WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Nationalist tensions deepen over Magna's purchase bid
for GM Europe
ஐரோப்பாவின் ஜிஎம் ஆலையை வாங்குவதற்கான மக்னா ஏலத்தின் மீது தேசியவாத பதட்டங்கள்
ஆழமடைகின்றன
By Robert Stevens
14 October 2009
Use this
version to print | Send
feedback
ஜிஎம் மோட்டார்ஸின் ஐரோப்பிய பிரிவை மக்னா இன்டர்நேஷனல் வாங்குவதற்கான
திட்டம் ஐரோப்பாவிற்குள் வர்த்தக போட்டிகளை வெளிப்படுத்தி வருகிறது. ஜிஎம் மற்றும் மக்கனா உத்தியோகபூர்வமாக
ஓர் உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளன. அதன்படி ரஷ்யாவின் ஸ்பெர்பேங்க்கின் நிதியுதவியுடன் கனடாவின்
கூட்டமைப்பு ஓப்பலின் 55 சதவீத பங்குகளை 4.5 பில்லியன் யூரோவுக்கு (6.7 பில்லியன் டாலர்) வாங்க இருக்கிறது.
விற்பனை விதிமுறைகளின் கீழ், மக்கனா மற்றும் ஸ்பெர்பேங்க் இரண்டும் தனித்தனியாக
ஓப்பலின் 27.5 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும், ஜிஎம் 35 சதவீத பங்குகளைத் தக்க வைத்து கொள்ளும்.
ஆயிரக்கணக்கான வேலை வெட்டுக்கள், பணி நிலைமைகளின் மாற்றங்கள், உற்பத்தி அதிகரிப்புகள் உட்பட
இதுபோன்ற பெருத்த விட்டுகொடுப்புகளுக்கு மாற்றாக, புதிய நிறுவனத்தின் தொழிலாளர்களுக்கு 10 சதவீத பங்குகள்
அளிக்கப்படும்.
இந்த கைமாற்றும் திட்டத்தில் சுமார்
1.2
பில்லியன் யூரோ செலவுக் குறைப்பு நடவடிக்கைகளும்
மையப்படுத்தப்பட்டிருக்கின்றன. செப்டம்பரில்
GMன்
ஐரோப்பிய செயல்பாடுகளை வாங்க மக்னா ஒத்துக் கொண்டபோது, ஓப்பல் மற்றும் வேக்ஸ்ஹால் நிறுவனங்கள்
அவற்றின் வலுவான 50,000 தொழிலாளர்களில் ஐந்தில் ஒரு பங்கினரை 12 மாதங்களுக்குள் குறைக்க வேண்டும்
என்று அறிவித்தது. 10,500 அல்லது அவ்வளவு வேலைகள் பறிபோகக் கூடும், 4,100 வேலைகள் ஜேர்மனியிலும்,
மீதம் பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியத்திலும் பறிக்கப்படலாம்.
இந்த ஒப்பந்தத்தை முடிக்க இந்த வாரத்தில் உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று
திங்களன்று பைனான்சியல் டைம்ஸ் அறிவித்தது. இந்த பேச்சுவார்த்தைகளில் சம்பந்தப்பட்டிருந்தவர்களையும்
அது குறிப்பிட்டு காட்டியது. ஜிஎம் தலைமை செயலதிகாரி
Fritz Henderson,
இதன் பின்புலத்தில் இருந்தார். அவர் சீனாவில்,
ஷாங்காயில் ஒரு பத்திரிகைக்கு கூறுகையில், அடுத்து வரும் சில நாட்களில் இந்த விற்பனை தீர்மானிக்கப்படலாம்
என்று தெரிவித்தார்.
இந்த காட்சிகளுக்கு பின்னணியில், ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும், அவற்றின்
போட்டியாளர்களை பலி கொடுத்து, அவற்றின் சொந்த வாகன உற்பத்தி ஆலைகளை காப்பாற்ற விரும்புவதால்,
GMன்
ஐரோப்பா பிரிவின் விற்பனை பதட்டங்களில் மாட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த மாத தேர்தல்களில்
வேலையிழப்புகள் ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்ததால், ஜேர்மன் அரசாங்கத்தின் அங்கேலா மேர்க்கெல்
பெரும் வேலை இழப்புகளை தவிர்க்க ஓப்பலுக்கு அரசு மானியமாக 4.5 பில்லியன் யூரோவை வழங்க
முன்வந்துள்ளார். அதன் எரிசக்தியில் பெரும்பகுதியை வினியோகிக்கும் ரஷ்யாவுடன் ஜேர்மனியின் உறவுகளை
மேம்படுத்த மக்னா உறுதியளிப்பதால், அதனுடன் ஓர் உடன்படிக்கை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உடன்படிக்கை ஜேர்மனிக்குள்ளேயே விமர்சிக்கப்படுகிறது, இதை தக்க வைக்க
முடியாது என்று சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் முக்கிய தாக்குதல் ஸ்பெயின் மற்றும் பிரிட்டனில் இருந்து
வந்திருக்கிறது.
அக்டோபர் 9ல், வாங்குவதற்கான சமீபத்திய நிலை குறித்து விவாதிக்க ஜேர்மன்
அரசாங்கம் கூட்டியிருந்த ஒரு கூட்டத்தை ஸ்பானிஷ் அரசாங்கம் புறக்கணித்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு
பதிலாக, ஸ்பெயினின் தொழில்துறை மந்திரி மிகெல் செபஸ்டியன் ,
மக்னாவின் தலைமை இணை செயலதிகாரி
Siegfried
Wolfஐ பேர்லினில் தனியாக
சந்தித்து பேசினார். இறுதி உடன்படிக்கை பெருமளவிற்கு ஸ்பெயினின் பொருளாதார நலன்களுக்கு பொருத்தமாக
இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக செபஸ்டியன் மக்னாவை இழுக்க முயற்சித்தார்.
ஜரோகோஜாவிற்கு அருகில்
Figueruelasல்
உள்ள ஸ்பெயின் ஆலையை, ஜேர்மனியின்
Eisenachக்கு
மாற்றும் திட்டங்களை அது எதிர்ப்பதை இந்த பேச்சுவார்த்தைகள் முழுவதுமே ஸ்பெயின் வலியுறுத்தி வந்திருக்கிறது.
Figueruelas
ஆலை ஓபெல் கோர்சா
மாடலை உற்பத்தி செய்து வருகிறது. இதில் சுமார் 7,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
2008ல், ஐரோப்பாவின் மொத்த ஓப்பல் கார்களில் 29 சதவீத கார்களை அது உற்பத்தி செய்தது.
திட்டமிடப்பட்டுள்ள தற்போதைய உடன்படிக்கையை ஸ்பெயின் நிராகரிப்பு குறித்து
பேசுகையில், "ஸ்பெயினிலும், ஐரோப்பாவிலும் ஓப்பல் பிராண்டை அழிவுக்கு எடுத்து செல்லும் ஒரு திட்டத்திற்கு
நிதியுதவி அளிக்க அரசாங்கம் தயாராக இல்லை" என்று ஓர் அதிகாரி எச்சரித்தார்.
ஜேர்மனியின் பொருளாதார மந்திரி
Karl-Theodor zu Guttenbergக்கு
செபஸ்டியன் கடந்த வாரம் ஒரு சுருக்கமான கடிதம் எழுதினார், "அடுத்த வாரம் கையெழுத்தாகவிருக்கும்
உடன்படிக்கை அவசரகதியில் இருக்கிறது என்பதை மக்னாவிற்கு விளக்க உதவுமாறு" அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"மக்னா கூறும் தொழிற்திட்டம் எங்களுக்கு செளகரியமாக இல்லை, இதில் புதிய நிறுவனத்தின் நம்பகத்தன்மை
போதியளவிற்கு இருப்பதாக நாங்கள் உணரவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அக்டோபர் 9 பைனான்சியல் டைம்ஸ் செய்தியின்படி, இந்த
திட்டமிடப்பட்ட உடன்படிக்கைக்கு ஒத்துகொள்ள ஸ்பானிய பிரதம மந்திரி
யிஷீsங லிuவீs ஸிஷீபீக்ஷீணரீuமீக்ஷ்
ஞீணீஜீணீtமீக்ஷீஷீஐ மேர்கெல்
சம்மதிக்க செய்வதில் தோல்வி அடைந்த அடுத்த நாள் இந்த கடிதம் வெளிச்சத்திற்கு வந்தது.
பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்த தற்போதைய உடன்படிக்கையை ஏற்க மறுத்து
வருகிறது. இங்கிலாந்தின் வர்த்தகத்துறை செயலாளர் பீட்டர் மண்டெல்சன் கடந்த வாரம் தெற்கு கொரியாவிற்கு
விஜயம் செய்திருந்த போது, முன்வைக்கப்படுவதில் எல்லாம் இங்கிலாந்து "கையெழுத்திட்டு விடாது" என்று
தெரிவித்தார். "வேக்ஸ்ஹாலுக்கு (GMன்
பிரிட்டன் பிரிவு) எதிர்மறை விளைவுகள் இல்லாத வகையில், அந்த திட்டம் சில வழிகளில் மாற்றியமைக்கப்பட
வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
ஜேர்மன் செய்தித்தாளில் கசிந்த திட்டங்கள், சுமார் 1,200ல் நான்கில் ஒரு பங்கு
இங்கிலாந்து தொழிலாளர்கள் வேலைகளை இழக்க கூடும் என்று தெரிவித்தன. விவேரோ வேன் உற்பத்தி
செய்வதற்கான தற்போதைய ஒப்பந்தம் முடிவடையும் போது, 2013க்கு பின்னர் லூடன் ஆலை ஒட்டுமொத்தமாக
மூடப்படலாம்.
கணிப்புகளின்படி, இங்கிலாந்து பொருளாதார நலன்களுக்கு சாதகமான ஓர்
உடன்படிக்கையின் அடிப்படையில், மக்கனாவிற்கு சுமார் 400 மில்லியன் பவுண்டு கடனுதவி வழங்க பிரிட்டிஷ்
அரசாங்கம் உத்தரவாதங்களைக் கொடுத்திருக்கிறது. பிரிட்டன் திருப்தி அடையும் வரை, ஓர் "ஐரோப்பிய"
உடன்படிக்கையாக மாற்ற அது நிச்சயமாக இதுபோன்றதொரு நிதியுதவியை வைத்து கொண்டிருக்கும்.
மக்னாவின் திட்டங்கள் மீதான ஒரு பிரத்யேக ஜேர்மன் அரசாங்க உத்தியோகபூர்வ
அறிக்கையின் தகவல்களுக்கு குழிபறிக்க, பிரிட்டனின் சார்பாக திட்டங்களைக் கூர்ந்து ஆராய்ந்து பார்க்க,
மேன்டல்சன் ஒரு கணக்கியல் நிறுவனமான
PricewaterhouseCoopersஐ
நியமித்திருக்கிறார்.
ஐரோப்பிய பிரிவை மக்னாவற்கு விற்பதை எதிர்த்த பிரிட்டிஷ் அரசாங்கம், அந்த
ஒப்பந்தப் புள்ளிக்கு போட்டியாக இருந்த முதலீட்டு குழு
RHJ Internationalக்கு
ஆதரவளித்தது. கடந்த மாதம் மேன்டெல்சன் ஐரோப்பிய போட்டியாளர்
Neelie Kroesன்
தலைவருக்கு கடிதம் எழுதினார், "அரசியல் தலையீடுகள் மற்றும் மானியங்களால் தீர்மானிப்பதை விட ஒரு
வர்த்தகரீதியான பலனை உறுதிப்படுத்த" ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அவர் அக்கடிதத்தில் அழைப்பு விடுத்தார்.
பிரிட்டிஷ் ஆலைகள் அதிக உற்பத்தியை அளிப்பதால், அவை செயல்பட வேண்டும் என்று
மேன்டெல்சன் வலியுறுத்தினார். "GMன்
பிற குறைந்த திறன் ஆலைகளில் சிலவற்றை அதிகமாக பயன்படுத்துவதற்காக, பிரிட்டன் மற்றும் ஸ்பெயினில் உயர்ந்த
உற்பத்தி ஆலைகளின் திறனை குறைவாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மாதங்களில் ஜேர்மன், ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் இருக்கும்
தொழிற்சங்கங்களும், அவற்றிற்குரிய அரசாங்கங்களுடன் ஒரு "மறுசீரமைப்பு" திட்டத்தை ஒத்துக்கொள்ள
மக்கனாவுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தன. "தங்கள்" நாடுகளின் ஆலைகளுக்கு முன்னுரிமை அளிக்க
ஜிஎம்/மக்னாவிற்கு அழைப்புவிடுத்த தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக போராட
செய்கின்றன.
ஜேர்மனியில் இருக்கும் ஐஜி மெட்டால் சங்கம், ஐரோப்பிய அரசாங்கத்தின்
பொறுப்பு மீறாத ஏவலாள் போல பெருபாலான நிதிய ஒட்டுக்களுடன் ஆரம்பத்தில் இருந்து நடித்து
கொண்டிருக்கிறது. மக்கனா உடன்பாட்டிற்கு ஆதரவளித்து கொண்டும், ஜேர்மன் வேலைகளைப் பாதுகாக்க வேண்டும்
என்று அழைப்புவிடுத்து கொண்டும் இருக்கும் அந்த சங்கம், 4,000த்திற்கும் மேற்பட்ட வேலைகள் அங்கு
வெட்டப்படும் என்பதற்கு எதிராக எந்த போராட்டமும் நடத்த விரும்பவில்லை. புதிய உரிமையாளர்களால்
வேலைகள் மற்றும் தொழிலிட நிலைமைகளில் மேலும் மடத்தனமாக ஏதாவது செய்வதற்கு கோரப்படும்
கோரிக்கையுடனும் அந்த சங்கம் ஒத்திணைந்து செயல்படும்.
ஜேர்மனியின் ஓப்பல் தொழிலாளர்கள் கவுன்சிலின் தலைவர் கெளஸ் பிரான்ஜ் இந்த
வாரம் கூறுகையில்,
Figueruelas மற்றும்
Eisenachன்
இரண்டு ஆலைகளிலும் இருக்கும் சங்கங்கள் ஓர் உடன்பாட்டிற்கு வந்துவிட்டன என்று தெரிவித்தார். பைனான்சியல்
டைம்ஸ் செய்தியின்படி, இந்த இரண்டு ஆலைகளுக்குள்ளும் "கொடுக்கல்-வாங்கல்" இருக்கும் என்று
Franz
தெரிவித்தார். "இந்த முட்டுக்கட்டை சூழ்நிலையை நாம் முடிவுக்கு கொண்டு வந்தாக வேண்டும்," என்று அவர்
தெரிவித்தார்.
"கொடுக்கல்-வாங்கல்"
என்பதற்கு ஒரேயொரு அர்த்தம் தான் இருக்கிறது தொழிலாளர்களின்
வேலைகள், சம்பளங்கள் மற்றும் தொழிலிட நிலைமைகளை விலைகொடுத்து மக்னாவிற்கு சாதகமான ஓர்
உடன்படிக்கைக்கு சதி செய்யப்படுகிறது.
ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இது
பொருந்தும். வேலைகள் பாதுகாப்பிற்காக எந்த போராட்டமும் நடத்த பிரிட்டனில் இருக்கும்
Unite
மறுத்திருக்கிறது. மாறாக, "வோக்ஸ்ஹால்
வேலைகளைப் பாதுகாப்பதென்பது, இங்கிலாந்து கார் தொழில்துறையை பாதுகாப்பதாகும்" என்ற கோஷத்துடன்,
அது ஒரு தேசியவாத பிரச்சாரத்தை தொடங்கியது. அதன் வலைத் தளத்தின் ஓர் அறிக்கையில், "வோக்ஸ்ஹாலைக்
காப்பாற்றுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தது. திட்டவட்டமான வர்த்தக அடித்தளத்தில் பிரிட்டிஷ் ஆலைகளைத்
தக்கவைப்பதில், மக்னாவிற்கான மேன்டெல்சனின் திட்டத்தை
Unite
எதிரொலித்தது. அதாவது திட்டவட்டமான வர்த்தக அடித்தளம் என்பது,
நிறுவனம் என்ன செய்கிறதோ அதில் அதன் எதிர்கால இலாப நலன்களில் இருக்கிறது.
மக்னாவுடன்
Unite
ஓர் உடன்பாடிற்கு வந்துவிட்டதாக கடந்த செவ்வாயன்று செய்திகள்
வெளியாயின. இதன்படி சுயமாக முன்வந்து வெளியேறுவதன் மூலம் இங்கிலாந்தில் 600 வேலை இழப்புகள் இருக்க
கூடும், இரண்டு வருடம் சம்பள உயர்வு இருக்காது, மற்றும் பிற செலவு குறைப்பு முறைமைகளும் இருக்கும்.
இந்த உடன்பாடு குறித்து மக்னா எதுவும் தெரிவிக்கவில்லை, ஆனால் அந்த திட்டம் "இரண்டு
ஆலைகளுக்கும் வேலை பாதுகாப்பு கொடுப்பதுடன், 2013 வரை எதிர்காலமும் இருக்கும், அதற்கு பின்னரும் நீண்டகால
எதிர்காலத்திற்கு ஒரு நல்ல அடித்தளம் இருக்கும்" என்று
Uniteன்
சார்பாக டோனி உட்லே அறிவித்தார். இந்த உடன்பாடு "வோக்ஸ்ஹாலின் (Vauxhall)
இங்கிலாந்து செயல்பாடுகளுக்கு ஒரு நற்செய்தியாகும்" என்று வோக்ஸ்ஹால் அறிவித்தது. "Uniteன்
தலைமைக்கும் வோக்ஸ்ஹாலின் நிர்வாக குழுவிற்கும் இடையிலான பரந்த கூட்டு முயற்சியையும்" அது குறிப்பிட்டு
காட்டியது.
ஸ்பெயினில், ஜேர்மனிக்கு உற்பத்தியை மாற்றுவதை எதிர்த்து
Zaragozaவில்
தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 19ல் போராட்டங்களை நடத்தின. "ஓப்பலும், அதன் துணைஒப்பந்ததாரர்களும்:
ஒரு நம்பகமான தொழில்துறை திட்டத்திற்காக" என்ற கோஷத்தின் கீழ் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ஐந்து கதவு கொண்ட
Opel Corsaவை
அரோகன் ஆலையில் மக்னா உற்பத்தியை தொடர்வதற்கு மாற்றாக, 1,300 வேலைகளை வெட்டுவதற்கு அது
நிர்வாகத்துடன் ஒத்து கொண்டிருப்பதாக
Comisiones Obreras
இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தது. முதலில்
1,650ஆக திட்டமிடப்பட்டிருந்த இந்த வேலை வெட்டுக்கள், 1,300ஆக குறைக்கப்பட்டிருக்கின்றன.
ஏதோவொரு வகையில் இது தொழிலாளர்களுக்கு கிடைத்த வெற்றியாக அறிவித்து,
Comisiones
Obrerasன் ஓர் அதிகாரியான
Ana Sanchez
அக்டோபர் 5ல் பேசும்
போது, "மக்கனா அந்த ஆலைக்காக இன்று ஒரு புதிய திட்டத்தை முன்வைத்திருக்கிறது, ஐந்து கதவு
Opel Corsaவின்
உற்பத்தி 100 சதவீதம் இருக்கும் என்பது இதில் உள்ளடங்கி இருக்கிறது. இதில் சுமார் 350 வேலைவெட்டுக்களும்
குறைக்கப்பட்டிருக்கின்றன" என்றார்.
வேலைவெட்டுக்களை ஏற்படுத்த செயல்பட்டு வரும் அதேவேளையில், ஸ்பானிய தொழிற்
சங்கங்கள் சமீபத்தில்
GM
கோரிக்கைகளுக்கு ஒத்துக் கொண்டன. அதாவது, தேவை குறைந்து
வருவதால் நவம்பர் 2009ல் இருந்து மார்ச் 2010க்குள்
Figueruelas
ஆலையில் 600 தொழிலாளர்களுக்கு தற்காலிக பணிநீக்கம் அளிக்க அது
கோருகிறது. |