World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : ஆப்கானிஸ்தான்

Morale crumbling among US and British troops in Afghanistan

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் துருப்புக்கள் மத்தியில் உளவலிமை சிதைவு

By James Cogan
17 October 2009

Use this version to print | Send feedback

இந்த மாதம் ஆப்கானிஸ்தான் முன்னணிப் போர்க் களத்திலிருந்து வந்துள்ள பல தகவல்கள், புதிய காலனித்துவ வகை ஆக்கிரமிப்பிற்காக கொல்லுவதற்கும் கொல்லப்படுவதற்கும் அனுப்பப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் துருப்புக்களிடையே அதிகரித்துவரும் உளவலிமை அழிவு பற்றி ஒரு உட்பார்வையைக் கொடுக்கின்றன.

அக்டோபர் 8ம் திகதி லண்டன் டைம்ஸ், அமெரிக்க இராணுவ மத போதகர்கள் மற்றும் 10 ஆவது மலைப்பிரிவின் இரு பட்டாலியன்களில் வேலை செய்பவர்களிடமிருந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளது; அவர்கள் காபூலுக்கு தெற்கு வர்டக் மாநிலத்தில் ஒரு ஆண்டுக்கால கடமையில் கடைசி மூன்று மாதங்கள் என்ற இறுதி கட்டத்தில் உள்ளனர். 1,500 பேரில் 19 பேர் போர் நடவடிக்கைகளில் இறந்து போயினர், ஒருவர் தற்கொலை செய்து கொண்டார், குறைந்தது 100 பேராவது கடும் காயமுற்றனர். ரோந்துகள் குறைந்த பட்சம் 180 தடவை IED எனப்படும் உள்ளுர் தயாரிப்பு தாக்குதல் வெடிப்பு பொருள் அல்லது நிலக்கண்ணிவெடிகள் மூலம் தாக்கப்பட்டுள்ளனர். அவற்றுள் 100க்கும் மேலானவை வெடிப்பதற்குமுன் கண்டுபிடிக்கப்பட்டன. இத்துருப்புக்கள் தாலிபன் கெரில்லாக்களை அபூர்வமாகத்தான் எதிர்கொள்ளுகின்றனர்; இவர்கள் ஆக்கிரமிப்பு எதிர்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களென்று சந்தேகிக்கப்படும் சாதாரண மக்களிடையே செயல்படுகின்றனர்.

ஒரு பீரங்கிப் பட்டாலியனின் மத போதகராக இருக்கும் காப்டன் சம் ரிக்கோ கூறினார்: "அங்கு நீங்கள் பார்க்கும் அனைவரும் சோர்வாக உள்ளனர். எந்த முன்னேற்றத்திற்கு தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறோம் என்று அவர்கள் திகைத்துள்ளனர். அவர்கள் சோர்வடைந்து, வேதனையுற்ற, குழம்பியுள்ள நிலையில் காலத்தைக் கடக்க விரும்புகின்றனர்."

ஒரு காலாட்படை பட்டாலியனில் மத போதகராக இருக்கும் காப்டன் ஜெப் மாசென்கேல் டைம்ஸிடம் கூறினார்: "எங்களிடத்தில் வரும் பல சிப்பாய்கள் இங்கு இருப்பதின் பயனற்ற தன்மை உணர்வில் சீற்றம் அடைந்துள்ளனர். ஆழ்ந்த திகைப்பிலும் ஏமாற்றத்திலும் இருக்கும் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் விரைவில் இணைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். விவாகரத்துக்கள் பெரிதும் உயர்ந்துவிட்டன. மிகப் பெரும் அதிர்ச்சிக்குப்பின்னான மனஅழுத்தக் கோளாறு PTSD (Post Traumatic Stress Disorder) மிகவும் அதிகமாக உள்ளது. நூற்றுக்கணக்கான காயங்கள் ஏற்பட்டுள்ளன, அவை சிப்பாய்களை வீடுகளுக்கு அனுப்பியுள்ளன; அவர்கள் வாழ்க்கையில் அதற்குப் பின்னர் குடும்ப ரீதியான பாதிப்பில் உள்ளனர்."

Staff Sergeant எரிக்கா சேனே, மனநல சுகாதார வல்லுனர் கூறினார்: "அவர்கள் களைத்துள்ளனர், பெரும் திகைப்புற்றுள்ளனர், அச்சத்தில் உள்ளனர். அவர்களில் பலர் [ரோந்திற்கு] செல்வதற்கு பயப்படுகின்றனர், ஆயினும் இன்னும் செல்கின்றனர்."

ஒரு இருபது வயது சிப்பாய், சிறப்புப்பயிற்சி பெற்ற Raquime Mercer கூறினார்: "நாங்கள் இழந்து விட்டோம். அப்படித்தான் நான் உணர்கிறேன். நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்று எனக்குத் துல்லியமாகப் புரியவில்லை. அங்கு நான் காயமுற்றால் அல்லது இறந்துவிட்டால், எந்தக் காரணத்திற்கு என்பதை தெளிவாக அறிந்து கொள்ள விரும்புகிறேன். சிப்பாய்களுடைய மிகப் பெரிய வினா இதுதான்: இந்தப் போரை நிறுத்த நாம் என்ன செய்யலாம்? ஒருவரைப் பிடித்தால் போதுமா? ஒரு தாக்குதல் நடத்தினால் போதுமா? தாலிபனை முடிவிற்கு கொண்டுவருவது என்பதைத் தவிர மற்ற விடைகளையும் சிப்பாய்கள் எதிர்பார்க்கின்றனர்; ஏனெனில் அவர்களை முடிவிற்கு கொண்டுவருவது என்பது கிட்டத்தட்ட இயலாது. நீங்கள் காண முடியாத ஒருவரைப் பிடித்தல் என்பது கடினம்."

இத்தகைய பெரும் ஏமாற்றத் திகைப்பு, அச்சம் மற்றும் ஆக்கிரமிப்புத் துருப்புக்கள் இடையே இறப்புக்கள் என்பது வெறுப்பிலும் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் மக்களுக்கு எதிராக பழிவாங்கும் உணர்வையும் ஏற்படுத்தக்கூடும். அதுதான் காலனித்துவ போர்களில் கணக்கிலடங்காக் கொடுமைகளுக்கு ஆதாரம் ஆகும்.

சிறப்புப் பயிற்சி பெற்ற சிப்பாய் எரிக் பெட்டி டைம்ஸிடம் கூறினார்: "மக்களுக்கு உதவுவதில் அவர்களுடைய சக ஊழியர்கள் உயிரிழப்பதில் சிப்பாய்கள் கோபம் கொண்டுள்ளனர் அது அவர்களுக்கு உதவாது. மனிதாபிமான அடிப்படையில் அனைத்து உதவியும் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது, அப்படியும் அவர்கள் உங்களிடம் பொய்தான் பேசுவர். இப்பகுதியில் ஒரு இடத்திலும் தாலிபன்கள் இல்லை என்று கூறுவர்; நீங்கள் சற்று, அவர்கள் வீட்டிலிருந்த 10 அடி நகர்ந்தால், மீண்டும் தாக்கப்படுவீர்கள்."

இதேபோன்ற மன உணர்ச்சிகள்தான் பிரிட்டஷ் துருப்புக்கள் ஆகஸ்ட் மாதம் ஆப்கானிய ஜனாதிபதி தேர்தலின்போது ஹெல்மாந்து மாநிலத்தில் சாங்கின் மாவட்டத்தில் பணி புரிந்து வந்த பிரிட்டிஷ் துருப்புக்களிடம் இருந்தும் வெளிவந்தன என்று அக்டோபர் 3ம் தேதி டைம்ஸ் தெரிவித்துள்ளது. இரண்டாம் ரைபிள்ஸ் என்னும் அப்பிரிவு ஏப்ரல் மாதத்திலிருந்து மொத்தம் இருந்த 500 பேரில் 100 பேருக்கும் மேல் இறப்பு அல்லது காயம் அடைந்ததைக் கண்டுள்ளது. இந்த இறப்பு விகிதத்தை இரண்டாம் உலகப் போரின் இறுதி ஆண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆழ்ந்த போர்களின் போது நடந்துள்ளதுடன் கட்டுரை ஆசிரியர் ஒப்பிட்டுள்ளார்.

பிரிட்டஷ் தளத்தின் வளாகச் சுவர்களிலிருந்து அருகில் 500 மீட்டர்களுக்குள் ரோந்துகள் தாக்கப்படுகின்றன; ஆனால் வர்டக் மாநிலத்தில் நடப்பது பொல், ஹெல்மாந்த் துருப்புக்கள் அபூர்வமாகத்தான் தாலிபன் எழுச்சியாளர்களை எதிர்கொள்ளகின்றனர்; தாலிபன்கள் இவர்களுடைய சிப்பாய்களை உள்ளுர் தயாரிப்பு தாக்குதல் வெடிப்பு பொருள்கள் (IED), நிலக்கண்ணிவெடிகள், sniper தாக்குதல் ஆகியவற்றின் மூலம் பெரும் சேதத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

ஒரு கோர்ப்போரல் கூறினார்: "இங்கு நாங்கள் முதலில் வந்தபோது, போதுமான வேலை இல்லை என்று புலம்பினோம். இப்பொழுதோ அந்த வார்த்தைகள் அனைத்தையும் மகத்தான முறையில் வாபஸ்பெறுகிறோம்." மற்றொரு இளைய சிப்பாய் கூறினார்: "இங்கிருந்து புறப்படுவதற்குள் எப்படி நான் தாக்குதலுக்கு உட்படமால் இருக்க முடியும் என்று எனக்கு தெரிவில்லை." "ரோந்துப் பணிக்கு எவரும் விருப்ப ஆர்வத்துடன் செல்வதில்லை என்றும் "வெற்றிபெற்று விடுவோம் என்ற கருத்துடைய ஒரு சிப்பாயும் இல்லை" என்று டைம்ஸ் நிருபரிடம் கூறியுள்ளார்.

9/11 நடந்த எட்டு ஆண்டுகளுக்கு பின்னர், "பயங்கரவாதத்தின் மீதான போர்" பிரச்சாரம் ஆவியாகிவிட்டது. ஒரு குருதி கொட்டும் எழுச்சி எதிர்ப்பின் முன்னணியில் ஒரு அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்தை முட்டுக் கொடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரே இலக்கிற்குத்தான் சிப்பாய்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பணத் தேவையின் கட்டாயத்தில் இராணுவத்தில் சேர்ந்தவர்கள். குறைவான ஊதியங்களுக்கான நிலைமைகள், பெருகிய வேலையின்மை என்ற சூழலில் இராணுவத்தில் சேர்வது என்பது ஒரு உத்தியோகம், போதுமான வருமானம் ஆகியவற்றை பெறுவதற்கு மிகச் சில வழிகளில் இளைஞர்களுக்கு இதுவும் ஒன்றாகும்.

போர்களின் சட்டவிரோத நெறியற்றதன்மை ஐயத்திற்கு இடமின்றி ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் போர்புரிந்து வீடுகளுக்கு திரும்பும் மூத்த சிப்பாய்களின் உளரீதியான நோய்களுக்கு காரணம் ஆகும். போரில் பணிபுரிந்துள்ளவர்களில் 20 முதல் 30 சதவிகிதத்தினர் வரை மிகப் பெரும் அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தக் கோளாறினால் (PTSD) ஓரளவு பாதிக்கப்பட்டுவிட்டனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தற்கொலை, வீடற்ற தன்மை, பொருட்களை தவறாகப் பயன்படுத்துதல், குற்றம் இழைத்தல் மற்றும் சிறைத் தண்டனை என்று மூத்த சிப்பாய்களிடையே ஏற்படுத்துகின்றன.

ஆச்சரியப்படும் வகையில் முன்னாள் பிரிட்டிஷ் சிப்பாய்கள் 20,000 பேர் சிறையில் உள்ளனர், அல்லது ஜாமினில் வெளியே உள்ளனர்; கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் இராணுவ சிப்பாய்களான கைதிகள் என்ற விகிதம் 30 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. பிரிட்டனின் ஜாமின் அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி Harry Flectcher கார்டியனிடம் கடந்த மாதம் கூறினார்: "இராணுவ சிப்பாய்கள் பதவியில் இருந்து நீங்கிய பின்னர் உரிய திறமையுடன் கூடிய ஆதரவு அவர்களுக்கு கிடைப்பதில்லை என்பதற்கு பெரும் சான்றுகள் உள்ளன. மிகப் பெரும் அதிர்ச்சிக்குப் பின்னான மனஅழுத்தக் கோளாறு (PTSD), மனத் தளர்ச்சி ஆகியவற்றின் அதிகரிப்பும் கூட அபாய அறிவிப்பாக இருக்கிறது."

British Mirror கொடுத்துள்ள எண்ணிக்கையின்படி, முன்னாள் பிரிட்டிஷ் இராணுவ சிப்பாய்கள் 67 பேர்கள் 2001 இருந்து ஆப்கானிஸ்தான், ஈராக்கிலிருந்து திரும்பிய பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்; மற்றும் 31 பேரின் இறப்புப்பற்றி உறுதி செய்யப்படவில்லை.

இந்த மாதம் முன்னதாக 28 வயது டைலன் கெம்ப், ஒரு ரோயல் மரைன் கமாண்டோ, ஆப்கானிஸ்தானில் ஏழு மாத கால தீவிர இராணுவ நடவடிக்கையிலிருந்து திரும்பிய பின்னர் தூக்கிலிட்டுக் கொண்டார். சாலையில் மட்டுமீறிய சீற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டர்; பல முறை அவருடைய பெண் தோழியை தாக்கியதாகவும் தெரிகிறது. அவருடைய நண்பர் Mirror இடம் கூறினார். "ஆப்கானிஸ்தான் கூர்முனை அவரைத் தடுமாற வைத்துவிட்டது. பல சிப்பாய்களும் அவரைப் போல் பெரும் குழப்பத்தில் முடிவர் என்பது தனக்கு உறுதி என்று ஒரு குறிப்பில் எழுதி வைத்துள்ளார். முழுமையான சீற்றத்தில் அவர் இருந்தார். அவருடைய மனக்காயங்கள் ஆறவில்லை."

இப்படிப் பணியிலுள்ள அமெரிக்க இராணுவ சிப்பாய்களிடையேயும் தற்கொலை விகிதம் தொடர்ந்து ஏறி வருகிறது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இராணுவத்தில் 117 தற்கொலைகளும் மரைன் குழுவில் 38ம் எண்ணிக்கையாகவும் உள்ளது; மற்றும் 35 இறப்புக்கள் விசாரணையில் உள்ளன. இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பிய 17.000 சிப்பாய்களில் அதிகமாக இருந்த மரைன் பிரிவில் தற்கொலை விகிதம் அந்த ஆண்டு 20 சதவிகிதம் உயர்ந்து விட்டது. தற்கொலை செய்து கொண்ட பெரும்பாலான மரைன்களும் தரைப்படையினர்களும் இரு போர்ப் பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் பணி புரிந்தவர்களாவர்.