WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
France: CGT's industrial policy means workers will pay
for the crisis
பிரான்ஸ்: CGT
யின் தொழில்துறை கொள்கை என்பதன் பொருள் தொழிலாளர்கள் நெருக்கடிக்கான விலையைக் கொடுப்பார்கள்
என்பதாகும்
By Pierre Mabut and Antoine Lerougetel
22 October 2009
Use this version to
print | Send
feedback
பிரான்சின் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு (CGT)
விடுத்த அக்டோபர் 22 தேசிய நடவடிக்கை நாள் என்பது சார்க்கோசி அரசாங்கத்துடன் தொழிற்சங்கங்கள்
கொண்டுள்ள கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பொருளாதார நெருக்கடியை தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் பேரம்பேசலாகும்.
இது தொழிற்சங்கங்கள் இந்த ஆண்டு, தேசிய அளவில் ஒரு நாள் ஆர்ப்பாட்டத்திற்கு
விடுத்த ஏழாவது அழைப்பாகும். ஜனவரி 29, மார்ச் 19 ஆகிய நாட்களில் ஆர்ப்பாட்ட அழைப்பிற்கு ஆர்வம்
காட்டிய மில்லியன் கணக்கான எண்ணிக்கை, அக்டோபர் 7ம் திகதி பாரிசில் 3,000, மார்சேயில் 2,000ம்
தான் என்று குறைந்துவிட்டது. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்பாளர்கள் என்பதற்கு பதிலாக தொழிற்சங்கங்கள்
அதைக் காக்கின்றன என்பதை தொழிலாளர்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
பிரான்சில் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்மைப்பான ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட்
கட்சிக்கு நெருக்கமான
CGT
வேலையின்மைக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடவடிக்கைத் தினம்
இருந்தது என்று கூறியுள்ளது. இது முற்றிலும் போலித்தனம் ஆகும். ஆர்ப்பாட்ட அழைப்பிற்கான அதன் துண்டுப்
பிரசுரங்கள் பிரெஞ்சுத் தொழிலின் "ஒரு நீடித்திருக்கும் தொழில்துறைக் கொள்கையின்" தேவைக்கு அது முக்கியம்
என்று வலியுறுத்தியுள்ளது. இது அரசாங்கத்தின் ஆரம்ப கூட்டு முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும் --சார்க்கோசியின்
கருத்துப்படி "(CGT
தலைவரான) பேர்னார்ட் திபோவின் அரிய சிந்தனை"-- தொழில்துறை அதிபர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும்
அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு இடையே கூட்டங்களுக்கும், ஆலோசனைகளுக்கும். இவை அடுத்த பெப்ருவரி மாதம் "பிரான்சிற்கான
ஒரு புதிய தொழில்துறை கொள்கையை" நிறுவுவதற்கான தேசிய மாநாடு ஒன்றில் உச்சக்கட்டத்தை அடையும்.
CGT/சார்க்கோசி
மூலோபாயத்தின் முக்கிய கூறுபாடு தொழிலாளர்களை மிரட்ட வைக்கும் விதத்தில் தேசிய உணர்வைக் கொண்டுவந்து
வெளிநாட்டில் இருக்கும் அவர்களுடைய வர்க்க சகோதர, சகோதரிகளுடன் பூசலில் மோத வைப்பது ஆகும்.
கண்டன எதிர்ப்பு பற்றிய
CGT Melallurgie (Engineering)
துண்டுப் பிரசுரம் சார்க்கோசியின் மேற்கோளான "ஒரு வலுவான தொழில்துறை இல்லாவிட்டால் ஒரு நாடு
பொருளாதாரத்தில் வலிமையைப் பெறாது" என்பதுடன் தொடங்கி "குறைவூதிய தொழிலளார் செலவீனங்கள் உள்ள
நாடுகளில் புதிய ஆலைகளை நிறுவுதல் அல்லது இருக்கும் ஆலைகளை மாற்றுதல்" என்னும் முறையைக் கண்டிக்கிறது.
தற்போதைய உலக நெருக்கடி 1929 சரிவிற்குப் பின்னர் மோசமானது,
சாத்தியமான வகையில் அதைவிட மோசமானது எனவும் கூறலாம். பட்டினியை எதிர்கொள்ளும் எண்ணிக்கையை
உலகெங்கிலும் இது 1 பில்லியனுக்கு தள்ளியுள்ளது; பலரும் இது இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாகத்தான்
நம்புகின்றனர். ஜூன் 3ம் திகதி வெளிவந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)
அறிக்கை குறிப்பிடுகிறது: "2008 இன் கடைசிக் காலாண்டும், 2009 ன் முதல் காலண்டும் விரைவாகவும், ஒரே
காலத்தில் நிகழ்ந்ததுமான முதலீட்டு வீழ்ச்சியும், நுகர்வு, உற்பத்தி மற்றும் வணிகச் சரிவுகளையும் உலகெங்கிலும்
கண்டது: இதையொட்டி மகத்தான வேலையிழப்புக்கள் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளன."
ILO
வின் தலைமை இயக்குனர்
Juan Somavia
கடந்த நெருக்கடிகளின் அனுபவம் வேலைகளின் மீட்பு "நான்கு அல்லது ஐந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர்தான்
வரும்" என்பதைக் காட்டுகிறது என்று கூறினார். அக்டோபர் 5ம் தேதி அவர் மீண்டும் கூறினார்: "தங்கள்
வேலைகளை இழக்கும் தொழிலாளர்களுக்கு, நெருக்கடி இன்னும் முடியவில்லை."
CGT
யின் அறிக்கை இப்பிரச்சினைகளை ஆராயத் திட்டமிடவில்லை அல்லது கடந்த ஆறு மாதங்களில் பிரெஞ்சு கார்த்
தொழில், அதன் துணைத் தொழில்களில் ஏற்பட்டுள்ள 100,000 வேலைகளை மீட்கவும் முயலவில்லை. உடனடியாக
வருங்காலத்தில் அகற்றப்படவுள்ள 300,000 வேலைகளைக் காப்பாற்றவும் அது முயற்சிக்கவில்லை; அல்லது
2009ம் ஆண்டிற்கு கணிக்கப்பட்டுள்ள மொத்த 600,000 வேலையிழப்புக்கள் பற்றி என்ன செய்வது என்பது
பற்றியும் கவலைப்படவில்லை. தங்கள் உரிமைகள், வாழ்க்கைத் தரங்கள் ஆகியவை தகர்க்கப்படுவதை
தொழிலாளர்கள் பிரெஞ்சுத் தொழில் மற்றும் பெருவணிகத்தின் போட்டித்தன்மை உலக மந்த நிலையில் உள்ள
ஆபத்தான தன்மை மற்றும் மூலாதாரங்களுக்கான கடும் போட்டி இவற்றிற்காக ஏற்க வேண்டும் என்று கூறும்
விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திபோ/சார்க்கோசி
திட்டத்தின் வழியிலேயே முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்று
CGT
கூறுகிறது. அதன் துண்டுப் பிரசுரத்தில் எந்த இடத்திலும் தொழில்துறை தொழிலாள வர்க்கத்தால் பொதுச் சேவைகள்
கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கவும் இல்லை, சர்வதேச அளவில் நெருக்கடியை எதிர்த்து தொழிலாளர்கள்
கூட்டுப் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறவும் இல்லை.
தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சார்க்கோசி நடத்தும் வர்க்கப் போராட்டம்
தவிர்க்க முடியாமல் வணிகப் போர், ஏகாதிபத்திய இராணுவவாதம் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது; இவை
ஆப்கானிஸ்தான், சோமாலியா இன்னும் பல இடங்களில் பிரெஞ்சு போர்ப்படைகள் தலையிடுவதில் பிரதிபலிக்கின்றன.
இந்த ஆண்டு
Continental Clairoix
TM CGT
இன்னும் மற்ற தொழிற்சங்கங்களும் முதலாளிகளுடனும் அரசாங்கத்துடனும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளை
நடத்தியது: அது ஆலை மூடலுக்கும் 1,120 வேலையிழப்புக்களுக்கும் வகை செய்தது. ஒவ்வொரு ஊழியருக்கும்
50,000 யூரோக்கள் பணிநீக்க இழப்பீடும், தொழிற்சங்க உத்தரவாதம் பணிநீக்கங்களுக்கு எதிராவும்
கொன்டினென்டல் ஆலைகள் மூடலுக்கு எதிராகவும் போராட்ட அழைப்பை ஐரோப்பா முழுவதிலும் கைவிடுதல் என்று
தொழிற்சங்கத்தால் உறுதி கொடுக்கப்பட்டது ஒரு வெற்றி என்று பாராட்டப்பட்டது. இது
Clairoix
ஆலைக்கு துணைப் பொருட்கள் கொடுக்கும் நிறுவனங்களில் இருக்கும் தொழிலாளர்களையும் பெரும் திகைப்பிற்கு
உட்படுத்தி விட்டது. மேலும்
Molex, Faurecia, Caterpillar
ஆகிய இடங்களில் உள்ள தொழிலாளர்களும் இதே போன்ற நிலையைத்தான் எடுத்துக் கூறுகின்றனர்.
2007TM
CGT
யும் மற்ற இரயில் தொழிற்சங்கங்களும், நிர்வாகம், அரசாங்கம் ஆகியவற்றுடன் முத்தரப்புப் பேச்சுக்களை "வட்ட
மேசையில்" நடத்தியவை, இரண்டு தேசிய இரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தையும் நெரித்து, இரயில்
தொழிலாளர்களின் சிறப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு முடிவு கட்டின.
CGT,
ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் ஆகியவை அதிகரிக்கப்பட வேண்டிய தேவை, பணி நேரம் குறைக்கப்பட வேண்டிய
தேவை ஆகியவற்றை முன்வைத்துள்ளது. ஆனால் 35 மணி நேர வாரம் மற்றும் சட்டபூர்வ பணிவாரத்தின் மீதான
வரம்புகள் ஆகியவை தானாகவே முன்வந்து
CGT
மற்றும் CFDT (்்்French
Democratic Confederation of Labour,
பிரான்ஸின் இரண்டாம் மிகப் பெரிய தொழிற்சங்கம், சோசலிஸ்ட் கட்சிக்கு மிக நெருக்கமானது) ஆகியவற்றால்
"ஏப்ரல் 9, 2008 பொது நிலைப்பாடு" என்று தொழிற்சங்க பிரதிநிதித்துவம், சமூக உரையாடல் மற்றும்
தொழிற்சங்கங்களுக்கு நிதியளித்தல்" என்ற சார்க்கோசியுடன் கொண்ட உடன்பாட்டின்படி கைவிடப்பட்டன. இதற்கு
ஈடாக முக்கிய தொழிற்சங்கங்கள் கூடுதலாக நிறுவன விவகாரங்களில் நிர்வாகத்துடன் ஒத்துழைக்கும் வாய்ப்பைப்
பெற்றதுடன் தங்கள் அதிகாரிகளுக்கு உத்தியோக போக்கில் முன்னேற்றத்தையும் பெற்றன.
அமெரிக்க கார்த் தொழிலில் இருக்கும் நிலைமை உலகம் முழுவதும் நடக்கும்
போக்குகளின் வளர்ச்சி பற்றிய, பிரான்ஸ் உட்பட, குறிப்பைக் காட்டுகிறது. ஜனாதிபதி ஒபாமா
GM
ஐ திவாலாக அனுமதித்த முடிவு, மீண்டும் அதன் இலாபகர பகுதிகளின் நடவடிக்கைகளை மட்டும் செயல்படலாம்
என்று கூறியதானது --பல்லாயிரக்கணக்கான வேலைகளை அது தகர்த்தபின், ஊதியத்தரங்களை பாதியாகக்
குறைத்தபின் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உரிமைகளை, ஓய்வூதியங்களை அகற்றியபின்-- என்பது
தொழிலாளர்களை திவாலாகச் செய்து அவர்களை ஆசியத் தர ஊதியத்தில் தள்ள வேண்டும் என்னும் மூலோபாயத்தின்
ஒரு பகுதி ஆகும். ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கம் இந்த நடவடிக்கைகளை பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர்
ஒப்புக் கொண்டது; அதற்கு ஈடாக அது தொழிலாளர்கள் ஓய்வூதியநிதிகளின் நிர்வாகத்தை பெற்றது; அவை
நிறுவனத்தின் பங்குகளாக மாற்றப்பட்டதின் விளைவாக சங்கம்
GM
தொழிலாளர்களின் ஒரு முக்கிய எசமானாக (முதலாளி) மற்ற பங்குதாரர்களுடன் தானும் சேர்ந்து கொண்டது.
ஐரோப்பா மற்றும் ஏனைய இடங்களில் தொழிலாளர்களுக்கு இதுதான் காத்திருக்கிறது.
சார்க்கோசியின் தொழில்துறை மீட்புத் திட்டத்திற்கு தொழிற்சங்கங்களின் நடவடிக்கையும் இதே பாதையில்தான்
செல்லும். ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சாத்தியமாகவுள்ள ஈரான் போர், உள்நாட்டில் சிக்கனம் என்பதுதான்
முதலாளித்துவ நெருக்கடியின் ஒரே விடையறுப்பாக உள்ளது; ஒவ்வொரு அரசாங்கமும் தேசியவாதம் மற்றும்
பாதுகாப்புவாதக் கொள்கைகளின் மூலம் அதைக் கடக்க விரும்புகிறது; இதற்கு அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிற்சங்கங்கள்
உதவுகின்றன, உடந்தையாக இருக்கின்றன.
தொழிற்சங்கங்களுக்கான இடது கவசம் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA)
மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO)
ஆகியவற்றால் கொடுக்கப்படுகிறது. இவை இரண்டும்
Clairoix
விற்கப்பட்டதை "வெற்றி" என்று பாராட்டின.
NPA
அதன் எழுத்துமூல உத்தரவாதங்களை
CGT
மற்றும் பிற தொழிற்சங்கங்களின் காட்டிக் கொடுப்பிற்கு சவால் விடாது என்று கொடுத்துள்ளது.
NPA
ன் கோடைக்கால பயிலகத்திற்கு
CGT
தீபோ பற்றி (குறிப்பாக
Continental Clairoix
ன் Xavier
Mathieu) குறைகூறியதால்
பங்கு பெற மறுத்தபின்,
NPA
அக்டபோர் 1ம் தேதி
CGT
ஐச் சந்தித்து, அதன் அறிக்கையின்படியே, "CGT
க்குள் ஒரு NPA
பிரிவு கட்டமைக்கப்படக்கூடும் என்ற அச்சுறுத்தல் ஆதாரமற்றது" என்று கூறியது.
தொழிற்சங்கங்களும் மரபார்ந்த தொழிலாள வர்க்கக் கட்சிகளும் அரசாங்கம் மற்றும்
பெருவணிகத்துடன் உலகெங்கிலும் முற்றிலும் உடந்தையாக உள்ளன; தொழிலாளர்கள், இளைஞர்களுடைய வாழ்க்கைத்
தரங்கள் 30களின் பட்டினிக்காலத்திற்கு தள்ளப்படுகிறது. முன்னாள் தீவிர இடது தொழிற்சங்கங்களானது கம்யூனிஸ்ட்
மற்றும் சோசலிஸ்ட் கட்சிகளின் செல்வாக்கை தக்க வைக்கத்தான் உழைக்கிறது.
இந்த அமைப்புக்களுக்கு எதிராக எழுச்சிபெறச் செய்து, தொழிலாளர்களின்
ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் பொருளாதாரத்தை சர்வதேச சோசலிச அடிப்படையின் கீழ் வளங்களை தமது
கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் திட்டத்தால் ஆயுதபாணியாக்கி, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமான கட்சிகளில்
கட்டமைப்பதும் தான் இப்பொழுது அவசியமாகிறது. தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அத்தகைய சுயாதீன
தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை நிறுவி, பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் நான்காம்
அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் இணைந்து கட்சிகளை கட்டமைக்க வேண்டுகோள் விடுக்கின்றோம். |