WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
மத்திய கிழக்கு
US builds "coalition of like-minded nations" against
Iran
ஈரானுக்கு எதிராக "ஒத்த
கருத்துடைய நாடுகளின் கூட்டணியை" அமெரிக்கா
கட்டியமைக்கிறது
By Peter Symonds
10 October 2009
Use this version
to print | Send
feedback
ஈரானுடனான அதன் அணுத்திட்டங்களைப் பற்றிய சர்வதேச பேச்சு வார்த்தைகளுக்கு
ஒபாமா நிர்வாகம் பகிரங்கமாக ஆதரவு கொடுத்தாலும், அமெரிக்க கோரிக்கைகளை தெஹ்ரான் ஏற்க மறுத்தால்
கடுமையான புதிய அபராதங்களை சுமத்துவதற்கான தயாரிப்புக்களையும் அது விரைவாக நடத்தி வருகிறது.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் இசைவு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தெஹ்ரான்
மீது தடைகளை சுமத்துவது பற்றி விவாதிக்க "ஒத்த எண்ணமுடைய நாடுகளின் கூட்டணி" என்று முறைசாரா வகையில்
விவரிக்கப்பட்டவை சம்பந்தப்பட்ட ஒரு உயர்மட்டக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றதாக, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்
நேற்று அறிவித்தது. ஈரானுடனான பேச்சு வார்த்தைகளுக்கு டிசம்பர் மாதத்தை இறுதிக் கெடுவாக ஒபாமா
வைத்துள்ளார்.
இக்கூட்டத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி
மற்றும் கனடா என்று அனைத்து G7
நாடுகளும் இருந்தன; இதைத்தவிர, செளதி அரேபியாக, ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், ஆஸ்திரேலியா மற்றும்
தென் கொரியாவும் பங்கு பெற்றன. குறிப்பிடத்தக்க வகையில் சீனாவும், ரஷ்யாவும் கலந்து கொள்ளவில்லை.
இவை இரண்டும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் உறுப்பு நாடுகள், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் தொடர்புடையவை,
ஆனால் தெஹ்ரானுக்கு எதிரான பரந்தத பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்ப்பு காட்டுபவை ஆகும்.
நிதி அமைச்சகத்தின் தலைமையில் நடந்த கூட்டம், பயங்கரவாதம் மற்றும் நிதிய
உளவு அலுவலகத்திற்கான கருவூல உதவி மந்திரி Stuary
Levey ஆல் ஏற்பாடு செய்யப்பட்டது. புஷ் நிர்வாகத்தில் அதிகாரியாக
இருந்து ஒபாமாவால் தக்க வைக்கப்பட்டுள்ள லீவி, ஈரானுடன் உறவுகளை துண்டிப்பதற்கு சர்வதேச வங்கிகள்,
நிதிய அமைப்புக்களை அச்சுறுத்தி வேலைசெய்யவைக்கும் நடவடிக்கையில் மையமாக செயல்படும் நபராக இருந்து
வருகிறார்.
புதன் கிழமை கூட்டத்தைப் பற்றி எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஈரானிய பொருளாதாரத்தில் எட்டு பிரிவுகள் இலக்கு வைக்கப்பட்டது என்றும் இதில்
சுத்திகரம் செய்யப்படும் பெட்ரோலிய திட்டங்கள், காப்பீடு, மறுகாப்பீட்டு நிறுவனங்கள், கப்பல், வங்கித்
துறைகள் அடங்கும் என்று கூறியுள்ளது. இதைத்தவிர, ஈரானியத் தலைவர்களுக்கு எதிரான தடைகள், அவர்கள்
சர்வதேச பயணம் செய்ய முடியாது வைப்பது ஆகியவையும் விவாதிக்கப்பட்டன. ஒரு தூதர், "அனைத்து
விருப்பத்தேர்வுகளும் மேசையில் உள்ளன" என்று கூறினார்.
"விருப்புடையோர் கூட்டணி" என்ற இழிந்த புஷ் நிர்வாகத்தின் கருத்தைத்தான் இந்தக்
கூட்டம் நினைவுறுத்துகிறது; அந்தக் கூட்டணி 2003ல் குற்றம் சார்ந்த அமெரிக்க தலைமையிலான ஈராக்
படையெடுப்பில் சேர்ந்தது. பொருளாதார அபராதங்களை கூட்டம் விவாதித்ததேவேளை, ஈரானுடனான எந்த
மோதலிலும் நெருக்கமான நட்பு நாடுகளை அமெரிக்காவின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக சேர்த்துக்
கொள்ளுதலாக இருந்தது. இராணுவ நடவடிக்கையை இப்பொழுது ஒபாமா அதிகம் பேசவில்லை என்றாலும், அது
இல்லை என்று குறிப்பாகவும் சுட்டிக்காட்டவில்லை.
இன்னும் அதிக கூட்டங்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. வோல் ஸ்ட்ரீட்
பத்திரிக்கை விளக்கியபடி, "அமெரிக்க அதிகாரிகள், தெஹ்ரான் சர்வதேச முயற்சிகள் அதன் அணுசக்தித் திட்டத்தை
முடிப்பதற்கு மேற்கொண்டுள்ள முடிவுகளை அலட்சியம் செய்தால் எத்தகைய புதிய நிதிய அபராதங்களை அதன் மீது
சுமத்தலாம் என்று 11 நாடுகளிடையே நடத்தப்பட இருக்கும் தொடர்ச்சியான கூட்டங்களின் முதல் கூட்டமாக
இதைக் காண்கின்றனர்."
ஈரான் மீது தடைகளை திணிப்பதற்கு வெளிநாட்டு வங்கிகள், பெருநிதி நிறுவனங்கள்
ஆகியவற்றின்மீது கடும் அழுத்தங்களை கொடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஏராளமான சட்டங்களையும்
அமெரிக்க காங்கிரஸ் தயாரித்து வருகிறது. ஈரானிடம் அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட எவ்வித பொருளாதார
உறவுகளும் இல்லை ஆகையால், இந்த நடவடிக்கைகள் ஈரானுடன் வணிகம் அல்லது முதலீடு செய்யும் நிறுவனங்களை
தண்டிக்க அச்சுறுத்தி வருகிறது
செவ்வாயன்று செனட் வங்கிகள் குழுக் கூட்டத்தில் ஜனநாயகக் கட்சி தலைவர்
கிறிஸ்டோபர் டோட், தான் இந்த மாதம் "விரிவான பொருளாதாரச் சட்டங்கள்" கொண்டுவரும் முயற்சியில்
ஈடுபடப்போவதாகக் கூறினார். "நாங்கள் இயற்றும் சட்டம் நடந்து கொண்டிருக்கும் தூதரக முயற்சிகளை
முழுமையாக்கும் அதற்கு வலுக் கொடுக்கும், சர்வதேச சமூகத்தின் விருப்பத்தை தொடர்ந்து மீறினால் என்ன
நேரிடும் என்பதை ஈரானிய தலைவர்களுக்கு மிக மிகத் தெளிவாக சமிக்கையைக் கொடுக்கும்..." என்று அவர்
எச்சரித்தார்.
செனட் குழுவின் பரிசீலனையில் இருக்கும் பரந்த விருப்புரிமைகளில் ஈரானுக்கு சுத்திகரிக்கப்பட்ட
பெட்ரோலியத்தை விற்கும், எண்ணெய், எரிவாயுக் குழாய்த்திட்டங்களை கட்டமைக்கும், மற்றும் வங்கி, நிதிய நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களுடன் அமெரிக்க உறவைத் துண்டித்தலும் அடங்கும். இச்சட்டம் ஈரானிலிருந்து
இறக்குமதிக்கு பரந்த தடையையும் உள்ளடக்கக் கூடும்.
ஜனநாயகக் கட்சியின் கேசி, குடியரசுக் கட்சியின் சாம் பிரெளன்பாக் இருவரும்
திட்டமிட்டுள்ள மற்றொரு நடவடிக்கை உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்கள் ஈரானுடன் வணிகம் செய்யும்
நிறுவனங்களில் இருந்து தொடர்பை அகற்ற வேண்டும் என்பதாகும். அமெரிக்க அரசாங்கம் ஈரானுக்கு தொடர்புகள்
தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை தடுக்க ஜனநாயகக் கட்சியின் சார்ல்ஸ் ஷூமரும் குடியரசுக்
கட்சியின் லிண்டே கிரஹாமும் Reduce Iranian
Cyber-SuppressionAct ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்கா நீண்ட நாள் காத்திருக்காது, காங்கிரஸ் நடவடிக்கையை விரும்புகிறது
என்பதை தெஹ்ரான் அறிந்திருக்க வேண்டும் டோட் செனட் குழுவிடம் கூறினார். "இங்கு கூட்டாக இருக்கும் அச்சம்
ஈரானிய அரசாங்கம் இப்பிரச்சினையில் நம்மை வெளுப்பவர்களிடம் விட்டு விடும் என்பதுதான்." இதற்கு
விடையிறுக்கையில் அமெரிக்க உதவி செயலரும் குழுவில் சாட்சியம் அளித்தவருமான ஜேம்ஸ் ஸ்டீன்பெர்க், ஒபாமா
நிர்வாகம் மோதலுக்கு தயாராக இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். "நம்முடைய பொறுமை ஒன்றும்
வரம்பிலாதது அல்ல. ஈரானைப் பொறுத்த வரையில் எந்த விருப்புரிமையும் மேசையை விட்டு அகலவில்லை."
டிசம்பர் காலக்கெடுவை வலியுறுத்தும் வகையில், பிரதிநிதிகள் மன்றம் செவ்வாயன்று
ஒபாமா நிர்வாகம் ஜனவரி மாதம் காங்கிரசிற்கு ஈரான் பேச்சு வார்த்தைகள் பற்றிய ஒரு மதிப்பீட்டை
முறையாகக் கொடுக்க வேண்டும் என்று கோரி வியாழனன்று ஒரு பாதுகாப்பு இசைவு சட்டவரைவிற்கு ஒப்புதல்
கொடுத்தது. செனட்டினால் இனிமேல்தான் ஏற்கப்பட உள்ள இச்சட்டம் "அமெரிக்கா தூதரகப்
பேச்சுவார்த்தைகளுக்கு வருக" என்று கூறுவதை ஏற்க மறுத்துவிட்டால், ஈரான்மீது புதிய பொருளாதார
அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அமெரிக்க காங்கிரசிலும் சர்வதேச அளவிலும் திரைக்குப் பின்னால் நடக்கும்
பரபரப்புச் செயல்கள் ஒபாமா நிர்வாகம் விரைவில் ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தல்களை அதிகப்படுத்தும்
நோக்கத்தை கொண்டுள்ளது என்பதைக் காட்டுகின்றன; அதே நேரத்தில்
P5+1 சக்திகள்,
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா மற்றும் ஜேர்மனி ஆகியவை ஈரானுடன் நடத்தும் கூடுதல் பேச்சு
வார்த்தைகள் இந்த ஆண்டு பிற்பகுதியில் நடத்தப்படும் என்றும் தெரிகிறது.
அக்டோபர் 1ம் தேதி ஜெனிவா பேச்சுக்களுக்கு முன்பு ஒபாமா நாடகத்தனமான
முறையில் G20
பிட்ஸ்பேர்க் உச்சிமாநாட்டில் ஈரானிடம் ஒரு இரண்டவாது, இரகசியான யுரேனிய அடர்த்தித் திட்ட ஆலை கோம்
நகரத்திற்கு அருகே இருப்பதாக "வெளிப்படுத்தி" அழுத்தங்களை அதிகரித்தார். சர்வதேச அணுசக்தி அமைப்பிடம்
(IAEA),
ஈரான் முற்றுப் பெறாத நிலையம் பற்றி மூன்று நாட்கள் முன்னதாகக் கூறியிருந்தது. பின்னர் ஈரான்
IAEA உடன்
நிலையம் அக்டோபர் 25 அன்று ஆய்விற்கு வரலாம் என்ற உடன்பாட்டைக் கண்டது.
ஜெனீவா பேச்சுக்களின்போது, ஈரான் தன்னுடைய தற்போதைய குறைந்த அடர்த்தி
உடைய யுரேனிய இருப்புத் தொகுப்பை ரஷ்யாவிற்கும் பின்னர் பிரான்ஸிற்கும் கூடுதலான அடர்த்தி ஆக்குவதற்கும்
அதை எரிபொருள் துண்டுகளாக மருத்து ஆய்வு நிலையத் தேவைகளுக்கு வழிவகை செய்வதற்கான அனுப்பத் தயார்
என்று கூறியுள்ளது. ஈரானின் குறைந்த அடர்த்தி பெற்ற யூரேனியத்தை ஏற்றுமதி செய்வது மூலம். இத்திட்டம்
தெஹ்ரான் கூற்றான அது அணுகுண்டை கட்டமைக்க வில்லை என்ற முன்கருத்தைக் வலுப்படுத்திள்ளது. இத்திட்டம், தான்
அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை என்றும் தெஹ்ரானின் கூற்று காட்டுகிறது. இத்திட்டம்
அக்டோபர் மாதம் 19ம் தேதி அன்று வியன்னாவில் விவாதிக்கப்பட உள்ளது.
இவை அனைத்தும் அமெரிக்க, சர்வசேப் பிரச்சாரமான ஈரானிய ஆட்சி., அதன்
அணுவாயுதத் திட்டத்தப் பொறுத்த வரையில், "பொய்கள்". :"மோசடித்தனானது" என்று முத்திரையிட்டும்,
நாட்டிற்கு எதிரான அமெரிக்க செய்தி ஊடகங்களின் தொடர்ந்த பிரச்சாரத்தை நிறுத்த முடியவில்லை. இத்தகைய
கண்டனங்களின் நோக்கம் ஒரு அச்சம், நம்பிக்கையற்ற தன்மை ஆகியவற்றை மக்களுடைய கருத்தில் கொண்டுவருதல்,
மற்றும் அமெரிக்கா அதன் நட்பு நாடுகள் ஈரானுடன் கொள்ள இருக்கும் மோதலை விரைவுபடுத்துவது ஆகும்;
மேலும் ஈரானை மிரட்டுதலும், அமெரிக்க வழியில் சேராத, எதிர்க்கும் நாடுகளையும் மிரட்டுவது ஆகும்.
உண்மையில் அமெரிக்கா அப்பகுதியில் தன்னுடைய மூலோபாய, பொருளாதார
விழைவுகளுக்கு கூடுதலாக வளைந்து கொடுக்கும் ஆட்சிமாற்றத்தை தெஹ்ரானில் கொண்டுவரும் முயற்சிக்கு வசதியான
போலிக்காரணமாக பார்க்கிறது; குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானில் நடக்கும் போர்களை
விரிவாக்குவதற்கும் வளைந்து கொடுக்கும் தன்மையை எதிர்பார்க்கிறது. பாரசீக வளைகுடாவில் இடைவிடாமல்
அழுத்தங்கள் அதிகரிப்பது அமெரிக்க நலன்களுக்குத்தான் உதவும்; இதையொட்டி அதன் போட்டியாளர்கள் ஈரானுடன்
கொண்டுள்ள பொருளாதார உறவுகளிலும் பாதிப்புக்கள் விளையும்.
|