WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
பிரான்ஸ்
France: New Anti-capitalist Party tries to channel
worker discontent with the unions
பிரான்ஸ்: புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி தொழிலாளர் அதிருப்தியை தொழிற்சங்கங்களுடன்
செலுத்த முயல்கிறது
By Anthony Torres and Alex Lantier
21 October 2009
Use this version
to print | Send
feedback
கடந்த வசந்த காலத்தில் தொழிற்சங்கங்கள் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக
நடத்திய ஆர்ப்பாட்டங்களின் இயலாத்தன்மை, நிதிய நெருக்கடியின் விளைவாக வந்த ஆலை மூடல்களுக்கு எதிரான
வேலைநிறுத்தங்களின் தோல்வி ஆகியவை தொழிற்சங்கங்கள் மற்றும் பிரான்சில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு எதிராக
அலையென மக்கள் எதிர்ப்பைத் தூண்டியுள்ளன. பிரான்சின் மிகப் பெரிய தொழிற்சங்கமான, கம்யூனிஸ்ட் கட்சிக்கு
நெருக்கமான CGT
பற்றி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சித் (NPA)
தலைமை எந்தக் குறையையும் கூற மறுக்க, அதற்குள் உள்ள சில
சிறுபான்மை பிரிவுகள் இந்த அதிருப்தியை வேறுபோக்கில் திருப்ப முயல்கின்றன. இதுதான் ஆர்ஜென்டீனிய
PTS (சோசலி
தொழிலாளர் கட்சி) உடன் தொடர்புடைய
Prometheus Collective, Clear Tendency
ஆகியவற்றின் நிலைப்பாடும் ஆகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக
NPA தொழிற்சங்கங்களுக்கு கொடுக்கும் ஆதரவில் பிரதிபலிக்கும்
அவற்றின் நிலைமை, அதன் அரசியல் முன்னோக்கு இல்லாததிலும் அதன் அடிப்படை ஒத்திசைவின்மையிலும் அடையாளம்
காட்டப்படுகிறது. தொழிற்சங்க அமைப்புக்களின் ஆர்ப்பாட்டங்களால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் இவை,
முற்றிலும் புதிரான வகையில் தாங்கள் முதலில் குறைகூறிய முயற்சியையே மீண்டும் முன்வைக்கின்றன.
"ஐக்கியப்படும் வேலைத்திட்டத்திற்கு போராடுவதில் முன்னுரிமை" என்ற அதன்
அறிக்கையில் Prometheus
குழு ஜனவரி 29, மார்ச் 15 தேதிகளில் நடத்திய நடவடிக்கை தினங்கள் பற்றி குறைகூறியுள்ளது. "UMP
ஐரோப்பியத் தேர்தல்களில் அடையாள வெற்றியைக் கண்டபின், எட்டு கூட்டமைப்புக்கள் மற்றும் அவற்றின் ஜனவரி
5ம் தேதி அரங்கில் முன்வைத்த கோரிக்கைகளின் 'ஒற்றுமைக் கொள்கை', அரசாங்கம் மற்றும் முதலாளித்துவ
வர்க்கத்தின் கொள்கைகள் நுழைந்திட கதவுகளை திறந்து வைத்தது."
அது மேலும் கூறுகிறது: "தொழிலாளர்களும் இளைஞர்களும், முதலாளித்துவ
வர்க்கத்தின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள நிலையில், இக்காலத்தில் ஜனாதிபதியுடன் ஒத்துழைக்கும் விருப்பத்தை
பெருமளவிற்கு புலப்படுத்திய
நலிந்த, சிதைந்த அமைப்புக்களுடன் சேர்ந்தனர்"
தொழிற்சங்கங்கள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியையும் அவருடைய
பிரதிநிதிகளையும் அவர்கள் முத்தரப்பு கூட்டங்களிலும், பேச்சு வார்த்தைகளிலும் எவ்வித நிலைப்பாட்டை கொள்ளுவர்
என்பதைக் கலந்து ஆலோசித்தபின், அவருடைய கொள்கைகளுக்கு எதிராக நீண்ட இடைவெளிகளுகளுக்கு பின்னர் நடவடிக்கை
நாட்களை ஏற்பாடு செய்கின்றன என்ற உண்மை பற்றி குறிப்புள்ளது. தங்களின் சக்தியை திரட்டவிருப்பதாகக் கூறிக்கொண்டு,
சிக்கன கொள்கைகள் மற்றும் வங்கி மீட்புப் பொதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களின் எதிர்ப்பை
சங்கங்கள் நலிவுறும்படி செய்துவிடுகின்றன. இப்படி NPA
போன்ற "இடது" கட்சிகள் வேண்டுமேன்றே மெளனம் சாதிக்கும் நிலைமை இந்த தொழிலாள வர்க்க விரோத
போலித்தனத்தில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
CGT தலைமை தொழிற்சங்க
பிரதிநிதிகளால் நிறைய விமர்சனங்களை கொண்டிருக்கும் அதன் செப்டம்பர் 2009 பதிப்பில்,
Clear Tendency
"தொழிற்சங்கங்களின் துரோகத்தனம், கைவிட்டுவிடும் செயல்கள்"
ஆகியவற்றை கண்டித்துள்ளது. தொழிற்சங்கத் தலைமைகள் "New
Fabris தொழிலாளர்கள்
Châtellerault
ல் ஜூலை 31ம் தேதி விடுத்திருந்த ஆர்ப்பாட்ட அழைப்பை புறக்கணித்து,
நீதிமன்றங்களில் தொழிலாளர்கள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக ஆதரவைக் கொடுக்க
மறுத்தனர்."
ஜூலை 30ம் தேதி
Nouvel Observateur லில் புதிய முதலாளித்துவ கட்சி
தலைவர் அலன் கிறிவின் 1968 வேலைநிறுத்தங்களின் போது இருந்த முன்னாள் பாரிஸ் போலீஸ் தலைவர்
Maurice Grimaud
இற்கு கொடுத்த பாராட்டையும்
Clear Tendency
குறைகூறியுள்ளது. கிறிவின் அவரை "நல்ல மனிதர்", "ஒரு இடது குடியரசுவாதி" என்று குறிப்பிட்டிருந்தார்.
Clear Tendency, "அலன்
கிறிவின் மூத்த போராளி கோன் பென்டிட் போல் காட்டிக் கொள்ள முற்பட்டுள்ளது கவலை தருகிறது;
பிந்தையவருக்கு எந்த இடத்தில் நிறுத்திக் கொள்ளுவது என்று நன்கு தெரியும்" என்று கூறியது. "எந்த அளவிற்கு
நாம் போகக்கூடாது என்பதை நாம் அறிவோம்" என்று உறுதியாகக் கூறுவது, அதாவது
Grimaud போன்றவர்கள்
நம்மை 'நியாயமான மக்கள்' என்று நினைக்க இடம் கொடுக்கும்" வகையில் இயக்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக
இருக்கும்".
உண்மையில் இந்தத் துல்லியமான தகவலைத்தான் கிறிவின் போலீஸ் பற்றிய அவருடைய
பாராட்டில் அனுப்பியுள்ளார்: NPA
யின் தலைமை, சட்டம், ஒழுங்கு பக்கத்தில்தான் உள்ளது.
NPA க்குள் இருந்து வரும்
இக்கட்டுரைகள், கட்சியின் அரசியல் சார்பு பற்றி பேரழிவு தரும் ஒப்புதலுக்கு இணையாகும். போராட்டங்கள்
காட்டிக் கொடுக்கப்படுகின்றன, வெற்றி பெற வேண்டும் என்ற முன்னோக்கில் அமைக்கப்படுவதில்லை,
தொழிலாளர்கள் தங்களைத்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது, தங்களிடம் விரோதப் போக்குடைய தொழிற்சங்க,
அரசியல் அமைப்புக்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. செய்தி ஊடகங்களினால் முன்வைக்கப்படும் பழைய
கருத்தாய்வுகளின்படியான, CGT
ஒரு "போர்ர்க்குணம் நிறைந்தது", NPA
"புரட்சிகரமானது" என்பவை, முதலாளித்துவத்திற்காக கூறப்படும் பொய்கள் ஆகும்.
அப்படியானால், எந்த அடிப்படையில்
Prometheus, Clear Tendency
இரண்டும் தொழிலாளர்களுக்கு ஒரு புதிய வேலைத்திட்டத்தை கட்டமைக்க விரும்புகின்றன?
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் என அனைத்து அமைப்புக்களும்
ஈடுபாடு கொண்ட "ஒருங்கிணைந்த குழுக்கள்" என தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று
Prometheus Collective
முன்மொழிகிறது. இது ஒரு பழைய NPA
மற்றும் அதற்கு முன்பு இருந்த
LCR ன்
கோஷத்தை, "பணிநீக்கங்களை சட்டவிரோதமாக்குக" என்பதை மீண்டும் வேறுவிதத்தில் கூற முற்படுகிறது.
"பணிநீக்கங்களை தடைசெய்க" என்ற முழக்கம் உடனடியாக தவறு என்று ஒலிக்கிறது.
முதலாளித்துவத்தின் சலுகைகள், அரசாங்கத்தின் சிறப்பு உரிமைகளில் அத்தகைய அடிப்படைத் தடையை சுமத்துவதற்கு
ஒரு புரட்சிகர தொழிலாளர் போராட்டத்தில் அத்தகைய சார்பு ஏதும் வளர்த்தெடுக்கப்படவில்லை. அத்தகைய
முயற்சி முன்வைக்கப்படுவது, "ஒருங்கிணைந்த" குழுக்களின் முன்முயற்சி, முதலாளித்துவ அரசாங்கக் கட்சிகளான
பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF),
இடது கட்சி (PG)
மற்றும் சோசலிஸ்ட் கட்சியைக் (PS)
கூட ஒன்றாகக் கொண்டுவருகின்றது என்பது கேலிக்கூத்தாகும்.
"பணிநீக்கங்களை சட்டவிரோதமாக்க ஒருங்கிணைந்த கூட்டுக்கள் (முழக்கங்கள்,
ஆவணங்கள், கூட்டத் தேதிகள், ஆர்ப்பாட்டங்கள் என்று அனைத்தையும், அவை முடிவெடுக்கும்)" என்று
Prometheus
அழைப்பு விடுகிறது. மேலும் ஒரு தேசிய ஆர்ப்பாட்ட அமைப்பு தேவை (இதுவும் கூட்டாக தீர்மானிக்கப்படவேண்டும்
என்றும் கூறுகிறது. எனவே தொழிற்சங்கங்களின் நடவடிக்கை நாட்களின் அரசியல் இயலாத்தன்மையை குறைகூறத்
தொடங்கி, Prometheus
மற்றொன்றை முன்வைப்பதில்தான் முடிகிறது.
Clear Terndency ஐ
பொறுத்த வரையில், அதுவும் "பணிநீக்கங்களுக்கு எதிராக தேசிய ஆர்ப்பாட்டங்களை" முன்வைக்கிறது;
NPA வின் தலைமை
முதல் காலாண்டில் இந்த கோரிக்கையை காத்துள்ளதாகவும் சுட்டிக் காட்டுகிறது.
Clear Tendency
யின் முக்கிய திட்டம் "ஒரு இடைத் தொழிற்சங்கப் போக்கு" நிறுவுதலை முன்வைப்பது ஆகும். இது "வர்க்கப்
போராட்டக் குழுக்களை மாறுபட்ட அரசியல் இணைப்புக்களுக்கு அப்பால் அதாவது எல்லா கட்சிகளையும்
பிரதிபலிக்கும் வகையில் ஓரிடத்தில் வந்து கூட வைக்கும்".
தொழிற்சங்க போலித்தன எதிர்ப்புக்களை தொடர வேண்டும் என்று கூறி அதே
நேரத்தில் இக்கொள்கையின் விளைவுகளை கண்டித்தல், அதையொட்டி கட்சியை தொழிலாளர்களிடமிருந்து இடது
மறைப்புக் கொடுத்து காத்தல் என்ற விதத்தில், தன்னுடைய சந்தர்ப்பவாதத்துடனேயே பொறுமையிழந்துள்ள ஒரு
கட்சியை அது தெளிவற்ற தன்மையில் சிக்கியிருக்கும்போது நாம் காண்கிறோம்.
தொழிற்சங்கங்கள் மற்றும் 20ம் நூற்றாண்டு பிரெஞ்சு அரசியலை ஆதிக்கத்திற்
கொண்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த கருவியாலும் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில்,
தொழிலாளர்கள் கஷ்டமான அரசியல் நிலைமையில் தாங்கள் இருப்பதை அறிகின்றனர். தொழிலாளர்களுக்கு
கட்டாயத் தேவை என்பது ஒரு புதிய வெகுஜன புரட்சிகரக் கட்சியை கட்டமைத்தல் ஆகும்; அது தொழிற்சங்கங்கள்
மற்றும் இருக்கும் கட்சிகளை உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டும்; அதிகாரத்திற்கான உலகப் போராட்டத்தில்
அதுதான் தொழிலாளர்களுக்கு ஒரு முன்னோக்கை கொடுக்கும். ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டம், அதாவது
மார்க்சிச புரட்சிகரப் போராட்டங்களின் தொடர்ச்சி என்பது அனைத்து தொழிலாள வர்க்க அரசியலிலும்
அடிப்படைக் கூறுபாடு ஆகும்.
ட்ரொட்ஸ்கிசத்தை --அது "பழைய மாதிரியானது" என்று கூறி "பின்னே
தள்ளிவிட்டோம்" என்ற அழைப்புடன், கடந்த பெப்ருவரி மாதம் பிறந்த புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி
தன்னை ஒரு புரட்சிகரக் கட்சியாக மாற்றிக் கொள்ளவும் முடியாது, புதிதாக ஒன்றைக் கட்டமைக்கவும் முடியாது.
NPA
தலைமையைப் பற்றி குறைகூறுபவர்கள் கூடுதலான ஒருதடவை ஆர்ப்பாட்டங்கள்தான் தேவை என்கின்றனர்; இவை
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மூலோபாயத்துடன், அதாவது பொருளாதாரத்திற்கு ஏற்றம் கொடுக்கும் விதத்தில்
வரிகொடுப்பவர் பணத்தை வங்கிகளுக்கும் பெரு வணிகங்களுக்கும் அள்ளிக் கொடுத்தல் என்பதுடன் இணைத்துள்ளது.
Promotheus, Clear Tendency
இரண்டின் முதலாளித்துவ பொதுக் கருத்து பற்றி சுயாதீனமாய் திறனாயும் தன்மை அற்ற நிலைமை, ஜூலை 2009ல்
ஈரானில் அஹ்மதிநெஜாட் மறு தேர்விற்கு பின்னர் கூறுபவற்றில் வெளிப்பட்டு நிற்கிறது. தோல்வியுற்ற வேட்பாளர்
மீர் ஹொசைன் மெளசவி நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தை மத உயரடுக்கின் ஆதரவுடன் ஆர்ப்பாட்டங்களில் திரட்டினார்.
அதில் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சனியும் இருந்தார். இவர்கள் பொருளாதார தாராளமயக் கொள்கையை செயல்படுத்த
விரும்பி, நாட்டை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு திறந்துவிடும் கொள்கையை செயல்படுத்த
முற்படுகின்றனர். இந்த இரண்டும் இப்பொழுது ஈரானின் இரு அண்டை நாடுகளான ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றை
ஆக்கிரமித்துக் கொண்டு உள்ளன.
முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி மெளசவியை ஒரு "ஜனநாயகவாதி" என்று பிரெஞ்சு
தூதரகம் அழைப்பது போல் கூறி, எதிர்ப்பு இயக்கங்கள் ஜனநாயகத்தை நாடும் தொழிலாளர்களால்
இயக்கப்படுபவை என்றும் கூறுகிறது. இப்பிரச்சினையில்
Prometheus, Clear Tendency க்கும் முதலாளித்துவ
எதிர்ப்புக் கட்சிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கும் இடையே பகுப்பாய்வில் எந்த வேறுபாடும் இல்லை.
ஜூன் 24 கட்டுரை ஒன்றில்
Prometheus
அஹ்மதிநெஜாட் தேர்தலை எந்த ஆதாரமும் இல்லாமல் கண்டிக்கிறது. "ஈரானிய மக்கள் தெருக்களுக்கு வந்து
தேர்தல் முடிவுகளுக்கு "எதிர்ப்பு" தெரிவித்தனர்; தேர்தலோ அஹ்மதிநெஜாட்டின் குழுவினால் தில்லுமுல்லுக்கு
உட்பட்டது; மக்கள் தங்கள் வாக்கு மதிக்கப்பட வேண்டும், ஜனநாயகம் மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக
தெருக்களுக்கு வந்தனர்; சர்வாதிகாரத்துடன் ஜனநாயகம் பொருந்திப்போகாது."
மெளசவியின் இயக்கத்தை
Prometheus இவ்வாறு விளக்குகிறது: "ஒரு சக்தி வாய்ந்த
அலை தொலைவில் இருந்து வருகிறது, முழு மக்கள் கூட்டமும் தெருக்களுக்கு வந்துவிட்டன, முன்போல் ஆதிக்கம்
செலுத்த முடியாத அரசாங்கம், இவ்விதத்தில்தான் நாம் தொடங்கிக் கொண்டிருக்கும் ஒரு புரட்சியின் கூறுபாடுகளைக்
காண்கிறோம்." "ஒரு புரட்சி" ஈரானிய மக்களின்மீது ஏகாதிபத்திய தளைகளை சுமத்த உள்ளது என்ற உண்மை,
அனைத்துப் புறங்களிலும் நேட்டோ இராணுவங்களால் சூழப்பட்டுள்ளது என்பது
Prometheus
பார்வையில் இருந்து தப்பிவிட்டது போலும்.
அதன் ஜூன் பதிப்பில்
Clear Tendency, மெளசவி சார்பு இயக்கம் "ஒரு
பொருளாதாரத் திறப்பிற்கு சாதகமாக உள்ளது, ஏகாதிபத்தியத்துடன் உறவுகளைச் சீராக்க உதவும், இதையொட்டி
அதன் வணிகமும் வளரும்" என்று விளக்குகிறது. ஆனால்
Clear Tendency தொழிலாளர்கள் இந்த இயக்கத்தில் பங்கு
பெற வேணடும் என்றும், இது அவர்களுடைய பணியிடங்களில் இறுதியில் "சுய அமைப்பு வழிவகைகளை" தூண்டிவிடும்
என்ற நம்பிக்கையையும் தெரிவிக்கிறது.
மெளசவி தன்னுடைய உடன்பாடுகளை மேலை அரசாங்கங்கள் நிறுவனங்களுடன் முடித்த
பின்னர்
ஈராக்கின் எண்ணெயைக் கொள்ளயடித்தது போதாது என்று
Total அல்லது
ExxonMobil
ஈரானின் வளங்களை ஈரானிய தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொள்ளுவர் என்ற நினைப்பு
போலும்!
தொழிலாளர்களை ஆர்ப்பாட்டங்களில் தக்க முன்னோக்கு இல்லாமல் எந்த
அமைப்பிற்குப் பின்னாலும் திரட்டுவதில் உள்ள பிற்போக்குத்தன பொருளுரையைத்தான் ஈரானிய பின்னணி தெளிவாக
அம்பலப்படுத்தியுள்ளது. பிரான்சில் சார்க்கோசியின் பிற்போக்குத்தன சீர்திருத்தங்களுக்கு உதவியபின்,
Prometheus, Clear Tendency
ஆகியவற்றின் அரசியல் விளைவுகள் ஈரானில் இன்னும் அப்பட்டமான முறையில் ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு
சரணடைதல் என்று உள்ளது. எவ்வித சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டாலும் --மார்க்சிச சொற்றொடரும் சேர்ந்த
நிலையில்-- இந்த "புரட்சியாளர்கள்" CGT,
Elysée, Quaid'Orsay இவற்றின் கோட்டுகளின்
பின்புறத்தில்தான் தொங்கி வருகின்றனர். |