World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The two Americas

இரண்டு அமெரிக்காக்கள்

Andre Damon and Joe Kishore
19 October 2009

Back to screen version

நிதிய நெருக்கடிக்கு ஓராண்டிற்குப் பின் கடந்த வாரம் வந்த இரு அறிக்கைகள் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் இயல்பை தெளிவுபடுத்துகின்றன.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் புதனன்று வந்த கட்டுரை ஒன்றின்படி ("Wall Street on Track to Award Record Pay"), 23 உயர்மட்ட வோல் ஸ்ட்ரீட் வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் இந்த ஆண்டு இழப்பீடு என்ற வகையில் மிக அதிகமாக, 140 பில்லியன் டாலர் --கடந்த ஆண்டு மிக அதிக உயர்வைவிட 10 பில்லியன் டாலர் அதிகம்-- கொடுக்கவுள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகள் ஊதியம் விரைவில் மீட்கப்பட்டது, "வலுவான பங்குச் சந்தை, கடன் சந்தை எளிதானது, உடன்பாடுகளின் எழுச்சி மற்றும் பல அரசாங்க உதவித்திட்டங்களின் தொடர்ச்சியான விளைவுகள் ஆகியவற்றால் மேலுக்குவந்துள்ளது" என்று பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

மிகப் பெரிய வங்கிகள் தங்கள் மூன்றாம் காலண்டு வருமானங்களை வெளியிட்ட நேரத்தில் பத்திரிகையின் கட்டுரை வெளிவந்துள்ளது. மிக அதிகமாக வணிகம் மற்ற ஊக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வங்கிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன; கோல்ட்மன் சாக்ஷ்ஸ் 3.2 பில்லியன் டாலர், JP Morgan Chase 3.6 பில்லியன் டாலர் இலாபம் என்று காட்டியுள்ளன.

வெள்ளியன்று USA Today ஒரு முதற்பக்க கட்டுரையை ("20 ஆண்டுகள் இல்லாத நிலைக்கு ஊதியங்கள் சரிகின்றன") வெளியிட்டது; அதில் அமெரிக்காவின் நிர்வாகம் சாரத் தொழிலாளர்களின் சராசரி வாதாந்திர ஊதியங்கள் இந்த ஆண்டு 1.4 சதவிகிதம் சரிந்ததாக கூறப்பட்டுள்ளது. ஊதியங்கள் இந்த விகிதத்தில் குறையத் தலைப்பட்டால் அது 1991ல் இருந்து தீவிரச் சரிவாக ஆகும்.

"ஒரு மந்த நிலையில் ஊதியங்கள்தான் அநேகமாக கடைசியில் சரிவதாக இருக்கும்" என்று Economic Policy Institute ன் பொருளாதார வல்லுனர் USA Today இடம் கூறினார்: "ஆனால் இது இப்பொழுது நடந்துள்ளது; ஊதியங்கள் நீண்ட காலத்திற்கு குறைந்த நிலையில் இருக்கக்கூடும்."

மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொண்டிருக்கும் சமூக நெருக்கடி பற்றி இந்த அறிக்கை ஒரு குறிப்புத்தான் காட்டுகிறது. உத்தியோகபூர்வ வேலையின்மை 10 சதவிகிதத்தை நெருங்குகிறது; உண்மை வேலையின்மை இன்னும் அதிகமாக இருக்கும். வேலை கொடுப்பவர்கள் நலிந்த தொழிலாளர் சந்தையை பயன்படுத்தி நலன்கள், பணி நேரத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தொடரக்கூடிய இந்த போக்கை தொடக்கியவிதத்தில் கடந்த வாரம் கோலோரடோ, 1938 கூட்டாட்சி சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து முதல் தடைவையாக குறைந்தபட்ச ஊதியத்தை இன்னும் குறைத்த முதல் மாநிலமாக அது ஆயிற்று.

ஒரு புறத்தில் மிக அதிக வோல் ஸ்ட்ரீட் இலாபங்கள், உயரும் பங்குச் சந்தை ஆகியவை, மறுபுறத்தில் பெருகிய வேலையின்மை, ஊதியச் சரிவுகள் மற்றும் பெருகும் சமூக இடர்பாடுகள் ஆகியவை ஒபாமா நிர்வாகத்தின் தாராளவாத ஆதரவாளர்களை இப்போக்குகளின் சமூக மற்றும் அரசியல் உட்குறிப்புக்கள் பற்றி கவலையை வெளியிடத் தூண்டியுள்ளன.

பல வர்ணனையாளர்கள் வோல் ஸ்ட்ரீட் ஒரு சமூக மனச்சாட்சியை வளர்த்துக் கொண்டால் ஒழிய, ஒபாமா இன்னும் "அதிக முதுகெலும்பு உடைய தன்மையை" காட்டினால் அன்றி, "இரு அமெரிக்காக்களுக்கு இடையே" இருக்கும் வேறுபாடுகள் பெரும் வெடிப்புத் தன்மை விளைவுகளைக் கொடுக்கும் என்று எச்சரித்துள்ளனர். இத்தகைய முறையீடுகள் அமெரிக்க, உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உண்மைத் தன்மையையும் அமெரிக்க நிதிய பிரபுத்துவத்தின் பிரதிநிதி என்ற முறையில் ஒபாமா நிர்வாகத்தின் பங்கையும் புறக்கணிக்கின்றன.

முழு உலகப் பொருளாதாரமும் மக்களின் ஒரு மிகச் சிறிய அடுக்கின் நலன்களுக்கு தாழ்த்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டுண்ணித்தன நிதிய உயரடுக்கின் நலன்கள் சமூகத்தில் உற்பத்தி செய்யும் பிரிவுகளின், முக்கியமாக தொழிலாள வர்க்கத்தின் இழப்பில்தான் உறுதிபடுத்தப்பட முடியும்.

கடந்த ஆண்டு நிதிய நெருக்கடி வெடித்த போது, அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு மகத்தான முறையில் பொது இருப்புக்களை வங்கிகளுக்கு அளித்தல் ஒன்றுதான் பெரும் சரிவில் இருந்து நிலைமையைக் காப்பாற்றும் என்பது தெளிவாயிற்று. லெஹ்மன் பிரதர்ஸின் வீழ்ச்சி வேண்டுமென்று நடத்தப்பட்ட ஒரு பிரச்சாரத்துடன் பிணைந்துள்ளது. அதற்கு புஷ் நிர்வாகம் தலைமை தாங்கியது; அப்பொழுது ஜனாதிபதி வேட்பாளராக இருந்த ஒபாமாவின் ஆதரவிற்குட்பட்டு, பீதி சூழலை உருவாக்க முற்பட்டது. இதன் நோக்கம் காங்கிரஸ் தொடர்ச்சியான பிணை எடுப்புக்களுக்கு உத்தரவு கொடுக்கும் விதத்தில் அரசியல் சூழலைத் தோற்றுவிப்பது ஆகும். நிதி அமைச்சரகமும் வோல் ஸ்ட்ரீட் கூறியபடி கேட்டு, டிரில்லியன் கணக்கான டாலர்கள் நிதிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன.

பெரிய வங்கிகள் அரசாங்கத்தின் பணத்தை பயன்படுத்தி மீண்டும் இலாப வழிவகைகளுக்கு வந்துவிட்டன; பங்குச் சந்தை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 50 சதவிகித உயர்வைக் கண்டுள்ளது. தங்கள் பணத்திற்கு ஆக்கபூர்வமான வழிகள் தெரியாமல் பணம் நிறைந்தவர்களால் பங்குச் சந்தை ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால் அதன் அசாதாரண வடிவமைப்பும் ஒபாமா நிர்வாகத்தின்மீது நம்பிக்கை வாக்கை வங்கியாளர்களும் பெரிய முதலீட்டாளர்களும் கொடுத்தது போல்தான்; அவர்கள் நிர்வாகம் தங்கள் நலன்களை காக்க முழு உறுதி கொண்டுள்ளது என்பதை உத்தரவாதமாக பெற்றுள்ளனர்.

இதில் வியப்பு ஏதும் இல்லை. நிர்வாகிகள் இழப்பீடுகள் மீது உச்சவரம்பு ஏதும் கூடாது என்ற அனைத்தையும் ஒபாமா எதிர்த்து, அரசாங்கத்தால் பிணை எடுக்கப்பட்டுள்ள வங்கிகள் உள்பட வங்கிகள் மீது நிதியக் கட்டுப்பாடு, தடைகள்போன்ற தீவிர சீர்திருத்தத்தையும் நிராகரித்துள்ளார். காங்கிரசில் AIG மற்றும் பிற நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பில்லியன் போனஸ் பணத்தை அதன் வணிகர்கள், நிர்வாகிகளுக்கு கொடுப்பதை நிறுத்த காங்கிரசில் கொண்டுவந்த மசோதாக்களை நிர்வாகம் தடுத்துவிட்டது.

அதே நேரத்தில் நிர்வாகம் அரசாங்கத்தின் பிணை எடுப்புத் திட்டங்களை விரிவாக்கம் செய்து தொடர்கிறது; இதற்காக 23 டிரில்லியன் டாலர்களை உத்தரவாதம் அளித்துள்ளது. இவ்வாறு செய்கையில் அது மிகப் பெரிய நிறுவனங்கள் "சரியக்கூடாத அளவிற்கு பெரியவை" என்ற உட்குறிப்பு உத்தரவாதத்தை விரிவாக்கியுள்ளதுடன், அவற்றின் மோசமான கடன்களும் ஒரு புதிய நெருக்கடி வந்தால் சமாளிக்கப்படும் என்று விளக்கியுள்ளது.

இந்த ஆதாரங்களுக்கான விலைகள் ஏதேனும் ஒருவிதத்தில் தொழிலாள வர்க்கத்தால் கொடுக்கப்படும். ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் திவால் தன்மையை ஒபாமா தொழிலாளர்கள் ஊதியங்கள் நலன்களில் தீவிரக் குறைப்புக்களை ஏற்க வேண்டும், அத்துடன் பல்லாயிரக் கணக்கான வேலைகள் அகற்றப்படுதலையும் ஏற்க வேண்டும் என்று நிர்பந்தித்து விரைந்து செயற்பட்டார். இதுதான் பெருநிறுவன அமெரிக்கா முழுவதற்கும் வெகுஜன வேலையின்மையை பயன்படுத்தி அதேபோன்ற நடவடிகைகளை செய்வதற்கு கொடுக்கப்பட்ட சமிக்கை ஆகும்.

மாநிலங்களுக்கு எந்தவித உதவியையும் கொடுக்க நிர்வாகம் மறுத்துவிட்டது; இதையொட்டி அவை தங்கள் தொழிலாளர் தொகுப்பைக் குறைத்து, கல்வி, சுகாதார பாதுகாப்பின் மீதான செலவுகளையும் குறைத்து பட்ஜெட்டை சமநிலைப்படுத்தும் கட்டாயத்திற்கு ஆளாயினர். கூட்டாட்சி மட்டத்தில் அரசாங்கம், சமூகத் திட்டங்கள் மீதான செலவுகளை குறைப்பதில் உறுதியாக உள்ளது; இதில் சுகாதாரப் பாதுகாப்பு முறைமுற்றிலும் மாற்றப்பட உள்ளது; அதன் நோக்கம் மெடிக்கேருக்கு ஆகும் நூற்றுக்கணக்கான பில்லியன்கள் டாலர் செலவை அகற்றுவது ஆகும்.

நிதி மந்திரி டிமோதி கீத்னர் இக்கருத்தை வெள்ளியன்று அமெரிக்கா "அதன் வரவிற்குள் வாழ வேண்டும்" என்று கூறிய விதத்தில் வலியுறுத்தினார். பெரும்பாலும் வங்கிப் பிணை எடுப்புக்களால் விளைந்த 1.4 டிரில்லியன் டாலர் பற்றாக்குறை என்று உயர்ந்த அளவில் இருக்கும் தன்மைக்கு பதிலிறுக்கும் முகமாக--மற்றும் டாலரின் மீது உலக நம்பிக்கையைக்காப்பாற்றும் விதத்தில் கீத்னர் கூறினார்: "ஜனாதிபதி காங்கிரஸுடன் இணைந்தவிதத்தில் [பற்றாக்குறைகளை] தாக்குப் பிடிக்ககூடிய மட்டத்திற்கு குறைக்க உழைப்பார்...." இதன் பொருள் மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும் சமூக நலத்திட்டங்களில் வெட்டு விழும் என்பதுதான்.

தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு பின்வரும் இரண்டை கட்டாயம் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; 1) ஒபாமா நிர்வாகம் மற்றும் இரு கட்சி முறையுடன் ஒரு அரசியல் முறிவும், அவற்றை எதிர்த்துப் போராட்டமும்; மற்றும் 2) நேரடியாக நிதிய உயரடுக்கையும் அது தளமாக கொண்டுள்ள முதலாளித்துவ முறையையும் நேரடியாகத் தாக்கும் வேலைத்திட்டம்.

இதற்கு, மோசடித்தனம், ஒட்டுண்ணித்தனம் என்று செல்வத்தை குவித்துள்ள நிதியப் பிரபுத்துவத்தின் செல்வத்தை அந்த அடுக்கின் மீது மகத்தான வரிவிதிப்பை அதிகரிப்பதன் மூலம் செல்வத்தை பறிமுதல் செய்வது தேவைப்படும். சமூகத்தின் பொருளாதார நெம்புகோல்கள் மீதான கட்டுப்பாடு தனியார் கரங்களில் இருந்து அகற்றப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்; அதையொட்டி அவை பெருநிறுவன இலாபங்களையும் கூடுதலான செல்வந்தர்களுக்கு அதிக இலாபத்தையும் உற்பத்தி செய்வதற்கு பதிலாக சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்பட முடியும்.

இந்த நெருக்கடியில் இருந்து ஒரு படிப்பினை கட்டாயம் கற்றுக் கொள்ளப்பட முடியும் என்றால், அது அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்க்கத்தின் நலன்கள் தற்போதைய பொருளாதார அரசியல் முறையின் வடிவமைப்பிற்குள் முன்னேற்றுவிக்கப்பட முடியாது என்பதேயாகும். முதலாளித்துவத்தின் ஒரே மாற்றீடான சோசலிசத்திற்காக போராடுதல் தேவையாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved