்ள கர்சாயியின் கட்டாயப்படுத்தப்பட்ட ஒப்புதலை, கீழ்க்கண்டவாறு கூறியுள்ளது: "நேற்று ஆப்கானிஸ்தான் ஒரு மோசடித் தேர்தல் பற்றிய முரண்பாட்டை தீர்க்கும் திசையில் அரசியல் முதிர்ச்சியை எடுத்துக்காட்டியுள்ளது."