World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்குThe politicization of the British military பிரிட்டிஷ் இராணுவம் அரசியலாக்கப்படுதல் Chris Marsden சமீப காலம் வரை இராணுவத்தின் தலைவராக இருந்த தளபதி சேர் ரிச்சர்ட் டான்னட், தான் பிரபுக்கள் சபையில் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களுடன் உட்கார இருப்பதாகவும், ஒரு வருங்கால டோரி அரசாங்கத்தில் சேரவிருப்பதாகவும் அறிவித்துள்ளது பிரிட்டனில் இராணுவம் அரசியலாக்கப்படுவதின் மற்றொரு தீவிர வெளிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. 2006ல் டான்னட் பொதுப் படைகளின் தளபதியாக (CGS) நியமிக்கப்பட்டார். அப்பதவி முக்கியத்துவத்தில் இராணுவத்திற்குள் பாதுகாப்புப் படைத் தலைவர் என்னும் தலைமைப் பதவிக்கு அடுத்தது ஆகும். அவர் ஆகஸ்ட் 28ல் அப்பதவியில் இருந்து ஓய்வுபெறவே, அவரைத் தொடர்ந்து தளபதி சேர் டேவிட் ரிச்சர்ட்ஸ் அப்பதவியை ஏற்றார். டான்னட் இப்பொழுது Tower of London இன் constable என்ற பதவியை வகிக்கிறார்; இந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி Royal United Services Institute இன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும் உத்தியோகபூர்வ பதவிகளை வகிக்கையில், ஓய்விற்குப்பின் வெகு விரைவாக கன்சர்வேட்டிவ் கட்சியில் அவர் சேர இருக்கும் முடிவு, இராணுவத்தினர், இராணுவக் கொள்கையை தீர்மானிக்கும் அரசாங்கச் செயற்பாட்டில் தலையிட மாட்டார்கள் என்ற ஜனநாயகக் கொள்கையை மீறுவது ஆகும். கடந்த வாரம் கன்சர்வேட்டிவ் மாநாட்டில் கட்சித் தலைவர் டேவிட் காமரோனால் டானட்டின் அடுத்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்கட்சி பிரதம மந்திரி கோர்டன் பிரெளனை அவமானப்படுத்த வேண்டும் என்ற இந்த நடவடிக்கை, பிரிட்டனின் இராணுவத்திற்கு பெரும் அரசியல் சங்கடம் என்று நிரூபணமாகியுள்ளது. இராணுவம் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தது; தளபதி குத்ரி பிரபு, முன்னாள் இராணுவத் தளபதி டானட்டை கன்சர்வேடிவ் உத்தரவை ஏற்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இராணுவ ஆதாரங்கள் டானட் இராணுவ அமைச்சரகத்தில் பதவி ஏற்பது அவருக்குப் பிந்தையவர் ரிச்சார்ட்ஸ் மற்றும் இராணுவப் பொதுத் தலைவர் விமானப் படைத் தலைமை மார்ஷல் சேர் ஜோக் ஸ்ட்ரப் இருவருடனும் மோதல்களை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. எப்படி இருந்தபோதிலும், டான்னட் சிறிதும் மன்னிப்புக் கோரும் நிலையில் இல்லை; காமரோனும் அவ்வாறேதான் இருக்கிறார். இந்த வாரம் ஒரு உரையில் அவர் காமரோனுடைய அழைப்பை ஏற்பதற்கு "ஒரு அழகிய ஆண்டு" காத்திருக்க முடியாது என்றும் அதற்குக் காரணம் "ஆப்கானிஸ்தானத்தில் பணி உண்மையில் மிக அவசரமான நிலையில் உள்ளது" என்பதாகும் என்றார். இதன் பின் அவர் தான் சமீபத்தில்தான் காமரோனால் அணுகப்பட்டதாகவும், தன்னுடைய முடிவு "ஒரு நீண்ட காலத் திட்டம், பல காலமாக நாங்கள் தயாரித்துவருவது" என்ற கருத்தை நிராகரித்தார். இந்த மறுப்பில் அதிக முக்கியத்துவம் இல்லை. டோனி பிளேயர் மற்றும் கோர்டன் பிரெளன் அரசாங்கங்களை பற்றி அவற்றின் ஈராக், ஆப்கானிஸ்தான் கொள்கைகள் பற்றி 2006ல் அவர் நியமிக்கப்பட்டதில் இருந்து, தொடர்ந்து, உரக்கக் குறைகூறும் நபராகத்தான் டான்னட் இருந்துள்ளார். CGS ஆன இரண்டு மாதங்களுக்குள்ளேயே Daily Mail க்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் இரண்டு ஆண்டுகளுக்குள் ஈராக்கில் இருந்து படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று, அப்பொழுது உத்தியோகபூர்வ அரசாங்கக் கொள்கைக்கு நேரடியான எதிர்வகையில் அழைப்புவிடுத்தார். இதே பேட்டியில், ஒரு காலத்தில் மத குருவாக வந்திருக்க விருப்பம் கொண்டிருந்த, ஒரு ஆங்கிலிக நற்செய்தியாளரான டான்னட், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போரிட ஒரு தேசிய கிறிஸ்துவப் புதுப்பித்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். "இஸ்லாமிய அச்சுறுத்தல் இந்த நாட்டில் இருக்கும் அறநெறி, ஆன்மிக வெற்றிடத்தால்" பெரிதாகிவிட்டது; இதற்குக் காரணம் "கிறிஸ்துவ மதிப்புக்களின்" சரிவு என்றார். "பரந்த ஜுடாயிச-கிறிஸ்துவ மரபு பிரிட்டிஷ் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கிறது. இது பிரிட்டிஷ் இராணுவத்திலும் உள்ளது" என்று அவர் சேர்த்துக் கொண்டார். ஈராக்கில் இருந்து விரைவில் படைகள் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவருடைய கிறிஸ்துவ புனிதப் போர் பற்றிய குறிப்பும் முக்கியமானவை. அவருடைய நம்பிக்கையான பிரிட்டனும் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானில் "வெற்றி அடையக்கூடிய போர்" என்று கருதப்படுவதின்மீது கவனக்குவிப்பை மாற்ற வேண்டும் என்பதில் உந்துதுதல் பெற்றுள்ளது. பிந்தைய ஆண்டுகளில் அவர் பலமுறை பிரெளன் அரசாங்கத்தை ஆப்கானிஸ்தானில் இராணுவ நிலைப்பாடு குறைவாக இருப்பதற்கு பகிரங்கமாக குறைகூறியுள்ளார். டோரி மாநாடு நடந்து கொண்டிருக்கையில், ரூபேர்ட் மொர்டோக்கின் Sun, மற்றும் BBC யிடம். மந்திரிகள் கருவிகள் அளிப்பதை தாமதப்படுத்திவிட்டனர் என்றும் பிரெளன் ஆப்கானிஸ்தானில் துருப்புக்கள் எண்ணிக்கை இன்னும் 2,000 அதிகரிக்கப்படுவதற்கு நிதிய கஷ்ட நிலையை காட்டி மறுத்துவிட்டதாகவும் கூறினார். இராணுவத்தில் ஆப்கான் மீதான தாக்குதலை அதிகரிக்க வேண்டும், அரசாங்கத்தின் தோல்வி எனக் கருதப்படும் செயல்களுக்கு எதிராக மக்களின் தாக்குதல்களை தொடக்குதில் இராணுவத்தின் செல்வாக்கை முடுக்கிவிடுவதில் டான்னட் மட்டுமே இருக்கவில்லை. இவருடைய குறைகூறல்களுக்கு ஓய்வு பெற்ற தளபதிகளிடம் இருந்தும் ஆதரவு கிடைத்தது; அவற்றுள் ஒரு முன்னாள் பாதுகாப்பு படைகள் தலைவர் பீல்ட் மார்ஷல் பிரமல் பிரபுவும் அடங்குவார். கடந்த மாதம் மேஜர் ஜெனரல் ஆண்ட்ரூ மக்காய் திடீரென இராஜிநாமா செய்தார்; இது அரசாங்கத்திற்கு சங்கடம் விளைவிக்கும் தெளிவான நோக்கத்தைக் கொண்டிருந்தது. செப்டம்பர் 3ம் தேதி பல்கிர்க் தொகுதி தொழிற்கட்சி எம்.பி.யான எரிக் ஜோய்ஸ், ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி, பாதுகாப்பு செயலர் பாப் ஐன்ஸ்வொர்த்தின் பாராளுமன்ற ஆலோசகர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்தார். ஜோய்ஸ் தன்னை டான்னட்டுடன் பிணைத்துக் கொண்டு, BBC யிடத்தில் தனக்கும் மற்ற மூத்த அதிகாரிகளுக்கும் "அரசியல் நோக்கங்கள் இருப்பதாகக் கூறுவது", ஒரு "பெரிய தவறு" என்றார். இந்த மாற்றங்களின் தெளிவான எதிரொலிகள் அமெரிக்காவிலும் உள்ளன; அங்கு ஆப்கானிஸ்தானில் உயர் தளபதியாக இருக்கும் ஸ்டான்லி மக்கிரிஸ்டல் பல வாரங்களாக இன்னும் 40,000 கூடுதல் துருப்புகளை அனுப்புவதற்கு ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட வேணடும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார். காமரோனின் அறிவிப்பு பற்றிய பல செய்தி ஊடகக் குறைகூறல்கள் டான்னட் தவிர்க்க முடியாமல் நியமிக்கப்பட உள்ளார் என்பதினால் வெளிப்படையாக உந்துதல் பெற்று, அரசியல் உயரடுக்கினால் காட்டிக் கொடுக்கப்பட்ட துருப்புகள் பற்றிய அக்கறையால் எடுத்துரைக்கும் "கெளரவமான மனிதர்" என்று கவனமாக வளர்க்கப்பட்டிருக்கும் தோற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன. Daily Mail ல் எழுதிய Max Hastings, "தொழிற்கட்சி, தளபதி டான்னட்டின் தாக்குதலை எதிர்த்து நிற்கும் வகையில் அவர் "டோரியின் கைக்கூலி" என்று உதறித்தள்ளிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்வது: "ஒரு கெளரவமான மனிதரைப் பற்றி இது ஒரு மட்டரகமான தாக்குதல்; எவரையும் இது கவரவில்லை. ஆனால் ஒரே அடியில் அவர் அரசாங்கத்தின் நேரடி பார்வையில் விழுந்து, தன்னுடைய நம்பகத்தன்மைக்கும் தீவிர சேதத்தை ஏற்படுத்தி விட்டார்." டான்னட்டிற்கு மிகவும் தாழ்ந்த முறையில் வக்காலத்து Guardian இடம் இருந்து வந்துள்ளது. மத்தியதர வர்க்க தாராளவாதிகளின் பெயரளவுக் குரலாக இருக்கும் இது முறையாக தொழிற்கட்சிக்கு ஆதரவை இன்னும் கொடுக்கிறது. ஆனால் உண்மயில் அது பிரதிபலித்துப் பேசும் செல்வம் கொழிக்கும் அடுக்குகளுடன் வலதுபுறத்திற்குத்தான் பாய்ந்து கொண்டிருக்கிறது; டோரிகள் புறம் மாறுவதற்கு தன் விருப்பத்தையும் குறிப்பிட்டுள்ளது. "தளபதியின் சீற்றம் உண்மை என்றாலும், அவருடைய வாதம் வலுவனாது, ஆனால் அவர் தவறாக முன்வைத்துள்ளார்" என்று குறைகூறியுள்ளது. "இராணுவத்தை திரு பிரெளன் முறையாக நடத்தியுள்ளார் என்று எவரும் நினைக்கவில்லை. ஆப்கானிஸ்த்தான் பற்றி சேர் ரிச்சார்ட்ஸின் எச்சரிக்கை ஒரு தேசிய உணர்வுத் தன்மையில் இழையோடுகிறது. அவர் விரும்பினால் கன்சர்வேட்டிவ்களுடன் உழைக்கும் உரிமை அவருக்கு உண்டு... ஆனால் அத்தகைய உரத்த பிரச்சாரத்தினால் அவர் இராணுவத்தை அரசியல்படுத்தித் தீமைக்கு உட்படுத்துகிறார்; அதன் நலன்களை அவரோ முற்றிலும் உணர்ந்தவர், பெருமிதத்துடன் அதை காக்க வேண்டும் என்று விரும்புகிறவர்" என்று முடிவுரையாக கூறியுள்ளது. தொழிற்கட்சி இதை எதிர்கொண்டவிதம் பெரிதும் குறைந்த தன்மையில் இருந்தது. ஒரே ஒரு தொழிற்கட்சி பிரபுதான், ஜோர்ஜ் போக்ஸ் "டான்னட் இப்பொழுது டோரி கட்சியுடன் எத்தனையோ காலமாக ஒத்துழைத்து, அவர்களுடன் நெருக்கமான உறவுடன் பணிபுரிந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளார்" என்று நேரடியாகக் கூறியுள்ளார். அரசாங்கம் இராணுவத்தில் அது பற்றி குறைகூறுபவர்களுடன் மோதல் கொள்ளுகிறது என்ற விதத்தில் தன்னைக் காட்டிக் கொள்ள முடியாது; காட்டிக் கொள்ளவும் செய்யாது. ஆனால் பிரெளன் இந்த வாரம் ஆப்கானிஸ்தானிற்கு இன்னும் கூடுதலாக 500 துருப்புக்களை அனுப்புவதாக உறுதியளித்துள்ளார். இது செயல்படுத்தப்பட்டுவிட்டால், கடந்த ஆண்டில் இருந்து துருப்புக்கள் அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கை 1,700 ஆகும். ஆப்கானிஸ்தானில் இன்னும் கடுமையான இராணுவ நடவடிக்கை வேண்டும் என்று கூறுபவர்களின் அரசியல் தாக்குதலுக்கு தொழிற்கட்சி இப்பொழுது இலக்காகியுள்ளது; ஆனால் அதுதான் இந்த போக்கிற்கு நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக் படையெடுப்புக்களை புஷ் ஜனாதிபதி காலத்தில் தொழிற்கட்சிதான் ஒத்துழைத்தது. மகத்தான மக்கள் எதிர்ப்பை மீறி அது அவ்வாறு செய்தது; அதே நேரத்தில் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை அடிப்படை ஜனநாயக உரிமைகளை சிதைக்கும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கு பயன்படுத்திக் கொண்டது. வென்று கைப்பற்றும் காலனித்துவ வகை போர்களுக்கு மாற்றம் என்பது உலகின் மூலோபாய இருப்புக்கள், எண்ணெய், எரிவாயு போன்றவற்றை பெரும் சக்திகள் தங்களுக்குள் பிரித்துக் கொள்ள போட்டியிடுவதில் உந்துதல் பெற்றுள்ளது. இது ஒரு குறுகிய பெரும் செல்வ உயரடுக்கு இன்னும் அதிக தனிச் சொத்துக்களை அடைய வேண்டும் என்று கொண்டிருக்கும் உந்ததுதலுடன் பிணைந்துள்ளது. உலகப் பொருளாதாரச் சரிவு மற்றும் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடேயே ஆழ்ந்த பிளவு என்ற நிலையில், அத்தகைய செயற்பட்டியல் பெரும்பான்மை மக்களை நேரடியாக பலியிட்டுத்தான் செயற்படுத்தப்பட முடியும் என்றநிலையில், ஜனநாயக ஆட்சி வடிவங்களை பராமரிப்பதுடன் இயைந்துபோகமுடியாது. இதன் நிகர விளைவு இராணுவம் அரசியல்மயம் ஆக்கப்படுவது என்பது மட்டும் இல்லை. இன்னும்சொல்லப்போனால், சுரண்டலின் மட்டங்கள் என்றுமிராத வகையில் மோசமாகாதிருக்க மற்றும் அடிப்படை பணிகளின் மீதான தாக்குதல்கள் திணிக்கப்படக்கூடியதாக இல்லாதிருக்க, "நாடு" என்பது முதலாளித்துவ ஏகாதிபத்திய அபிலாசைகளின் பணியில் வைக்கப்படாதிருக்க சமூகமும் அரசியல் வாழ்வும் இராணுவமயமாகின்றன. |