WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
Norwegian pension fund breaks silence on Volkswagen-Porsche takeover
scandal
வோல்க்ஸ்வாகன்-போர்ஷ் எடுப்பு ஊழலில் நோர்வேஜிய ஓய்வூதிய நிதி மெளனத்தைக்
கலைக்கிறது
By Patrick Richter
15 October 2009
Use this version
to print | Send
feedback
வோல்க்ஸ்வாகன் மேற்பார்வை குழுவிற்கு எழுதிய பகிரங்கக் கடிதத்தில் நோர்வேயின்
அரசாங்க ஓய்வூதிய நிதி, Norges Bank
Investment Management, போர்ஷை வோல்க்ஸ்வாகன்
எடுத்துக் கொண்டதை கடுமையான குறைகூறலுக்கு உட்படுத்தியுள்ளது. பல மாதங்கள் செய்தி ஊடகங்கள், பல
வல்லுனர்கள், அரசியல் வாதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் மெளனத்திற்குப் பின்னர் முதல் தடவையாக ஒரு எளிய
கேள்வி பகிரங்கமாகக் கேட்கப்பட்டுள்ளது: தன்னலக்குழு பிரிவைச் சேர்ந்த
Piech/Porsche
ஐ அதன் ஊகத் தோல்வியில் இருந்து வோல்க்ஸ்வாகன் மீட்டு அதற்கு ஒருவேளை 4.5 பில்லியன் யூரோக்களையும்
கொடுத்துள்ளது?
நோர்வே நாட்டின் அரசாங்க ஓய்வூதியம் பெரிய சர்வதேச முதலீட்டு அறக்கட்டைகளில்
ஒன்றாகும்; இது கிட்டத்தட்ட 310 பில்லியன் யூரோக்களை நிர்வகித்து, நாட்டின் எண்ணெய் வருமானத்தில் இருந்து
நிதியைப் பெறுகிறது. இது Norges Bank
என்னும் நோர்வீஜிய மத்திய வங்கிக்கு கீழ்ப்பட்டது என்றாலும், அதையொட்டி அரசாங்கக் கட்டுப்பாட்டிற்கு
உட்பட்டது என்றாலும், அது முற்றிலும் முதலாளித்துவ அளவுகோல்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறது. தற்பொழுது
அது 270 பில்லியன் யூரோக்களை வோல்க்ஸ்வாகன் பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
இக்கடிதத்தில் இந்த பெரிய அளவில் பங்குகளை வைத்திருக்கும் அமைப்பு
VW
மேற்பார்வைக்குழுவையும் Porsche
ன் கூட்டு உரிமையாளர் Ferdinand Piech
ஐயும் நலன்களில் தீவிர எதிர்ப்பு இருப்பதையும், நல்ல நிர்வாகத்தின் விதிகளை மீறுவதாகவும் குற்றம்
சாட்டியுள்ளது. "இக்கடிதத்தில், நாங்கள் மீண்டும் உங்களுக்கு ஏற்கத்தகாத வழக்கங்களுக்கு மேற்பார்வைக்
குழுதான் பொறுப்பு என்று கருதுவதை விளக்குகிறோம். ...நம்பிக்கைக்கு உரிய வாதங்கள் இல்லாத நிலையில்,
எங்களுக்கு Porsche
குடும்ப உரிமையாளர்கள் தங்கள் செல்வாக்கை (VW
மேற்பார்வைக் குழு மீது) செலுத்தி, Volkswagen
மற்றும் சிறுபான்மை பங்குதாரர்களின் இழப்பில்.தங்கள்
செல்வத்தை உறுதி செய்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.."
VW மேற்பார்வைக்குழு
வெளிப்படையற்ற தன்மையில் நடந்து கொள்வதாகவும், நன்கு அறியப்பட்டுள்ள உண்மைகளை ஆராயாமல்
Porsche ஐ
வாங்குவதற்கு ஒப்புதல் தந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Porsche
எடுத்துக் கொள்ளப்படுவதின் பகுதியாக, இரு முக்கிய வணிகங்கள் குறைகூறப்பட்டுள்ளது:
Porsche, Holding Salzburg
என்னும் கார் விற்பனை நிறுவனத்தை வாங்கியது, மற்றும்
Porsche கார் வணிகத்தை அதன் கடன்கள் உட்பட வாங்கியது
என்பவையே அவை. Managermagazine
கருத்தின்படி Salzburg
விற்பனை செயலும்
Porsche கார்த் தயாரிப்பு வணிகமும் முறையே 3.5
பில்லியன், 12.4 பில்லியன் யூரோக்களுக்கு வாங்கப்பட இருக்கின்றன.
கடிதம் மேலும் கூறுவது: "Volkswagen,
Porsche, Piech
குடும்பங்களுக்கு ஆதவு தருவதற்கு அவற்றின் தனியாக உரிமைப்பட்டிருந்த கார் விற்பனை நிறுவனம்
Porsche Holding Salzburg
விற்பனையில் ஆதரவு கொடுப்பதற்கு நியாயமாக காரணங்களை கொடுத்துள்ளது என்று நாங்கள் ஏற்கவில்லை. இந்த
திட்டமிட்டுள்ள வாங்குதல்களை எப்படி வாங்கும் விலை நிர்ணயிக்கப்பட்டது என்பதை அது காட்டும் வரை நிறுத்தி
வைக்குமாறும் கோருவதுடன், குறிப்பாக Porsche
உடைய பகுதி அளவு கடன்கள் VV
யால் எடுத்துக் கொள்ளப்படும் நிலையில், இந்த வாங்குதல் மூலோபாயம் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும்
கூறுகிறோம்."
"இந்தக் காரணங்களை ஒட்டி, இப்படி வாங்குதல் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல"
என்று கடிதம் விளக்குவதுடன், "தனிப்பட்ட மேற்பார்வைக்குழு உறுப்பினர்கள் தங்கள் விசுவாசத்தை
[VW க்கு]
எடுத்துக் கொள்ளும் திட்டத்திற்கு உடன்பட்டபோது பின்பற்றினரா என்ற வினாவும் எழுகிறது." "இதையொட்டி
எங்களுக்கு உள்ள விருப்புரிமைகளை நாங்கள் பயன்படுத்துவோம்" என்றும் நோர்வீஜியன் நிதி வெளிப்படையாக
அச்சுறுத்தியுள்ளது. அதாவது, மேற்பார்வைக்குழு உறுப்பினர்களை இழப்பீடு மற்றும்/அல்லது நிதிய விசாசமின்மைக்
குற்றச்சாட்டிற்கு உட்படுத்துதல் ஆகும்.
Volkswagen பங்குதாரர்களில்
அதிக சிறு அளவு பங்கு வைத்திருக்கும், DWS
Investment GmbH உடைய நிதி மேலாளர்,
Henning Genbardt
, இதேபோல் பகிரங்கமாக நார்வீஜிய ஓய்வூதிய நிதியின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்; அவர்
Handelsblatt
இடம் கூறுவது:
DWS "இதுவரை எப்படி
Porsche க்கு
Volkswagen 12.4
பில்லியன் யூரோக்கள் மதிப்பைக் கொடுத்துள்ளது என்பது பற்றிய தகவல்
இல்லை." தன்னுடைய நிலையைச் சுருக்கிக் கூறுகையில்,
Handelsblatt,
Salzburg Holding
ஐ எடுத்துக் கொள்ளுவது "இன்னும் பெருமளவிற்கு மூடிய புத்தகமாகத்தான் உள்ளது."
அரசியல் வாதிகள், செய்தி ஊடகங்களின் மெளனம்
இதுவரை நோர்வேயின் கடிதம் ஒன்றுதான் வோல்க்ஸ்வாகன்-போர்ஷ் உடன்பாட்டிற்கு
பகிரங்க குறைகூறல் ஆகும்; உடன்பாடோ ஒரு தன்னலக்குழு குடும்பம் அனைவரும் காணுமாறு தடையற்ற செல்வக்
கொழிப்பாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. மற்ற செய்தித்தாட்கள் நோர்வீஜியனின் விமர்சனத்தை தகவல் கொடுத்து,
ஓய்வூதிய நிதி கடிதத்தில் இருந்து மேற்கோளிட்டாலும், எதுவும் இந்த நிதிய சூழ்ச்சிகளில் இருக்கும் நலன்களை வெளிக்
கொண்டுவரவில்லை, இந்த செல்வக்கொழிப்புக் களியாட்டத்தின் விவரங்களையும் அம்பலப்படுத்தவில்லை. செய்தி
ஊடகங்களோ, எந்தக் கட்சியின் அரசியில் வாதிகளோ, வல்லுனர்களோ, பேராசிரியர்களோ, ஒருவேளை குற்றம்
சார்ந்த விசாரணை என்ற பிரச்சினை ஒருபுறம் இருக்க, இதுவரை
Porsche/Piech
குடும்பங்களின் நடவடிக்கைகள் பற்றி குறைகூறவில்லை.
தற்கால சமூக நிலைமையின் உண்மைத் தன்மையை இது அம்பலப்படுத்திவிடக்கூடும் என்ற
அச்சம் மிக அதிகமாக உள்ளது.
Volkswagen-Porsche உடன்பாடு ஜேர்மனிய கூட்டாட்சிக்
குடியரசின் நிறுவன 60வது ஆண்டு விழாவில் ஆற்றப்பட்ட உரைகளின் பின்னணியில் என்ன உள்ளது என்பதைக்
காட்டுகிறது: அதாவது ஒரு வர்க்க சமுதாயத்தில் உற்பத்திசாதனங்களில் தனியார் உடைமையானது நிதிய
பிரபுத்துவத்தின் செல்வக் கொழிப்பிற்கான வாய்ப்புக்கள்மீது தடையற்ற அதிகாரத்தைக் கொடுக்கிறது என்பதே
அது.
கடந்த 12 மாதங்களில் நடத்தப்படும் போக்கரை
(Poker)
எடுத்துக் கொள்ளும் கண்கவர் விளையாட்டில் என்ன நடந்தது என்பதை எவரும் அறியாமல் இருக்க முடியாது; இது
Porsche
நடைமுறையில் திவால் ஆனதில் முடிந்தது; இப்பொழுது அது
Volkswagen ஐ
கொள்ளையடிப்பதில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
100 சதவிகிதம்
Porsche, Piëch குடும்பங்களின் உடைமையாக இருக்கும்
Porsche,
2008 ல்11,500 தொழிலாளர்கள் தொகுப்புடன் 100,000 கார்களைத் தயாரித்து, மெதுவாக பெரிய
Volkswagen
நிறுவனத்தின் பங்குகளை 2005ம் ஆண்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்தது.
VW 325,000
ஊழியர்களைக் கொண்டுள்ளது, ஆண்டு ஒன்றுக்கு 6 மில்லியன் கார்களைத் தயாரிக்கிறது.
அக்டோபர் 2008ல்
Porsche தான்
VW யில் 51
சதவிகித பங்குகளைக் கொண்டுள்ளதாகவும் இன்னும் 25 சதவிகிதத்திற்கு விருப்புரிமை இருப்பதாகவும் அறிவித்தது.
நிறுவனத்தின் பங்கு மதிப்பு--2005ல் 50 யூரோக்களாக இருந்தது, அக்டோபர் 2008 ஐ ஒட்டி 200
யூரோக்களுக்கும் மேலானது--இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வெடித்து குறுகிய காலத்திற்கு 1,000
யூரோக்களைத் தொட்டது. இதன் பின்னணியில் லோயர் சாக்சனி அரசு
Volkswagen ல்
20 சதவிகிதப் பங்கைக் கொண்டிருந்த உண்மை இருந்தது; இதனால் நிறுவனத்தில் 5 சதவிகித பங்குகள்தான்
சுதந்திரமாக விற்பனையில் இருந்தன. பல வங்கிகளும் இக்காலக்கட்டத்தில் பல பில்லியன்கள் இழப்பை
அடைந்ததாகக் கூறப்படுகிறது; ஏனெனில் அவர்கள் வோல்க்ஸ்வாகன் பங்கு மதிப்புக்கள் சரியும் என்று
ஊகித்திருந்தனர். இதுதான் சிறிது காலத்திற்குப் பிறகு பில்லியனர்
Adolf Merckler
தற்கொலை செய்து கொண்டதற்கும் காரணம் ஆகும்.
அந்த நேரத்தில் தான் 2008 இறுதிக்குள் கட்டுப்பாடு, இலாபம் நீக்கல்
ஒப்பந்தத்தை நாடுவதாக Porsche
விளக்கியது. இதன் நோக்கு Volkswagen
உடைய நிரம்பிவழியும் கருவூலங்களான 10 பில்லியன் யூரோக்களின்மீது கட்டுப்பாடு கொள்ளுவது ஆகும். ஒரு
சாதாரண நிறுவனத்தில் அது ஒரு பிரச்சினையாக இருக்காது; அதுவும் 75 சதவிகிதப் பெரும்பான்மைப் பங்கு
இருக்கையில். ஏனெனில் முடிவுகள் 25 சதவிகிதத்தால் தடைக்குத்தான் உட்படுத்தப்பட முடியும். ஆனால்
VW ஐப்
பொறுத்தவரையில், "Volkswagen law"
நடைமுறையில் உள்ளது, அதாவது தன்னுடைய 20 சதவிகித பங்கிற்காக லோயர் சாக்சனி அரசு
தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.
பல காலமாகவே ஐரோப்பிய குழு
Volkswagen
சட்டம் அகற்றப்பட வேண்டும் என்று கோரிவந்துள்ளது--மற்ற பல நடவடிக்கைகளுடன் இதுவும் உள்ளது, ஐரோப்பிய
நீதிமன்றத்தில் (EuGH)
ல் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது; நவம்பர் 2008ல் தான் இந்த விதிகள் ஜேர்மனியப் பாராளுமன்றத்தில்
ஏற்கப்பட்டால் அதை எதிர்த்துப் போராடும் திட்டத்தை கொண்டுள்ளதாகவும் கூறியது; இந்த நிலைமை
Porsche க்கு
ஆதரவு போல் தோன்றியது.
ஆனால் ஐரோப்பியக்குழுவின் மேல்முறையீடு நடைமுறைக்கு வரவில்லை. வோல்க்ஸ்வாகன்
பங்குகள், விருப்புரிமையை வாங்குவதற்கு, மலை போல் கடன்களை 14 பில்லியனுக்கும் மேலாக எதிர்கொண்டிருந்த
Porsche
ஐப் பொறுத்தவரை, பின்னர் தெரியவந்தபடி நேரம் விரைந்து கொண்டிருந்தது. பொருளாதார நெருக்கடியின்
பொருள் Porsche
உடைய விற்பனைகள் 25 சதவிகிதம் குறைந்தன, வங்கிகள் கடனை நீடிக்க விரும்பவில்லை என ஆயிற்று.
Porsche திவால்தன்மையை
எதிர்கொண்டது. இதன் கடன்கள் நிறுவனத்தின் மதிப்பைவிட அதிகமாயின; 2009ல் வசந்த காலத்தில்
Volkswagen
அது 8 பில்லியன் யூரோக்களாக இருக்கலாம் என்று மதிப்பிட்டது.
2009 வசந்த காலத்திலேயே இரகசிய பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக
நடைபெற்றன; அவற்றின் இறுதியில் அனைத்தையும் மாற்றும் முடிவு அளிக்கப்பட்டது.
Volkswagen, Porsche
ஐ அடையும் என்றும் Porscheன்
சொந்தக்காரர்களான Porsch/Piech
குடும்பங்கள் ஒற்றை பெரும் பங்குதாரர்களாக இருப்பர், வோல்க்ஸ்வாகனில் கட்டுப்படுத்தும் பங்கை 35-40
சதவிகிதம் கொள்ளுவர் என்றும் ஆயிற்று.
இதுவரை அறியப்பட்டுள்ள ஒரே விவரம் வோல்க்ஸ்வாகனில் இருந்து பெறப்படும் பணம்
12.4 பில்லியன் யூரோ என Porsche
கார்த்தயாரிப்பு வணிகத்தை வாங்கி கடனில் ஒரு பகுதியை அடைத்தல் மற்றும் 3.5 பில்லியன் யூரோக்களை
சால்ஸ்பேர்க்கில் இருக்கும் Porsche
கார் விற்பனை நிறுவனத்திற்கு அளித்தல் என்பதும் ஆகும். எஞ்சிய கடன்கள் கட்டார் எமிரேட்டினால் தீர்க்கப்படும்;
அது VW
ல் 20 சதவிகிதப் பங்கைக் கொள்ளும்.
ஜூன் மாதம் VW
க்கு Porsche
விற்பனை பற்றி பகிரங்கமாக கண்ணீர் விட்ட Wolfgang
Porsche இந்த உடன்பாடு பற்றி களிப்புக் கொள்ளுவதை
தானே தடுத்துக் கொள்ள முடியவில்லை: அவர் கூறினார்: "இறுதியில் எப்படி முடிவு இருக்கும் என்பது
பொருட்டல்ல...இன்று நம்முடைய குடும்பம் VW
ல் பாதியைக் கொண்டுள்ளது." என்றார்.
நோர்வேஜியர்கள் நியாயமாக கேட்டனர்: எதற்காக
VW, 4.5
பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ள போர்ஷின் கடன்களை எடுத்துக் கொள்ளவேண்டும்--சால்ஸ்பர்க் வைத்திருப்பதற்கு
3.5 பில்லியன் யூரோக்கள் கொடுப்பது நியாயமா? வேறுவிதமாகக் கூறினால், ஒருவேளை 8 பில்லியன்
யூரோக்களுக்கு முறையான ஏலவகை நடத்தியபின்
Porsche கார்த்தயாரிப்பை
VW ஏன்
வாங்கவில்லை? அது Porsche/Piech
தன்னலக்குழுக்குடும்பத்தை அவற்றின் ஊகக் கடன்களுடன் விட்டுவைத்திருக்குமே?
VW யும்
IG Metall
தொழிற்சங்கமும்
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வினா
IG
Metall Union
இடம் கேட்கப்பட வேண்டும். அது மெளனமாக இருப்பது மட்டுமில்லாமல், மற்ற "ஜனநாயகத்தின் தூண்கள்" போல்
இதுவும் ஜூலை 2009ல் மேற்பார்வைக் குழுவிற்கு இந்த உடன்பாட்டிற்குத் தன் ஆசியைக் கொடுத்தது போலும்.
VW யின்
20 மேற்பார்வைக் குழுவினரில் 9 பேரை இது அளிக்கிறது; நிறுவனத்தின் தனி வாங்குதலுக்கு தன்னுடைய அறிவை
சிறந்த முறையில் பயன்படுத்தும் நிலையில் இருந்தது; குறைந்த பட்சம் வாங்குவதைக் கண்டித்தல் அல்லது அதற்கு
எதிராக மக்கள் கருத்தைத் திரட்டும் நிலையில் இருந்தது.
இத்தகைய பொதுப் பிரச்சாரம் லோயர் சாக்சனி அரசிற்கு பொது நிதியைக்
காக்கும் அதன் கடமையுடன், VW
பங்குகளில் 20 சதவிகிதத்தைக் கொண்ட நிலையில் எடுத்துக் கொள்ளுவதற்கு வாக்களிக்க கஷ்டத்தை
ஏற்படுத்தியிருக்கும். மேற்பார்வைக்குழுவில் குறைந்தது 11 பேர் பெரும்பான்மையில் எதிர்க்கப்பட்ட நிலையில்
அப்பொழுது உடன்பாடு முறிந்திருக்கும்.
ஆனால் அத்தகைய அக்கறை
IG
Metall க்கு
இல்லை. அவதூறைப் பற்றி அது "நடந்து கொண்டமுறை", போனஸ் வழங்கியது, வெளிநாட்டுப் பயணங்களுக்கு பணிக்குழு
உறுப்பினர்கள் நிறுவன இருப்புக்களில் இருந்து செலவு செய்தது பற்றியும் அது நடந்து கொண்ட முறை இதைத்தான்
காட்டுகிறது. VW
பணிக்குழுவின் தலைவராக 1990ல் இருந்து 2005 வரை இருந்த
Klaus Volkert
இதற்குப் பின் இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதம் சிறையில் இருந்தார்; ஏனெனில்
அவருடைய நிறுவனம் விபச்சார விடுதிகளுக்கு சென்றதற்கு பணம் கொடுத்தது; இவர் சிறப்பு ஊதியமாக 1995ல்
இருந்து 2 மில்லியன் யூரோக்களை பெற்றார்; இதைத்தவிர இளவரசுக்குரிய சம்பளமாக 679,000 யூரோக்களையும்
பெற்றார்.
வோல்கெர்ட்டை (Volkert)
பலி கொடுத்த நீதிமன்ற வழக்கு 2007ல் முடிந்ததில் இருந்து,
IG Metall
இடம் இருந்து தகவல் ஏதும் இல்லை. தொழிலாளர் தொகுப்பின் நம்பிக்கையில் இத்தகைய முறிவு எப்படி ஏற்படுத்தப்பட்டது,
இதைப்பற்றி எவருக்கு தெரியும் என்ற வினாக்கள் விவாதிக்கப்படவில்லை. விபச்சார விடுதிகளுக்கு சென்றதில் பங்கு
பெற்ற மற்ற பணிக்குழு உறுப்பினர்கள் யார்? வோல்கெர்ட்டிற்கு பின் பதவிக்கு வந்த தற்பொழுதைய பணிக்குழுத்
தலைவர் Bernd Osterloh
இதைப்பற்றி அறிவாரா? இவரும் 1990ல் இருந்து பணிக்குழு உறுப்பினராக உள்ளார். இதைப்பற்றி ஒன்றுமே தெரியாமல்
இருந்திருக்க முடியுமா? தொடர்புடைய, பொறுப்புடையவர்கள் கணக்குக் கேட்கப்படுவதற்கு எத்தனை உறுப்பினர்
கூட்டங்கள் நடத்தப்பட்டன? என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன?
எந்த நல்ல அமைப்பிலும் தீவிர விவாதத்திற்கு உடனே வழிவகுத்திருக்கும் இத்தகை வினாக்கள்
IG Metall
தொழிற்சங்கத்தில் விரும்பப்படவில்லை; அவை அனைத்து வழிவகைகளையும் பயன்படுத்தி நசுக்கப்பட்டன.
IG Metall
தன்னை முதலாளித்துவத்தின் நலன்களுடன் முழுமையாக அடையாளம் கண்டுள்ளது, இணை நிர்வாகிகள் என்ற சொல்லின்
முழுப் பொருளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுகிறது.
இதையொட்டி பேரழிவு தரும் விளைவுகள் ஏற்பட்டன. 1933 ல் ஹிட்லரால்
தகர்க்கப்பட்ட தொழிற்சங்கங்களின் நிதியங்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டு 1938ல்
Volkswagen
நிறுவப்பட்டது;. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தொழிற்சங்கங்கள் இழப்பீடு கேட்கவே இல்லை.
இப்பொழுது இந்த பெரும் செல்வம் Porsche/Piech
தன்னலக்குழுவினருக்கு கொடுக்கப்படுகிறது; நிறுவனத்தின் வருங்காலம், அது வேலைக்கு வைத்திருக்கும் அனைவருடைய
எதிர்காலம் இப்பொழுது வினாவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. |