World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

More than 1 billion hungry, UN agencies report

1 பில்லியனுக்கும் மேலான மக்கள் பட்டினியில் வாடுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் அமைப்புக்கள் அறிவிக்கின்றன

By Tom Eley
15 October 2009

Back to screen version

உலக மக்களில் ஆறில் ஒரு பங்கான 1 பில்லியனுக்கும் மேலானவர்கள் 2009 இறுதிக்குள் ஊட்டசத்தின்மையை பெற்றிருப்பர் என்று ஐ.நா.வின் இரு அமைப்புக்கள் புதன்கிழமை அன்று கூறியுள்ளன. பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை ஓராண்டில் 100 மில்லியன் அதிகரித்துள்ளனர். இது பெரு மந்த நிலைக்கு பின்னர் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவு ஆகும்.

ஐ.நா.வின் உணவு, விவசாய அமைப்பு (FAO, Food and Agricultural Organization) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) இரண்டும் தயாரித்துள்ள "உணவு பாதுகாப்பின்மையின் நிலை) என்ற ஆய்வு உலகப் பட்டினியில் தீவிர அதிகரிப்பு மோசமான அறுவடை அல்லது இயற்கைப் பேரழிவுகளால் விளைந்தது அல்ல என்றும் அதிக உணவு விலைகள், பெருகிய வேலையின்மை மற்றும் சரிந்துள்ள வருமானங்கள் என்று மனிதனால் உருவாக்கப்பட்ட செயல்களால் ஏற்பட்டது என்று விளக்கியுள்ளது.

இதற்கிடையில், உலக உணவுத் திட்டத்திற்கு வரும் நன்கொடைகளின் வெட்டுக்கள் இதுவரை கடந்த ஆண்டில் இருந்ததில் 58 சதவிகிதத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இதனால் அது நடைபெற்று வரும் உணவு உதவி நடவடிக்கைகளை குறைக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளது.

ஊட்டசத்தின்மை ஒரு நீண்டகாலப் போக்கின் தீவிரத்தை குறிக்கிறது என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது. 1990களின் தொடக்கத்தில் இருந்தே பட்டினி அதிகரித்து வருகிறது. "உணவு நெருக்கடி, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு முன்னரே பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை மெதுவாக, ஆனால் உறுதியாக பெருகிக் கொண்டிருக்கிறது" என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பட்டினிப் பெருக்கம் அதிகமாக உலகின் மிகவறிய பகுதிகளான ஆசிய, துணை சகாராப்பகுதி ஆபிரிக்கா, இலத்தின் அமெரிக்கா மற்றும் காரிபியன், மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. "எந்த நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல; வழக்கம்போல் மிக வறிய நாடுகள்தான் (மிக ஏழ்மையில் இருக்கும் மக்கள்தான்) மிக அதிகம் கஷ்டப்படுகின்றனர்" என்று அறிக்கை கூறுகிறது. இது அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினத்திற்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏழை நாடுகள் பல பிரச்சினைகளின் கூட்டினால் தாக்கப்பட்டுள்ளன; அவற்றுள் வெளிநாட்டு உதவி, முதலீடு இல்லாதது, சரியும் ஊதியங்கள், பெருகும் பணிநீக்கங்கள், முன்னோடியில்லாத அளவிற்கு உலகம் முழுவதும் நாட்டைவிட்டு வெளியேறிய உறுப்பினர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பும் பணம் குறைந்துள்ளது மற்றும் தொடர்ந்து உணவுவிலை அதிகரிப்பது ஆகியவை அடங்கும் என்று ரோமைத் தளமாகக் கொண்ட அமைப்புக்கள் கூறியுள்ளன.

உலகின் வறிய மக்கள் 2006-2008ல் நடந்த பாவனைப்பொருள்களின் மீதான ஊக வணிகத்தின் விளைவுகளால் இன்னமும் அவதியுறுகின்றனர். அந்த வணிகம் முக்கிய உணவான அரிசி, கோதுமை, தானியங்களை நூறாயிரக்கணக்கான மில்லியன் மக்களால் வாங்க இயலாத நிலைக்கு உயர்த்தி விட்டது. 2009 பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் விலைகள் ஓரளவு குறைந்தாலும், சராசரியாக அவை 2005 மட்டத்தில் இருந்து 17 சதவிகிதம் அதிகமாக உள்ளன.

அதிகமான உணவு விலைகள் அதிகமான பட்டினியை ஏற்படுத்துகின்றன. உணவைப் பெறுவதில் உள்ள கஷ்டம் குடும்பங்களை "சமாளித்துக்கொள்ளும்" முறைகள் பலவற்றை ஏற்க வைக்கிறது என்று அறிக்கை கூறுகிறது; இதில் "ஊட்ட உணவிற்கு பதிலாக அதிக ஊட்டமில்லாத உணவை உட்கொள்ளல், உற்பத்தித்திறன் கொண்ட சொத்துக்களை விற்பது, "சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி இவற்றை மறந்துவிடல்" ஆகியவை உள்ளன.

வறிய நாடுகளில் அரசாங்கம் சாதாரணமாக பரந்துள்ள பட்டினியை எதிர்கொள்ளும் விதத்தில் அரசாங்கம் பயன்படுத்தும் முறைகளான நாணய மதிப்புக் குறைவு, கடன் வாங்குதல், சர்வதேச உதவி போன்றவை பொருளாதார நெருக்கடியின் உலகளாவிய தன்மையினால் மழுங்கிப் போய்விட்டன. கடந்தகால பொருளாதார நெருக்கடிகள் தனி ஒரு நாடுகளிலோ அல்லது பகுதிகளோதான் குவிப்புக் காட்டின என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

தீவிர பட்டினி என்பது குறைந்த வளர்ச்சியுள்ள நாடுகளில் மிக அதிகமாக இருந்தாலும், முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் கூட சமூக இழிநிலை தொழிலாளர்களிடையேயும் வறியவர்களிடையேயும் அதிகரித்து வருகிறது. அங்கு 15 மில்லியன் மக்கள் 2009 ஐ ஒட்டி ஊட்டசத்தின் குறைவை அனுபவிப்பர் என்று அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

இதற்கு ஏதேனும் மதிப்பு உண்டு என்றால், இந்த எண்ணிக்கை முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் உள்ள ஊட்டச் சத்து நெருக்கடி பற்றி குறைமதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் "உணவுப் பற்றாக்குறை" என்பதை எதிர்நோக்கியுள்ள குடும்பங்களில் 36.2 மில்லியன் மக்கள் பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன்பு 2007ல் இருந்தனர். இவற்றில் 12 மில்லியன் குழந்தைகள் இருந்ததாக அமெரிக்க விவசாயத்துறை மற்றும் கணக்கெடுப்பு அலுவலகத் தகவல்களை புள்ளிவிவர பகுப்பாய்வு கூறுகிறது. (பார்க்கவும்;"US: 12 million children face hunger and food insecurity")

முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் காணப்படும் சமூக நெருக்கடி பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (Organisation for Economic Cooperation and Development-OECD) இந்த வாரம் வெளியிட்ட வேலையின்மை பற்றிய அறிக்கையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 30 நாடுகளில் இணைந்த வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதம் 1 சதவிகித புள்ளி என்று ஜூலையில் இருந்த 8.6 சதவிகிதத்தை காட்டிலும் உயர்ந்து 2.3 புள்ளிகள் 2008 ஆகஸ்ட்டை விட அதிகமாக இருந்தது. வேலையின்மை விகிதங்கள் இன்னும் ஓராண்டிற்கு உயரும் என்றும் வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னமும் அதிக நிலையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னேற்றம் அடைந்துள்ள பொருளாதாரங்களில் பெருகிய வேலையின்மை விகிதத்திற்கு அதிகமாக இளைஞர்கள், பயிற்சி பெறாத தொழிலாளர்கள், குடியேறுபவர்கள் என்ற அடுக்குகளை பாதித்தது. இதை எதிர்கொள்ளும் வகையில் குடியேறுபவர்கள் வீடுகளுக்கு அனுப்பும் பணத்தைக் குறைத்து வறியநாடுகளில் பட்டினி அதிகரிக்க காரணமாகிவிட்டனர்.

குடும்பங்களுக்கு அனுப்பப்படும் பணங்கள் பெரும்பாலான வளர்ச்சியுறும் நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவிகிதம் வரை உள்ளன என்று உணவு பாதுகாப்பின்மைக்கான அமைப்பு (The State of Food Insecurity) கூறுகிறது. சில நாடுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். டாஜிகிஸ்தானில், வெளியில் இருந்து வரும் பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46 சதவிகிதமாகும்; ஹொண்டூரஸ் மற்றும் லெபனானில் அது கிட்டத்தட்ட 25 சதவிகிதம் ஆகும். அல்பேனியா, பிலிப்பைன்ஸ், எல் சால்வடோர் மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகள் அந்த பணத்தைத்தான் வருமான ஆதாரம் என்று கொண்டுள்ளன.

தெற்கு ஆசிய நாடுகளில் குடும்பங்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அனைத்து வெளிநாட்டு மூலதனவரத்தில் பாதிக்கும் மேலாக உள்ளது. வியக்கத்தக்க அளவில், இது புதிய உலகப் பொருளாதாரத்தில் நட்சத்திரம் என்று காட்டப்படும் இந்தியாவை பொறுத்தவரை அனைத்து ரொக்க வரத்திலும் இத்தகைய வரவுகள் மொத்தத்தில் முக்காலுக்கும் மேலாக இருந்து நேரடிய வெளிநாட்டு முதலீட்டை மிகவும் சிறியதாக்கி விடுகின்றன.

ஆயினும்கூட பணம் அனுப்புதலில் வந்துள்ள சரிவுகள், பொதுவாக மொத்த மூலதன உள்வரவுகள் வறிய நாடுகளுக்கு செல்லுவதில் ஏற்பட்டுள்ள குறிப்பான சுருக்கத்தின் ஒரு பகுதிதான். ஒரு உதாரணத்தை கொடுக்கையில் அறிக்கை 13 இலத்தின் அமெரிக்கப் பொருளாதாரங்களில் மூலதன உள்வரத்துக்கள் முக்கால் பகுதிக்கும் மேலாக குறைந்து, 2007ல் $184 பில்லியனில் இருந்து 2009ல் $43 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உதவி பெரும் சரிவிற்கு உட்பட்டுவிட்டது. சர்வதேச நிதிய அமைப்பு 71 நாடுகள் சராசரியாக இந்த ஆண்டு உதவித் தொகையில் 25 சதவிகித சரிவைக் காணும் என்று கூறியுள்ளது. இந்தச்சரிவு, முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் உள்ள பொருளாதார நெருக்கடிகளின் விளைவு, அதன் கடுமையான பாதிப்பை மிக வறிய நாடுகளில், குறிப்பாக துணை சகாரா ஆபிரிக்க நாடுகளில் காட்டும்.

உலக உணவு நெருக்கடி உதவி அளிக்கும் அமைப்புக்களை உடனடி நடவடிக்கை எடுக்க எச்சரிக்கைகளை கொடுக்கத் தூண்டியுள்ளது. அதேபோல் தற்போதுள்ள வழங்களும் மற்றும் பாரிய உணவு உற்பத்தித்திறன் கோட்பாட்டளவில் அதைச் சமாளிக்ககூடியதாக இருக்கும் நேரத்தில் அது பற்றி புரிந்து கொள்ளாத நிலைமையும் உள்ளது.

"பட்டினியை அழித்துவிடக்கூடிய பொருளாதார, தொழில்நுட்ப வழிவகைகள் நம்மிடம் உள்ளது" என்று FAO வின் தலைமை இயக்குனர் Jacques Diouf கூறினார். "என்ன இல்லையெனில், பட்டினியை என்றென்றும் அகற்றிவிட வேண்டும் என்னும் வலுவான அரசியல் விருப்புத்தான்"

இந்த அறிக்கை அரை உண்மையானதாகும். உலகத்தின் அனைத்து மக்களுக்கும் உணவளிக்ககூடிய நிலைக்கு விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நிலைக்கு கொண்டுவந்திருந்தபோதிலும், குறுக்கே நிற்பது ''அரசியல் விருப்பு'' அல்ல. மாறாக இங்கு குறுக்கே நிற்பது சமூகத்தின் தேவைகளை செல்வந்தர்களின் இலாப நோக்கத்திற்கு அடிபணிய செய்யும் சமூக அமைப்பான முதலாளித்துவமாகும்.

கடந்த ஆண்டு உலக உணவுத் திட்டம் உலகின் பட்டினி கிடப்பவர்களுக்கு உதவியளிக்கும் வகையில் நன்கொடையாக 5 பில்லியன் டாலர் என்று உயர்ந்த அளவில் பெற்றது. இந்த ஆண்டு நன்கொடை தரும் நாடுகளும் தனிப்பட்ட செல்வந்தர்களும் பணப்பையை இறுகப்பிடித்துக் கொண்டு உலக உணவுத் திட்டத்திற்கு 2.9 பில்லியன் டாலர் மட்டுமே கொடுத்தனர்.

இது ஒரு அற்பத் தொகை ஆகும்.

Forbes கருத்தின்படி, உலகில் 224 தனிக் குடும்பங்கள் சொந்த சொத்துக்களாக $2.9 பில்லியன் அல்லது அதையும் விடக் கூடுதலாக கொண்டுள்ளன. உலக உணவுத் திட்டம் மூலம் உலகின் வறியவர்களுக்கு உணவளிக்க ஒதுக்கப்பட்ட மொத்த இருப்புக்களும் மிகப் பெரிய வோல்ஸ்ட்ரீட் வங்கிகள் ஊதியங்கள், மேலதிக கொடுப்பனவுகள் என்று அமெரிக்காவின் உயர்மட்ட வங்கியாளர்களுக்கு கொடுத்ததில் 2 சதவிகிதம்தான். அவர்களுடைய பொறுப்பற்ற ஊக வணிகம்தான் பல மில்லியன்களை இன்னும் அதிகமாக பட்டினித் தொகுப்பில் சேர்ப்பதற்கு தூண்டுகோலாக இருந்தது. (பார்க்கவும்; "A record year for Wall Street pay")

உலகத்தின் வறுமையை போக்குவதற்கு அளிக்கப்படும் $2.9 பில்லியன் என்பது உலகின் பெரிய வங்கிகளை மீட்பதற்கு அரசாங்கங்கள் திரட்டிய டிரில்லியன்களில் கடுகளவு போன்ற சிறிய சதவிகிதம்தான்.

"உலகின் தலைவர்கள் நிதிய, பொருளாதார நெருக்கடிக்கு ஆற்றலுடன் விடையிறுத்து, பில்லியன் கணக்கான டாலர்களை ஒரு குறுகிய காலத்திற்குள் திரட்டுவதில் வெற்றி அடைந்தனர்" என்று Diouf குறிப்பிட்டுள்ளார். "இதே வலுவான செயல்தான் இப்பொழுது பட்டினி, வறுமையை எதிர்ப்பதற்கும் தேவைப்படுகிறது."

ஆயினும்கூட, இந்த ஆழம் காணமுடியாத பெரும் வங்கிப் பிணை எடுப்புக்கள், மற்றும் அவர்கள் பாதுகாக்கும் சொந்த சொத்துக்கள் ஆகியவை சமூகத்திற்கு பயன்படக்கூடிய இருப்புக்கள் தவறாக ஒதுக்கப்படுவதால் வருகின்றன; உதாரணமாக அனைவருக்கும் போதுமான உணவு தேவை என்பது இருக்க வேண்டும்.

நிதிய உயரடுக்கின் செல்வம் உலக மக்களின் பெரும்பாலானவர்களின் வறுமையில் இருந்துதான் நேரடியாக வெளிவருகிறது. இது கடன்கள், பாவனைப்பொருட்கள், நில வியாபாரங்கள், நாணயம் போன்றவற்றின் மீதான ஊகவாணிபத்தினூடாகவும் மற்றும் தொழில்துறை மூடல் ஆகியவற்றில் இருந்தும் வருகிறது. இப்பொழுது அந்த வழக்கங்களுடன் உலகின் கருவூலங்களை வெளிப்படையாக கொள்ளையடிக்கப்படுதலும் சேர்ந்துள்ளது.

இந்த நிகழ்வுபோக்குகள் வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்ளும். ஏற்கனவே உயர்ந்த உணவுப் பொருட்கள் விலைகள் 2007ல் 60 நாடுகளில் கலகங்களைத் தூண்டிவிட்டன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved