World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US House panel approves pro-Wall Street derivatives bill

அமெரிக்க சட்டமன்றக் குழு வோல் ஸ்ட்ரீடுக்கு சாதகமான வியாபார சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கிறது

By Barry Grey
19 October 2009

Use this version to print | Send feedback

அமெரிக்க பிரதிநிதிகள் மன்றத்தின் நிதியப் பணிகள்குழு செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் தங்களுக்கு அதிக இலாபம் தரும் வியாபாரத்தில் (Derivatives -நேரடியான விற்பனை அல்லது பரிமாற்றம் ஊடாக இல்லாது உடன்படிக்கைகள் மூலம் வர்த்தகம் செய்தல்) தடையற்ற வணிகம் செய்வதை அனுமதிக்கும் வகையில் சட்டவரைவில் விதிவிலக்குகளை இணைந்துள்ளது. இந்த சந்தேகத்திற்கு உரிய நிதியக் கருவிகள்தாம் உலக நிதிய முறை கிட்டத்தட்ட சரிந்ததில் முக்கிய பங்கு கொண்டவை ஆகும்.

அக்குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் மாசச்சுஸட்ஸ் பிரதிநிதி Barney Frank இனால் தயாரிக்கப்பட்ட இந்த சட்டவரைவு கட்சி அடிப்படையில் ஒப்புதல் பெற்றது. குழுவில் உள்ள ஒரே ஒரு குடியரசுக் கட்சி உறுப்பினர் மற்ற 43 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டார். 592 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள எஞ்சிய பகுதிகள் சந்தையைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்றப்படுகிறது எனக் கூறப்படும் சட்டவரைவு, வங்கிகள், தனியார் முதலீட்டு நிதிகள், பிற நிதிய நிறுவனங்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டை "இறுக்குவதற்கான" ஒபாமா நிர்வாக திட்டத்தின் முக்கிய தூண் என்று அறிவிக்கப்படுகிறது.

மன்றத்தின் விவசாயக் குழுவின் இதே போன்ற சட்ட வரைவுடன் இது இணைக்கப்பட்டு முழு மன்றத்தின் வாக்கெடுப்பிற்கு விடப்படும். அதன் பின் மன்றம் செனட் செயல்படுத்தவுள்ள இதைவிட வலுவற்ற சட்டவரைவுடன் சமரசப்படுத்தப்படும்.

எஞ்சிய பகுதி சட்ட வரைவை இயற்றியபின், நிதியப் பணிகள் குழு நிர்வாகத்தின் அடுத்த முக்கிய திட்டமான ஒரு நுகர்வோர் நிதிப் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தும் நிதி மாற்றங்களை எடுத்துக் கொண்டது. இதன் நோக்கம் நுகர்வோர் கடன் சந்தையில், கடன் அட்டைகள், கார்க் கடன்கள், அடைமானங்கள், மாணவர்கள் கடன்கள் ஆகியவற்றில் பெருநிறுவனங்கள் செய்யும் தவறுகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் நாட்டின் 98 சதவிகித வங்கிகளை திட்டமிடப்பட்டுள்ள அமைப்பின் கண்காணிப்பில் இருந்து விதிவிலக்களிக்கும் விதத்தில் ஒரு சட்டத்தில் ஒரு ஓட்டையை விட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் பெருமந்த நிலைக்கு பின்னர் மிக ஆழ்ந்த பொருளாதார நடவடிக்கையை தோற்றுவித்த வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதிய நிறுவனங்களின் ஊக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த தீவிர நடவடிக்கைகளும் இராது என்பதை தெளிவுபடுத்தியுள்ளன. அரசாங்கத்திடம் இருந்து உதவியாக டிரில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுள்ள பெரிய வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் மக்கள் வரிப்பணம், அரசாங்க உத்தரவாதங்களில் வந்த பிணை எடுப்புக்களை பயன்படுத்தினாலும், தாங்கள் ஒன்றும் பெரிய இலாபங்களை தேடாமல் இருக்க மாட்டோம், தங்கள் உயர் வணிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மிக அதிக மேலதிக கொடுப்பனவுகளை கொடுக்கமால் இருக்க மாட்டோம் என்றவகையில் நடந்து கொண்டுள்ளன. கடன் வாங்கப்பட்ட பணத்திலும் அவை அதே சூதாட்ட வழிவகைகளைத்தான் பின்பற்றுகின்றன, அதில் எஞ்சிய பகுதிகளும் அடங்கியுள்ளன; அதுதான் கடந்த ஆண்டு நிதிய கரைப்பிற்கு வழிவகுத்தது.

"Derivatives" என்னும் சொற்றொடர், வட்டி விகிதங்கள், நாணய மதிப்புக்கள் மற்றும் பொருட்களின் விலைகள் ஆகியவற்றின் ஏற்ற இறக்கங்களை சமாளிப்பதற்காக நிறுவனங்கள் ஒதுக்கி வைக்கும் பரந்த நிதிய செயற்பாடுகளை கொண்டுள்ளது. மிக முக்கியமான Derivatives கடன் கொடுத்தலில் ஏற்படுவதை இழப்புகளை சமாளிக்கும் திட்டமாகும் (credit default swaps). இந்த ஒப்பந்தங்கள் பெருநிறுவனங்கள் உடன்படும் ஒப்பந்தங்களாகும். அவற்றில் விற்பனையாளர் வாங்குபவருக்கு குறிப்பிட்ட பெருநிறுவன பத்திரங்கள், பாதுகாப்பு பத்திரங்களில் பிழைகள் நடந்தால் அவற்றிற்கு எதிராக காப்புறுதி செய்வர்.

இந்த நடவடிக்கைகள் தற்பொழுது "கட்டுப்பாடு இன்றி", அதாவது பங்குச் சந்தை போன்ற எந்த சந்தையிலும் பட்டியலிடப்படாமல் தனிப்பட்டமுறையில் நடத்தப்படுபவை ஆகும். 2000த்தில் அப்பொழுது ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பில் கிளின்டன் ஜனாதிபதியாக இருந்து ஆதரவு கொடுத்து ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டதில் இருந்து இதற்கு கட்டுப்பாடு இல்லாமல் உள்ளன.

2000ம் ஆண்டுச் சட்டம் இவ்வித நிதிய ஊகத்தின் வடிவகையில் வெடிப்புத் தன்மை நிறைந்த வளர்ச்சியை தூண்டியது. கடன் கட்டணம் கொடுக்கத்தவறுவதை மாற்றிக் கொள்ளும் சந்தை, சில கணக்கீடுகளின்படி, இப்பொழுது 600 டிரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன் இது 88 டிரில்லியன் டாலர் என்று இருந்தது. JP Morgan Chase, Goldman Sachs போன்ற இவ்வித மாற்ற செயல்களில் ஈடுபடும் மிகப் பெரிய வணிகர்கள், இரு தரப்பினருக்கு இடையே கடன் கட்டணத் தவறுகளை மாற்றும் ஒப்பந்தங்களை கொண்டுவருவதற்கு தரகு வேலை செய்யும் விதத்தில் மிகப் பெரிய இலாபங்களை ஈட்டுகின்றன.

கடன் கட்டணம் அளித்தலில் தாமதம் இருக்கும் மாற்றங்கள் ஆகஸ்ட் 2007ல் வெடித்த துணை முக்கிய குமிழியில் பெரும் பங்கைக் கொண்டிருந்ததோடு 2008 நிதியச் சரிவிற்கும் வழிவகுத்தது. இன்று வரை அரசாங்க நிதிகளில் 182 பில்லியன் டாலரினைப் பெற்றிருக்கும் காப்பீட்டுப் பெருநிறுவனமான AIG (American International Group) இன் சரிவு அதன் மகத்தான கடன் கட்டண தாமத மாற்று மகத்தான முறையில் குறைந்த பிணையுள்ள வீட்டு அடைமான ஆதரவு பெற்ற பத்திரங்கள், மற்ற சந்தேகத்திற்குரிய சொத்துக்கள் இவற்றுடன் கொண்ட தொடர்பினால் விளைந்தது ஆகும். AIG அடித்தளத்தில் இருந்து அடைமானங்களில் தாமதம் இருக்காது என்று பந்தயம் கட்டியது. அதன் பந்தயத்தை இழந்தது, ஏராளமான ரொக்கத்தை துணை உத்தரவாதமாகக் கொண்டுவரும் நிலைக்கு உட்பட்டது. அதனிடம் பணம் இல்லை.

AIG ன் தவிர்க்க முடியாத தோல்வி என்பது உலகம் முழுவதும் இருக்கும் ஆயிரக்கணக்கான "எதிர் பிரிவுகள்", இன்னும் பிற நிதிய நிறுவனங்கள் ஆகியவை திவாலாகிவிடக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. இது ஒரு பீதியை எழுப்பியது. வரிப்பணத்தில் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் அதனதும் மற்றும் அதே போல் பிற நிதிய நிறுவனங்கள் பலவற்றினதும் கணக்குகளில் செலுத்திய பின்னர்தான் தவிர்க்கப்பட்டது.

கடன் கொடுத்தலில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கும் திட்டமும் இன்னும் பல எஞ்சிய பகுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் திறமையுடன் கொண்டுவரப்படுவதற்கு எதிராக வோல் ஸ்ட்ரீட் செல்வாக்கை செலுத்துகிறது. ஜூன் 1ம் தேதி நியூயோர்க் டைம்ஸ் ஒரு விரிவான கட்டுரையில் ஒபாமாவின் நிதி மந்திரி டிமோதி கீத்னர் (முன்பு நியூயோர்க் மத்திய வங்கியின் தலைவராக இருந்தவர்) வோல் ஸ்ட்ரீட்டின் பெரு நிறுவனங்கள் குழு தயாரித்த திட்டம் ஒன்றை ஏற்று, இரகசியமாக "நிதித்துறை மற்றும் வெள்ளை மாளிகை தலைவர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டார்" என்று அம்பலப்படுத்தியுள்ளது.

எஞ்சிய பகுதிகளில் வணிகம் வோல் ஸ்ட்ரீட் நிறுவனங்களுடன் நெருக்கமாக பிணைந்த, தனியாருக்கு சொந்தமான, கட்டுப்பாட்டில் உள்ள தீர்வு அமைப்புக்கள் மூலம் நடத்தப்பட வேண்டும், மத்திய அரசின் கண்காணிப்பு "தரப்படுத்தப்பட்ட" எஞ்சிய பகுதிகளில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று வங்கிகள் திட்டமிட்டன. "வாடிக்கையாகிவிட்ட" எஞ்சிய பகுதிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த "வாடிக்கையாக்கப்பட்டுவிட்ட" என்ற தெளிவற்ற derivativesகளில் மிக இலாபம் கொடுக்கும் கடன் கொடுத்தலில் ஏற்படுவதை இழப்புகளை சமாளிக்கும் திட்டமும், இன்னும் பிற எச்சங்கள் இருக்கும். இவை பொதுமக்கள் பார்வை, அரசாங்கக்கட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கப்படும்.

வங்கிகளின் திட்டங்களில் இருந்த அடிப்படைகள் அனைத்தையும் கீத்னர் ஒப்புக்கொண்டார் என்று டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மன்ற நிதியப் பணி குழு ஏற்றுள்ள சட்டவரைவு ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டுள்ளதை விட மிகவும் வலுவிழந்தது. ஆகும். Securities and Exchange Commission, Commodity Futures Trading Commission ஆகியவற்றின் மேற்பார்வையில் இருந்து "வாடிக்கையாக்கப்பட்ட" எஞ்சிய பகுதிகளுக்கு இது விலக்கு அளிப்பது மட்டும் இல்லாமல், எஞ்சிய பகுதிகளில் "இறுதிப் பயன்பாட்டாளர்கள்" என்ற அழைக்கப்படுபவர்களுக்கும் விலக்கு அளிக்கிறது. இது ஒரு பரந்த, தெளிவற்ற பிரிவு ஆகும்; இதில் நிதியமற்ற நிறுவனங்கள், derivativesகளை "நடைமுறை ஆபத்துக்களுக்கு எதிராக" முதலீட்டு நிதியாக பயன்படுத்துபவை அடங்கும். அதில் உயரும் விசைச் செலவுகள், நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் தீவிர காலனிலை மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

ஆனால் நியூயோர்க் டைம்ஸின் நிதியப்பிரிவுக் கட்டுரையாளர் Gretchen Morgenson ஞாயிறன்று சுட்டிக் காட்டியுள்ளது போல், தனியார் முதலீட்டு நிதிகள், தனியார் பங்கு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போலி நிறுவனங்களை நிறுவி "இறுதிப் பயன்பாட்டாளர் வரையறையை" திருப்தி செய்வதைத் தடுக்க வழியேதும் இல்லை. இதையொட்டி அவற்றின் எஞ்சிய பகுதிகள் மீதான வணிகங்கள் கூட்டாட்சிக் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிவிடும்''.

"மற்றொரு வினாவிற்கு உட்படுத்தப்பட வேண்டிய விதிவிலக்கின்படி ஒரு மாற்று சந்தை மூலம் வணிகத்திற்கு உட்படவேண்டும் என்றால், தீர்வு இல்லங்கள் (clearinghouses) என்று அழைக்கப்படுபவற்றால் "தீர்க்கப்படலாம்" என்ற கருதப்பட வேண்டும் என்று இருப்பதாகும். இவற்றுள் சில வங்கிகளின் சொந்தமாகும்....ஒரு பெரும் இலாபம் கொடுக்கும் வணிகத்தை குறைந்த இலாபம் கொடுக்கும் தீர்வுகளுக்கு மாற்றுவதில் வங்கிகள் சற்று தயக்கம் காட்டும் என்று நினைக்கிறீர்களா? மிக அதிக இலாபம் தரும் மாற்றுகள் தீர்விற்கு உட்படுத்த முடியாதவை என்று கூறுவதற்கான ஊக்கம் அவர்களுக்கு இருக்கும் என்று நினைக்கிறீர்களா?" என்று அவர் எழுதினார்.

கூட்டாட்சியின் கட்டுப்படுத்துபவர்கள், நிதிப்பணிகள் குழுவில் உள்ள தவறுகள் பற்றி தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர். CFTC எனப்படும் பொருட்கள் வருங்கால வணிகக் குழுவின் தலைவரான காரி ஜேன்ஸ்லர் வியாழனன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "விதிவிலக்கு இல்லாமல் முழு சந்தையும் உள்ளடக்கும் சட்டம் தேவை என்றும் அது கடடுப்படுத்துபவர்களுக்கு உரிய அதிகாரங்கள் பொதுமக்களைக் காப்பாற்றுவதற்குக் கொடுக்க வேண்டும்" என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

நியூஸ்வீக்கின் வலைத்தளம் அக்டோபர் 16ம் தேதி ஒரு "மூத்த கட்டுப்பாட்டு அதிகாரியை" மேற்கோளிட்டு "இறுதிப் பயன்பாட்டாளர்களுக்கு" எஞ்சியவற்றில் விதிவிலக்கு என்பது "ஒரு பெரிய கட்டுப்பாட்டு இடைவெளி" என்ற எச்சரிக்கையை கொடுத்துள்ளதாக கூறியுள்ளது. அந்த அதிகாரி இச்சட்டவரைவு அனைத்து வெளிநாட்டு மாற்றுவிகித வணிகங்களை, வெளிநாட்டு மாற்றுக்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு கொடுத்துள்ளது என்றும் CFTC க்கு "மாற்றுவிகிதங்கள், தீர்வு இல்லங்கள் மீது போதுமான கட்டுப்பாடு அதிகாரம் இராது என்றும் உதாரணமாக ஒதுக்குத் தேவைகள் பற்றி இராது" என்பது பற்றி ஜேன்ஸ்லர் கவலை கொண்டுள்ளார் என்றும் கூறினார். "தனியார் நடத்தும் தீர்வு இல்லங்கள் வோல் ஸ்ட்ரீட்டின் ஆதிக்கத்திற்கு உட்பட அனுமதிக்கும் விதி பற்றி அவர் கவலை கொண்டுள்ளதாகவும், CFTC உடைய பரீசிலனைக்கு உட்படாமல் வோல் ஸ்ட்ரீட் விதிகளையும் ஒப்பந்தங்களையும் மாற்ற முடியும் என்றும் இது அரசாங்கக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது" என்றும் கூறினார்.

இதைப்பற்றி நியூஸ்வீக் கருத்து கூறியுள்ளது: "பல வாரங்கள் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் மற்றும் அமெரிக்கப் பெருநிறுவனங்களில் உள்ள அவற்றின் வாடிக்கையாளர்களுடைய ஆழ்ந்த அழுத்தம் பல வாரங்களாக இருந்ததை அடுத்து, இச்சட்டவரைவு வியாழனன்று பிரதிநிதி Barney Frank ன் நிதிப் பணிகள் குழுவால் ஒப்புதல் பெற்றது. ஆனால் இதில் நிறைய விதிவிலக்குகளும், தப்பிக்கும் வழிவகைகளும் உள்ளன என்று பல திறனாய்வாளர்கள் கூறியுள்ளனர். இது சட்டமானால் வோல் ஸ்ட்ரீட்டில் உயர்ந்து நிற்பவர்கள் புதிய Derivatives பொருட்களை பல வாகனங்கள் மூலம் இந்த தப்பிச் செல்லும் வழிவகைகள்மூலம் பல ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்."

மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மைக்கேல் க்ரீன்பெர்ஜரை Morgenson தன்னுடைய கட்டுரையில் மேற்கோளிட்டுள்ளார். "சட்டவரைவின் சாதாரண வார்த்தையில் வங்கித் தொழிலுக்கு கிறிஸ்துமஸ் மரம் போன்ற அலங்கார அளிப்புக்கள் என்றுதான் கருதப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

சட்ட வரைவிற்கு ஒபாமா நிர்வாகம் தன்னுடைய ஒப்புதல் முத்திரையைக் கொடுத்துள்ளது. உதவி நிதி மந்திரி மைக்கேல் பார் நிருபர்களிடம் வியாழனன்று கூறினார்; "எங்கள் கண்ணோட்டத்தில் இது ஒரு கடுமையான, வலுவான சட்டம் ஆகும்."

Derivatives சட்ட வரைவு மற்றும் குழுவின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டவரைவும் புது அமைப்பின் மேற்பார்வையில் இருந்து நாட்டிலுள்ள 8,200 வங்கிகளில் 8,000க்கும் மேற்பட்டவை விதிவிலக்கு வழங்குகின்றன. அரசாங்கக் கொள்கைமீது அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்தின் திறமையான சர்வாதிகாரத்தை விளக்குகிறது. அரசாங்கத்தின் ஒவ்வொரு பிரிவையும் வோல் ஸ்ட்ரீட் மேலாதிக்கத்தில் கொண்டிருப்பது அப்பட்டமான, ஆனால் திறமையான இலஞ்சம் என்றும் கருவியை அது பயன்படுத்துவதால் ஊக்கம் பெறுகிறது. அதேபோல் பிரச்சார நன்கொடைகளும் பிற சலுகைகளும் இரு கட்சியின் அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கப்படுகின்றன.

வியாழனன்று நியூ யோர்க் டைமஸ் நிதியப் பணிகள் தொழில்துறை இந்த ஆண்டு இதுவரை 220 மில்லியன் டாலருக்கும் மேலாக செல்வாக்குத் திரட்ட கொட்டியுள்ளது என்றும் இதன் பெரும்பகுதி நிர்வாகத்தின் நிதிய கட்டுப்பாட்டு திட்டத்தை உருவாக்குவதற்கு இயக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தசாப்தத்தில் வங்கிகள் மற்ற நிதிய நலன்கள் மன்ற நிதிப்பணிக்குழு உறுப்பினர்களுக்கு 77 மில்லியன் டாலருக்கும் மேலாக நன்கொடை கொடுத்துள்ளதாக செய்தித்தாள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றில் மிக அதிகம் பெற்றவர்கள் $3 மில்லியனுக்கு மேல் பெற்ற பார்னி பிராங் மற்றும் குழுவில் உள்ள உயர்மட்ட குடியரசுக் கட்சி உறுப்பினர் அலபாமாவின் ஸ்பென்ஸர் பாஹூஸ் ஆகியோர் ஆவர்.

ஒபாமா நிர்வாகத்தைப் பொறுத்தவரையில், அதன் முக்கிய நிதிய அதிகாரிகள் வோல் ஸ்ட்ரீட்டிடம் நெருக்கமான உறவுகளைக் கொண்ட இலட்சாதிபதிகள் பலரைக் கொண்டுள்ளது. வியாழனன்று பைனான்சியல் டைம்ஸ் நிதிய தகவல் கொடுக்கும் வடிவங்கள் அரசாங்கத்தில் சேர்வதற்கு முன்பு ஒரு மூத்த நிதி அமைச்சரவை ஆலோசகரான Gene Sperling இற்கு கோல்ட்மன் சாக்ஷ்ஸால் 888,000 டாலர் கொடுக்கப்பட்டதாகவும், Stanford Group நிறுவனங்களுக்கு உரைகள் ஆற்றுவதற்கு 158,000 டாலர் கொடுக்கப்பட்டதாகவும் மேற்கோளிட்டுள்ளது; பிந்தைய நிறுவனம் மிகப்பெரிய மோசடிக் குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ள ஆலென் ஸ்டான்போர்ட் நிறுவனத்தின் தலைமையில் உள்ளது.

மற்றொரு நிதித்துறை ஆலோசகர் மாத்யூ கபேகர் Blackstone என்னும் தனியார் பங்குகள் நிறைவனத்தில் 5.8 மில்லியன் டாலர் சம்பாதித்தார். இது நிதியத் துறையை காப்பாற்றும் திட்டங்களை தயாரிக்க நிர்வாகத்தில் இவர் சேர்வதற்கு முன்னதாக இரு ஆண்டுகளில் பெற்ற ஊதியம் ஆகும்.

முன்னதாக வெளிவந்த படிவங்கள் வெள்ளை மாளிகையின் தலைமை பொருளாதார ஆலோசகர் லாரன்ஸ் சம்மர்ஸ், நிர்வாகத்தில் சேருவதற்கு இரு ஆண்டுகள் முன்னதாக DE Shaw தனியார் முதலீட்டு நிதியினால் 5.2 மில்லியன் டாலர் கொடுக்கப்பட்டார் என்று வெளிப்படுத்தியுள்ளன. பில் கிளின்டனின் கீழ் நிதி மந்திரி என்னும் முறையில் சம்மர்ஸ் Derivatives சந்தைகளை கட்டுப்பாட்டில் இருந்து அகற்றும் சட்டத்தை கொண்டுவந்தவர் ஆவார்.